Jump to content

வெஜிடபிள் பிரியாணி


Recommended Posts

வெஜிடபிள் பிரியாணி

 
 
 
2015-01-16%2B13.40.51.jpg
 
தேவையான பொருட்கள்;
முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய:
அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்டு+அன்னாசிப்பூ  1+ நட்சத்திர மொக்கு பாதி + சோம்பு 2 டீஸ்பூன்+பிரியாணி இலை 2 சேர்த்து நன்கு வதக்கவும்.
2015-01-16%2B07.58.33.jpg
 
 
அத்துடன் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம்,ஒரு பெரிய தக்காளி, தலா ஒரு கைப்பிடி,மல்லி,புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.
 
 
2015-01-16%2B08.01.12.jpg
 இஞ்சி பூண்டும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம். எனக்கு பிரியாணி தாளிக்கும் பொழுது வெங்காயத்துடன் வதக்க விருப்பம் .அதனால் இங்கு சேர்க்கவில்லை. சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
2015-01-16%2B08.02.16.jpg
 
நன்கு வதங்கிய பின்பு  ஒரு டீஸ்பூன் மல்லித்தூள், அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரைடீஸ்பூன் சீரகத்தூள் ,அரைடீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
 2015-01-16%2B08.04.07.jpg
 நன்கு பிரட்டி அடுப்பை சிம்மில் வைத்து வதங்க விடவும்.
 
 
2015-01-16%2B08.07.26.jpg
 வதங்கிய பின்பு அடுப்பை அணைத்து ஆற விடவும்.
2015-01-16%2B08.19.57.jpg
 ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுக்கவும்.
2015-01-16%2B08.32.14.jpg
பிரியாணி மசாலா பேஸ்ட் ரெடியாகிவிட்டது.இப்படி பேஸ்ட் செய்து ரெடியாக ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் எந்த வகை பிரியாணியும் செய்யலாம்.

காய்கறி பிரியாணி செய்ய மற்ற தேவையான பொருட்கள்;
2015-01-16%2B10.27.25.jpg

பாசுமதி அல்லது சீரக சம்பா - 2 கப்
காய்கறி - கேரட்- 1,உருளைக்கிழங்கு - 1,பீன்ஸ் - 15 எண்ணம், உரித்த பச்சை பட்டாணி - ஒரு கையளவு
பெரிய வெங்காயம் - 1 (100 கிராம்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 -5  டீஸ்பூன்
தயிர் - ஒரு கப்
எலுமிச்சை - சிறியது 1
பச்சை மிளகாய் - 2  நீள்வாக்கில் நறுக்கியது.
நறுக்கிய மல்லி புதினா சிறிது -
எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
நெய் -1- 2  டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
அரிசியை ஊற வைக்கவும்.காய்கறிகளை ஒரே அளவாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம் பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும்.
பிரியாணி செய்முறை:
 
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விடவும்.சூடானவுடன் நறுக்கிய வெங்காயம் போட்டு சிவற வதக்கவும்.
2015-01-16%2B10.26.31.jpg
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.
2015-01-16%2B10.26.49.jpg
நன்கு வதக்கவும்.
 
 
2015-01-16%2B10.29.11.jpg
 
 
நறுக்கி தயாராக உள்ள காய்கறிகள் போடவும்.
2015-01-16%2B10.30.24.jpg
ஒரு சேர பிரட்டி மூடி போட்டு வேக விடவும்.
2015-01-16%2B10.32.58.jpg
பாதி வெந்து வரும் பொழுது பிரியாணி மசாலா சேர்க்கவும்.
2015-01-16%2B10.34.02.jpg
நன்கு கொதிக்கட்டும்.
2015-01-16%2B10.34.38.jpg
தயிர் சேர்க்கவும்.
2015-01-16%2B10.35.21.jpg
நன்கு கலந்து விடவும்.
2015-01-16%2B10.37.05.jpg
தண்ணீர் வடித்து விட்டு ஊறிய அரிசி சேர்த்து நன்கு பிரட்டவும்.
2015-01-16%2B10.37.50.jpg
அரிசி அளவிற்கு இரண்டு அளவு கொதி நீர் விடவும்.உப்பு தேவைக்கு சேர்க்கவும்.
2015-01-16%2B10.41.33.jpg
மூடி மீடியமாக நெருப்பை எரிய விடவும்.அரிசி மலர்ந்து தண்ணீர் வற்றி வரும்.எலுமிச்சை பிழியவும்.
2015-01-16%2B10.48.07.jpg
நறுக்கிய மல்லி புதினா,பச்சை மிளகாய் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.
 
மேலே நெய் சேர்க்கவும்.
2015-01-16%2B10.49.32.jpg
 
2015-01-16%2B10.51.40.jpg
மூடி 10 நிமிடம் சிம்மில் தம் செய்யவும். அடுப்பை அணைக்கவும்.
 
மீண்டும் 10 நிமிடம் கழித்து திறந்து பிரட்டி பரிமாறவும்.உடனே திறக்கக் கூடாது.
2015-01-16%2B11.22.04.jpg
 
சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெடி. ஜம்மென்று இருக்கும்.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரியாணி பேஸ்ட் தயாரிக்கும் முறை சூப்பர்....!பிரியாணியும் நல்லாத்தான் இருக்கு என்றாலும் மேலே கொஞ்சம் கஜு , பிளம்ஸ் சேர்ந்தால்தான் ஒரு பிரியாணி எபெக்ட் கிடைக்கும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு மாவட்டத்தின் தாந்தாமலை, மாவடிமுன்மாரி கிராமங்களின் எல்லைப் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் இடம்பெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் வியாழக்கிழமை பகல் (07) முற்றுகையிடப்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலை பொலிஸ் கடமைப் பிரிவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. கிராமத்தின் பொதுமக்கள்  கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது சட்டவிரோத உற்பத்திக்கு தயாரான கோடா ஆறு பரல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட  நபர்கள் தப்பி ஓடியுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட கோடா பரல்கள் அவ்விடத்தில்  அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198146
    • ஒரு 25 வருடங்கள் கடந்து போயிருக்கும் உங்களை சந்தித்து. ஆயினும் நாவல்கள், சிறுகதைகள் மற்றும் மு.தளையசிங்கம் பற்றி கதைக்கும் போது உங்களில் இருந்து வெளிப்படும் புன்னகை, விமர்சனங்கள், கோபங்கள் ஆகியவற்றின் நினைவுகள் என்றும் மாறாது. குழந்தை முகமும், அறச் சீற்றமும் ஒருங்கே இணைந்த ஒருவராகவே என் நினைவுகளில் நீங்கள்.. முடிவிலியில் ஓய்வெடுங்கள்.
    • விடுதலை போராட்டத்தில் ஒரு துரும்பை கூட எடுத்து வைக்காதவர்கள் விடுதலை போராட்டத்தில் அர்ப்பணித்த கட்சிகள் மீது குற்றம் சுமத்துகிறார்கள் விடுதலை போராட்டத்தில் ஒரு துரும்பை கூட எடுத்து வைக்காதவர்கள் விடுதலை போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த கட்சிகள் மீது குற்றம் சுமத்தி வருகிறார்கள் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வேட்பாளர் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது கருத்து தெரிவித்த தர்மலிங்கம் சித்தார்த்தன், விடுதலை போராட்டத்தில் ஒரு துரும்பை கூட எடுத்து வைக்காதவர்கள் விடுதலை போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த கட்சிகள் மீது குற்றம் சுமத்தி வருகிறார்கள். மிகவும் தாழ்வான முறையில் அவர்கள் தங்களது விமர்சனங்களை செய்து வருகிறார்கள். இவர்கள் எந்த காலத்திலும் தமிழர்கள் தரப்பாக இருந்ததில்லை, தமிழர்களுக்காக எந்தவொரு சேவையையும் செய்யவில்லை. பதவிகள் கிடைக்கின்ற போது அந்த பதவிகளை துஷ்பிரயோகம் செய்து தான் அவர்களுடைய தொழிலாக இருந்து வந்துள்ளது என தெரிவித்தார். https://thinakkural.lk/article/311851
    • மலேசியாவில் இருந்து நாட்டுக்கு வருகை வந்த 52 வயதுடைய இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு வருடத்திற்கு முன்பு பிரமிட் திட்டத்தின் ஊடாக பல நபர்களிடம் இருந்து 180 கோடி ரூபாய்  பணமோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்தார். இந்நிலையில், இன்றைய தினம் மலேசியாவில் இருந்து நாட்டுக்கு வருகை வருகை தந்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, சந்தேகநபரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198150
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.