Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் அம்­பிகா சற்­கு­ண­நா­தனுடனான நேர்காணல்

Featured Replies

  • இலங்கை மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் அம்­பிகா சற்­கு­ண­நா­தனுடனான நேர்காணல்
இலங்கை மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் அம்­பிகா சற்­கு­ண­நா­தனுடனான நேர்காணல்
 
 

இலங்கை மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் அம்­பிகா சற்­கு­ண­நா­தனுடனான நேர்காணல்

 

பயங்­க­ர­வாதத் தடுப்­புச் சட்­டம் கட்­டா­ய­மாக நீக்­கப்­ப­ட­வேண்­டும். ஏனெ­னில் அந்­தச் சட்­டம்   மனித உரிமை மீறல்­கள் நடை­பெ­று­வ­தற்கு ஏற்­ற­தொரு சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்­து­கின்­றது’’  என இலங்கை மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் அம்­பிகா சற்­கு­ண­நா­தன் தெரிவித்தார்.
‘சுடர் ஒளி’ பத்திரிகைக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்வியின் போதே அவர் இந்­தக் க­ருத்­துக்­க­ளைத் தெரி­வித்­தார்.

கேள்வி: சித்­தி­ர­வ­தை­கள் தொடர்ச்­சி­யாக இடம்­பெ­று­வ­தாக முறைப்­பா­டு­கள் வந்­து­ கொண்டே இருக்­கின்­றன. நீங்­கள் மனித உரி­மை­ கள் ஆணைக்­கு­ழு­வில் இணைந்து இரண்டு வரு­டங்­கள் ஆகி­விட்­டன. இந்­தக்­கா­லப்­ப­கு­தி­யில் சித்­தி­ர­வ­தை­களை மேற்­கொண்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை ஏதாவது எடுக்­கப்­பட்­டதா? அது தொடர்­பான புள்­ளி­வி­வரங்­கள் ஏதே­னும் உங்­க­ளி­டம் இருக்­கின்­றதா?

பதில்: எமக்­குத் தரப்­பட்ட புள்­ளி­வி­வரங்­க­ளின் படி 30 அதி­கா­ரி­கள் குற்றவாளி­க­ளாக இனங் காணப்பட்டுள்ளனர். 18 அதி­கா­ரி­கள் நிர­ப­ரா­தி களாகவும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­னர். 59 வழக்­கு­கள் நீதி­மன்­றத்­தில் தொடர்ந்­தும் இடம்­பெற்­றுக்கொண்­டி­ ருக்­கின்­றன.  இவற்­றைத் தவிர சித்­தி­ர­வ­தை­யில் ஈடு­பட்­ட­  குற்­றச் சாட்­டுக்­கள் சுமத்­தப்­பட்ட  100 அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக விசா­ர­ணை­ க­ளைப் பொலி­ஸார் முன்­னெ­டுத்­து­வ­ருகின்றனர் என்று எமக்குக் கூறப்­பட்­டது. இவற்­றையே உங்­க­ளு­டன் பகிர்ந்­து­கொள்­ள­மு­டி­யும்.

கேள்வி: இதிலே சில நாள்களுக்கு முன்­பாக ‘அஸோ­ஸி­யே­டற் பிரஸ்’ செய்­திச் சே­வை­யால் சுட்­டிக்­காட்­டப்­பட்ட சித்­தி­ர­வ­தை­ க­ளும் உள்­ள­டக்­கு­கின்­றனவா?

பதில்: நீங்­கள் கூறும் ‘அஸோ­ஸி­யே­டற் பிரஸ்’ அறிக்­கை­யில் சுட்­டிக்­காட்­டப்­பட்ட குற்­றச் சாட்­டுக்­கள் இது­வ­ரை­யில் முறைப்­பா­டு­க­ளாக எமக்கு வர­வில்லை. ஆனால் இந்த முறைப்­பா­டு­ கள் எமக்கு மேற்­கொள்­ளப்­பட்­டால்  அல்­லது அந்த அறிக்­கையை தயா­ரித்­த­வர்­கள் எம்­மு­டன் வந்து தக­வல் பரி­மா­றிக்­கொண்­டால் நிச்­ச­ய­மாக அதனை விசா­ர­ணை­செய்து  தேவை­யான நட­வ­டிக்கை எடுப்­பது எமது கட­மை­யா­கும்.

கேள்வி:அண்­மை­யிலே இலங்­கைக்குப் பய ணம் மேற்­கொண்ட ஜுன் லம்­பேர்ட் தலை­மை­யி­லான ஐரோப்­பிய நாடாளு­மன்­றத் தூதுக்­கு­ழு­வி­னர் ஒரு ஊட­க­வி­ய­லா­ளர் மாநாட்டை நடத்­தி­யி­ருந்­த­னர். பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை நீக்­கு­வது தொடர்­பாகத் தாம் கடந்­தாண்டு இலங்­கைக்­குப் பய­ணம் மேற்­கொண்­ட­போது அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­கள் இதுவரை நிறை­வேற்றப்­ப­ட­வில்லை. அத­னால் தாம் மிகுந்த கவ­லை­கொண்­டி­ருப்­ப­தாக   அவர்கள் குறிப்­பிட்டார்கள். இந்த விட­யத்­திலே மனித உரிமை ஆணைக்குழு என்­ன­செய்­து­கொண்­டி­ருக்­கின்­றது? இது விட யத்தில் நீங்­கள் எடுக்­கும் நட­வ­டிக்கை என்ன?

பதில்: பயங்­க­ர­வாதத் தடுப்­புச் சட்­டம் கட்­டா­ய­மாக நீக்­கப்­ப­ட­வேண்­டும். ஏனெ­னில் அந்­தச் சட்­டம்   மனித உரிமை மீறல்­கள் நடை­பெ­று­வ­தற்கு ஏற்­ற­தொரு சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்­து­கின்­றது. உதா­ர­ண­மாக அந்­தச் சட்­டத்­தின் கீழ் நீதி­ப­தி­ யொ­ரு­வ­ருக்கு முன்­பாக முன்­னி­லைப்­ப­டுத் தப்­ப­டா­மலேயே ஒரு­வர் 18 மாதங்­கள் தடுத்­து­வைக்­கப்­ப­ட­லாம். சாதா­ரண சட்­டத்­தின் கீழ் நீதி­ப­தி­யொ­ரு­வ­ ருக்கு முன்­னர் மாத்­தி­ரமே ஒரு­வ­ரி­ட­மி­ருந்து ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்­தைப் பெற­மு­டி­யும். அது நீதி­மன்­றத்­தா­லும் ஏற்­கப்­ப­டும். ஆனால் பயங்­க­ர­வாத தடுப்­புச் சட்­டத்­தின் கீழ் அந்த ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்தை உத­விப் பொலிஸ் பரி­சோ­த­கர் அன்­றேல் அவ­ருக்கு மேலுள்ள அதி­கா­ரி­கள் எவ­ரும் பெற்­றுக்­கொள்­ளும் நிலை­யி­லேயே அந்த ஒப்­பு­தல் வாக்­கு­மூ­ல­மா­னது நீதி­மன்­றத்­தால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டும். ஆகை­யால் அந்­த­மா­தி­ரி­யான ஒரு  சட்­டம் இருக்­கும் நிலை­யில், அது   சித்­தி­ர­வதைகளைச்  செய்­வ­தற்குச் சாத­க­மான ஒரு சூழ் நி­லையை  ஏற்­ப­டுத்­து­கின்­றது.  ஏனெ­னில் அந்த ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்­தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கா­கவே சித்­தி­ர­வதை செய்­யப்­ப­டக்­கூ­டும். ஆகை­யால்தான்  தற்­போ­துள்ள பயங்­க­ர­வா­தத் தடுப்­புச் சட்­டம் பன் னாட்டு மனித உரி­மைச் சட்­டங்­க­ளுக்கு ஏற்ப அமை­ய­வில்லை. ஆகை­யால் அந்­தச் சட்­டத்தை நீக்­க­வேண்­டும் என்று மனித உரி­மை­கள் ஆணைக் குழு திட்­ட­வட்­ட­மாக உறு­தி­ப­டக் கூறி­ யுள்­ளது. இதனை வலி­யு­றுத்தி நாம் தலைமை அமைச்சருக்கு எழு­தி­யி­ருக்­கின்­றோம். அத்­தோடு பகி­ரங்க அறிக்­கை­க­ளை­யும் விடுத்­தி­ருக்­கின் றோம். எமது இணை­யத்­த­ளத்­தில் சென்று இவற்றை நீங்­கள் பார்வை யிட ­மு­டி­யும். பயங்­க­ர­வாதத் தடுப்­புச் சட்­டத்தை நீக்க வேண்­டும் என்­பதே எமது பரிந்­துரை.

கேள்வி: கடந்த இரண்­டு­வ­ரு­ட­கால உங்­கள் அனு­ப­வத்­தின்படி, மனித உரி­மை­யைப் பேணு­கின்ற­ விட­யத்­தில் இந்த அர­சு உண்­மை­யான உறு­திப்­பாட்­டைக் கொண்­டி­ருப்­ப­தா­கக் காண்­கின்­றீர்­களா? அன்­றேல் கண்­து­டைப்­புக்­காக நிறு­வ­னங்­களை அமைத்து வாக்­கு­று­தி­க­ளைக் கொடுத்­து­விட்டு இருந்­து­வி­டு­கின்­ற­தென எண்­ணு­கின்­றீர்­களா?

பதில்: மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வைப் பொறுத்­த­வரை நாம் ஒரு சுயா­தீ­ன­மான ஆணைக்­குழு. ஆகை­யால் நாம் சுயா­தீ­ன­மா­கவே செயற்­ப­ட­வேண்­டும். சுயா­தீ­ன­மா­ கவே செயற்­ப­டு­கின்­றோம். இப்­போ­துள்ள மாற்­ற­மாக நாம் கண்­ட­தென்­ன ­வெ­னில், தற்­போது பேச்­சுச்­சு­தந்­தி­ரம் உள்­ளது. அரசு மேற்கொள்ளும் குறை­நி­றை­ களை, சரி, பிழை­க­ளைச் சுட்­டிக்­காட்­டு ­வ­தற்­கான  சுதந்­தி­ரம் உள்­ளது.  அத­னைத்­த­விர அர­சு மேற்கொள்ளும் அல்­லது அர­சி­யல்­யாப்பை அல்­லது மனித உரிமை ஆணைக்­குழு போன்ற நிறு­வ­ னங்­க­ளைக் கூட சீர்­தி­ருத்தி அமைப்­பது என்­பது  சுல­ப­மான காரி­ய­மல்ல. ஏனெ­னில் பத்­து­வ­ரு­ட­கா­லம் சர்­வா­தி­கார  அரசு இருந்த பின்­ன­ணி­யிலே  ஒரு கலா­சா­ரம் உரு­வா­கும். அதா­வது சட்­டத்தை மதிக்­கத் தேவை­யில்லை, மனித உரி­மை­மீ­றல்­களை நாம் இழைக்­க­லாம் , இழைத்­தா­லும் சட்­டத்­தி­லி­ருந்து நாம் தப்­பிக்­கொள்­ள­லாம் என்ற மனப்பாங்கு மேலெழும். ஆகை­யால் அந்­த­மா­தி­ரி­யான கலா­சா­ரத்தை மாற்­று­வ­தென்­பது  இல­கு­வா­ன­தல்ல. மனித உரிமை ஆணைக் கு­ழு­வைக் கூட  சில பேர் மட்டுமன்றி சில அர­ச­நி­று­வ­னங்­களைச் சேர்ந் தோர் கூட தமது எதி­ரி­யா­கவே பார்க்­கின்­ற­னர்.  பார்க்­கக்­கூ­டும். ஏனெ­னில் மனித உரி­மை­க­ளைப் பாது­காக்­கும் விட­யத்­தில் அரசு எடுக்க வேண்­டிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கின்­றதா என்­பதை மனித உரி­மை­கள் ஆணைக்­குழு கண்­கா­ணித்து,  அரசு செய்­யும் பிழை­க­ளைச் சுட்­டிக் காட்டி சரி­யான வழி­யில் பய­ணிக்­கப்  பரிந்­து­ரை­கள் வழங்­கு­வ­து­தான் எமது கடமை.  ஆகை­யால் நாம் எம்மை எதி­ரி­யா­கப் பார்க்­க­வேண்­டாம் என்றே நாம் அரச நிறு­வ­னங்­க­ ளுக்குக் கூறு­கின்­றோம். இலங்­கை­யி­லுள்ள அனை­வ­ரது மனித உரி­மை­க­ளை­யும் பேணு­வதை உறு­திப்­ப­டுத்­து­ வதே எமது கடமை. எங்­க­ளைப் பொறுத்­த­வரை எந்த அர­சும் எப்­போ­தும் எல்­லா­ நே­ரத்­தி­லும் மனித உரி­மை­களை மதிப்­ப­தில்லை. அவர்­கள் மதிக்­கா­மல் சட்­டத்துக்கு மாறாகச் செயற்­ப­டும் போது கட்­டா­ய­மாக நாங்­கள் குரல் எழுப்ப வேண்­டும்; சுட்­டிக் காட்­ட­வேண்­டும்; பரிந்­து­ரை­களை வழங்­க­வேண்­டும்.

கேள்வி:உங்­களை எதி­ரி­யா­கப் பார்க்­க­ வேண்­டாம்  என்று கடந்த கேள்­விக்­கான பதி­லில் கூறி­னீர்­கள்.  கடந்த அரசில் மனித உரி­மைக்­காக குரல் எழுப்­பி­ய­வர்­க­ளைத் துரோ­கி­களாக அடை­யா­ளம் காட்­டிய காலப்­ப­குதி இருந்­தது. தொலைக் காட்­சி­க­ளில் முகங்­க­ளைக் காண்­பித்து இவர்­கள் துரோ­கி­கள் எனக்­கூ­றி­னர். இந்­தப் போக்கை எப்­படி மாற்­றி­ய­மைக்­க­மு­டி­யும்?

பதில்: இது கடி­ன­மான கேள்வி. அரச உத்­தி­யோ­கத்­தர்­கள், பொலி­ஸார் மற்­றும் பொது­மக்­கள் மத்­தி­யில் மனித உரி­மை­க­ளைப் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வது மனித உரிமை ஆணைக்­கு­ழு­வின் கட­மை­க­ளி­லொன்­றா­கும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை நாம் எடுக்­கின்­றோம். ஆனா­லும் அந்த நட­வ­டிக்­கை­கள் போதாது. ஏனெ­னில் பத்­து­வ­ருட கால­மாக( மகிந்­த­வின் ஆட்­சிக்­கா­லத்­தில் ) மனித உரி­மை­க­ளைப் பற்­றிக் கதைத்­தால் எமது தேசி­யப் பாது­காப்­புக்கு எதி­ரான ஒரு நட­வ­டிக்­கை­யாக க் கரு­தப்­ப­டத்தக்க நிலை நிலவியது. அல்­லது குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­கின்ற ஒரு நட­வ­டிக்­கை­யா­கக் கரு­தப்­ப­ட­ நேர்ந்தது. அரசை அசௌ­க­ரி­யப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­யா­கக் கண்­டு­கொள்­ளப்படும் நிலை இருந்தது. ஆகை­யால் அந்த மாதி­ரி­யான கலா­சா­ரத்தை, மன­நி­லையை மாற்­று­வ­தென்­பது  இல­கு­வா­ன­தல்ல. நாம் கடந்த இரண்டு வரு­டங்­க­ளில் எத்­த­னையோ நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருக்­கின்­றோம்.  ஆனா­லும் அவை இல­கு­வான விட­யங்­க­ளல்ல.

கேள்வி:காணா­மல்­போ­னோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை அமைப்­பது தொடர்­பான சட்­டம் கடந்­தாண்டு ஓகஸ்ட் மாதத்­தில் நிறை­வேற்­றப்­பட்டு, நீண்ட நாள்­கள் இழு­ப­றிக்­குப் பின்­னர் அரச தலைவர் அந்த சட்­டத்­தில் கையொப்­ப­மிட்­டி­ருந்­த­போ­தி­லும் அந்த அலு­வ­ல­கம் இன்­ன­மும் இயங்­கு­வ­தைக் காண­மு­டி­ய­வில்லை. இந்த விட­யத்­திலே உங்­க­ளு­டைய பார்வை எப்­படி இருக்­கின்­றது?

பதில்: அந்த அலு­வ­ல­கத்­துக்கு உறுப்­பி­னர்­க­ளைத் தெரி­வு­செய்து நிய­மிப்­ப­ தற்­காக இரண்டு வாரங்­க­ளுக்கு முன்­னர் விளம்­ப­ரம் செய்­யப்­பட்­டது. சிவில் நிறு­வ­னங்­கள் ஆள்­களை பிரே­ரிக்க முடி­யும். அல்­லது அதில் அங்­கத்­த­வர்­க­ளாக விரும்­பு­வோர் விண்­ணப்­பங்­க­ளைச் சமர்­பிக்க முடி­யும்.  அதற்கு பிறகு அர­சி­யல்­யாப்பு பேரவை பரிந்­து­ரை­க­ளுக்கு அமைய  அவர்­கள் நிய­மிக்­கப்­ப­டு ­வார்­கள். அதற்கு நிய­மிக்­கப் ப­டும் உறுப்­பி­னர்­கள்  மனித உரிமை விட­யங்­க­ளில் தேர்ச்­சி­யுள்­ள­வர்­க­ளா­க­வும், சுயா­தீ­ன­மா­ ன­வர்­க­ளா­க­வும்,  காணா­ ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளின் குடும்­பங்­க­ளு ­டன் இணைந்து பணி­யாற்­றி­ய­வர்­க­ளா­க­வும் இருப்­பது மிக­ முக்­கி­ய­மா­கும். ஏனெ­னில் இது ஒரு புது அமைப்பு.  இதன் செயற்­பா­டு­கள் சீராக நடை­பெ­று­வ­தற்கு  அதன் உறுப்­பி­னர்­க­ளின் பங்­க­ளிப்பு மிக முக்­கி­யமா­கும்.  பிழை­யான அங்­கத்­த­வர்­களை நிய­மித்­தால் அந்த நிறு­வ­னம் இயங்­கப்­போ­வ­தில்லை.  இந்­த­மா­தி­ரி­யான நிறு­வ­னங்­கள் இயங்­கு­வ­தற்கு சில­மா­தங்­கள், சில வேளை ஒரு­வ­ரு­ட­மா­வது எடுக்­கும். ஏனெ­னில் பிராந்­தி­யங்­க­ளில் அலு­வ­ல­கங்­க­ளைத் திறக்க வேண்­டி­யுள்­ளது. தேர்ச்­சி­யான நிபு­ணர்­க­ளைக் கொண்­டு­வ­ர­வேண்­டி­யி­ருக்­கும். சரி­யான அங்­கத்­த­வர்­களை நிய­மிப்­பதே மிக­முக்­கி­ய­ மா­ன­வி­ட­ய­மா­கும்.  அது சரி­யாக சீராக செயற்­ப­டு­கின்­றதா என்­பதை அதற்­குப் பின்­னர் தான் நாங்­கள் நிச்­ச­யப்­ப­டுத்த முடி­யும்.

கேள்வி: மனித உரிமை ஆர்­வ­லர்­கள், காவ­லர்­கள் தொடர்ச்­சி­யாக கண்­கா­ணிக்­கப்­ப­டு­வ­தாக ஐநா­வில் கூட முறை­யி­டப்­பட்­டி­ருந்­தது. அவர்­க­ளு­டைய பாது­காப்பை உறு­தி­செய்­வ­தற்கு,  அவர்­கள் தொடர்ந்­தும் பணியை துணி­க­ர­மாக முன்­னெ ­டுப்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு  மனித உரி­மை­கள் ஆணைக்­குழு என்­ற­வ­கை­யில் நீங்­கள் எடுத்­துள்ள நட­வ­டிக்கை என்ன?

பதில்: மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வுக்­குப் பத்து பிராந்­திய அலு­வ­லர்­கள் உள்­ள­னர் . கடந்த இரண்டு வரு­டங்­க­ளில் மனித உரிமை ஆர்­வ­லர்­கள் மற்­றும் சிவில் சமூ­கத்­தி­னர் எம்­மி­டம் வந்து முறைப்­பாடு செய்­துள்­ள­னர்.  சில வேளை­க­ளில் பாது­காப்­புச் சேவை­யில் இருப்­ப­வர்­கள் எமது அலு­வ­ல­கங்­க­ளுக்கு வந்து தக­வல்­கள் கேட்­கின்­ற­னர் என்று முறைப்­பா­டு­கள் மேற்­கொண்­டி­ருக்­கின்­ற­னர். அப்­படி மேற்­கொள்­ளும்­போது நாம் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­கின்­றோம். அவர்­க­ளுக்கு தேவை­யான பாது­காப்­பா­ன­தொரு சூழலை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக தன்­னால் இய­லு­மான  அளவு முயற்­சி­ களை மனித உரிமை ஆணைக்­குழு எடுத்­தி­ருக்­கின்­றது. ‘‘எந்­தப்­பி­ரச்சினை இருந்­தா­லும் தய­வு­ செய்து மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வுக்கு  முறைப்­பாடு செய்­யுங்­கள்’’ என நாம் சிவில் சமூ­கத்­தி­னர் மற்­றும் மனித உரி­மை­கள் ஆர்­வ­லர்­க­ளுக்கு கூறு­கின்­றோம்.  பிராந்­தி­யங்­க­ளில் என்ன நடக்­கின்­றது என்று தெரிந்­தால் மட்­டுமே  நாம் தேவை­யான நட­வ­டிக்கை எடுக்க முடி­யும். எங்­க­ளு­டைய செயற்­பாடு சரி­யாக இல்­லா­வி­டின், அவர்­கள் எம்­மி­டம் கேள்வி கேட்­க­லாம். கேள்­வி­ கேட்க வேண்­டும். ஏனெ­னில் அது அவர்­க­ளின் உரி­மை­யா­கும். அப்­போ­து­தான் மனித உரிமை ஆணைக் கு­ழு­வும் சரி­யா­கச் செயற்­ப­ட­மு­டி­யும்– என்றார்.

http://newuthayan.com/story/46452.html

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

+

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.