Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு – கிழக்கு இணைப்பை எதிர்போர் முஸ்லிம்களுக்கும் எதிரிகளே ஹிஸ்புல்லாவுக்கு சரவணபவன் எம்.பி. பதிலடி

Featured Replies

 
வடக்கு – கிழக்கு இணைப்பை எதிர்போர் முஸ்லிம்களுக்கும் எதிரிகளே
 
 

வடக்கு – கிழக்கு இணைப்பை எதிர்போர் முஸ்லிம்களுக்கும் எதிரிகளே

ஹிஸ்புல்லாவுக்கு சரவணபவன் எம்.பி. பதிலடி

வடக்கு – கிழக்கு இணைந்தால் குருதி ஆறு ஓடும் எனக் கொக்கரிப்பவர்கள் நிச்சயமாகத் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம் மக்களுக்கும் விரோதிகள் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு இணைத்தால் குருதி ஆறு ஓடும் என்று இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா அரசமைப்பு நிர்ணய சபையில் உரையாற்றியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு-கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழிடம் என்பதில் இருவேறுபட்ட கருத்துகளுக்கு இடமில்லை. இலங்கையில் நாகர் இனத்தின் வழித்தோன்றல்கள் எனக் கூறுப்படும் தமிழ் மக்கள் இந்த மண்ணில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல்கொண்டு நாகரிகத்தில் முன்னேறிய ஒரு சமூகமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

அதேபோன்று கி.பி. மூன்றாம் நூற்றாண்டை அடுத்த காலப் பகுதியிலேயே முஸ்லிம் மக்கள் இங்கு வாழ்ந்ததும், வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டதும் வரலாற்று ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இரு இனங்களுக்குமிடையே இறுக்கமான பொருளாதார, கலாசார உறவு வந்துள்ளது. தமிழ் மக்களின் ஆடை அணிகள் முதல்கொண்டு அவர்களுக்குத் தேவையான நுகர்வுப் பொருள்கள் முஸ்லிம்களின் வர்த்தக நடவடிக்கைகளாலே நிறைவு செய்யப்பட்டன. அதேபோன்று முஸ்லிம்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் முதலியவற்றைத் தமிழ் மக்களே வழங்கினர். பொருளாதார அடிப்படையில் ஒருவரில் ஒருவர் தங்கி நிற்குமளவுக்கு ஒரு அன்னியோன்னியமான உறவு நிலவி வந்தது.

முஸ்லிம்கள் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தது மட்டுமின்றி தமிழ்மொழிக்கு வளம் சேர்ப்பதில் பாரிய பங்காற்றி வந்துள்ளனர். முஸ்லிம்களின் பிரதான இலக்கிய நூலாகிய சிறாப்புராணம் தமிழ் மொழிக் காவியங்களில் ஒன்றாகப் போற்றப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி மட்டக்களப்பு, மன்னார், புத்தளம் ஆகிய பகுதிகளில் சிறந்த தமிழ்ப் புலவர்களாகப் பல முஸ்லிம் பெரியார்கள் விளங்கி வந்துள்ளனர். சங்க காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ஈழத்துப் பூதந்தேவனார் என்ற புலவர்கூட மன்னாரைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் எனச் சில ஆதாரங்கள முன்வைக்கப்பட்டுள்ளன. இன்றும்கூட பல முஸ்லிம் கவிஞர்களும், எழுத்தாளர்களும் தமிழ் இலக்கியப் பரப்பில் பல ஒப்பற்ற சாதனைகளைச் செய்து வருகின்றனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாகச் சோலைக்கிளி என்ற முஸ்லிம் கவிஞர் பல உணர்ச்சிபூர்வமான கவிதைகளை வழங்கியுள்ளார்.

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களும், சிங்களப் பேரினவாத சக்திகளும் இந்த ஆண்டாண்டு காலமாக நிலைத்து வந்த ஐக்கியத்தைச் சிதைக்கப் பல்வேறு முயற்சிகளை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செய்துவருகின்றனர். ஆளும் தரப்பினர் ஆளப்படும் மக்களைக் கூறுபோட்டுப் பலவீனப்படுத்தித் தங்கள் அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபடுவது அப்படியொன்றும் அதிசயமல்ல. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இச்சதி நடவடிக்கைகளில் பங்காளிகளாக மாறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. முஸ்லிம்களின் நலன்களுக்காக என்ற போர்வையில் தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் தொடர்ந்து அடக்குமுறையின் கீழ் வைத்திருப்பதற்குத் துணைபோவதையே சிலர் இப்போது மேற்கொண்டு வருகின்றனர்.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா வடக்கு-கிழக்கு இணைக்கப்படுமானால் இங்கு குருதி ஆறு ஓடுமெனத் தெரிவித்துள்ளார். வடக்கு – கிழக்கு இணைக்கப்படவேண்டும் என்பதும் அதில் முஸ்லிம்களுக்குத் தனியலகு வழங்கப்படவேண்டுமெனவும், முஸ்லிம் காங்கிரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கொள்கையளவில் ஏற்றுக்கொண்ட கோட்பாடாகும். முஸ்லிம் தங்கள் தனித்துவமான உரிமைகளைப் பாதுகாத்துக் கொண்டு தமிழ் பேசும் மக்களாக தமிழர்களுடன் ஒன்றுபட்டு நாம் ஒன்றுபட்ட சக்தியாகப் பலம் பெற்று நிற்பதற்கான பாதையை இந்த வடக்கு-கிழக்கு இணைப்பு உருவாக்குகிறது.

இதை எதிர்ப்பவர்கள் முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியுமா?
கடந்த ஆட்சிக் காலத்தில் இனவாதிகளால் பள்ளிவாசல்கள் தகர்க்கப்பட்டபோதும், அளுத்கம, தர்க்கா நகர்ப்பகுதிகளில் முஸ்லிம்களின் குருதி ஆறாக ஓடியபோதும், மகிந்தவின் நிழலில் நின்று தங்கள் குரல்களை அடக்கி வாசித்தார்கள். இன்று முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் ஒன்றுபடுவதை எதிர்த்து, முஸ்லிம் மக்களுக்கு ஒரு தனி அலகு உருவாவதை தடுக்க குருதி ஆற்றைத் திறந்து விடப் போகிறாராம்! விந்தைதான்!
இன்றும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் 1990இல் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை சொல்லிச் சொல்லியே தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கசப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகின்றனர். அது ஒரு விரும்பத்தகாத சம்பவம் என்பதை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கின்றோம்.
அப்படி ஒரு சம்பவம் நடக்க மூலகாரணமாக இருந்தவர்கள் புலிகள் என்பதைவிட ஆட்சியாளர்களிடம் சோரம்போன அரசியல்வாதிகள் தான் என்பதை இங்க ஆணித்தரமாக வெளிப்படுத்தவிரும்புகின்றேன்.

1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் கொக்கட்டிச்சோலை, வந்தாறுமூலை, சத்துருக்கொண்டான், புதுக்குடியிருப்பு, வீரமுனை, உடும்பன்குளம் உடபடக் கிழக்கில் பல பகுதிகளிலும் பல கிராமங்கள் சிறப்பு அதிரடிப்படையினராலும், முஸ்லிம் ஊர்காவல் படையினாலும் சுற்றிவளைக்கப்பட்டுப் பெரும் மனித வேட்டைநடத்தப்பட்டது. ஒவ்வொரு இடங்களிலும் நூற்றுக்கணக்கான மக்கள் நிலைகுலையாகக் கொல்லப்பட்டனர். இதில் முன்னணியில் நின்று செயற்பட்டவர்கள் முஸ்லிம் ஊர்காவல்படையினரே.
இது தமிழ் மக்கள் மத்தியில் கொதி நிலையை ஏற்படுத்தியது. முஸ்லிம் மக்கள் தாக்கப்படவும், அழிக்கப்படவுமான ஒருநிலை தோன்றியது. முஸ்லிம்களின் உயிரைப்பாதுகாக்கவும், ஒரு கலவரம் தோன்றி குருதி ஆறு ஓடுவதையும் தவிர்க்க விடுதலைப் புலிகளுக்கு வேறு வழியிருக்கவில்லை.

அன்று கிழக்கில் தமிழ் மக்களின் குருதி ஆறாக ஓடுவதைத் தடுக்க எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் முன்வரவில்லை. ஆனால், வடக்கில் முஸ்லிம்களின் குருதி ஓடுவதைத் தவிர்க்கப் புலிகள் முஸ்லிம்களை வடக்கைவிட்டு வெளியேற்றினர்.

புலிகளின் நடவடிக்கைகளை மீண்டும் மீண்டும் சொல்லிச்சொல்லி தமிழ்மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே முரண்பாடுகளையும் மோதல்களையும் ஏற்படுத்தி ஐக்கியத்தைச் சீர்குலைக்காதீர்கள்.
இப்படியான சீர்குலைவு சக்திகளுக்கு ஒரு முக்கிய விடயத்தை நினைவூட்ட விரும்புகிறோம். கடந்த மாகாண சபை இயங்கிய காலத்தில் முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைத்தனர். அப்போது அவர்கள் அதிகார மற்றவர்களாகவே செயற்படவேண்டி இருந்தது. கொழும்பு அரசின் ஒரு குடையாகவே கிழக்கு மாகாண சபை இயங்கியது. இப்போது முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைத்த நிலையில் முதலமைச்சராக ஒரு முஸ்லிம் பதவி வகித்தார். அதுமட்டுமன்றி இரு தரப்பினரும் ஒன்றினைந்து மாகாண சபையை உயிர்ப்புடன் இயக்க முடிந்தது. தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒன்றிணையும்போது எமது பலம் உருவாகிறது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

இப்படியான நிலையில் வடக்கு – கிழக்கு இணைந்தால் குருதி ஆறு ஓடும் எனக் கொக்கரிப்பவர்கள் நிச்சயமாகத் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம் மக்களுக்கும் விரோதிகள் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

http://newuthayan.com/story/47170.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.