Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­க­ளுக்கு ஊடக சுதந்­திரம் அவ­சி­ய­மில்­லையா?

Featured Replies

பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­க­ளுக்கு ஊடக சுதந்­திரம் அவ­சி­ய­மில்­லையா?

p22-45814ec5d75d855f713c78b1e623f44f9946814d.jpg

 

மஹிந்­தவின் ஆட்சி மீண்டும் வேண்­டுமா? யுனெஸ்கோ ஊடக  சுதந்­திர மாநாட்டில் பிர­தமர் ரணில் கேள்வி 
(எம்.எம்.சில்­வெஸ்டர்)

முன்னாள் ஜனா­தி­பதி ராஜபக் ஷ காலத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு காணப்­ப­ட்டு வந்த ஊடக அடக்­கு­மு­றை­களை இல்­லா­ தொ­ழித்­துள்ள எமது நல்­லாட்சி அர­சாங்கம் தற்­போது அந்­நி­லை­மையை மாற்­றி­ய­மைத்து நாட்டில் ஜன­நா­ய­கத்தை  நிலை­நாட்டி ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு பூரண பாது­காப்­பையும் வழங்­கி­யுள்­ளது என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். 

 எமக்கு ஊடக சுதந்­திரம் வேண்டாம். ராஜபக் ஷ ஆட்சி மீண்டும் ஆட்­சி­பீடம் ஏற வேண்­டு­மென்­ப­துதான் பத்­தி­ரிகை பிர­தம ஆசி­ரி­யர்­களின் நோக்­கமா என்றும் பிர­தமர் கேள்வி எழுப்­பினார்.

நிதி மற்றும் ஊடக அமைச்சு யுனெஸ்கோ மற்றும் அர­சாங்க தகவல் திணைக்­களம் கூட்­டாக ஏற்­பாடு செய்­த ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு ஏற்­படும் அடக்கு முறை­க­ளுக்கு எதி­ரான சர்­வ­தேச மாநாடு நேற்று கொழும்பு தாஜ்­ச­முத்ரா ஹோட்­டலில் நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனை தெரி­வித்தார்.

இதன்­போது அவர் மேலும் உரை­யாற்­று­கையில்

கடந்த ராஜபக் ஷவின் ஆட்­சி­யின்­போது ஊட­கத்­து­றைக்கு சுதந்­திரம் இருக்­க­வில்லை. ஊடக அடைக்கு முறைகள் மேலோங்கி காணப்­பட்­டன. ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் அவர்கள் குடும்­பத்­தினர் பெரும் அச்­சத்தின் மத்­தியில் வாழ்ந்து வந்­தனர். அவர்கள் தமது உயிர்­க­ளையும் சொத்­துக்­க­ளையும் இழந்­தனர்.

 சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் பிர­தம ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்க கொலை செய்­யப்­பட்­டமை பிரதீப் எக்­னெ­லி­கொட காணாமல் ஆக்­கப்­பட்­டமை கீத் நொயர் மற்றும் உபாலி தென்­னகோன் தாக்­கப்­பட்­டமை யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து வெளி­வரும் உதயன் பத்­தி­ரி­கையின் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொலை செய்­யப்­பட்­டமை என ஊட­கத்­துக்கும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கும் பல அடக்­கு­முறைச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன. இவ்­வாறு பயங்­க­ர­மான சூழ்­நி­லையை எமது அர­சாங்கம் மாற்­றி­ய­மைத்­துள்­ளது.

ராஜபக் ஷ காலத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு காணப்­ப­டடு வந்த ஊடக அடக்­கு­மு­றை­களை இல்­லா­தொ­ழித்து நாட்டில் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்டி ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு பூரண பாது­காப்­பையும் வழங்­கி­யுள்ளோம். தற்­போது எமது நாட்டில் பூரண ஊடக சுதந்­திரம் காணப்­பட்டு வரு­கி­றது. ஊட­க­வி­ய­லா­ளர்கள் சுதந்­தி­ர­மாக தமது கட­மை­களை மேற்­கொண்டு செய்­தி­களை வெளி­யி­டக்­கூ­டிய சந்­தர்ப்­பத்தை எமது அர­சாங்கம் ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்­துள்­ளது.

ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு ஏற்­படும் அடக்கு முறை­க­ளுக்கு எதி­ரான இம்­மா­நாட்­டுக்கு ஒரே­யொரு பத்­தி­ரி­கையின் பிர­தம ஆசி­ரியர் மாத்­தி­ரமே வருகை தந்­துள்ளார். ஏனைய பத்­தி­ரி­கை­களின் பிர­தம ஆசி­ரி­யர்கள் மற்றும் ஊடக பிர­தா­னிகள் வருகை தரா­தமை எமக்கு ஊடக சுதந்­திரம் வேண்டாம். ராஜபக் ஷ ஆட்சி மீண்டும் ஆட்­சி­பீடம் ஏற வேண்­டு­மென்­பதை கூறு­வது போல் அமை­கி­றது. என்றார்.

நிதி மற்றும் ஊட­கத்­துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர யுனெஸ்கோ அமைப்பின் ஊட­கத்­து­றையின் மேம்­பாட்டு அலு­வல்கள் தொடர்­பான பணிப்­பாளர் ஹை பேகர் இ ஆசிய வலய ஊடக அமைப்பின் ஊட­க­வி­ய­லா­ளர்கள் உள்­ளிட்ட பலர் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்­து­கொண்­டனர்.

இதன்­போது பிராந்­திய ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பாது­காப்பை உறுதி செய்தல் மற்றும் ஆசிய பிராந்­திய ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெறும் வன்­மு­றையை முடி­வுக்கு கொண்­டு­வ­ரு­வது தொடர்­பாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

ஊட­க­வி­ய­லாளர் மீது மேற்­கொள்­ளப்­படும் வன்­மு­றைக்கு எதி­ராக நீதி­மன்றம் தேசிய மனித உரி­மைகள் ஆணைக்­குழு மற்றும் சிவில் சமூக பணிகள் குறித்து இதன்­போது கவனம் செலுத்தப்பட்டது.

  ஊடகவியலாளர்களுக்கு எதிராக பதிவாகியுள்ள வன்முறை செயற்பாடுகள் குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தீர்வை அடையாளம் காண்பதன் மூலம் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைக்கு எதிரான குற்றத்திற்காக தண்டனை வழங்காது போராட்டத்தை வலுப்படுத்தல் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான கட்டமைப்பை விரிவுபடுத்தல் இந்த செயலமர்வின் நோக்கமாகும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-05#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.