Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குழப்­பத்தில் மக்கள்.....?

Featured Replies

குழப்­பத்தில் மக்கள்.....?

 

கடந்த 30 வரு­ட­கா­ல­மாக தமிழ் மக்­களின் உரி­மைக்­காக முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆயு­த­வ­ழிப்­போ­ராட்­ட­மா­னது 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்­ளி­­வாய்க்கால் பேர­வ­லத்­துடன் மௌனிக்­கப்­பட்ட பின்னர் அந்த மக்­களின் அபி­லா­சை­க­ளையும், உரிமைக் கோரிக்­கை­க­ளையும், அவர்­க­ளுக்­கான தேவை­க­ளையும் தொடர்ந்தும் முன் கொண்டு சென்று அதனை பெற்றுக் கொடுக்க வேண்­டிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தலை­மையின் தோள்­களில் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது. ஆனால் யுத்தம் முடி­வ­டைந்து கடந்த எட்­டரை ஆண்­டு­களில் அதன் நகர்­வுகள், செயற்­பா­டுகள் என்­பன எவ்­வாறு அமைந்­தி­ருக்­கின்­றது என்ற கேள்வி உள்­ளது...? அவர்­களின் தற்­போ­தைய நகர்வு தமிழ் மக்­க­ளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வழி­வ­குக்­குமா என்ற கேள்­வியும் மக்­க­ளிடம் எழுந்­தி­ருக்­கின்­றது. இதன்­வி­ளைவே உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் அறி­வித்த கையுடன் தமிழர் தரப்பு அர­சி­யலில் பிரி­வு­களும், புதிய கூட்­டுக்­களும் ஏற்­பட வழி­வ­குத்­தி­ருக்­கின்­றது.

இந்த நாட்டின் தற்­போ­தைய ஜனா­தி­ப­தி­யா­கிய மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்சி பீடம் ஏறு­வ­தற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு நிபந்­த­னை­யற்ற ஆதரவை வழங்­கி­யி­ருந்­தது. இன்று ஜனா­தி­பதி ஆட்­சிக்கு வந்து மூன்று ஆண்­டுகள் நிறை­வ­டையும் நிலையில் உள்­ளது. ஆனால் தமிழ் மக்­களின் வாக்கு பலத்­துடன் ஏற்­பட்ட இந்த ஆட்சி மாற்றம் மூலம் கிடைத்த நன்­மைகள் என்ன என தேடிப்­பார்த்தால் ஒரு சில காணி­வி­டு­விப்­புக்­களும், சிறிய ஜன­நா­யக இடை­வெ­ளி­யுமே கிடைத்­தி­ருக்­கின்­றது. தமிழ் தேசிய இனம் இதற்­காக இந்த நாட்டில் போராட வில்லை. அவர்கள் முன் இனப்­பி­ரச்­ச­னைக்­கான நிரந்தர தீர்வு முதல் சாதா­ரண அடிப்­படைப் பிரச்­சி­னைகள் வரை ஏராளம் பிரச்­சி­னைகள் உள்­ளன. இதனை பாதிக்­கப்­பட்ட மக்­களால் கடந்த 10 மாதங்­க­ளாக வீதி­களில் முன்­னெ­டுத்து வரும் தன்­னெ­ழுச்­சி­யான தொடர் போராட்­டங்கள் வெளிச்சம் போட்டுக் காட்­டு­கின்­றன. இத்­த­கைய பிரச்சினை­களை தீர்க்க நல்­லாட்சி எனக் கூறப்­படும் இந்த அர­சாங்­கமோ அல்­லது அதற்கு ஆத­ரவு வழங்கி வரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்போ காத்­தி­ர­மாக எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யையும் எடுத்த­தாக தெரி­ய­வில்லை.

மாறாக ஆட்சி மாற்­றத்­திற்கு பின்­ன­ரான கடந்த மூன்று ஆண்­டு­களில் சர்­வ­தேச ரீதியில் இலங்­கைக்கு எதி­ராக இருந்த போர்க்­குற்றம் மற்றும் மனி­த­வு­ரிமை மீறல் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் சார்ந்து இருந்த அழுத்தம் குறை­வ­டைந்­தி­ருக்­கின்­றது. அர­சாங்­கத்­தி­னு­டைய இந்த இரா­ஜ­தந்­திர நகர்­வு­க­ளுக்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தலை­மையும் துணை­போ­யி­ருக்­கி­றது. இதன் கார­ண­மாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு மீதும் அர­சாங்­கத்தின் மீதும் தமிழ் மக்­க­ளுக்கு அதி­ருப்தி நிலை தோன்­றி­யி­ருக்­கின்­றது. இந்த நிலையே கொள்கை ரீதியில் தமிழ் மக்­க­ளது அபி­லா­சை­களை முன்­ன­கர்த்தக் கூடிய ஒரு மாற்று அணி பற்­றிய தேடலை உரு­வாக்­கி­யி­ருந்­தது.

மாற்று அணிக்­கான கோரிக்­கையை கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பில் இருந்து வெளி­யே­றிய கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணி­யி­னரே முதன் முதலில் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். அதைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இருந்து அண்­மையில் வெளி­யே­றிய சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தலை­மை­யி­லான ஈபி­ஆர்­எல்எப் அணியும், பல்­வேறு சமூக செயற்­பாட்­டா­ளர்­களும், பத்தி எழுத்­தா­ளர்­களும், அர­சியல் ஆய்­வா­ளர்­களும் முன்­வைத்­தி­ருந்­தனர். அதற்­கான வேலை­களும் கடந்த ஒரு வரு­ட­மாக நடந்த போதும் அவை திருப்­தி­க­ர­மாக இல்லை என்றே கரு­த­வேண்­டி­யுள்­ளது.

தமிழ் மக்­க­ளுக்கு தேவை­யா­னது அவர்­க­ளது நியா­ய­மான கோரிக்­கை­க­ளையும், அபி­லா­சை­க­ளையும் முன்­ன­கர்த்தக் கூடிய ஒரு மாற்று அணியே என உண­ரப்­பட்­டது. அத்­த­கை­ய­தொரு மாற்று அணியை உரு­வாக்­கு­வ­தற்­காக கஜேந்­தி­ர­கு­மா­ருக்கும், சுரேஸ் பிறே­மச்­சந்­தி­ர­னுக்கும் இடையில் பேச்­சுக்கள் நடை­பெற்று வந்­தன. திரை­ம­றைவில் தமிழ் மக்கள் பேர­வையும் அதற்கு உடந்­தை­யாக செயற்­பட்­டது. இதன் விளை­வாக இரு­வரும் புதிய கூட்டு அமைக்­க­வுள்­ள­தா­கவும் ஊட­க­சந்­திப்பு ஒன்றை நடத்­தி­யி­ருந்­தனர். இருப்­பினும் அவர்­க­ளது ஒற்­றுமை நீடிக்­க­வில்லை. கூட்டு அறி­விக்­கப்­பட்டு ஒரு மாத காலத்­திற்­குள்­ளேயே சில நடை­முறைப் பிரச்­சி­னை­களை முன்­வைத்து அவர்கள் இரு­வரும் பிரிந்து இரு வேறு அணி­க­ளாக தற்­போது கூட்டு அமைத்­தி­ருக்­கின்­றனர். ஈ.பி­.ஆர்­.எல்.எப்., ஈரோஸ், ஜன­நா­யக தமி­ழ­ரசுக் கட்சி, ஜன­நா­யக போரா­ளி­களில் ஒரு பகு­தி­யினர், தமிழர் விடு­தலைக் கூட்­டணி என்­பன ஒன்­றி­ணைந்து தமிழர் விடு­தலைக் கூட்­ட­மைப்பு என்னும் பெயரில் உத­ய­சூ­ரியன் சின்­னத்தில் போட்­டி­யி­ட­வுள்­ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்­னணி, அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ், தமிழர் சம­வு­ரிமை இயக்கம் இன்னும் சில பொது அமைப்­புக்கள் இணைந்து தமிழ் தேசிய பேரவை என்னும் பெயரில் சைக்கிள் சின்­னத்தில் போட்­டி­யி­ட­வுள்­ளனர்.

அர­சியல் கட்­சிகள், சட்­டத்­த­ர­ணிகள், புத்­தி­ஜீ­விகள், கல்­வி­யி­யலா­ளர்கள், வைத்­தி­யர்கள், சிவில் சமூக அமைப்­புக்கள், மனி­த­வு­ரிமைச் செயற்­பாட்­டா­ளர்கள் எனப் பல்­வேறு தரப்­புக்­க­ளையும் உள்­ள­டக்கி வடக்கு முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரனின் இணைத் தலை­மையில் தமிழ் மக்கள் பேரவை என்னும் பெயரில் ஒரு மக்கள் இயக்கம் செயற்­பட்டு வருகி­றது. அந்த அமைப்பில் ஒரு­மித்த கொள்­கை­யு­டை­ய­தாக இருந்த இரு பிர­தான கட்­சி­க­ளான கஜேந்­தி­ர­குமார் தலை­மை­யி­லான அணியும், சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தலை­மை­யி­லான அணியும் இரு வேறு திசை­களில் கூட்­டுக்­களை அமைத்­தமை அந்த அமைப்­பிற்­குள்ளும் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. வரும் உள்­ளூ­ராட்சி தேர்­தலில் எந்த கூட்டை ஆத­ரிப்­பது அல்­லது எந்த கூட்­டுக்­கு மக்­களை வழி­ந­டத்­து­வது என்­பது தொடர்பில் பேர­வையும் குழம்பி போயுள்­ளது. ஏற்­க­னவே பேர­வையில் உள்ள மற்­றுமோர் கட்­சி­யான புளொட் கூட்­ட­மைப்­புடன் இணைந்து போட்­டி­யி­டு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

ஆக, இந்த உள்­ளூ­ராட்சி தேர்தல் என்­பது தென்­னி­லங்­கையை மட்­டு­மன்றி வடக்கு, கிழக்கு தமிழ் அர­சியல் கட்­சி­க­ளையும் ஆட்டம் காண வைத்­தி­ருக்­கின்­றது. தமிழ் மக்கள் தமது உரி­மைக்­கா­கவும், அபி­லா­சை­க­ளுக்­கா­கவும் உண்­மை­யா­கவும், நேர்­மை­யா­கவும் இத­ய­சுத்­தி­யு­டனும் பணி­யாற்றக் கூடிய கட்சி எது..? அல்­லது அர­சியல் கூட்டு எது..? என தீர்­மா­னிக்க வேண்­டிய நிலையில் உள்­ளனர். இந்த தேர்­தலை வெறும் பிர­தேச அபி­வி­ருத்­திக்­கான உள்­ளூ­ராட்சி தேர்­த­லாக மட்டும் கருத முடி­யாது. ஏனெனில் இந்த தேர்தல் முடி­வ­டைந்த பின்னர் ஐ.நா மனி­த­வு­ரிமை ஆணை­ய­கத்தின் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வழங்­கப்­பட்ட மேலும் இரண்டு ஆண்­டுக்­கான கால நீடிப்பின் ஒரு வருடம் நிறை­வ­டை­ய­வுள்ள நிலையில், இலங்கை அர­சாங்கம் எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது என்­பது குறித்து எழுத்து பூர்­வ­மான அறிக்­கையை ஐ.நா. மனி­த­வு­ரிமை ஆணை­யாளர் இந்தக் கூட்டத் தொடரில் சமர்ப்­பிக்­க­வுள்ளார். ஆகவே, உள்­ளூ­ராட்சித் தேர்­தலை மையப்­ப­டுத்தி இலங்கை அரசாங்கம் ஜனநாயகத் தேர்தல் நடைபெற்றுள்ளதாக கூறப்போகிறது. இடைக்கால அறிக்கைகளும் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு ஆணைகோருகின்ற தேர்தலாக இந்த தேர்தலை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கையாளப் போகிறது. ஆனால் ஏனைய இரு புதிய கூட்டுக்களும் அந்த இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களது அபிலாசைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து மக்கள் ஆணையைக் கோரப்போகிறது. ஆக தமிழ் மக்கள் கொள்கைக்காகவும், தமது அபிலாசைகளை அடைவதற்காகவும், தமிழ் மக்களுக்கு நன்மை பயக்காத புதிய அரசியலமைப்பை ஏற்பதா..?, நிராகரிப்பதா என்பதை வெளிப்படுத்த தமது வாக்குரிமையையே பயன்படுத்த வேண்டியுள்ளது. மக்களது வாக்குகளே தமிழ் மக்களின் தேசிய அரசியலை முன்னகர்த்த முயலும் இந்த மூன்று கூட்டுக்களின் இருப்பையும் தீர்மானிக்கப் போகிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-18#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.