Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரா­ணு­வத்­திடம் பொது­மக்­களின் 6051 ஏக்கர் காணிகள் எஞ்­சி­யுள்­ளன....பயங்­க­ர­வாத தடைச் சட்டம் நீக்­கப்­படும் : ஜெனி­வா­வுக்கு அர­சாங்கம் விபர அறிக்கை

Featured Replies

இரா­ணு­வத்­திடம் பொது­மக்­களின் 6051 ஏக்கர் காணிகள் எஞ்­சி­யுள்­ளன

G9-5317813ef033dc4ecbe6dc4a4a6ca3ac5734aaf3.jpg

 

பயங்­க­ர­வாத தடைச் சட்டம் நீக்­கப்­படும் :  ஜெனி­வா­வுக்கு அர­சாங்கம் விபர அறிக்கை  
(ரொபட் அன்­டனி)

இலங்கை அர­சாங்­க­மா­னது நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது. குறிப்­பாக காணா­மல்­போனோர் அலு­வ­லகம் தொடர்­பான சட்டம் நிறை­வேற்­றப்­பட்டுள்­ள­துடன் இது­வரை வடக்கு, கிழக்கில்   24 ஆயி­ரத்து 336 ஏக்கர் காணிகள் இரா­ணு­வத்­தி­னரால் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன என்று ஜெனிவா மனித உரிமை பேர­வைக்கு ஐக்­கி­ய­நா­டுகள் சபை அறி­வித்­தி­ருக்­கி­றது.   

அத்­துடன் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்கி அதற்கு பதி­லாக சர்­வ­தேச தரத்­துடன் அமைந்த சட்டம் ஒன்றை கொண்­டு­வ­ரு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு பணிகள் பரந்­து­பட்ட ரீதியில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன என்றும் அர­சாங்கம் ஜெனி­வா­விற்கு அறி­வித்­தி­ருக்­கின்­றது.

ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நடை­பெற்று வரு­கின்ற 28 ஆவது பூகோல காலக்­கி­ரம மீளாய்வு அமர்வில் நாளைய தினம் இலங்கை தொடர்­பான விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது.

இது­தொ­டர்பில் சிவில் சமூ­கங்­களும் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையும் இலங்கை அர­சாங்­கமும் அறிக்­கை­களை சமர்ப்­பித்­தி­ருக்­கின்­றன. இதில் அர­சாங்கம் ஜெனி­வா­விற்கு சமர்ப்­பித்­துள்ள அறிக்­கை­யி­லேயே இந்த விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளன.

அந்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள மேலும் சில முக்­கி­ய­வி­ட­யங்கள் வரு­மாறு:

காணாமல் போனோர் அலு­வ­ல­ககம்

அர­சாங்கம் உண்மை, நீதி, நட்­ட­ஈடு, மற்றும் மீள் நிக­ழாமை ஆகிய கார­ணி­களின் அடிப்­ப­டையில் நல்­லி­ணக்கப் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. அத­ன­டிப்­ப­டை­யி­லேயே காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்­கான சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டது. அதற்­கான சட்­டத்தில் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது.

உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­குழு

அது­மட்­டு­மன்றி உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழு­வொன்றை அமைப்­ப­தற்­கான கல்­வி­யா­ளர்கள், நீதித்­துறை நிபு­ணர்கள் மற்றும் அரச அதி­கா­ரி­களைக் கொண்ட குழு­வொன்று நிறு­வப்­பட்­டுள்­ளது. அந்­தக்­குழு இது­தொ­டர்பில் ஆராய்ந்து வரு­கின்­றது.

நட்­ட­ஈடு

அடுத்­த­தாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்­கு­வ­தற்­கான நட்­ட­ஈட்டு அலு­வ­ல­க­மொன்றை நிறு­வ­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு ஒரு தொழில்­நுட்ப குழு முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த இரண்டு நிறு­வ­னங்­க­ளுக்­கு­மான வரை­புகள் நிறை­வ­டைந்­ததும் அதனை அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இவற்­றுக்­கான நடை­மு­றைகள் குறித்து ஆராய உயர்­மட்ட குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

காணிகள் விடு­விப்பு

தொடர்ந்து காணி­களை விடு­விக்கும் செய்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. வடக்கு, கிழக்கில் இது­வரை இரா­ணு­வத்­தி­ன­ட­மி­ருந்த 24336 ஏக்கர் தனியார் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. 2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து இந்­தக்­கா­ணிகள் விடு­விக்­கப்­பட்டு வரு­கின்­றன. எப்­ப­டி­யி­ருப்­பினும் 2015 ஆம் ஆண்­டி­லி­ருந்து இது­வரை 4190 ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. இன்னும் இரா­ணு­வத்­திடம் வடக்கு, கிழக்கு மக்­களின் 6051 ஏக்கர் காணிகள் காணப்­ப­டு­கின்­றன. அவை தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

 2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களில் பாட­சா­லைகள் புன­ர­மைக்­கப்­பட்டு திறக்­கப்­பட்டு வரு­கின்­றன. முன்னாள் புலி சிறுவர் போரா­ளிகள் தற்­போது கல்­வி­கற்று வரு­கின்­றனர்.

தேசிய கீதம்

2015 ஆம் ஆண்டு சமா­தானப் பிர­க­டனம் இலங்கை அர­சாங்­கத்­தினால் செய்­யப்­பட்­டது. அத்­துடன் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்­டு­களில் தேசிய கீத­மா­னது சிங்­களம் மற்றும் தமிழ் மொழி­களில் பாடப்­பட்­டன.

தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள்

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அர­சாங்கம் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களின் எண்­ணிக்­கையை குறைப்­ப­தற்கு ஒரு கொள்கை அளவில் தீர்­மானம் எடுத்­தது. அதா­வது வழக்குத் தாக்கல் செய்­யப்­ப­டாமல் தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்­களை விடு­விக்­கவே நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. எனினும் தற்­போது இந்த அறிக்கை தயா­ரிக்­கப்­ப­டும்­வரை பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட அனை­வரும் பொது­வான சட்­டத்தின் கீழ் மாற்­றப்­பட்­டுள்­ளனர். நிலு­வை­யி­லுள்ள வழக்­கு­களை விரைந்து விசா­ரிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை

நீக்க நட­வ­டிக்கை

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்­கு­களை விரை­வாக விசா­ரிக்க கொழும்­பிலும் அநு­ரா­த­பு­ரத்­திலும் விசேட மேல் நீதி­மன்­றங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கி­விட்டு அதற்கு பதி­லாக பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­ட­மொன்றை சர்­வ­தேச தரத்தின் அடிப்­ப­டையில் கொண்­டு­வ­ரு­வ­தற்கு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இது­தொ­டர்­பான புதிய சட்ட வரை­புக்கு அமைச்­ச­ர­வையின் அனு­மதி கிடைத்­தி­ருக்­கி­றது. இந்த நடை­முறை இன்னும் முடி­வு­செய்­யப்­ப­ட­வில்லை. அது சட்­ட­மூ­ல­மாக மாற்­றப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. சட்­ட­மூ­ல­மாக மாற்றம் பெற்­றதும் அது மக்­களின் மீளாய்­வுக்கு முன்­வைக்­கப்­படும். இவ்­வாறு அந்த அறிக்­கையில் சில முக்­கிய விட­யங்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

விப­ர­மான அறிக்கை

2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் விப­ர­மான முறையில் இந்த அறிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை நாளைய தினம் இலங்கை தொடர்­பான கார­சா­ர­மான விவாதம் ஜெனி­வாவில் இடம்­பெ­ற­வுள்­ளது. இதன்­போது அமெ­ரிக்கா, பிரிட்டன், ஜெர்மன், பிரேஸில், பெல்­ஜியம் உள்­ளிட்ட பல்­வேறு நாடுகள் இலங்­கை­யிடம் எழுப்­பி­யுள்ள கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கப்­படும் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஹர்ஷ டி. சில்வா பதி­ல­ளிப்பார்

இலங்­கையின் சார்பில் பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா இந்த விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வி­ருக்­கின்றார். அமெ­ரிக்கா, பிரிட்டன் உள்­ளிட்ட நாடுகள் கடும் அதி­ருப்­தியை வெளி­யிட்டு இலங்­கை­யிடம் கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளன. அந்தவகையில் புதன்கிழமை இடம்பெறவுள்ள இலங்கை தொடர்பான விவாதம் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வௌ்ளிக்கிழமை

யோசனை நிறைவேற்றப்படும்

மேலும் புதன்கிழமை விவாதத்தின் பின்னர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை தொடர்பான யோசனைத்திட்டம் காலகிரம மீளாய்வு அமர்வில் நிறைவேற்றப்படவுள்ளது. அதாவது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பில் காலக்கிரம மீளாய்வு தொடர்பில் இந்த யோசனை நிறைவேற்றப்பட்டு அது அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும்.

அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்குள் அரசாங்கம் யோசனைகளை அமுல்படுத்தவேண்டும். மீண்டும் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு இதுதொடர்பான மீளாய்வு இலங்கையை கேந்திரப்படுத்தி ஜெனிவாவில் இடம்பெறும். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-14#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.