Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டு அறி­விக்­கப்­பட்டு 21 நாள்­க­ளி­லேயே சுரேஷ் க.குமார் பிரிவு

Featured Replies

  • கூட்டு அறி­விக்­கப்­பட்டு 21 நாள்­க­ளி­லேயே சுரேஷ் க.குமார் பிரிவு
கூட்டு அறி­விக்­கப்­பட்டு 21 நாள்­க­ளி­லேயே சுரேஷ் க.குமார் பிரிவு
 
 

கூட்டு அறி­விக்­கப்­பட்டு 21 நாள்­க­ளி­லேயே சுரேஷ் க.குமார் பிரிவு

சுரேஷ் பிரே­ம­ச்சந்­தி­ரன் தலை­மை­யி­லான ஈ.பி.ஆர்.எல்.எவ்­வும், கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் தலை­மை­யி­லான அகில இலங்­கைத் தமிழ் காங்­கி­ர­ஸும் இணைந்து பொது அணியை உரு­வாக்க எடுத்த முயற்­சி­கள் பிசு­பி­சுத்­துள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது. இரு­வ­ரும் பிரிந்தே தேர்­தலை எதிர்­கொள்­ளப் போவ­தா­க அறி­ய­மு­டி­கின்­றது.

இந்­தப் பிரி­வை­ய­டுத்து, சுரேஷ் பிரே­ம­ச்சந்­தி­ரன் தலை­மை­யி­லான ஈ.பி.ஆர்.எல்.எவ். அணி­யி­னர், தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யு­டன் இணைந்து போட்­டி­யி­ட­வுள்­ள­னர். இவர்­க­ளு­டன் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யி­னால் ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட சில­ரும் இணைந்­து­கொள்­ள­வுள்­ள­னர்.

கடந்த மாதம் 12ஆம் திகதி யாழ்ப்­பா­ணம் பொது நூல­கத்­தில் நடை­பெற்ற தமிழ் மக்­கள் பேர­வை­யின் கூட்­டத்­தின் பின்­னர், செய்­தி­யா­ளர்­களை ஈ.பி.ஆர்.எல்.எவ். தலை­வர் சுரேஷ; பிரே­ம­சந்­தி­ர­னும், அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ர­ஸின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­ல­மும் சந்­தித்­த­னர்.

இந்­தச் சந்­திப்­பில் எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் இரு கட்­சி­க­ளும் ஒன்­றி­ணைந்து சிவில் அமைப்­புக்­க­ளை­யும் இணைத்­துப் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அறி­வித்­த­னர். இந்­தப் புதிய கூட்­டுக்கு தமிழ் மக்­கள் பேரவை ஆத­ரவு வழங்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் அந்­தப் பேர­வை­யின் இணைத் தலை­வர்­க­ளான முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் மற்­றும் வசந்­த­ராஜா ஆகி­யோர் அதற்கு பகி­ரங்­க­மாக எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருந்­த­னர்.
இருப்­பி­னும், ஈ.பி.ஆர்.எல்.எவ்., அகில இலங்­கைத் தமிழ் காங்­கி­ரஸ் கூட்­டுக்­கான நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தது. பொதுச் சின்­னத்­தில் போட்­டி­யி­டு­வ­தற்கு இரு­கட்­சி­க­ளும் இணங்­கி­யி­ருந்­தன.

 

இதற்­கி­டையே ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யின் தலை­வர் சுரேஷ; பிரே­ம­சந்­தி­ரன் இந்­தி­யா­வுக்கு அவ­ச­ர­மா­கச் சென்று வந்த பின்­னர், தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தி­லேயே போட்­டி­யி­ட­வேண்­டும் என்­பதை எந்­த­வொரு விட்­டுக்­கொ­டுப்­பு­மின்றி வலி­யு­றுத்தி வந்­த­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அகில இலங்­கைத் தமிழ் காங்­கி­ரஸ் அதற்கு உடன்­பட மறுத்து விட்­டது. வேண்­டு­மா­னால் தமது கட்­சி­யின் ஈரு­ருளி (சைக்­கிள்) சின்­னத்­தில் போட்­டி­யி­ட­லாம் என்­றும் இல்­லா­வி­டின் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யின் சின்­னத்­தில் போட்­டி­யி­ட­லாம் என்­றும் தெரி­வித்­துள்­ளது.

ஈ.பி.ஆர்.எல்.எவ். சின்­னத்­தில் போட்­டி­யி­டு­வ­தற்கு சுரேஷ; பிரே­ம­சந்­தி­ரன் விரும்­ப­வில்லை என்­ப­து­டன், தமிழ் அர­சுக் கட்­சி­யின் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை உட்­ப­டுத்­தப்­பட்ட சில­ரும் அதனை விரும்­ப­வில்லை. இதே­வேளை, காங்­கி­ர­ஸின் சின்­னத்­தில் போட்­டி­யி­டு­வதை ஈ.பி.ஆர்.எல்.எவ்­வின் முக்­கிய மையக் குழு உறுப்­பி­னர்­கள் விரும்­ப­வில்லை.

இந்த நெருக்­க­டி­யான நிலை­யில், தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வும் இந்­தக் கூட்­டுக்கு பொதுச் சின்­னத்தை வழங்க முடி­யாது என்று தெரி­வித்­து­விட்­டது.
சின்­னச் சிக்­க­லால், இரு கட்­சி­க­ளின் கூட்­டும் உடைந்து பிரிந்­துள்­ளது.
அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் தமது கட்­சி­யின் கொள்­கை­யைக் கைவி­ட­மு­டி­யாது என்­றும் அத­னால், ஆனந்­த­சங்­க­ரி­யைச் செய­ல­ரா­கக் கொண்ட தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யில் இணைய முடி­யாது என­வும் தெட்­டத் தெளி­வா­கத் தெரி­வித்­து­விட்­டது.

 

ஆனா­லும். ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யு­டன் இணைந்து போட்­டி­யி­டு­வது உறு­தி­யா­கி­யுள்­ளது. இந்த இரண்டு கட்­சி­க­ளின் தலை­வர்­க­ளும், வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன், மன்­னார் மாவட்­டத்­தில் மாகா­ண­ச­பைத் தேர்­த­லில் போட்­டி­யிட்டு தோல்­வி­ய­டைந்த வி.எஸ்.சிவ­க­ரன் ஆகி­யோர் கிளி­நொச்­சி­யில் நேற்­றுக் கலந்­து­ரை­யா­டல் நடத்­தி­யுள்­ள­னர். விரை­வில் இந்­தக் கூட்டு இடை­யே­யான ஒப்­பந்­தம் கைச்­சாத்­தா­கக் கூடும் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

http://newuthayan.com/story/52109.html

  • தொடங்கியவர்

உதய சூரியன் எனில் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்கிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணி.

 
Uthaya-suriyan.gif
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் மக்கள் பேரவையின் ஆசியுடன் பொது கூட்டணியாக தேர்தலில் களமிறங்க தீர்மானித்தவர்களுக்கு சின்னம் கிடைக்கவில்லை என தெரியவருகின்றது. யாழ்.பொது நூலகத்தில் கடந்த 12ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவையின் சந்திப்பு இடம்பெற்றது. அதனை தொடர்ந்து சுரேஷ் பிரேமசந்திரன் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோர் உள்ளூராட்சி தேர்தலில் பொது கூட்டணியாக போட்டியிட போவதாகவும் , அக் கூட்டணி பொது சின்னம் , மற்றும் பொது பெயரில் போட்டியிடும் எனவும் அறிவித்து இருந்தனர்.
 
அந்நிலையில் , தேர்தல் ஆணையகத்தில் பொது பெயரை பதிவு செய்து பொது சின்னத்தை பெற முயன்ற போது , தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அவற்றை பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டமையினால் , பொது சின்னம் , பொது பெயரில் தேர்தலில் போட்டியிடும் திட்டம் கைவிடப்பட்டு உள்ளதாக அறியமுடிகிறது.
 
உதயசூரியனில் போட்டி. 
 
அந்நிலையில்,  பொது கூட்டணி தமிழர் விடுதலை கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்து உள்ளதாகவும் அதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது. .
 
பொது கூட்டணிக்கு பெயரை பதிவு செய்து சின்னம் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் ஒன்றான வீ . ஆனந்த சங்கரி தலைமை வகிக்கும் தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட தீர்மானித்து உள்ளதாக அறிய முடிகிறது.
 
மிக மோசமான கொள்கையுடைவர்கள் .
 
மிக மோசமான கொள்கையுடைய தமிழர் விடுதலை கூட்டணியுடன் ஒரு போதும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட மாட்டோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.அத்துடன் சின்னத்தை பெறுவதில் சிக்கல் எனில் சைக்கிள் சின்னத்தில் பொது கூட்டணி தேர்தலில் போட்டியிடலாம். அதற்கு ஏனையவர்களுக்கு விருப்பம் இல்லை எனில் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடவும் நாம் தயார்.
 
அதனை விடுத்து மிக மோசமான கொள்கையுடைய தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நாம் ஒரு போதும் தயார் இல்லை என தெரிவித்தார்.
 
உதயசூரியனில் தான் போட்டியிடுவோம். 
 
அதேவேளை தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட பொது கூட்டணியில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட சிலர் தீர்மானித்து உள்ளனர்.ஆனால் அதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
 
அந்நிலையில் பொது கூட்டணி உதய சூரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவது என இறுதி தீர்மானம் எட்டப்பட்டால் , தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொது கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து சைக்கிள் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் என அறிய முடிகிறது.

http://globaltamilnews.net/archives/52769

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.