Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்த கோரி : இலங்கைக்கு கடும் அழுத்தம்...மனித உரிமை பேர­வையில் இலங்­கை­யிடம் சர­மாரி கேள்­விகள்

Featured Replies

ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்த கோரி : இலங்கைக்கு கடும் அழுத்தம்

p26-1423be3f77c8dab896e418935199f1eaf648735c.jpg

 

மனித உரிமை பேர­வையில் இலங்­கை­யிடம் சர­மாரி கேள்­விகள்  
(ரொபட் அன்­டனி)

இலங்கை காணாமல்போனோர் விவ­கா­ரத்­துக்கு தீர்­வு­கா­ண­வேண்டும் என்­ப­துடன் காணி­களை விடு­விப்­பது அவ­சி­ய­மாகும். அத்­ துடன் விரைந்து பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுக்­க­வேண்டும் என்று கனடா, ஜேர்மனி  உள்­ளிட்ட சர்­வ­தேச நாடுகள் நேற்று ஜெனிவா மனித உரிமை பேர­வையில் வலி­யு­றுத்­தின.   

அத்­துடன் யுத்­தத்தின் பின்­ன­ரான இலங்­கையில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள முன்­னேற்­றங்கள் கருத்து வெ ளியிட்ட சர்­வ­தேச நாடுகள் விரைந்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்­க­வேண்டும் எனவும் முன்­னேற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்றும் இலங்­கையை வலி­யு­றுத்­தின.

இலங்கை குறித்த பூகோள காலக்­கி­ரம மீளாய்வு கூட்டத் தொடர் நேற்று ஜெனி­வாவில் நடை­பெற்­றது. இதன்­போது விவா­தத்தை ஜெனிவா சென்­றி­ருந்த பிர­தி­ய­மைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆரம்­பித்து வைத்­துடன் இலங்கை சார்பில் நீண்ட உரையை நிகழ்த்­தினார்.

தொடர்ந்து உறுப்பு நாடுகள் இலங்கை பிர­தி­நி­தி­க­ளிடம் சர­மா­ரி­யாக கேள்­வி­களை எழுப்­பினர். குறிப்­பாக பொறுப்­புக்­கூறல் பொறி­முறை காணாமல் போனோர் விவ­காரம் காணி விடயம் நட்­ட­ஈடு செயற்­பாடு நல்­லி­ணக்க வேலைத்­திட்­டங்கள் தொடர்பில் சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­திகள் இலங்கை குழு­வி­ன­ரிடம் கேள்­வி­யெ­ழுப்­பினர். இவற்­றுக்கு பிர­தி­ய­மைச்சர் தலை­மை­யி­லான குழு­வினர் பதி­ல­ளித்­தனர்.

சுமார் இரண்டு மணி­நேரம் இலங்கை தொடர்­பான கேள்­விகள் எழுப்­பப்­பட்­ட­துடன் கரி­ச­னை­களும் வெ ளிப்­ப­டுத்­தப்­பட்­டன. இந்­நி­லையில் இந்த விவா­தத்தில் உறுப்பு நாடுகள் முன்­வைத்த விட­யங்கள் வரு­மாறு

நெதர்­லாந்து

இந்த அமர்வில் நெதர்­லாந்து நாட்டு பிர­தி­நிதி உரை­யாற்­று­கையில்,

இலங்­கையில் ஏற்­ப­டுத்­தி­யுள்ள முன்­னேற்­றத்தை பாராட்­டு­கின்றோம். எனினும் அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு மற்றும் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை செயற்­பாடு தொடர்ந்து தாம­த­மா­கவே இடம்­பெ­று­கின்­றது. மத ரீதியில் இடம்­பெறும் அநீ­தி­களை நிறுத்த நட­வ­டிக்கை வேண்டும். சிறு­பான்மை மதத்­தி­ன­ருக்கு எதி­ரான அனைத்­து­வி­த­மான வன்­மு­றைகள் மற்றும் அச்­சு­றுத்­தல்­களை முடி­வுக்கு கொண்டு வந்து நீதியை நிலை­நாட்ட வேண்டும் என்றார்.

நோர்வே  இந்த அமர்வில் நோர்வே நாட்டின் வதி­விடப் பிர­தி­நிதி உரை­யாற்­று­கையில், 

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்த அர­சாங்கம் கால அட்­ட­வ­ணை­யுடன் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்­பான அர­சாங்­கத்தின் அர்ப்­ப­ணிப்பை பாராட்­டு­கின்றோம். மேலும் மனித உரிமைப் பாது­காப்­பா­ளர்­களை பாது­காக்க நட­வ­டிக்கை எடுப்­ப­துடன் சிவில் சமூ­கத்­தி­ன­ருக்கு உரிய சூழலை உரு­வாக்க வேண்­டு­மென வலி­யு­றுத்­து­கிறோம் என்றார்.

மொண்­ட­னேக்ரோ

இலங்கை தொடர்­பான இந்த விவா­தத்தில் மெண்­ட­னேக்ரோ நாட்டின் பிர­தி­நிதி உரை­யாற்­று­கையில்,

அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கல் செயற்­பாட்டில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள முன்­னேற்­றத்தை கவ­னத்திற் கொண்­டுள்ளோம். பாது­காப்புத் தரப்­பி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாக குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள சட்­ட­வி­ரோ­த­மான தடுத்து வைத்­தல்கள் சித்­தி­ர­வ­தைகள், பாலியல் வன்­மு­றைகள் தொடர்பில் சுயா­தீ­ன­மாக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என்­பதை ஊக்­கு­விக்­கின்றோம் என்றார்.

மலே­சியா

இலங்கை குறித்த இந்த விவா­தத்தில் மலே­சி­யாவின் பிர­தி­நிதி கல்­பனா தேவி உரை­யாற்­று­கையில்,

பால்­நிலை சார்ந்த வன்­மு­றை­களை தடுப்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். பால் நிலை தொடர்­பான வன்­முறைச் சம்­ப­வங்­களை ஆராய்­வ­தற்­கான அதி­கா­ரி­க­ளுக்கு சரி­யான பயிற்சி வழங்­கப்­பட வேண்டும் என்றார்.

அயர்­லாந்து

அயர்­லாந்து நாட்டின் பிர­தி­நிதி நேற்­றைய விவா­தத்தில் உரை­யாற்­று­கையில்,

மனித உரிமை அலு­வ­ல­கத்­து­ட­னனும் அதன் விசேட நிபு­னர்­க­ளு­டனும் இலங்கை அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் ஈடு­பாட்­டு­ட­னான வேலைத்­திட்­டத்தை வர­வேற்க்­கின்றோம். ஜன­நா­ய­கத்­துக்­கான இடைவெ ளி திறக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் வர­வேற்க்­கின்றோம். எனினும் மனித உரிமை பாது­காப்­பா­ளர்கள் மீதான அச்­சு­றுத்­தல்கள் சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்கள் குறித்த விசா­ர­ணைகள் உரிய முறையில் இடம்­பெ­றாமை தொடர்­பான அண்­மைக்­கால அறிக்­கைகள் விட­யத்தில் கரி­சணை கொண்­டுள்ளோம். மனித உரிமை காப்­பா­ளர்­களை பாது­காக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இலங்கை ஜெனிவா தீர்­மா­னத்­திற்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யமை வர­வேற்க்­கத்­தக்­கது. இலங்கை அர­சாங்கம் விரை­வாக உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவை நிறுவ வேண்டும் என்­ப­துடன் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றை­யையும் தயா­ரிக்க வேண்டும். நட்­ட­ஈடு வழங்கும் பொறி­மு­றையும் அவ­சியம்.

இத்­தாலி

இத்­தாலி நாட்டின் பிர­தி­நிதி நேற்­றைய விவா­தத்தில் உரை­யாற்­று­கையில்,

பல­வந்­த­மாக கடத்­தப்­ப­டு­வது தொடர்­பான சர்­வ­தேச சாச­னத்தில் இலங்கை கைச்­சாத்­திட்­டமை தொடர்பில் வர­வேற்க்­கின்றோம். அத்­துடன் ஐந்து வரு­டங்­க­ளுக்­கான ஒரு மனித உரிமைத் திட்டம் இலங்­கை­யினால் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அதனை நாங்கள் பாராட்­டு­கின்றோம். தன்­னிச்­ச­யான தடுத்து வைத்­தல்கள், சித்­தி­ர­வ­தைகள், காணா­மல்­போ­தல்கள் என்­பவை தொடர்பில் சுயா­தீன விசா­ரணை அவ­சியம். மத சுதந்­தி­ரத்தை பாது­காக்க வேண்டும் என்றார்.

கனடா

கனடா நாட்டின் பிர­தி­நிதி நேற்­றைய விவா­தத்தில் உரை­யாற்­று­கையில்,

பயங்­க­ர­வாதச் தடைச் சட்­டத்தை உட­ன­டி­யாக மாற்­றி­ய­மைக்க வேண்டும். உட­ன­டி­யாக நீக்க வேண்டும். அதற்குப் பதி­லான சட்டம் சர்­வ­தேச தரத்தில் அமைய வேண்டும். ஏன் அப்­படி கூறு­கின்­றீர்கள். ஜெனிவா பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்தும் செயற்­பாட்டை துரி­த­மாக முன்­னெ­டுக்க வேண்டும். நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை மேற்­கொள்­வ­துடன் காணா­மல்­போன அலு­வ­ல­கத்தை இயங்க வைக்க வேண்டும். சிவில் செயற்­பா­டு­களில் இரா­ணுவ ஈடு­பாட்டை முடி­வுக்கு கொண்­டு­வர வேண்டும். தனி­யாரின் காணிகள் விடு­விக்­கப்­பட வேண்டும் வெ ளிநாட்டு பொது நல­வாய நீதி­ப­திகள் சட்­டத்­த­ர­ணிகள் வழக்­க­றி­ஞர்­களின் பங்­க­ளிப்­புடன் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.

ஜேர்மன்

ஜேர்மன் நாட்டின் பிர­தி­நிதி நேற்­றைய விவா­தத்தில் உரை­யாற்­று­கையில்,

சுயா­தீன ஆணை­யா­ளர்­களை நிய­மிப்­பதன் மூலம் காணா­மல்­போ­ன­வர்கள் தொடர்­பான அலு­வ­ல­கத்தை முழு­மை­யாக இயங்க வைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட வேண்டும், ஜெனிவா பிரே­ர­ணையில் குறிப்­பிட்­டுள்­ள­வாறு நட்­ட­ஈட்டு அலு­வ­ல­கத்தை நிறுவ வேண்டும், ஜெனிவா பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தற்க கால நேரத்­துடன் கூடிய ஒரு திட்டம் முன்­வைக்­கப்­பட வேண்டும்.

கானா

கானா நாட்டின் பிர­தி­நிதி நேற்­றைய விவா­தத்தில் உரை­யாற்­று­கையில்,

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் பொது மக்­களின் காணிகள் உட­ன­டி­யாக விடு­விக்­கப்­பட வேண்டும். யுத்­தத்­திற்கு பின்­ன­ரான சவால்­க­ளுக்கு தீர்வு காண அர­சாங்கம் உரிய நட­வ­டிக்­கை­களை விரைந்து முன்­னெ­டுக்க வேண்டும்.

கொரியா

கொரியா நாட்டின் பிர­தி­நிதி நேற்­றைய விவா­தத்தில் உரை­யாற்­று­கையில்,

காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்­திற்கு போது­மான அளவு வளங்­களை வழங்க வேண்டும். அந்த நிறு­வனம் செயற்­றி­னா­கவும் சுயா­தீ­ன­மா­கவும் செயற்­பட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும். நட்­ட­ஈடு வழங்கும் அலு­வ­லகம் அமைக்­கப்­பட வேண்டும் என்­ப­துடன் உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழு­வையும் நிறுவ வேண்டும். மேலும் அனைத்து வகை­யான மனித உரிமை மீறல்கள் குறித்த குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பா­கவும் விசேட நீதி­மன்றம் ஒன்றை அமைத்து விசா­ரணை நடத்த வேண்டும் என்றார்.

சுவீடன்

சுவீடன் நாட்டின் பிர­தி­நிதி நேற்­றைய விவா­தத்தில் உரை­யாற்­று­கையில்,

பல­வந்­த­மாக காணா­மல்­போனோர் தொடர்­பான சர்­வ­தேச சாச­னத்தை உள்­நாட்டு சட்டக் கட்­ட­மைப்­புக்கு கொண்­டு­வர வேண்டும். குற்றம் செய்­த­வர்கள் தண்­டிக்­கப்­ப­டாமல் இருக்கும் கலா­சா­ரத்தை முடி­வுக்கு கொண்டு வர வேண்டும். இலங்கை இது தொடர்­பாக ஒரு விரி­வான அறிக்­கையை முன்­வைத்­த­மையை வர­வேற்க்­கின்றோம் என்றார்.

சுலோ­வே­னியா

சுலோ­வே­னியா நாட்டின் பிர­தி­நிதி நேற்­றைய விவா­தத்தில் உரை­யாற்­று­கையில்,

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் இலங்கை ஜனா­தி­ப­தியின் நட­வ­டிக்­கையை வர­வேற்க்­கின்றோம். பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் இலங்கை வழங்­கிய வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­பட வேண்டும். பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றை­யா­னது நம்­ப­க­ர­மா­கவும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை மைய­மாக கொண்­ட­தா­கவும் அமைய வேண்டும். சர்­வ­தேச ஆத­ரவு இதற்கு இருக்க வேண்டும். அண்­மையில் உரு­வாக்­கப்­பட்ட காணாமல் போனோர் அலு­வ­ல­கத்தை சரி­யான முறையில் இயங்க செய்ய வேண்டும். ரோம் பிர­க­ட­ணத்தில் இலங்கை இணைந்து கொள்ள வேண்டும் என்றார்.

பலஸ்தீன்

பலஸ்­தீனின் பிர­தி­நிதி நேற்­றைய விவா­தத்தில் உரை­யாற்­று­கையில்,

இலங்கை யுத்­தத்தின் பின்னர் அமை­தி­யான ஒரு தீர்வைப் பெற்றுக் கொள்ள முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கை­களை பாராட்­டு­கின்றோம். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சரி­யான விசா­ரணை அவ­சியம், சுயா­தீன பக்­கர்­சார்­பற்ற விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். 2015 ஆம் ஆண்­டி­லி­ருந்து முன்­னேற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன என்­பதை ஏற்­கிறோம் என்றார்

சிங்­கப்பூர்

சிங்­கப்பூர் நாட்டின் பிர­தி­நிதி நேற்­றைய விவா­தத்தில் உரை­யாற்­று­கையில்,

இலங்கை அர­சாங்கம் ஐக்­கிய நாடுகள் சபை மற்றும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பொறி­மு­றை­யுடன் இணைந்து செயற்­ப­டு­வது தொடர்பில் பாராட்­டு­கின்றோம். இலங்கை ஐந்து வருட மனித உரிமைத் திட்­டத்தை முன்­வைத்­தி­ருக்­கி­றது. இந்த திட்­டத்­திற்கு தேவை­யான வளங்கள் வழங்­கப்­பட வேண்டும். இலங்­கைக்கும் சிங்­கப்­பூ­ருக்­கு­மி­டையில் நீண்­ட­கால வலு­வான உறவு காணப்­ப­டு­கின்­றது என்றார்.

ஜோர்­ஜியா

ஜோர்­ஜியா நாட்டின் பிர­தி­நிதி நேற்­றைய விவா­தத்தில் உரை­யாற்­று­கையில்,

இலங்கை அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள திட்­டங்­களை அங்­கீ­க­ரிக்­கின்றோம். பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை முடி­வுக்கு கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இடம்­பெ­யர்ந்த மக்­களின் தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்­காக உட­ன­டி­யாக காணி சட்­டத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என வலி­யு­றுத்­து­கின்றோம் என்றார்.

பின்­லாந்து

பின்­லாந்து நாட்டின் பிர­தி­நிதி நேற்­றைய விவா­தத்தில் உரை­யாற்­று­கையில்,

இலங்கை அர­சாங்கம் ஜெனிவா தீர்­மா­னத்­திற்கு அமைய பொறுப்­புக்­கூ­றல்­பொ­றி­மு­றையை உரு­வாக்கி கள மட்­டத்தில் அமுல்­ப­டுத்த நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும். அத்துடன் இலங்கையானது பெண் மனித உரிமை காப்பாளர்களின் மனித உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் சமூகத்தில் அச்சமின்றி செயற்படுவதற்காக சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

டென்மார்க்

டென்மார்க் நாட்டின் பிரதிநிதி நேற்றைய விவாதத்தில் உரையாற்றுகையில்,

கடந்த கால விடயங்களை ஆராயும் நோக்கிலான ஒரு மிக முக்கிய செயற்பாடாக நாங்கள் காணாமல்போனோர் அலுவலகம் நிறுவப்பட்டதைப் பார்க்கின்றோம். இதேவேளை அரசாங்கம் ஜெனிவா பிரேரணையை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதை வரவேற்க்கின்றோம் என்றார்.

பெல்ஜியம்

பெல்ஜியம் நாட்டின் பிரதிநிதி நேற்றைய விவாதத்தில் உரையாற்றுகையில்,

இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பில் பெல்ஜியம் திருப்தியடைகிறது. காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டமையை வரவேற்க்கின்றோம். எனினும் இன்னும் பல ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள் அமுல்படுத்தப்படவில்லை. அந்த வகையில் உண்மையைக் கண்டறிவதற்கான ஒரு பொறிமுறை மற்றும் நீதி, நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன் நட்டஈடு வழங்குவதற்கான அலுவலகம் உருவாக்கப்பட வேண்டும் என்றார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-16#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.