Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் கட்சிகளுக்குள் அதிகரித்து வரும் முரண்பாடுகள்

Featured Replies

தமிழ் கட்சிகளுக்குள் அதிகரித்து வரும் முரண்பாடுகள்

 

உள்­ளூ­ராட்சித் தேர்தல் அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து வடக்கு, கிழக்கில் தமிழ் கட்­சிகள் மத்­தியில் முரண்­பா­டான நிலை­மைகள் அதி­க­ரித்­துள்­ள­துடன் ஏட்­டிக்குப் போட்­டி­யான குற்­றச்­சாட்­டுக்­களை ஒருவர் மீது ஒருவர் சுமத்தும் நிலை­மையும் உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பிற்குள் உள்­ளூ­ராட்சி தேர்­த­லுக்­கான ஆச­னப்­பங்­கீட்டு விட­யத்தில் பெரும் குழப்ப நிலை ஏற்­பட்­டுள்­ளது. கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சிக்கும் ஏனைய பங்­காளி கட்­சி­க­ளான ரெலோ, புௌாட் ஆகிய கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் பெரும் முரண்­பாடு இந்த விட­யத்தில் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

பங்­கா­ளிக்­கட்­சிகள் கோரும் ஆச­னப்­பங்­கீட்­டினை வழங்­கு­வ­தற்கு இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி மறுத்­த­மை­யி­னா­லேயே இரு­த­ரப்­பிற்­கு­மி­டையில் பெரும் முரண்­பாடு ஏற்­பட்­ட­துடன் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து விலகும் முடி­வுக்­குக்­கூட ரெலோ அமைப்பு வர­வேண்­டிய சூழ்­நிலை உரு­வா­னது.

 ஆச­னப்­பங்­கீட்டு விட­யத்தில் முட்­டி­மோ­தி­வரும் மூன்று கட்­சி­களும் தேர்­தலில் தமது கட்­சி­க­ளுக்கு அதிக இட ஒதுக்­கீ­டுகள் கிடைத்­து­விட வேண்­டு­மென்று போட்­டா­போட்டி போட்டு வரு­வதை காண­மு­டி­கின்­றது. தமக்­கு­ரிய ஆசன ஒதுக்­கீடு கிடைக்­கா­மை­யினால் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யே­றப்­போ­வ­தாக ரெலோ அமைப்பு அறி­வித்­தி­ருந்­த­துடன் மாற்று கூட்­ட­ணி­யு­டனும் பேச்­சுக்­க­ளையும் நடத்­தி­யி­ருந்­தது.

இந்த நிலையில் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் மற்றும் பேச்­சாளர் எம்.ஏ. சுமந்­திரன் ஆகி­யோ­ருடன் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன் கலந்­து­ரை­யா­டி­ய­தை­ய­டுத்து தற்­போது சில விட்­டுக்­கொ­டுப்­புக்­களை மேற்­கொள்ள இணக்கம் காணப்­பட்­டுள்­ள­மை­யினால் முரண்­பாட்டு நிலை சற்று தணிந்­துள்­ளது. ஆனாலும் இன்­னமும் இந்த இழு­பறி நிலைக்கு முற்­று­மு­ழு­தான தீர்வு காணப்­ப­ட­வில்லை.

கூட்­ட­மைப்­புக்குள் குத்து வெட்­டுக்கள் இவ்­வா­றி­ருக்­கையில் கூட்­ட­மைப்­பிற்கு எதி­ராக மாற்றுத் தலை­மை­யொன்­றினை அமைப்­ப­தற்கு முனைந்­தி­ருந்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தலை­மை­யி­லான ஈ.பி.ஆர்.எல். எவ். அமைப்­பிற்கும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கஜேந்­திர குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணி­யி­ன­ருக்­கு­மி­டையில் தற்­போது பிர­சார யுத்தம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. ஒருவர் மீது ஒருவர் குற்­றம்­சாட்டும் செயற்­பாடு தொடங்­கி­யுள்­ளது.

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பில் அங்கம் வகித்த சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தலை­மை­யி­லான ஈ.பி.ஆர்.எல்.எவ். அணி­யினர் கூட்­ட­மைப்பின் தலைமை மீது அதி­ருப்தி கொண்­டுள்ள நிலையில் அதி­லி­ருந்து வெளி­யேறி உள்­ளூ­ராட்சி தேர்­தலை சந்­திக்­க­வுள்­ளனர். கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யே­றிய இவர்கள் மாற்று கூட்­ட­ணி­யொன்­றினை உரு­வாக்கும் விட­யத்தில் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணி­யுடன் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்­டி­ருந்­தனர். இந்த இரு கட்­சி­களின் தலை­வர்­களும் தமிழ் மக்கள் பேர­வையில் அங்கம் வகிக்­கின்­றனர். இந்த நிலையில் இவர்கள் இரு­வரும் இணைந்து பொது அமைப்­புக்­களும் ஒன்­றி­ணைந்து கூட்­டணி அமைப்­பது குறித்து பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­றன.

அண்­மையில் நடை­பெற்ற தமிழ் மக்கள் பேரவைக் கூட்­டத்தில் கலந்­து­கொண்ட இவர்கள் அந்தக் கூட்டம் முடி­வ­டைந்த பின்னர் இரு­வரும் இணைந்து புதிய கூட்­ட­ணி­யொன்றை ஆரம்­பிப்போம் என்று பகி­ரங்­க­மாக அறி­வித்­தி­ருந்­தனர். தமது கூட்­ட­ணிக்கு தமிழ் மக்கள் பேர­வையின் ஆத­ரவு இருக்கும் என்றும் இவர்கள் கூறி­யி­ருந்­தனர்.

இதன்­பின்னர் இரு­வரும் பொது சின்­னத்தில் போட்­டி­யி­டு­வது குறித்து கலந்­து­ரை­யா­டி­ய­போ­திலும் அந்த முயற்சி கைகூ­டா­மை­யினால் இரு­கட்­சி­களின் ஏதா­வது ஒரு சின்­னத்தில் போட்­டி­யி­டு­வது தொடர்­பிலும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருந்­தது. இவ்­வாறு பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­ற­வே­ளையில் தமிழர் விடு­த­லைக்­கூட்­ட­ணியில் உதய சூரியன் சின்­னத்தில் சக­லரும் இணைந்து போட்­டி­யி­டலாம் என்ற யோச­னையும் முன்­வைக்­கப்­பட்­டது.

ஆனால் இந்த யோச­னைக்கு கஜேந்­திர குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான தமிழ் தேசிய முன்­னணி உடன்­ப­ட­வில்லை. இதன் கார­ண­மாக சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தலை­மை­யி­லான ஈ.பி.ஆர்.எல்.எவ் அணி ஆனந்த சங்­கரி தலை­மை­யி­லான கூட்­ட­ணியின் உத­ய­சூ­ரியன் சின்­னத்தில் மாற்று அணியை உரு­வாக்­கு­வ­தற்கு இணங்­கி­யி­ருந்­தது. இதற்­கி­ணங்க கட்­சிகள், பொது அமைப்­புக்­களை ஒன்­றி­ணைத்து மாற்று அணிக்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தமும் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது.

இந்­த­நி­லையில் தமிழ் தேசிய மக்கள் முன்­னணி தனித்து போட்­டி­யி­டு­வ­தற்கு முடிவு செய்­தி­ருக்­கின்­றது. உள்­ளூ­ராட்சி தேர்­தலில் வடக்கில் மாற்று அணி­யாக போட்­டி­யிட இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்­னணி ஆகிய அணிகள் தற்­போது தனித்­தனி வழியில் சென்­றுள்­ளன.

இவ்­வா­றான சூழ்­நி­லையில் ஒருவர் மீது ஒருவர் வசை­பாடும் செயற்­பாடு தற்­போது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. கூட்­ட­ணி­யுடன் இணைந்து மாற்று அணியை ஆரம்­பிப்­ப­தற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் கைச்­சாத்­திடும் நிகழ்வில் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தொடர்பில் கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்தார்.

அதற்கு பதி­ல­ளிக்கும் வகையில் நேற்று முன்­தினம் யாழ்ப்­பா­ணத்தில் செய்­தி­யாளர் மாநாட்டை நடத்­திய கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ர­னுக்கு எதி­ரா­கவும் கூட்­ட­ணியில் அங்கம் வகிக்கும் தமிழர் விடு­தலை கூட்­ட­ணிக்கு எதி­ரா­கவும் கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்தார்.

நேர்­மை­யான கொள்­கையில் உறு­தி­யான விட்­டுக்­கொ­டுப்­பின்­றிய மாற்­றுத்­த­லைமை உரு­வா­கக்­கூ­டாது என்ற தேவை இலங்கை அர­சுக்கு மட்­டு­மன்றி பல வல்­ல­ர­சு­நா­டு­க­ளுக்கும் இருக்­கின்­றது. தமிழ் மக்­களின் மாற்று அணியும் தங்கள் பிடிக்குள் இருக்­க­வேண்டும் என்ற நிலைப்­பாடு இவர்­க­ளிடம் காணப்­ப­டு­கின்­றது. தூய்­மை­யான மாற்று அணி உரு­வா­வதை தடுப்­ப­தற்கு இத்­த­கை­ய­வர்கள் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர். துர­திஷ்­ட­வ­ச­மாக சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரனை ஏமாற்றி அந்த முயற்­சிக்கு அவரை துணை­போக வைத்­துள்­ளனர் என்று இந்த செய்­தி­யாளர் மாநாட்டில் கருத்து தெரி­வித்த கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் குற்­றம்­சாட்­டி­யுள்ளார்.

ஒற்­றை­யாட்­சியை ஏற்­றுக்­கொள்­கின்ற வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்­தி­ய­மில்லை என்று கூறு­கின்ற சுய­நிர்­ணய உரி­மையை நிரா­க­ரிக்­கின்­ற­வர்­க­ளு­டன்தான் புதிய கூட்­டணி உரு­வா­கி­யுள்­ளது. இதன்­மூலம் மக்­களை நேர்­மை­யாக வழி­ந­டத்­தக்­கூ­டிய அர­சியல் கலா­சா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. ஆகவே இந்த கூட்­டணி மக்­களை ஏமாற்றும் கூட்­டா­கத்தான் மாறும் என்றும் அவர் விசனம் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

ஒன்­றாக மாற்று அணி­யொன்­றினை உரு­வாக்­கு­வ­தற்கு புறப்­பட்ட இரு­த­லை­வர்கள் இன்று தனித்­த­னி­யாக வேறு­நி­லைப்­பா­டு­களை எடுத்த பின்னர் ஒரு­வரை ஒருவர் குற்­றம்­சாட்­டி­வ­ரு­கின்­றனர். இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்கள் தமிழ் மக்கள் மத்­தியில் பெரும் அதி­ருப்­தி­யையே கொண்­டு­வரும்.

ஏனெனில் மூன்று தசாப்­த­கா­ல­மாக இடம்­பெற்ற யுத்­தத்­தினால் உயிர்­க­ளையும் உடை­மை­க­ளையும் இழந்த மக்கள் பெரும் துன்­பங்­களை அனு­ப­வித்­தனர். உற­வு­க­ளையும் உடை­மை­க­ளையும் இழந்த மக்கள் இன்றும் அந்த சோகத்­தி­லி­ருந்து மீள முடி­யாது திண்­டா­டி­வ­ரு­கின்­றனர்.

இந்த நிலையில் எதிர்­கா­லத்­தி­லா­வது தாம் பட்ட துன்­பங்­க­ளுக்கு விடிவு ஏற்­படும் வகையில் தமது அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கும் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காணப்­ப­ட­வேண்­டு­மென்று மக்கள் ஏங்கி வரு­கின்­றனர். இவ்­வா­றான எதிர்­பார்ப்­புடன் உள்ள தமிழ் மக்கள் தம்மால் தெரி­வு­செய்­யப்­படும் அர­சியல் தலை­மைகள் தமது அபி­லா­ஷை­களை நிறை­வேற்றும் வகையில் செயற்­பட வேண்­டு­மென்று எதிர்­பார்ப்­பது வழ­மை­யாகும். ஆனால் அந்த எதிர்­பார்ப்­புக்­களை பூர்த்தி செய்­யா­த­வ­கையில் தமது தலைமைகள் தொடர்ச்சியாக செயற்பட்டு வருவதுடன் தமக்குள்ளேயே மோதிக்கொள்ளும் செயற்பாடுகளை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அங்கீகரிக்கமாட்டார்கள்.

தமிழ் கட்சிகள் தமக்குள்ளேயே மோதிக்கொண்டு அரசியல் சுயநலத்திற்காக தொடர்ச்சியாக செயற்படுவார்களானால் அந்த தலைமைகள் மீது மக்கள் முற்றாக நம்பிக்கை இழக்கும் சூழ்நிலை உருவாகும்.

எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளாயினும் சரி அதற்கு வெளியே மாற்று அணிகளாக செயற்படுகின்ற கட்சிகளாயினும் சரி அரசியல் சுயநலன்களுக்காக தமக்குள் முட்டிமோதாது மக்களின் விருப்பத்திற்கேற்ப ஒருமித்து செயற்படவேண்டும். இதனைவிடுத்து அரசியல் இலாபத்திற்காகவும், தேர்தல் வெற்றிக்காகவும் அரசியல் கட்சிகள் செயற்படுமானால் தமிழ் மக்களின் வெறுப்பை சந்திக்கவேண்டிவரும். எனவே இனியாவது இந்த அரசியல் கட்சிகள் இதனைப் புரிந்துகொண்டு செயற்பட்டால் நன்மை அளிக்கும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-09#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.