Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் கூடிப் பேச்சு!

Featured Replies

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் கூடிப் பேச்சு!

 

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் கூடிப் பேச்சு!

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான ஆசனப் பங்கீடு குறித்த பேச்சு இன்று(3) பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமானது.

யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் இந்த கூட்டம் இடம்பெற்றது.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் கூடிப் பேச்சு!

இந்தச் சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அந்தக் கட்சியின் செயலாளர் ஆர். துரைராஜாசிங்கம், முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர்  சுகிர்தன், ரெலோ கட்சியின் செயலாளர் நா. சிறிகாந்தா, வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பிரசன்னா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோராதலிங்கம் புளொட் கட்சியின் மூத்த உறுப்பினரும் வடக்கு மாகாண அமைச்சருமான க.சிவநேசன் பங்கேற்றனர்.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் கூடிப் பேச்சு!

எனினும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் வரதராஜப்பருமாள் அணிக்கு அழைப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல.;எப் வரதராஜாப்பருமாள் அணி 4 வேட்பாளர்களைக் களமிறக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதில் ஒருவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டாளரும் முஸ்லிம் சமூக செயற்பாட்டாளருமான வர்த்தகர் ஒருவர் வேட்பாளராகக் களமிறக்க வரதர் அணி முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் கூடிப் பேச்சு!

https://news.ibctamil.com/ta/internal-affairs/tna-meeting-today-jaffna

  • தொடங்கியவர்

எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பு பலமாக இறங்கும்: மாவை சேனாதிராசா!

 

எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பு பலமாக இறங்கும்: மாவை சேனாதிராசா!

தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பலமான அணியாக களமிறங்குமென தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவது மற்றும் ஆளணிகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் இன்று மாலை 3 மணிமுதல் இரவு 9 மணி வரை சுமார் 6 மணித்தியாலயங்களாக கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் துரைராஜசிங்கம் மற்றும் ரெலோ கட்சியின் நா.ஸ்ரீகாந்தா, வினோநோதாரலிங்கம், விந்தன் கனகரட்ணம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா, உட்பட பலர்  கலந்துகொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலின் போது கருத்துத்தெரிவித்த மாவை சேனாதிராசா,

"தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து ஆராயப்பட்டன. அதனடிப்படையில், 80 சதவீதமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. நடைபெறவுள்ள தேர்தலில் 3 கட்சிகளிற்குள்ளும் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஒன்றுபட்டு திரட்டுவதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இன்னும் ஓரிரு விடயங்கள் ஆராயப்பட வேண்டியிருப்பதனால், அந்த விடயங்களையும் தீர்மானித்த பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை பகிரங்கமாக அறிவிப்போம்" என்றார்.

இதேவேளை,

"ஜனநாயக போராளிகள் கட்சி உட்பட எம்முடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஏனைய இயக்கங்களுடனும் கலந்துரையாட வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்களுடனும் கலந்துரையாடிய பின்னர் எதிர்வரும் 05ஆம் திகதி இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும். முக்கியமாக பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் பூரணப்படுத்தப்பட வேண்டியிருப்பதனால், மூன்று கட்சி சார்ந்த உறுப்பினர்களும் உரிய கவனம் செலுத்தி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பு பலமாக இறங்கும்: மாவை சேனாதிராசா!

https://news.ibctamil.com/ta/internal-affairs/TNA-LG-Election

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.