Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்.!

அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி வாய்ப்பு யாருக்கு..?! 15 members have voted

  1. 1.

    • புஷ் - Bush
      5
    • கெரி - Kerry
      10

Please sign in or register to vote in this poll.

Featured Replies

_40474529_kez203.jpg

நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்....!

அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிக்கும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜான் கெர்ரிக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.

3 தினங்களுக்கு முன்பு யாருக்கு வெற்றிவாய்ப்பு என்பது குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவில் ஜார்ஜ் புஷ்ஷுக்கு 50 சதவீத ஆதரவும், ஜான் கெர்ரிக்கு 44 சதவீத ஆதரவும் சுயேச்சை வேட்பாளருக்கு ஒரு சதவீத ஆதரவும் இருப்பது தெரியவந்தது.

இதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் புஷ்ஷுக்கு 48 சதவீதமும் கெர்ரிக்கு 46 சதவீதமும் ஆதரவு இருந்தது. எனவே இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவது தெரிய வந்துள்ளது.

இந் நிலையில் முஸ்லீம் அடிப்படைவாதி பின் லேடனின் விடியோ டேப் வெளியாகியுள்ளது, புஷ்ஷýக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பின் லேடனை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டுவர ஏற்பாடு செய்யப்படும் என்று 3 ஆண்டுகளுக்கு முன்பு புஷ் உறுதி கூறியிருந்தார். ஆனால் அவரால் அதை நிறைவேற்ற முடியவில்லை.

thatstamil.com

தகவலுக்கு நன்றி. யார் வெல்வார்கள் குருவிகளின் கணிப்பின் படி?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கருத்துக்கணிப்பை நடாத்திறானே களத்தில....! :P

எனது கணிப்பு john kerry, தமிழினி அக்கா உங்கள் கணிப்பு என்ன?

  • தொடங்கியவர்

சரி நீங்களே... உங்கள் வாக்குகளை அளித்து கருத்தைக் கணித்துக்கொள்ளுங்கள்...!

(தமிழினியின் ஐடியாவுக்கு செயல்வடிவம் கொடுத்தாச்சு....!)

கருத்துக்கணிப்பில் குருவிகள் பங்குபெறாதோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி நீங்களே... உங்கள் வாக்குகளை அளித்து கருத்தைக் கணித்துக்கொள்ளுங்கள்...!

(தமிழினியின் ஐடியாவுக்கு செயல்வடிவம் கொடுத்தாச்சு....!)

நன்றி குருவிகள்.. அது சரி எப்ப முடிவு வரும் நாளை மறுதினமா..?? :P

  • தொடங்கியவர்

இந்த முடிவு நீங்க சொன்னது போல வரும்...அந்த முடிவு தில்லுமுல்லுகள் எல்லாம் தாண்டி வரவேணுமே... பொறுத்திருந்துதான் பார்க்க வேணும் சென்ற முறை ஒரு மாதம் எடுத்துச்சே...! :P :lol:

எம்மில் பலருக்கு புஸ் சைப் பிடிப்பதில்லை...ஈராக் யுத்தம்அதை உச்ச நிலைக்குக் கொண்டு சென்றது.அதனால் கருத்துக் கணிப்பில் வாக்களித்தவர்கள் தமது வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளனர்..

அதமரிக்கர்களைப் பொநறுத்தவரை தாமே உலகின் அசைக்க முடியாத பொலிஸ்காரர்கள் என்ற நினைப்பே ஓங்கி நிற்கிறது.அது நிலைக்கவேண்டமென்ற விருப்பும் அவர்களிடம் மண்டிக்கிடக்கிறது.

அமெரிக்காவின் வைரியாக இருந்த ரஷ்யாகூட கோபர்ஷேவின் புண்ணியத்தால் படிப்படியாக முனை மழுக்கப்பட்டு தற்போது ரஷ்ய அதிபரே புஸ்தான் அதிபராக வரத் தகுதியுள்ளவரென திருவாய் மலர்ந்துள்ளார். பில்லாடனின் திடீர் மிரட்டல் அறிக்கை கூட புஸ்சுக்கு சாதகமாகவே வரலாம்

இவையெல்லாம் தேர்தல் முடிவில் மாற்றங்களை நிகழ்த்தக் கூடும்.

  • தொடங்கியவர்

எங்களுக்கென்றால் புஷ் எடுத்த காரியத்தை முடிக்க அனுமதிப்பதே சிறந்தது.... அப்போதான் இரண்டு தரப்பும் தமது பலம் பலவீனம்...அணுகுமுறைகளில் மாற்றங்கள் என்று பலவற்றை உணர வழிவகுக்கும்...!

கெரி இடையில் வந்து குழப்பி அடிப்பது மீண்டும் அமெரிக்கா வேறொரு கோணத்தில் தனது பலவீனத்தை மறைக்க பலத்தைப் பிரயோகிக்க வழிவிடும்....!

அது இதைவிடப் பாதகமானதாக இருக்கலாம்...! இப்போ கிளிங்டன் இந்தியாவுடன் நல்லுறவை வளர்க்கப் புலிகளை இந்தியாவின் விருப்பின் பெயரில் தடை செய்தது போல...இதையே பாகிஸ்தான் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாய் தொடர்ந்தும் இருந்திருந்தால் அமெரிக்கா செய்திருக்குமா...????!

_40478981_sri-afp-300x220.jpg

Tuesday's US race is generally agreed to be too close to call - despite the conviction of some such as this Bush supporter in Sri Lanka, who paid for a somewhat premature newspaper ad

BBC Final leg of US election

:roll: :? :?:

  • தொடங்கியவர்

map_57.gif

post_result_key.gif

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய 270 ஆசனங்களில்... தற்போது.... 254 பெற்று புஷ் முன்னணியில் நிற்கிறார் கெரியும் 242 ஆசனங்கள் பெற்று பிந்தொடர்ந்து கொண்டிருக்கிறார்... யார் வெற்றியை தீர்மானிப்பென்பது இறுதிவரை விறுவிறுப்பான விடயமாகவே இருக்கும் போலத் தெரிகிறது...! இறுதி வெற்றியைத் தீர்மானிப்பதில் ஒகியோ மாநிலம் செல்வாக்குச் செலுத்தும் என்றும் தெரிகிறது....!

(இவை இறுதி முடிவுகள் அல்ல - projected results)

As well as electing a president, Americans are also choosing members of Congress and some state governors. According to projected results, both the Senate and the House of Representatives will remain in Republican hands.(bbc.com)

  • தொடங்கியவர்

அமெரிக்க சனதிபதித் தேர்தலில் மீண்டும் புஷ் வெற்றி பெற்றுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது...!

தனது பதவியைத் தொடரவிருக்கும் அதிபர் புஷ்க்கு குருவிகளின் வாழ்த்துக்கள்...! :P :wink:

White House claims Bush victory

President George W Bush has convincingly won the US election, the White House has said.

But the final result hinges on the state of Ohio where, with 99% of votes counted, Mr Bush is leading Senator John Kerry by more than 145,000.

bbc.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியா தகவலுக்கு நன்றி குருவிகள்...! :P

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

அப்ப என்னடாப்பாகிளின்டன் வெற்றி பெறவில்லையா?

இனி உலகத்தை அந்த ஆண்டவன் வந்தாலும் காப்பாற்ற ஏலாது எண்டு சொல்லுறன்!!

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப என்னடாப்பாகிளின்டன் வெற்றி பெறவில்லையா?

கறுணா ரொம்ப ஓவருங்க...

நன்றி குருவிகளே.. அந்தாளை வாழ்த்தி என்ன பிரயோசனம்

  • தொடங்கியவர்

அவர் நம்மாளு....! மேலே உள்ள மூன்றில ஒன்று நம்முடையதாச்சே...! :P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அவர் நம்மாளு....! மேலே உள்ள மூன்றில ஒன்று நம்முடையதாச்சே...! :P :lol:
ஓ அப்படியா.....நம்மை பொறுத்தவரை எந்தாளு வந்தாலும் எமக்கு எந்த நன்மையும் இல்லை...ஆனாலும் நாம இட்டது கெரிக்கு தான்..
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ அப்படியா.....நம்மை பொறுத்தவரை எந்தாளு வந்தாலும் எமக்கு எந்த நன்மையும் இல்லை

:P :lol:

சரி இந்தமுறை புஸ் வென்று போட்டான்

அடுத்த முறை யாரோ?

  • தொடங்கியவர்

சூ...மரியாதை...இந்த முறை புஷ் வென்றுவிட்டார்....! அடுத்த முறை யாரோ... நிச்சயமாக கெரி இல்ல...! கிலாரி கிளிங்டன்..???! :P :wink:

  • தொடங்கியவர்

மீண்டும் அமெரிக்க அதிபரானார் ஜார்ஜ் புஷ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜார்ஜ் புஷ் மீண்டும் வெற்றி பெற்றார்.

புஷ்ஷûம் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் கெர்ரியும் தலா 254, 252 வாக்குகள் பெற்ற நிலையில், ஓகியோ மாகாணத்தின் முடிவே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என்ற நிலை ஏற்பட்டது.

இந் நிலையில் ஓகியோ மாகாணத்தின் வாக்கு எண்ணிக்கையிலும் புஷ் முன்னிலை வகித்தார். இதையடுத்து தபால் வாக்குகள் எண்ணப்படட்டும், அதன் பின்னரே வெற்றி, தோல்வி குறித்து இறுதி செய்ய முடியும் என கெர்ரி தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், ஓகியோவில் பதிவான மொத்த வாக்குகளில் 80 சதவீதத்தை பெற்றால் கூட கெர்ரியால் வெற்றி பெற முடியாது எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.

ஜார்ஜ் புஷ்ஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தோல்வியை ஏற்பதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து அடுத்த ஜனாதிபதியாக புஷ்ஷே மீண்டும் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அமெரிக்கத் தேர்தலில் மிகக் கடுமையான போட்டிக்கு இடையே அதிபர் வெல்வது இது இரண்டாவது முறையாகும். கடந்த முறை அல்கோருக்கும் புஷ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவி, இறுதியில் புளோரிடா மாகாணத்தின் வெற்றியை வைத்து அதிபர் பதவியைப் பிடித்தார் புஷ்.

இம் முறையும் இரு வேட்பாளர்களும் சரிக்குச் சமமான வெற்றியைப் பெற்று, இறுதியில் ஓகியோ மாகாண முடிவை வைத்து புஷ் வென்றுள்ளார்.

புஷ்ஷின் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தையில் ஆயுதங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகளின் விலை உச்சத்தை எட்டின. அதே நேரத்தில் சர்வதேச பெட்ரோலிய எண்ணெயின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

thatstamil.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூ...மரியாதை...இந்த முறை புஷ் வென்றுவிட்டார்....!

என்ன எஜமானரோ..?? :lol: :P

  • தொடங்கியவர்

எஜமான் இல்ல எயும்வுள்மான்...! :P :lol:

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.