Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத் தளபதியை ஆஜராகுமாறு யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவு

Featured Replies

இராணுவத் தளபதியை ஆஜராகுமாறு யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவு

 

 

(ரி.விரூஷன்)

யாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டு இராணுவத்தால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நாட்டின் இராணுவ தளபதியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

court.jpg

கடந்த 1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சவகச்சேரி நாவற்குழி பகுதியில் வைத்து நாவற்குழி இராணுவ முகாம் தளபதியான துமிந்த கெப்டி வெலானவால் கைது செய்து சென்றநபர்கள் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டதாகவும், அவர்களை மீட்டுத் தருமாறு கோரி அவர்களது உறவினர்களால் மூன்று ஆட்கொணர்வு மனுக்காளனது சட்டத்தரணி குருபரன் மற்றும் சுபாஷினி ஆகியோரால் யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ் மனுவில் நாவற்குழி இராணுவ முகாம் தளபதி துமிந்த கெப்டி வெலாவன முதலாம் எதிரியாகவும், இரண்டாம் எதிரியாக இராணுவத் தளபதியும், மூன்றாம் எதிரியாக சட்டமா அதிபரும் பெயர் குறிப்பிடப்பட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இதன்படி இம் மனுத் தொடர்பான விசாரணையானது இன்றைய தினம் யாழ் மேல் நீதிமன்றில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே நீதிபதி மேற்படி உத்தரவை பிறப்பித்திருந்தார்.

http://www.virakesari.lk/article/27082

  • தொடங்கியவர்

இராணுவத்தளபதிக்கு அழைப்பாணை : யாழ்.மேல் நீதிமன்றம் விடுத்தது

p23-2c6d2b22bea98fbbb03bdab448219e35e9401728.jpg

 

(ரி.விரூஷன்)

யாழ்ப்­பா­ணத்தில் 1996ஆம் ஆண்டு இரா­ணு­வத்தால் கைது செய்­யப்­பட்டு வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளது உற­வி­னர்­களால் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கில் நாட்டின் இரா­ணுவ தள­ப­தியை மன்றில் முன்­னி­லை­யா­கு­மாறு யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் உத்­த­ர­விட்­டுள்ளார். 

கடந்த 1996ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சவ­கச்­சேரி நாவற்­குழி பகு­தியில் வைத்து நாவற்­குழி இரா­ணுவ முகாம்

தள­ப­தி­யான துமிந்த கெப்டி வெலா­ன­வினால் கைது செய்­யப்­பட்டு கொண்டு செல்­லப்­பட்ட நபர்கள் இரா­ணு­வத்தால் காணாமல் ஆக்­கப்­பட்­ட­தா­கவும், அவர்­களை மீட்டுத் தரு­மாறு கோரி அவர்­க­ளது உற­வி­னர்­களால் மூன்று ஆட்­கொ­ணர்வு மனுக்கள் சட்­டத்­த­ரணி குரு­பரன் மற்றும் சுபா­ஷினி ஆகி­யோரால் யாழ்.மேல் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இவ் மனுவில் நாவற்­குழி இரா­ணுவ முகாம் தள­பதி துமிந்த கெப்டி வெலா­வன முதலாம் எதி­ரி­யா­கவும், இரண்டாம் எதி­ரி­யாக இரா­ணுவ தள­ப­தியும், மூன்றாம் எதி­ரி­யாக சட்­டமா அதி­பரும் பெயர் குறிப்­பி­டப்­பட்டு இவ் மனு­வா­னது தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. இதன்­படி இந்த மனுத் தொடர்­பான விசா­ர­ணை­யா­னது நேற்­றைய தினம் யாழ் மேல் நீதி­மன்றில் இடம்­பெற்­றி­ருந்­தது. இதன்­போதே நீதி­பதி மேற்­படி உத்­த­ரவை பிறப்­பித்­தி­ருந்தார்.

நீதி­பதி தனது உத்­த­ரவில் குறிப்­பிட்­டி­ருப்­ப­தா­வது,

சர்­வ­தேச குற்­ற­வியல் சட்­டத்தின் கீழ் வலிந்து காணாமல் ஆக்­குதல் என்­பது குற்­றச்­செயல் என்­ப­துடன் அது மனி­தா­பி­மா­னத்­திற்கு எதி­ரான செயற்­பாடு எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவற்­றை­விட ஜக்­கிய நாடுகள் ரூவாண்டா யுத்­தக்­குற்ற நீதி­மன்­றமும், ஜக்­கிய நாடுகள் யூ­கோஸ்­லே­வி­யான யுத்தக் குற்ற நீதி­மன்றம் ஆகிய நீதி­மன்­றங்கள் வலிந்து காணாமல் போதல் குற்றச் செயல் எனவும் மனி­தா­பி­மா­னத்­திற்கு எதி­ரான செயற்­பாடு எனவும் தீர்­ப­ளித்­துள்­ளன.

இவ்­வா­றான நிலையில் இவ் வழக்கும் காணப்­ப­டு­கின்­றது. எனவே இவ் வழக்கு தொடர்பில் எதி­ரி­க­ளாக குறிப்­பி­டப்­பட்­டுள்ள முதலாம் எதி­ரி­யான துமிந்த கெப்டி வெலான மற்றும் தற்­போ­தைய நாட்டின் இரா­ணுவ தள­பதி ஆகியோர் எதிர்­வரும் ஆண்டு ஜன­வரி மாதம் 18ஆம் திகதி இந் நீதி­மன்றில் முன்­னி­லை­யாக வேண்டும்.

இது தொடர்­பான அழைப்­புக்­கட்­ட­ளையை அவர்­க­ளுக்கு அனுப்பி வைக்­கு­மாறும், இது தொடர்பான அறிவுறுத்தலை முதலாம் இரண்டாம் எதிரிகளுக்கும் சட்டமா அதிபருக்கும் அனுப்பி வைக்குமாறு யாழ்.மேல் நீதிமன்ற பதிவாளருக்கு பணிப்புரை பிறப்பிப்பதாக யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-16#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.