Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தை தடுக்கும் முயற்சியில் மகிந்த சமரசிங்க

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தை தடுக்கும் முயற்சியில் மகிந்த சமரசிங்க

ஜஞாயிற்றுக்கிழமைஇ 11 மார்ச் 2007இ 17:23 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ

ஜெனீவாவில் நாளை ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் நான்காவது மாநாட்டில் கலந்து கொள்ளும் சிறிலங்காவின் மனித உரிமைகள் பேரனர்த்த நிவாரண அமைச்சர் மகிந்த சமரசிங்க சிறிலங்காவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தினால் கொண்டுவரபட தீர்மானித்திருக்கும் தீர்மானத்தை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

நாளை திங்கட்கிழமை (12.03.07) ஆரம்பமாகி 30 ஆம் நாள் வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத் தொடரில் உலகில் மனித உரிமைகளை மேம்படுத்துதல்இ பாதுகாத்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. இதில் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு பங்கேற்க உள்ளது.

இது தொடர்பாக மகிந்த சமரசிங்க தெரிவித்ததாவது:

"அங்கு சிறிலங்கா தொடர்பாக தீர்மானங்கள் விவாதிக்கப்பட மாட்டாது. ஆனால் சிறிலங்காவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் ஒரு தீர்மானத்தை கொண்டுவர முன்னர் தீர்மானித்திருந்தது. எனினும் அது முன்னர் விவாதிக்கப்படவில்லை. இந்த கூட்டத்தில் அது விவாதிக்கப்படலாம்.

நான் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிரந்தர உறுப்பினர்களை சந்தித்து சிறிலங்காவின் நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிப்பேன். சிறிலங்காவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் கடந்த வருடம் ஜூன் மாதம் கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் இன்றுவரை விவாதத்திற்கு அது எடுத்துக்கொள்ளப்படவில்லை. அது எடுத்துக் கொள்ளப்படுமா என்பது குறித்து எமக்கு எதுவும் தெரியாது.

மனித உரிமைகள் தொடர்பாக நாம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்பதனை குறிப்பாக விசாரணை ஆணைக்குழு மற்றும் அனைத்துலக நிபுணர் குழு தொடர்பாக அவர்களுக்கு நான் விளக்குவேன்.

எமக்கு எதிரான தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என நாம் நம்புகிறோம். இந்த தீர்மானத்தை எடுத்துக் கொள்வதற்கு இது நேரமல்ல" என்றார் அவர்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் சிறிலங்காவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தால் கொண்டுவரப்பட தீர்மானிக்கப்பட்ட தீர்மானத்தை முஸ்லிம் மாநாட்டு அமைப்பும் பல ஆசிய நாடுகளும் எதிர்த்திருந்தன.

மனித உரிமை மீறல்களை கண்காணிக்கும் அனைத்துலக கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் யோசனைகளை அமெரிக்கா எதிர்த்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

http://www.eelampage.com/?cn=31077

ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை ஜெனிவாவின் ஈ மெயில் முகவரி யாருக்கும் தெரியுமா? எல்லோரும் ஜெனிவாற்கு உங்கள் கடிதங்களை உடன் அனுப்புங்கள்.

இது நல்ல சந்தர்ப்பம். நிகழ்ச்சகளை நடக்கவிட்டு பார்க்காமல் நாங்களே சிலவற்றை நடத்தி எமக்கு சாதகமாக முடிவுகளை ஏற்படுத்த முடியும். நம்பிகையுடன் முயலுங்கள்.

வெற்றி நமது பக்கம். உங்கள் பதிலை எதிர்பார்கிறேன்.

http://www.unog.ch/80256EDD006B9C2E/(httpN...47?OpenDocument

மின்அஞ்சல் முகவரி எதுவும் தரப்படவில்லை. தொலைநகல், தொலைபேசி இலக்கங்கள் உள்ளன.

United Nations Information Service

United Nations Office at Geneva

Palais des Nations

CH - 1211 Geneva 10

Switzerland

Press/ media/ inquiries:

+41 (0)22 917 23 02 or +41 (0)22 917 23 25

Fax: +41 (0)22 917 00 30

All other inquiries +41 (0)22 917 12 34

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நோர்வேயின் தகவள்தந்தமைக்கு நன்றிkuggooஆலோசனைதந்தமைக்கும்

www.webMASTER@UNOg.ch from your download address.

நன்றி நோர்வேஜியனுக்கும், வசந்தந்1 இற்கும். நீர் தந்த முகவரியை தரையிறக்கம் செய்து அதில் கடைசி வரியில் ஈ மெயில் முகவரி ஒன்று இருந்தது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். அந்த நிகழ்ச்சி நிரலில் இலங்கை பற்றி ஒன்றுமே காணப்படவில்லை. மற்ற நாடுகளில் நடப்பவை எல்லாம் இருக்கு. இலங்கையில் நடைபெறும் முழு மனிதவுரிமை மீறல்களையும் அவர்கள் கொள்கைளில் இருக்கு

ஆனால் இலங்கை தப்பி இருக்கிறது. எப்படி?

எமக்குள் நாங்களே பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தது போதும்

தொடங்குங்கள் இன்று ஜெனிவா------ உங்கள் படங்கள்(கொலை,சித்திரைவதை,மக்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.unog.ch/80256EDD006AC19C/(httpC...nt&expand=1

மின்அஞ்சல் முகவரி, தொலைநகல், தொலைபேசி இலக்கங்கள் உள்ளன

United Nations Office at Geneva

Palais des Nations

Avenue de la Paix 8 - 14

1211 Geneva 10

Switzerland

Tel: +41 (0)22 917 22 14

Fax: +41 (0)22 917 00 05

Email: hrmsqueries@unog.ch

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.