Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்­ட­மைப்­பின் கடமை

Featured Replies


 

கூட்­ட­மைப்­பின் கடமை

உள்­ளு­ராட்­சித் தேர்­தலை நடத்­து­வ­தில் இருந்த பிரச்­சி­னை­கள் எல்­லாம் தீர்க்­கப்­பட்­டு­விட்­டன. எல்­லாச் சபை­க­ளுக்­கும் ஒரே நாளில் தேர்­தல் நடத்­தப்­ப­டும் என்­பது உறு­தி­யா­கி­விட்­டது. மாசி மாதம் இலங்­கை­யின் சுதந்­திர தினத்தை அடுத்­து­வ­ரும் முதல் சனிக்கிழ­மை­யில் தேர்­தல் நடத்­தப்­ப­ட­லாம் என்­கிற எதிர்­பார்ப்பு உள்­ளது. எனி­னும் எதிர்­வ­ரும் 27ஆம் திக­தி­தான் அது தொடர்­பான உறு­தி­யான அறி­விப்பு வெளி­யா­கும். எப்­ப­டி­யி­ருந்­தா­லும் மாசி மாதத்­தில் தேர்­தல் நடப்­பது உறுதி என்­ப­தால் கட்­சி­க­ளும் அதற்­கான பணி­க­ளில் மும்­மு­ரம் காட்­டு­கின்­றன.

அண்­மை­யில் உரு­வா­கிய மகிந்த ஆத­ர­வுக் கட்சி உட்­பட வடக்­கில் பல கட்­சி­க­ளும் இந்த உள்­ளு­ராட்­சித் தேர்­த­லில் அக்­கறை காட்­டு­கின்­றன. எனி­னும், கூட்­ட­மைப்­புக்­குப் பலத்த போட்­டியை வழங்­கக்­கூ­டிய எந்­த­வொரு அணி­யும் களத்­தில் இல்லை. தமிழ் மக்­கள் பேர­வையைக் களத்­தில் இறக்­கி­வி­டு­வ­தற்கு அதி­லி­ருந்த சிலர் எடுத்த முயற்­சி­க­ளும் பிசு­பி­சுத்­துப்­போன நிலை­யாலும் தமிழ்க் காங்­கி­ரஸ் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லத்­துக்­கும் ஈபி­ஆர்­எல்­எவ் சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ர­னுக்­கும் இடை­யி­லான கூட்டு இன்னமும் சரி­வர ஒழுங்­க­மைக்­கப்­ப­டாத நிலை­யாலும் கூட்­ட­மைப்­பின் ஏக­போ­கத்­த­னத்­திற்கு அச்­சு­றுத்­தல் ஏதும் தற்போது களத்­தில் இல்லை.

 

உள்­ளு­ராட்­சித் தேர்­தல்­கள் நாடா­ளு­மன்ற மற்­றும் மாகாண சபை­கள் தேர்­த­லைப் போன்­ற­தல்ல. இங்கு வெற்றி தோல்­வி­கள் வெறும் அர­சி­யல் கொள்­கை­க­ளின் பாற்­பட்­டுத் தீர்­மா­னிக்­கப்­ப­டு­பவையல்ல. அதை­யும் தாண்டி உள்­ளு­ரில் நிறுத்­தப்­ப­டும் வேட்­பா­ள­ரின் செல்­வாக்­கும் தீர்­மா­ன­க­ர­மான பங்­க­ளிப்பை வழங்­கும். அதி­லும் இம்­முறை தொகுதி ரீதி­யான போட்­டி­யில் வேட்­பா­ள­ரின் பங்­க­ளிப்பு இன்­னும் கணி­ச­மா­ன­தாக இருக்­கும்.

அதற்­கா­கக் கட்­சி­க­ளின் கொள்கை நிலைப்­பா­டு­க­ளைப் புறக்­க­ணித்­து­விட்டு மக்­கள் வாக்­க­ளித்­து­வி­டு­வார்­கள் என்று எண்­ணி­விட முடி­யாது. எனவே இந்­த­முறை தேர்­தல் பரப்­பு­ரையை புதிய அர­ச­மைப்பு தொடர்­பான விட­யங்­கள் ஆக்­கி­ர­மித்து நிற்­கும் என்­ப­தில் சந்­தே­க­மில்லை. அதி­லும் குறிப்­பாக, ஒற்­றை­யாட்சி, பெளத்த மதத்­துக்கு முக்­கி­யத்­து­வம், வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளின் இணைப்பு என்­பவை அதி­கம் கவ­னம் பெறப்­போ­கும் விட­யங்­க­ளாக இருக்­கும்.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­தில் இந்த விட­யங்­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு விட்­டுக்­கொ­டுத்­து­விட்­டது என்­கிற பலத்த குற்­றச்­சாட்டு அதன் மீது உண்டு. தமிழ் மக்­க­ளின் அடிப்­ப­டை­க­ளையே விட்­டுக்­கொ­டுத்­து­விட்டு அரை­கு­றைத் தீர்­வைக் கூட்­ட­மைப்­பின் தலை­வர்­கள் ஏற்­கப்­போ­கி­றார்­கள் என்­கின்ற விமர்­ச­னங்­க­ளும் முன்­வைக்­கப்­ப­டுகின்­றன. எனவே தேர்­தல் பரப்­பு­ரை­யில் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான தரப்­பு­க­ளின் முக்­கிய ஆயு­த­மாக இந்­த­வி­ட­யமே இருக்­கும் என்­ப­தில் ஐய­மில்லை.

 

கூட்­ட­மைப்­புக்கு வாக்­க­ளித்­து­விட்­டால் தமி­ழர்­கள் ஒற்­றை­யாட்­சியை அங்­கீ­க­ரித்­து­விட்­டார்­கள் என்­றும், பௌத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­தற்கு இணங்­கி­விட்­டார்­கள் என்­றும், வடக்கு கிழக்கு இணைப்­புத் தேவை­யில்லை அல்­லது அத­னைப் பின்­னர் பார்த்­துக் கொள்­ள­லாம் என்று அங்­கீ­க­ரித்­து­விட்­டார்­கள் என­வும், கூட்­ட­மைப்பு பின்­னர் இவற்றையெல்லாம் திரி­பு­ப­டுத்­தி ­வி­டும் என்­றும் அத­னால் தமிழ் மக்­கள் கூட்­ட­மைப்­புக்கு வாக்­க­ளிக்­கக்­கூ­டாது என்­றும், அவர்­கள் கோரு­வார்­கள் என்­பது திண்­ணம்.
அர­சி­யல் களத்­தில் கூட்­ட­மைப்­புக்கு நிக­ரான மாற்று ஒன்று இல்­லாத நிலை­யில், உரு­வாக முடி­யா­தி­ருக்­கும் யதார்த்­தத்­தில் கூட்­ட­மைப்­புக்­கு வாக்­க­ளிக்­கக்­கூ­டாது என்று கோரு­வ­தும் அந்­தக் கோரிக்­கை­யில் நியா­யம் இருப்­ப­தாக மக்­க­ளுக்­குத் தோன்­றக்­கூ­டிய சூழல் இருப்­ப­தும் மக்­களை வாக்­க­ளிப்­பில் இருந்து அந்­நி­யப்­ப­டுத்­தி­வி­டும்.

அவ்­வாறு வாக்­க­ளிப்­புக்­குச் செல்­வதை மக்­கள் குறைத்­துக் கொள்­ளும்­போது, ஏனைய தரப்­பு­கள் பெறும் குறைந்­த­ளவு வாக்­கு­கள்­கூட விகி­தா­சா­ரப் பிர­தி­நி­தித்­து­வத்­தின் ஊடாக அவற்­றுக்கு அதிக ஆச­னங்­க­ளைப் பெற்­றுத்­த­ரக்­கூ­டி­ய­தாக அமைந்­து­வி­டும்.

இந்­தச் சிக்­க­லில் இருந்து விடு­ப­ட­வேண்­டு­மா­னால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தமிழ் மக்­க­ளின் மனங்­க­ளில் இருக்­கும் சந்­தே­கங்­களை தெளி­வு­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­யம். தேர்­தல் அறிக்கை மூல­மா­கவே அத­னைக் கூட்­ட­மைப்­பால் செய்­யக்­கூ­டி­ய­தாக இருக்­கும். தமிழ் மக்­க­ளின் அடிப்­ப­டைக் கோரிக்­கை­க­ளில் இருந்து வில­காத வகை­யி­லும், ஏற்­க­னவே தாம் மக்­க­ளி­டம் இருந்து பெற்­றுக்­கொண்ட ஆணை­யி­லி­ருந்து வில­காத வகை­யி­லும், தமது தேர்­தல் அறிக்­கையை கூட்­ட­மைப்பு முன்­வைக்க வேண்­டும். சிக்­க­லான சட்­ட­மொ­ழிக் கையா­ளு­கை­யை­வி­டுத்து அனைத்து மக்­க­ளும் புரிந்­து­கொள்­ளக்­கூ­டிய தெளி­வான தேர்­தல் அறிக்கை ஒன்­றைக் கூட்­ட­மைப்பு இந்­தத் தேர்­த­லில் விடுக்­க­வேண்­டும். அதன் மூலமே மக்­களை வாக்­க­ளிப்பு நிலை­யங்­களை நோக்கி அத­னால் கவர முடி­யும்.

 

அத்­தோடு தன் மீதான சந்­தே­கங்­க­ளைக் களை­வ­தும், மக்­க­ளின் ஆணை­யி­லி­ருந்து தான் வில­கிச்­செல்­ல­வில்லை என்­பதை எண்­பிப்­ப­தும் கூட்­ட­மைப்­பின் கட­மை­யும்­கூட.

http://newuthayan.com/story/52114.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.