Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தின் பிடியில் சிக்கிய யாழ் ஊடகவியலாளர்கள்

Featured Replies

இராணுவத்தின் பிடியில் சிக்கிய யாழ் ஊடகவியலாளர்கள்

 

முல்லைத்தீவு தண்ணீமுறிப்பு சிங்கள மயமாக்கல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இராணுவம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு அரை மணித்தியாலங்களுக்கு மேல் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றமை தொடர்பில் தாம் செய்தி சேகரிப்பதற்கு சென்றதாகவும் அது தொடர்பில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் மற்றும் காணொளிகளை அழித்த இராணுவம் மற்றும் பொலிஸார் கடுமையான எச்சரிக்கை செய்து விடுவித்ததாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு சென்ற கு.செல்வக்குமார், சு.பாஸ்கரன், த.பிரதீபன் த.வினோஜித், வி.கஜீபன், சி.நிதர்சன், க.ஹம்சனன், க.சபேஸ் ஆகியோரே இவ்வாறு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அவர்கள் ஐ.பி.சி தமிழுக்கு கூறியுள்ளனர்.

தண்ணீர் முறிப்பு குள சர்ச்சையின் பின்புலம்

யுத்தம் காரணமாக 1984 ஆம் ஆண்டு மணலாறு பூர்வீக நிலங்களில் இருந்து தமிழ் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் அங்கு படிப்படியாக சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டிருந்தனர்.

இந்த குடியேற்றங்களுடன் மணலாறு என்ற பாரம்பரிய தமிழ் பெயர் வழக்கொழிந்து போன நிலையில் அந்த பகுதி வெலி ஓயா என தற்போது வரை அழைக்கப்படுகின்றது.

கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தண்ணீர் முறிப்பு குளத்தில் பாரம்பரியமாக தமிழர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நிலையில், யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட சூழ்நிலையில் 2010 ஆம் ஆண்டு முதல் சிங்கள மீனவர்களும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

சிங்கள மீனவர்கள் காடுகள் ஊடாக வருகைதந்து தண்ணீர்முறிப்பு குளத்தில் மீன்பிடியில் ஈடுபடுவதால் பாரம்பரியமாக தொழில் செய்துவந்த தமிழ் மீனவர்களுடன் சிங்கள மீனவர்கள் முரண்படும் நிலைமை நீடித்துவருகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பல்வேறு தடவைகள் கலந்துரையாடல்கள் நடைபெற்ற போதிலும் இந்தப் பிரச்சினை தொடர்பில் இதுவரை இணக்கப்பாடு எட்டப்படாத நிலைமை காணப்படுகின்றது.

தண்ணீர் முறிப்பு குளத்தில் சிங்கள மீனவர்கள் தமக்கும் தொழிலில் ஈடுபட அனுமதிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இருப்பினும் அக் கோரிக்கையை அரச அதிபர் அடியோடு நிராகரித்திருந்தார்.

இருப்பினும் சிங்கள மீனவர்கள் இராணுவ பாதுகாப்புடன் அக் குளத்தில் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களுக்கு இடையில் முறுகல் நிலை தொடர்ந்து வருகின்றது.

தண்ணீர் முறிப்புக்கு அறிக்கையிட சென்ற யாழ் ஊடகவியலாளர்கள்

தமிழ் - சிங்கள மீனவர்களுக்கு இடையிலான இந்த முறுகல் நிலை தொடர்பில் அறிக்கையிடுவதற்காக தண்ணீர்முறிப்பு பகுதிக்கு தாம் சென்றதாக யாழ் ஊடகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் இது தொடர்பில் தகவல்களை திரட்டியதுடன் அது தொடர்பாக புகைப்படங்கள் காணொளிகளையும் பதிவு செய்திருந்தாக அவர்கள் ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்தனர்.

தண்ணீர் முறிப்பு குளப் பகுதியில் அரச திணைக்கள காணியான நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான காணியை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள இராணுவம் குளத்தில் அத்துமீறி தொழிலில் ஈடுபடும் சிங்கள மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் குளத்திற்கு அருகில் புதிதாக அமைக்கும் இராணுவ கவலரன் தொடர்பில் செய்தி சேகரித்திருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய பொலிஸாரும் இராணுவத்தினரும்

செய்தி சேகரித்துக்கொண்டிருந்த போது அங்கு துவிச்சக்கர வண்டியில் வந்த இராணுவ சிப்பாய் அங்கு நின்ற தாம் யார் என்பது தொடர்பில் விசாரித்தார் என ஊடகவியலாளர்கள் ஐ.பி.சி தமிழுக்கு குறிப்பிட்டனர்.

இதன் போது தாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்ததாக தெரிவித்ததை அடுத்து அங்கிருந்து சென்ற அவர், சிறிது நேரத்தின் பின்னர் மற்றுமொரு இராணுவ சிப்பாயை அழைத்துக்கொண்டு அங்கு வந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

அங்கு வந்த இரண்டு இராணுவ சிப்பாய்களும் ஊடகவியலாளர்கள் யார் என்பது தொடர்பில் விசாரணை செய்து, அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்டதாக ஊடகவியலளாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் தம்மை அங்கு தடுத்து வைத்த இராணுவம் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்திய நிலையில், சம்பவ இடத்திற்கு இராணுவத்தால் பொலிஸார் வரவழைக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

சிவில் உடையில் வந்த பொலிஸார் தாம் யார் என்பதை உறிதிப்படுத்தாமல் தம்மிடம் விசாரணை நடத்தியதாக யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டனர்.

பொலிஸாரிடமும் தமது அடையாளத்தை உறுதிப்படுத்திய போதிலும். தாம் பதிவு செய்த காணொளி மற்றும் நிழற்படங்களை அழிக்குமாறு ஊடகவியலாளர்களை வற்புறுத்திய பொலிஸார் ஊடகவியலாளர்களின் புகைப்பட கருவிகளை பறித்தெடுத்து அதனை இராணுவத்திடம் ஒப்படைத்தாக அவர்கள் கூறியுள்ளனர்.

புகைப்பட கருவிகளை தம்வசப்படுத்திய இராணுவத்தினர் அதில் உள்ள காணொளி மற்றும் புகைப்படங்களை அழித்ததாகவும்  தம்மை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் புகைப்படம் மற்றும் காணொளி பதிவு செய்துள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற ஊடகவியலாளர்கள் ஐ.பி.சி தமிழுக்கு குறிப்பிட்டனர்.

மேலும் ஊடகவியலாளர்கள் பயணித்த வாகன இலக்கத்தை பதிவு செய்த இராணுவம் தமது விபரங்களையும் பதிவு செய்த பின்னர் விடுவித்ததாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Journalists-threatened-by-Police-and-army-in

  • தொடங்கியவர்

சிங்கள மயமாக்கல் – செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் அழிப்பு…

 

media-1.jpg

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு சிங்கள மயமாக்கல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இராணுவம், காவற்துறையால் அரை மணித்தியாலங்களுக்கு மேல் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுள்ளனர். குறித்த செய்தி தொடர்பில் ஊடகவியலாளர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை அழித்த பின்னர் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு சென்ற கு.செல்வக்குமார், சு.பாஸ்கரன் த.பிரதீபன், த.வினோஜித், வி.கஜீபன், சி.நிதர்சன், க.ஹம்சனன், க.சபேஸ் ஆகிய ஊடகவியலாளர்களே இவ்வாறு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு சிங்கள மயமாவது தொடர்பில் செய்தி மற்றும் ஆவணப்படுத்தல் செய்வதற்கு யாழ்ப்பாணத்தினை சேர்ந்த ஊடகவியலாளர்கள் இன்று சனிக்கிழமை அங்கு சென்றிருந்தனர்.

இதன் போது அவர்கள் தண்ணீர் முறிப்பு பகுதிக்கும் சென்றிருந்தனர். தண்ணீர் முறிப்பு குளத்தில் சிங்கள மீனவர்கள் தாமும் தொழிலில் ஈடுபட அனுமதிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும் அக் கோரிக்கையை அரச அதிபர் அடியோடு நிராகரித்திருந்தார். எனினும் சிங்கள மீனவர்கள் இரானுவ பாதுகாப்புடன் அக் குளத்தில் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களுக்கு இடையில் முறுகல் நிலை தொடர்ந்து வந்தது. இது தொடர்பில் தகவல்களை திரட்டியதுடன், அது தொடர்பாக புகைப்படங்கள், வீடியோக்களை ஊடகவியலாளர்கள் பதிவு செய்திருந்தனர்.

தண்ணீர் முறிப்பு குளப் பகுதியில் அரச திணைக்கள காணியான நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான காணியை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள இராணுவம் குளத்தில் அத்துமீறி தொழிலில் ஈடுபடும் சிங்கள மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் குள அணைக்கட்டில் புதிதாக அமைக்கும் இராணுவ கவலரன் தொடர்பில் செய்தி சேகரித்திருந்தனர். இதன் போது அங்கு துவிச்சக்கர வண்டியில் வந்த இரானுவ சிப்பாய் அங்கு நின்ற ஊடகவியலாளர்கள் யார் என்பது தொடர்பில் விசாரித்துள்ளார். இதன் போது தாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்ததாக ஊடகவியலாளர்கள் தெரிவித்ததை அடுத்து அங்கிருந்து அவர் விலகி சென்றுள்ளார்.

அங்கிருந்து விலகி சென்ற இராணுவ சிப்பாய் மேலும் மற்றுமொரு இரானுவ சிப்பாயை அழைத்துக்கொண்டு அங்கு வந்துள்ளார். அங்கு வந்த அவர்கள் ஊடகவியலாளர்கள் யார் என்பது தொடர்பில் விசாரணை செய்துள்ளனர். ஊடகவியலாளர்கள் என்பதை அவர்கள் உறுதிப்படுதியுள்ளனர். இருப்பினும் அவர்களை அங்கு தடுத்து வைத்த இராணுவம் தொடர்ந்து  விசாரணைக்கு உட்படுத்தியது.

பின்னர் சம்பவ இடத்திற்கு இராணுவத்தல் பொலிஸார் அழைக்கப்படனர். சிவில் உடையில் வந்த பொலிஸார் தாங்கள் யார் என்பதை உறுதிப்படுத்தாமல் ஊடகவியலாளர்களிடம் விசாரணை நடத்தியிள்ளனர். பொலிஸாரிடமும் ஊடகவியலாளர்கள் தங்களை உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும் இராணுவம் சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அழிக்குமாறு ஊடகவியலாளர்களை வற்புறுத்தியுள்ளனர்.

பொலிஸார் ஊடகவியலாளர்களின் புகைப்பட கருவிகளை பறித்த பொலிஸார் அதனை இராணுவத்திடம் ஒப்படைத்தனர். புகைப்பட கருவிகளை தம்வசப்படுத்திய இராணுவத்தினர் அதில் உள்ள வீடியோ மற்றும் புகைப்படங்களை அழித்துள்ளனர். இது மட்டுமல்லாமல் அங்கு நின்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்துள்ளனர். மேலும் ஊடகவியலாளர்கள் பயணித்த வாகன இலக்கத்தை பதிவு செய்த இராணுவத்தினர் ஊடகவியலாளர்களின் விபரங்களையும் பதிவு செய்த பின்னர் அவர்களை விடுவித்துள்ளனர்.

media-2.jpgmedia3.jpg

http://globaltamilnews.net/archives/54098

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.