Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்­கைக்கு ஜெனி­வாவில் கடும் அழுத்தம்...அதி­ருப்­தி­யுடன் கேள்­வி­களை எழுப்­பி­யுள்ள அமெ­ரிக்கா, பிரிட்டன், ஜேர்­மனி

Featured Replies

இலங்­கைக்கு ஜெனி­வாவில் கடும் அழுத்தம்

sfs-5e5bfadd2dc652e41b2124f1e2d15d043362a557.jpg

 

அதி­ருப்­தி­யுடன் கேள்­வி­களை எழுப்­பி­யுள்ள அமெ­ரிக்கா, பிரிட்டன், ஜேர்­மனி
(ரொபட் அன்­டனி)

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில்

இடம்­பெற்­று­வரும் 28ஆவது காலக்­கி­ரம மீளாய்வு செயற்­குழு கூட்­டத்­தொ­டரில் நாளை மறு­தினம் இலங்கை குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ள­துடன் இதன்­போது அமெ­ரிக்கா, பிரிட்டன், ஜேர்­மனி, பெல் ஜியம், எஸ்­டோ­னியா, நோர்வே, போர்த்­துக்கல் மற் றும் சுவிட்­சர்­லாந்து ஆகிய நாடுகள் இலங்கை மீது கடும் அழுத்­தத்தை பிர­யோ­கிக்கும் வகையில் கேள்­ வி­களை எழுப்­ப­வுள்­ளன.    

ஏற்­க­னவே அமெ­ரிக்கா, பிரிட்டன் உள்­ளிட்ட இந்த நாடுகள் இலங்கை தொடர்பில் கடும் அதி­ருப்­தியை வெளியிட்ட கேள்­வி­களை ஐக்­கிய நாடு கள் மனித உரிமை பேர­வைக்கு அனுப்­பி­யுள்­ளன. இதில் அமெ­ரிக்­காவும் பிரிட்­டனும் யுத்­தத்­துக்குப் பின்­ன­ரான இலங்­கையின் முன்­னேற்றம் தொடர்பில் கடும் அதி­ருப்­தியை வெளியிட்­டுள்­ளன.

     

அமெ­ரிக்கா  இம்­முறை அமெ­ரிக்கா கடும் அதி­ருப்­தியை வெ ளியிட்­டுள்ள அமெ­ரிக்கா இலங்­கை­யிடம் பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளது.  

அந்த வகையில் இலங்­கை­யிடம் அமெ­ரிக்கா எழுப்­பி­யுள்ள கேள்­விகள் வரு­மாறு,

கேள்வி 1 மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இரா­ணுவ அதி­கா­ரிகள் மற்றும் அரச உயர் அதி­கா­ரிகள் பொறுப்­புக்­கூ­ற­லாமல் இருப்­பது தொடர்பில் நாங்கள் அதி­ருப்­தி­ய­டைந்­தி­ருக்­கிறோம். எனவே அர­சாங்கம் எப்­போது மனித உரிமை மீறல்கள் மற்றும் மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் தொடர்பில் நீதி­யான நம்­ப­க­ர­மான விசா­ரணைப் பொறி­மு­றையை முன்­வைக்கும்?

கேள்வி 2 தொடர்ந்து சித்­தி­ர­வ­தைகள் பாலியல் வன்­மு­றைகள் மற்றும் தன்­னிச்­சை­யான கைதுகள் இடம்­பெ­று­வ­தாக அறிக்­கைகள் வரு­கின்­றன. இவற்றை நிறுத்த அர­சாங்கம் எடுத்­துள்ள நட­வ­டிக்­கைகள் என்ன? பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை அர­சாங்கம் எப்­படி நீக்கும்?

கேள்வி 3 சிறு­பான்மை மதங்­களைச் சேர்ந்த மக்­க­ளுக்கு இழைக்­கப்­படும் அநீ­தி­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் என்ன நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது?

கேள்வி 4 அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டுகள் தாம­த­ம­டை­வ­தாக தெரி­கி­றது. இதனை அர­சாங்கம் எவ்­வாறு அடுத்த கட்­டத்தில் முன்­கொண்டு செல்­லப்­போ­கி­றது?

கேள்வி 5 பொது மக்­களின் காணி­களை விடு­விப்­ப­தற்கு அர­சாங்கம் எவ்­வா­றான நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது? காணி திருப்பி அளிக்­கப்­ப­டாத மக்­க­ளுக்கு எவ்­வாறு நட்­ட­ஈடு வழங்­கப்­படும்?

இவ்­வாறு அமெ­ரிக்கா கடும் கேள்­வி­களை இலங்கை அர­சாங்­கத்­திடம் எழுப்­பி­யி­ருக்­கி­றது.

பிரிட்டன்

பிரிட்­டனும் பூகோல காலக்­கி­ரம மீளாய்வு மாநாட்டில் இலங்­கை­யிடம் பல கேள்­வி­களை தொடுத்­தி­ருக்­கி­றது. அவற்றின் முக்­கிய விட­யங்கள் வரு­மாறு?

கேள்வி 1 ஜெனிவா பிரே­ர­ணையின் பிர­காரம் அர­சாங்கம் எப்­போது பொறுப்­புக்­கூறல் விசா­ரணை பொறி­மு­றையை எப்­போது முன்­வைக்கும்?

கேள்வி2 பயங்­க­ர­வாதச் தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் தொடர்பில் என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்? கால அட்­ட­வ­ணைக்குள் அவர்கள் விடு­விக்­கப்­ப­டு­வார்­களா?

கேள்வி 3 சிறுவர் தொழி­லா­ளர்கள் செயற்­பாட்டை நிறுத்த என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்?

 கேள்வி 4 அனைத்து சமூ­கத்­தி­ன­ருக்கும் ஜன­நா­யக நீதியை பெற்றுக் கொடுக்க அர­சாங்கம் என்ன செய்யும்.

நோர்வே

நோர்­வேயும் இலங்­கை­யிடம் கேள்வி எழுப்­பி­யி­ருக்­கி­றது.

கேள்வி 1 பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் எப்­போது நீக்­கப்­படும்?

ஜேர்­மனி

ஜேர்­மனி எழுப்­பி­யுள்ள கேள்­விகள் வரு­மாறு

கேள்வி 1 அர­சாங்கம் பல­வந்­த­மாக காணா­மல்­போ­ன­வர்கள் தொடர்­பான சர்­வதே சாசனம் குறித்த சட்­டத்தை எப்­போது கொண்டு வரு­வது குறித்து பரீ­சீ­லிக்கும்?

கேள்வி 2 காணா­மல்­போன மற்றும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் தொடர்­பான விபரப் பட்­டியல் இருக்­கின்­ற­னவா?

கேள்வி 3 வடக்கு, கிழக்கில் கடு­மை­யாக உயர்ந்­தி­ருக்கும் வறுமை நிலையை போக்க என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்?

பெல்­ஜியம்

பெல்­ஜியம் சில கேள்­வி­களை இலங்கை அர­சாங்­கத்­திடம் மிகவும் ஆணித்­த­ன­மாக கேட்­டி­ருக்­கி­றது.

கேள்வி 1 காணா­மல்­போ­ன­வர்­களின் உற­வி­னர்­க­ளுக்கு அர­சாங்கம் எவ்­வா­றான நட்­ட­ஈடை வழங்கப் போகி­றது. இதற்குப் பொறுப்­பா­ன­வர்கள் நீதியின் முன்­கொண்டு வரப்­ப­டு­வார்­களா?

கேள்வி 2 உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவை அமைப்­பதில் அர­சாங்கம் என்ன முன்­னேற்றம் அடைந்­துள்­ளது?

கேள்வி 3 மதங்­க­ளுக்கு எதி­ரான வைராக்­கிய பேச்­சு­களை தடுப்­ப­தற்கு அர­சாங்கம் என்ன நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கி­றது?

எஸ்­டோ­னியா

எஸ்­டோ­னியா என்ற நாடும் இலங்­கை­யிடம் பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பி­யி­ருக்­கி­றது

கேள்வி 1 பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றை­க­ளுக்­காக எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­களை விளக்க முடி­யுமா?

கேள்வி 2 பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­திற்கு பதி­லாக கொண்டு வரப்­படும் புதிய சட்டம் சர்­வ­தேச தரத்தை பிர­தி­ப­ளிக்­குமா?

கேள்வி 3 யுத்த குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பான விசா­ர­ணை­களில் வெ ளிநாட்டு நிபு­னர்கள் உள்­வாங்­கப்­பட்­டுள்­ள­னரா?

சுவிட்­சர்­லாந்து

சுவிட்­சர்­லாந்தும் இலங்­கை­யிடம் பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பி­யி­ருக்­கி­றது.

கேள்வி 1 ஜெனிவா பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வதில் ஏன் தாமதம்?

கேள்வி 2 காணமல் போனோர் அலு­வ­லகம் எப்­போது செயற்­பாட்­டிற்கு வரும்?

கேள்வி 3 அர­சாங்கம் 2015 ஆம் ஆண்டு பயங்­க­ர­வாதச் தடைச் சடத்தை நீக்­கு­வ­தாக சர்­வ­தே­சத்­திற்கு வாக்­கு­றுதி அளித்­தது. ஏன் இன்னும் அது செய்­யப்­ப­ட­வில்லை.

கேள்வி 4 தனியார் காணி­களை உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்­காக அர­சங்கம் எடுத்­துள்ள நட­வ­டி­ககை என்ன?

சுவீடன்

சுவீடன் இலங்­கை­யிடம் எழுப்­பி­யுள்ள கேள்­விகள் வரு­மாறு

கேள்வி 1 காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தை தொழிற்­பட செய்­வ­தற்கு அர­சாங்கம் எடுத்­துள்ள நட­வ­டிக்கை என்ன?

கேள்வி 2 இனம், மதம், மொழி, பால் நிலை மற்றும் அர­சியல் அபிப்­பி­ராயம் போன்­ற­வற்றில் அநீ­திகள் ஏற்­ப­டா­த­வாறு அர­சாங்கம் எவ்­வாறு அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பை முன்­னெ­டுக்கும்.

கேள்வி 3 பெண்­க­ளுக்கு எதி­ரான அனைத்து வித­மான வன்­மு­றை­க­ளையும் குற்­றங்­க­ளாக அர­சாங்கம் எப்­போது பிர­க­டனப் படுத்தும்.

இதே­வேளை இந்த இலங்கை குறித்­தான நாளைய மறு­தின அமர்வில் பிரான்ஸ், ஜோர்­ஜியா, இந்­தியா, இந்­தோ­னே­ஷியா, இத்­தாலி, ஜப்பான், மலே­சியா, மெக்­ஸிகோ, நெதர்லாந், நியூ­சிலந், பாகிஸ்தான், தென்­னா­பி­ரிக்கா, மியன்மார், ஸ்பெயின், துருக்கி, உரு­குவே, வியட்நாம், அவுஸ்­தி­ரே­லியா, கனடா, சீனா, கியூபா, டென்மார்க் மற்றும் பின்லாந் உள்­ளிட்ட 96 நாடுகள் இலங்­கை­யிடம் கேள்­வி­களை எழுப்­ப­வுள்­ளன.

17ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள 28ஆவது காலக்­கி­ரம மீளாய்வு செயற்­குழு கூட்­டத்­தொ­டரில் எதிர்­வரும் 15ஆம் திகதி புதன்­கி­ழமை இலங்கை குறித்து பரி­சீ­லனை செய்­யப்­ப­ட­வுள்­ளது. அன்­றைய தினம் உறுப்பு நாடுகள் இலங்கை குறித்து கேள்­வி­யெ­ழுப்­ப­வுள்­ள­துடன் இறுதி தின­மான 17 ஆம் திகதி இலங்கை தொடர்­பான பரிந்­து­ரை­க­ளுடன் அறிக்கை நிறை­வேற்­றப்­ப­ட­வுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் சபையில் அங்­கத்­துவம் வகிக்கும் 193 அங்­கத்­துவ நாடு­க­ளி­னதும் மனித உரி­மைகள் நிலை­மையை மேம்­ப­டுத்­து­வதை அடிப்­படை நோக்கக் கொண்டு ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் தனித்­து­வ­மான பொறி­மு­றை­யாக உல­க­ளா­விய காலக்­கி­ரம மீளாய்வு செயற்­பாடு காணப்­ப­டு­கி­றது.

காலக்­கி­ரம மீளாய்வு பொறி­மு­றையின் பிர­காரம் ஐக்­கிய நாடு­களின் அனைத்து அங்­கத்­துவ நாடு­க­ளி­னதும் மனித உரி­மைகள் நிலை­மை­களை தலா ஐந்து வரு­டங்­க­ளுக்கு ஒரு­த­டவை வரு­டந்தம் நடை­பெறும் 3 செயற்­குழு அமர்­வு­களின் போது மீளாய்வு செய்­யப்­ப­டு­கின்­றது. அதன் பிர­காரம் வரு­ட­மொன்றில் சர்­வ­தே­சத்தில் உள்ள 42 நாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்­யப்­ப­டு­கி­றது.

அந்­த­வ­கையில் இலங்­கையின் மனித உரி­மைகள் நிலைமை தொடர்­பாக கடந்த2008ஆம் ஆண்டு மே மாதம் முத­லா­வது தட­வை­யா­கவும் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்­டா­வது தட­வை­யா­கவும் மீளாய்வு செய்­யப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் மனித உரி­மைகள் நட­வ­டிக்­கை­களை உறு­திப்­ப­டுத்தும் வகை­யி­லான பரிந்­து­ரை­களைக் கொண்ட இறுதி அறிக்­கையும் இதன்­போது நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தன.

இவ்­வா­றான நிலையில் அந்­தப்­ப­ரிந்­து­ரை­களின் பிர­காரம் இலங்கை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்ள விட­யங்கள் தொடர்பில் இம்­முறை மீளாய்வு செய்­யப்­படும் போது கவனத்தில் கொள்ளப்படவுள்ளது.

 மீளாய்வுக்கு முன்னதாக இலங்கை அரசாங்கம் 25பக்க தேசிய அறிக்கையை வெளியிட்டுள்ளதோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் காரியாலயம் இலங்கை மீதான அவனதானிப்புக்களை 12 பக்க அறிக்கையாகவும், அரசசார்பற்ற நிறுவனங்கள் 22 பக்கங்களில் இலங்கை குறித்த அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளன.

இது இவ்வாறு இருக்க இந்த மீளாய்வு கூட்ட அமர்வில் பங்கேற்பதற்காக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி. சில்வா தலைமையிலான குழுவினர் ஜெனீவா நோக்கி செல்லவுள்ளனர். பிரதியமைச்சர் ஹர்ஷ டி. சில்வா உறுப்பு நாடுகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இந்த 28ஆவது காலக்கிரம மீளாய்வு செயற்குழு கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகளின் 193 உறுப்பு நாடுகளில் 96 உறுப்பு நாடுகள் இலங்கை குறித்து உரையாற்றவுள்ளன. இதன்போது இலங்கையிடம் கேள்விகள் எழுப்பப்படவுள்ளன.   

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-13#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.