Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவால்­கள் நிறைந்த பாதை­யில் பய­ணிக்­கப்போகும் கூட்­ட­மைப்பு

Featured Replies

 
சவால்­கள் நிறைந்த  பாதை­யில்  பய­ணிக்­கப்போகும்  கூட்­ட­மைப்பு
 
 

சவால்­கள் நிறைந்த பாதை­யில் பய­ணிக்­கப்போகும் கூட்­ட­மைப்பு

 

தமிழ்த் தே­சி­யக் கூட்­ட­மைப்பு பிள­வு­ப­டு ­வது அநே­க­மாக நிச்­ச­ய­மா­கி­விட்­டது. முன்­னர் எதிர்­பார்த்­த­படி ஈ.பி.ஆர்.எல்.எவ்.கட்சி கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வில­கித் தனி­வ­ழி­யில் செல்­வ­தற்­குத் தீர்­மா­னித்து விட்­டது. இனி­மேல் வேறு எவ­ரு­ட­னா­வது கூட்­டணி அமைப்­ப­தற்­கான பேச்சில் அந்­தக் கட்சி ஈடு­ப­டப் போகின்றது.

ஆனால் சில்­லறை விட­யங்­க­ளுக்­காக கூட்­ட­மைப்பு பிள­வு­பட முடி­யா­தெ­ன­ வும், ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ர­னு­டன் தாம் பேச­வுள்­ள­தா­க­வும் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரான சம்­பந்­தன் தெரித்­துள்­ளார். எந்த நம்­பிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் அவர் இவ்­வாறு கூறி­னார் என்­பது தெரி­ய­வில்லை.

கூட்­ட­மைப்­பைத் தொடர்ந்து  விமர்­சித்து வரும்  ஈ.பி.ஆர்.எல்.எவ்.

ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலை­வர் சுரேஷ் பிரே­மச்சந்­தி­ர­னும் அந்­தக் கட்­சி­யைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­த­னும் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரை­யும், கூட்­ட­மைப்­பை­யும் குறை­கூ­று­வ­தைத் தமது வழக்­க­மா­கக் கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

இவர்கள் கூட்­ட­மைப்­பில் இருந்து கொண்டே கூட்­ட­மைப்பை விமர்­சித்து வந்­ததை எந்த வகை­யி­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. சபா­நா­ய­க­ரி­டம் சம்­பந்­தன் தொடர்­பாக முறைப்­பாடு செய்­யும் அள­வுக்கு சிவ­சக்தி ஆனந்­தன் அர­சி­ய­லில் கீழி­றங்­கிச் சென்­றி­ருக்­கக் கூடாது.

ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்­சி­யைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் , மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளும் தேர்­தல்­க­ளில் தமி­ழ் அரசுக்­கட்­சி­யின் வீட்­டுச் சின்­னத்­தில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றுள்­ள­னர். தமி­ழ் அரசுக் கட்­சி­யின் பொதுச் செய­லா­ளர் இவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுத்­தால் இவர்­கள் தமது பத­வி­க­ளைக் கூட இழக்க வேண்­டிய நிலை உரு­வா­கி­வி­டும்.

மேலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் திடீ­ரென இந்த முடி­வுக்கு வந்­த­தா­கத் தெரி­ய­வில்லை. நீண்ட கால­மா­கத் திட்­ட­மிட்டு தரும் பார்த்து இந்த முடி­வுக்கு வந்­த­தா­கவே எண்­ணத் தோன்­று­கின்­றது.

வடக்­குக் கிழக்­கில் உள்ள தமிழ் மக்­க­ளின் பெரும் அபி­மா­னத்­தைப் பெற்­ற­தால், கூட்­ட­மைப்­புக்கு இந்த நாட்­டில் மட்­டு­மல்­லாது அயல் நாடு­க­ளி­லும் மதிப்பு அதி­க­மாக உள்­ளது. தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பா­கக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­த­னு­டன் கலந்­து­ரை­யா­டு­வதை இங்கு வருகை தரு­கின்ற அயல் நாட்டு இரா­ஜ­தந்­தி­ரி­கள் ஒரு வழக்­க­மா­கவே கொண்­டுள்­ள­னர்.

இலங்கை அர­சும் கூட்­ட­ மைப்­புக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்து வரு­கின்­றது. இந்த நிலை­யில் அந்த அமைப்பு பிள­வு­ப­டு­மா­னால் அதன் மதிப்­புக்­குப் பெரும் பின்­ன­டைவு ஏற்­பட்டு விடும்.

தமி­ழர்­கள் தம்­மி­டையே பிள­வு­ப­டு­வது எதி­ரிக்கு வாய்ப்­பாக ஆகி­வி­டும்

தமி­ழர்­கள் மேலும் மேலும் பிளவு பட்டு நிற்­பது எதி­ரி­க­ளுக்­குச் சாத­க­மாகி விடும். தேர்­தல்­கள் வரு­வ­தை­யொட்டி கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான சக்­தி­கள் தம்மை ஒன்­றி­ணைப்­ப­தற்­கான முயற்­சி­க­ளில் ஈடு­பட்­டுள்­ளன. தேர்­தல்­க­ளின் மூல­மா­கக் கிடைக்­கப்­போ­கின்ற ஆச­னங்­களை மட்­டுமே அவை இன்று கணக்­குப் போ­டு­கின்­றன. தமி­ழர்­க­ளின் ஒற்­றுமை சிதைக்­கப்­ப­டு­வது தொடர்­பாக இந்­தச் சக்­தி­கள் எள்­ள­ள­வும் கவ­லைப்­ப­டு­வ­தில்லை.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு தகுந்த பாடம் புகட்­டு­வோம் என யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யம் கடு­மை­யாக எச்­ச­ரித்­துள்­ளது. அர­சி­யல் கைதி­க­ளின் உணவு ஒறுப்புப் போராட்­டம் தொடர்­பில் முடிவு ஒன்றை எட்­டு­வ­தற்­கான அடுத்த கட்ட நட­வ­டிக்கை தொடர்­பாக ஆராய முன்­வ­ரு­மாறு ஒன்­றி­யத்­தி­னர் விடுத்த அழைப்பை நிரா­க­ரித்து, கூட்­ட­ மைப்­பின் பெரும்­பா­லான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் குறித்த கூட் டத்­துக்கு சமூ­கம் தர­வில்லை.

இதன் கார­ண­மா­கவே மாண­வர் ஒன்­றி­யத்­தின் சீற்­றம் கூட்­ட­மைப்­பின் பக்­கம் திரும்­பி யுள்­ளது. இது தொடர்­பா­கக் கூட்­ட­ மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் க­ளின் கருத்து என்­ன­வென்று இது­வரை தக­வல் வெளி­வ­ர­வில்லை.

பல்­க­லைக்­ழக மாண­வர் 
சமூ­கத்­தின் எதிர்ப்பை 
எதிர்­நோக்­கப்­போ­கும் கூட்­ட­மைப்பு

ஆனால் வடக்­கில் இடம்­பெ­றப் போகும் தேர்­தல்­க­ளில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளின் எதிர்ப்பை கூட்­ட­மைப்பு எதிர்­கொள்ள வேண்டி நேரி­டும் என்­ப­தைச் சொல்­லத் தேவை­யில்லை. கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின்­போ­தும் இவ்­வா­றான தொரு நிலையே காணப்­பட்­டது. அத­னால் கூட்­ட­மைப்­பி­ னர் இது தொடர்­பா­கப் பெரி­தாக அலட்­டிக்­கொள்ள மாட்­டார்­க­ளென நம்­ப­லாம்.

கூட்­ட­மைப்­புக்கு எதி­ராக அமைக்­கப்­ப­டப்­போ­கும் பொது எதி­ரணி, தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­தற்கு உளச் சுத்­தி­யு­டன் செயற்­ப­டு­மா­யின், மக்­கள் அதை ஏற்­கவே செய்­வார்­கள். இன்­றைய நிலை­யில் தமிழ் மக்­கள் செய்­வ­த­றி­யாத நிலை­யில் திகைத்து நிற்­கின்­ற­னர். இவர்­க­ளின் தலை­களை அழுத்­து­கின்ற பிரச்­சி­னை­களை இறக்கி வைப்­ப­தற்கு நேர்­மை­யான அர­சி­யல் தலை­மை­யொன்று அவர்­க­ளுக்­குத் தேவை­யா­க­வுள்­ளது.

சம்­பந்­தன் நேர்­மை­யான ஒரு தலை­வர் என்­றா­லும் அவ­ரது செயற்­பா­டு­க­ளில் மக்­கள் பூர­ண­மான திருப்­தி­யைக் கொண்­டி­ருப்­ப­தற்­தா­கத் தெரி­ய­வில்லை.
ஆகவே கூட்­ட­மைப்பு நிலை­மை­களை உணர்ந்து தனது செயற்­பா­டு­க­ளில் கால நேரத்­துக்­கேற்ற மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும். மக்­கள் எம்­மைத் தொடர்்­நது ஆத­ரிப்­பார்­கள் என்ற குருட்டு நம்­பிக்­கை­யைஒ­துக்கி வைத்­து­விட்டு சவால்­க­ளைச் சமா­ளிப்­ப­தற்­கான வியூ­கங்­களை கூட்­ட­மைப்­பி­னர் அமைத்­துக்­கொள்ள வேண்­டும்.

http://newuthayan.com/story/46861.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.