Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவுக்கு ஆயுட்கால உறுதியை இன்று வழங்கினார் பிரதமர் ரணில்

Featured Replies

மஹிந்தவுக்கு ஆயுட்கால உறுதியை இன்று வழங்கினார் பிரதமர் ரணில்

 

மஹிந்தவுக்கு ஆயுட்கால உறுதியை இன்று வழங்கினார் பிரதமர் ரணில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு துளியளவு பாதிப்பும் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

இந்திய முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்திக்கு ஏற்பட்ட நிலைமை ஸ்ரீலங்காவில் ஒருவருக்கும் ஏற்பட சந்தர்ப்பம் இல்லை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் இன்றைய தினம் முற்பகல் 9.30 அளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.

நிலையியற் கட்டளைச் சட்டத்தின் 23இன் கீழ் 2 என்ற படி சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை சபைக்கு முன்வைத்த ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவுக்கு காணப்படுகின்ற அச்சுறுத்தலை சுட்டிக்காட்டியதோடு, அவருக்கான பாதுகாப்பை அதிகரித்துக் கொடுக்கும்படி கோரிக்கை விடுத்தார்.

“எதிர்வரும் வாரங்களில் உள்ளூராட்சி தேர்தல் காலம் ஆரம்பிக்கின்ற நிலையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பிரசார கூட்டங்களில் ஸ்ரீலங்காவின் 5ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவிருக்கின்றார். அவரது பாதுகாப்பு குறித்து ஆராய்ந்து முன்னாள் ஜனாதிபதிக்கு இருக்கின்ற அச்சுறுத்தலை ஏற்று, மக்கள் கூட்டங்களின்போது பாதுகாப்பு வழங்கலில் அதிகாரிகள் அசௌகரியத்திற்கு உள்ளாகுகின்றனர்.

இந்த சந்தர்ப்பத்திலும் அவசர நிலையிலும், 5ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு உடனடி பாதுகாப்புக்களை வழங்க பாதுகாப்பு அதிகாரிகளை கொண்டுசெல்வதில் எதிர்கொள்கின்ற சவால்களும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையை பாதுகாப்பு அமைச்சுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

விசேட சந்தர்ப்பம் ஏற்படுமாயின் மேலதிக பாதுகாப்பு பிரிவை வழங்குவதாக பிரதமரும் இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். பத்திரிகையாளரான நீனா கோபால், இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை குறித்து எழுதிய புத்தகத்தை பிரதமரும் படித்திருப்பார்.

தேர்தல் காலத்தில் அவருக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டது குறித்து அதில் எழுதப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு குறைபாட்டை தீர்ப்பதற்கு அதிகாரிகள், வாகனங்கள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்கவும், தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் 5ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுப்பீர்களா என கேட்கின்றேன்” என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்து உரையாற்றினார்.

“முன்னாள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளுக்கு காணப்படும் அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு நிலை தொடர்பில் புலனாய்வுத்துறையினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி பாதுகாப்பு ஏற்பாடு வழங்கப்படுகிறது. இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, சந்திரிகா குமாரதுங்க ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக உதவி பொலிஸ் அதிகாரி, பிரதான பொலிஸ் அத்தியட்சகர், 9 பொலிஸ் பரிசோதகர்கள், 14 உப பொலிஸ் அதிகாரிகள், பெண் உப பொலிஸ் அதிகாரி, 31 பொலிஸ் அதிகாரிகள், இரு பெண் பொலிஸ் அதிகாரிகள், 4 பொலிஸ் சாரதிகள், 73 பொலிஸ் சிப்பாய்கள், 14 பொலிஸ் சிப்பாய் சாரதிகள், 4 பொலிஸ் பெண் சிப்பாய்கள் உட்பட 154 அதிகாரிகளைக் கொண்ட பாதுகாப்பு படை மற்றும் தேவையான பாதுகாப்பு வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு 61 பேர் உட்பட பாதுகாப்பு அதிகாரிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சவுக்கு நிலவும் அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு மேலதிக பாதுகாப்பு படை வழங்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்சவுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கும்படி சட்டம்,ஒழுங்கு அமைச்சினால் இதுவரை கோரிக்கை விடுக்கப்படவில்லை. அப்படி கோரினால் இதுகுறித்து ஆராயலாம். புலனாய்வு அறிக்கையின் ஊடாக கோரினாலும் பாதுகாப்பை அதிகரிக்கலாம். தினேஷ் குணவர்தன ராஜீவ் காந்தியை உதாரணப்படுத்தி தெரிவித்தபடி, ஸ்ரீலங்காவில் அப்படி நடக்காது. ஆனால் மஹிந்தவை பாதுகாப்பதன் ஊடாக எமக்கே அதிக இலாபம் கிடைக்கின்றது. அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்பட இடமளிக்கப்போவதில்லை” என்று தெரிவித்தார் பிரதமர்.

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/ranil-assurance-on-Mahinda-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.