Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்­தவின் படத்தை பொது­ஜன முன்­னணி பயன்­ப­டுத்­தக்­கூ­டாது

Featured Replies

மஹிந்­தவின் படத்தை பொது­ஜன முன்­னணி பயன்­ப­டுத்­தக்­கூ­டாது

1-6eaa6efa42b50e6c91c2beb1fabdf4fe0b3893bb.jpg

 

கட்­சியை பிள­வு­ப­டுத்தும் நபர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை என்­கி­றது சு.க. 
(ஆர்.யசி)

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சின்­னத்­தையோ, கொள்­கை­யையோ அல்­லது கட்­சியின் தலை­வர்­களின் புகைப்­ப­டங்­க­ளையோ வேறு கட்­சி­யினர் பயன்­ப­டுத்­து­வது சட்­டத்­திற்கு முர­ணா­னது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் புகைப்­ப­டத்தை கூட

பொது­ஜன முன்­ன­ணி­யினர் பயன்­ப­டுத்த உரிமை இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி அறி­வித்­துள்­ளது.

கட்­சியை பிள­வு­ப­டுத்தும் நபர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான தீர்­மானம் எடுக்க ஜனா­தி­பதி தீர்­மானம் எடுத்­துள்­ள­தா­கவும் அக்­கட்­சி­யினர் தெரி­வித்­தனர்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே கப்பல் மட்டும் துறை­முக அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க இதனை தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்.

கட்­சியின் கொள்­கை­யினை பாது­காப்­ப­திலும், கட்­சியை பாது­காப்­ப­திலும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் நிலைப்­பாடு மிகவும் உறு­தி­யா­னது. அதா­வது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் அங்­கத்­தவர் யாராக இருப்­பினும் அவர் அர­சியல் காலங்­களில் கட்­சியை பிள­வு­ப­டுத்தும் வகை­யிலோ அல்­லது கட்­சிக்கு அவப்­பெயர் ஏற்­ப­டுத்தும் வகை­யிலோ செயற்­ப­டக்­கூ­டாது. ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பங்­கா­ளிக்­கட்­சிகள் இல்­லாத எதிர்க் கட்­சி­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­வது தடுக்­கப்­பட வேண்­டிய நகர்­வாகும். கட்­சியை அவ­ம­திக்கும், பிரிக்கும் நபர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இப்­போது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது உறு­தி­யான நிலைப்­பாட்­டினை இப்­போது எமக்கு அறி­வித்­துள்ளார்.

 இடம்­பெ­ற­வுள்ள தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை பிள­வு­ப­டுத்த உள்­ளி­ருந்து செயற்­படும் நபர்கள் யாராக இருப்­பினும் அவர்­களை கண்­ட­றிந்து ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கவும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்குள் புல­னாய்வு குழு­வொன்றை ஜனா­தி­பதி நிய­மித்­துள்ளார். அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் கொள்­கை­யினை, சின்­னத்­தினை, வர்­ணத்­தினை, எமது கட்­சியின் உரி­மை­யா­ளர்­களை, தலை­வர்­களின் புகைப்­ப­டங்­களை கூட வேறு நபர்கள் பிர­சித்­தி­ப­டுத்­து­வது சட்­டத்­துக்கு முர­ணா­னது.

அவ்­வாறு இருக்­கையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் தொடர்பு இல்­லாத, ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினை பிள­வு­ப­டுத்த நினைக்கும் பொது­ஜன முன்­ன­ணியின் தேர்தல் பிர­சா­ரங்­களில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் கொள்­கையை, நிறங்­களை, சின்­னங்­களை, கட்­சியின் ஸ்தாபகர் பண்­டா­ர­நா­ய­கவின் புகைப்­ப­டத்தை மட்டும் அல்ல முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் புகைப்­ப­டத்தை கூட பயன்­ப­டுத்­து­வது சட்­டத்­துக்கு முர­ணா­னது .

ஆகவே இவற்றை கருத்தில் கொண்டே ஜனா­தி­பதி குறித்த நபர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்க நட­வ­டிக்கை எடுத்­துள்ளார். குறித்த நபர்கள் தொடர்பில் அவர்கள் முன்­னெ­டுத்த செயற்­பா­டுகள் குறித்து சாட்­சி­யங்­களை திரட்டும் நட­வ­டிக்­கை­களை இப்­போது முன்­னெ­டுத்து வரு­கின்றோம். அதற்­காக ஜனா­தி­ப­தியே ஒரு குழுவை நிய­மித்­துள்ளார். இந்த நட­வ­டிக்­கைகள் வெளி­வ­ரவே இப்­போது பொது­ஜன முன்­ன­ணி­யினர் தம்மை தேர்தல் பிர­சா­ரங்­களில் காட்­டிக்­கொள்­ளாது மறைந்து திரிந்து வரு­கின்­றனர். தாம் பிரச்­சி­னை­க­ளிலும் சிக்­கிக்­கொள்­ளாது, அதே­நி­லையில் எமது கட்­சியின் பலத்­தினை உடைக்­கவும் முயற்­சித்து வரு­கின்­றனர்.

அன்று மஹிந்த ராஜபக் ஷ தலை­மையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி எவ்­வாறு எதிர்க்­கட்சி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை காப்­பற்­றி­யதோ அதேபோல் இப்­போது ரணிலின் இருப்­பினை தக்க வைக்க ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை பிள­வு­ப­டுத்தும் உடன்­ப­டிக்­கையில் இவர்கள் இணைந்து செயற்­பட்டு வரு­கின்­றனர். தாம் வெற்­றி­பெற வேண்டும் என்ற நோக்கம் அல்ல, மாறாக எம்மை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் மட்­டுமே பொது எதி­ர­ணி­யிடம் உள்­ளது.

வேட்­பு­மனு தாக்கல் நட­வ­டிக்­கையில் இப்­போது பொது எதி­ர­ணியின் முன்­வ­ரிசை உறுப்­பி­னர்கள் எவ­ரையும் காண முடி­ய­வில்லை. அதில் ஜி.எல்.பீரிஸ் மட்­டுமே உள்ளார். அதேபோல் பொது­ஜன முன்­ன­ணியின் மக்கள் சந்­திப்­பு­களில் இவர்கள் திருட்­டுத்­த­ன­மாக கூட்­டங்­களில் பங்­கேற்று வரு­கின்­றனர். அதேபோல் இவர்கள் செல்லும் கூட்­டங்­க­ளுக்கு செல்லும் மக்கள் தொலை­பே­சிகள், கெம­ராக்கள், வீடியோ கம­ராக்கள் எதையும் கொண்­டு­செல்ல முடி­யாது என தீர்­மா­னமும் எடுத்துள்ளனர். ஊடகவியலாளர்கள் யாருக்கும் அனுமதி வழங்காது இவர்களின் கூட்டங்களை நடத்துகின்றனர். ஆகவே இவர்களை நம்பி களமிறங்கிய நபர்களை கூட இன்று பொதுஜன முன்னணியினர் கைவிட்டுள்ளனர். இவர்களை நம்பி எவ்வாறு மக்கள் வாக்களிக்க முடியும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை முகங்கொள்ள தைரியம் இல்லாத நபர்களை மக்கள் எவ்வாறு தெரிவுசெய்ய முடியும். ஆகவே இப்போதே எமது பலம், வெற்றி என்னவென்பது வெளிப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-20#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.