Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொள்கை நிலைப்பாட்டில் இருந்து தமிழ் அரசுக் கட்சி ஒருபோதும் விலகியதில்லை

Featured Replies

  • கொள்கை நிலைப்பாட்டில் இருந்து தமிழ் அரசுக் கட்சி ஒருபோதும் விலகியதில்லை
கொள்கை நிலைப்பாட்டில் இருந்து  தமிழ் அரசுக் கட்சி  ஒருபோதும் விலகியதில்லை
 
 

கொள்கை நிலைப்பாட்டில் இருந்து தமிழ் அரசுக் கட்சி ஒருபோதும் விலகியதில்லை

 
 

கொள்கை கோட்­பா­டு­க­ளின்­றும் தமிழ் அர­சுக் கட்சி எந்த விதத்­தி­லும் வில­கிச் செல்­ல­வில்லை. ஒரு கொள்­கை­யின் பொருள் கோடல் என்­பது சட்­டத்­தில் குறிப்­பி­டப் பட்­டுள்­ளது போல், இலக்­க­ணப் பொருள்­கோ­ட­லாக இருக்க முடி­யாது என்­பது விக்­னேஸ்­வ­ர­ னுக்கு தெரி­யா­த­தொன்­றல்ல.

நடப்­பி­யல் தழு­விய செயற்­பா­டு­க­ளில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி எந்த விதத்­தி­லும் வில­கிச் செல்­ல­வில்லை. இவ்­வாறு இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் பொதுச் செய­லர் கி.துரை ­ரா­ச­சிங்­கம் தெரி­வித்­துள்­ளார்.

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­மையை விமர்­சித்து, முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் கடந்த புதன்­கி­ழமை வெளி­யிட்­டி­ருந்த கேள்வி -– பதில் அறிக்­கைக்­குப் பதி­ல­ளிக்­கும் வகை­யில் தாம் விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

அதில் மேலும் கூறப்­பட்­டுள்­ள­தா­வது, தேர்­தல்­கள் வரும்­போது விக்­னேஸ்­வ­ரன் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு எதி­ராக அறிக்கை வெளி­யி­டு­வது வழமை. விக்­னேஸ்­வ­ரன் ஐயா தாம், அர­சி­யல் சாராத ஓர் அர­சி­யல்­வாதி என்று சொல்­கி­றார். பல்­வேறு எதிர்ப்­புக்­க­ளுக்கு மத்­தி­யில், வவு­னி­யா­வில் நடை­பெற்ற தமிழ் அர­சுக் கட்சி மையக் குழுக் கூட்­டத்­தில் வட­மா­காண முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக அவ­ரது பெயரை நான்­தான் முன்­மொ­ழிந்­தேன்.

விக்­னேஸ்­வ­ரனைக் கட்­சி­யில் இணைப்­ப­தைப் பல 
தரப்­புக்­கள் எதிர்த்­தன

பேரா­சி­ரி­யர் சிற்­றம்­ப­லம், வழிப்­போக்­கர்­க­ளை­யெல்­லாம் கட்­சி­யில் சேர்க்­கின்­றீர்­கள் என்று எச்­ச­ரித்­தார். இருப்­பி­னும் அவ­ரை­யும் சமா­தா­னப்­ப­டுத்தி அந்­தத் தீர்­மா­னத்தை நிறை­வேற்­றி­னோம். கிழக்கு மாகாண சபை­யின் சகல உறுப்­பி­னர்­க­ளும் வடமாகாண சபைத் தேர்­தல் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்டு வீட்­டுச் சின்­னத்­துக்கு ஆத­ரவு தேடி­னோம்.

விக்­னேஸ்­வ­ரனை விட அனந்தி அதிக வாக்­கு­கள் பெறும் வாய்ப்­புக்­கள் இருந்­தன. அவ்­வாறு நடை­பெ­று­வது விக்­னேஸ்­வ­ ர­னின் மதிப்பைப் பாதிக்­கும் என்று உணர்ந்­தோம். இவரே அதிக வாக்­கு­கள் பெற வேண்­டும் என்ற வகை­யில் பரப்­பு­ரை­களை முன்­னெ­டுத்­தோம்.

இவரை அர­சி­ய­லுக்­குக் கொண்­டு­வர முற்­பட்ட போது எமது தமிழ் அர­சுக் கட்சி மையக் குழு உறுப்­பி­ன­ரொ­ரு­வர், அர­சி­யல் என்­பது அடி­மட்ட மக்­கள் வரை சென்று வேலை செய்­யும் ஒரு துறை. விக்­னேஸ்­வ­ர­னைப் போன்ற உயர் அந்­தஸ்­தைப் பரா­ம­ரிக்­கக் கூடி­ய­வர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் அவர்­கள் அந்த நில­மை­யில் இருந்து இறங்கி வர­மாட்­டார்­கள். இது எமது அர­சி­ய­லைப் பாதிக்­கும், என்று குறிப்­பிட்­டார். அவ­ரு­டைய வாக்கு இன்று மெய்­யா­கி­விட்­டது.

வட மாகாண சபை கொழும்பு அர­சின் எவ்­வித தொடர்­பும் இன்­றிச் செயற்­பட முடி­யாது. ஆனால் தொடக்­கத்­தில் இருந்தே விக்­னேஸ்­வ­ரன் கொழும்பு அர­சோடு முரண்­ப­டவே செய்­தார். இத­னால் முழு நாடும் வட­மா­காண சபை­யின் செயற்­பாட்­டின் மேல் வைத்­தி­ருந்த நம்­பிக்­கையை வினாக்­கு­றி­யாக வளைத்து விட்­டார்.

அது­மட்­டு­மல்­லாது எட்டு மாகாண முத­ல­மைச்­சர்­க­ளும் மாகா­ணங்­க­ளுக்கு அதிக அதி­கா­ரங்­கள் வழங்­கப்­பட வேண்­டு­மென அரச தலை­வ­ரி­டம் வலி­யு­றுத்­தி­னார்­கள். அதி­கம் வலி­யு­றுத்த வேண்­டிய வட­மா­காண முதல்­வர் அது குறித்த கூட்­டங்­க­ளில் கலந்து கொள்­ள­வும் இல்லை, வலி­யு­றுத்­த­வும் இல்லை.

இவர் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் அங்­கத்­த­வர். தமிழ் மக்­கள் பேர­வை­யின் கூட்­டத்­துக் குத் தலைமை வகித்து உரை­யாற்­று­வ­தற்கு முன்­னர் நடை­பெற்ற சகல தமிழ் அர­சுக் கட்­சி­யின் மையக் குழுக் கூட்­டங் களுக்­கும் அவ­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டது.

இதனை விட வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளைச் சேர்ந்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் நாடா­ளு­மன்ற, மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்­புக் குழுக்­கூட் டங்­க­ளுக்­கும் அவ­ருக்கு அறி­வித்­தல் கொடுக்­கப்­பட்­டி­ருந்­தது. இத்­த­கைய இரண்­டொரு ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டங்­க ­ளில் அவர் கலந்து கொண்­டும் இருக்­கின்­றார்.

அநே­க­மாக மதிய வேளைக்­குள் அவர் விடை­பெற்­றுச் சென்று விடு­வார். இவ்­வாறு இருக்க கூட்­டங்­க­ளுக்கு தமக்கு அழைப்பு விடுக்­கப்­ப­ட­ வில்லை, தனது கருத்­துக்­க­ளைச் சொல்ல வாய்ப் ப­ளிக்­கப்­ப­ட­வில்லை என்று அவர் குறிப்­பி­டு­வ­தில் எது­வித அர்த்­த­மும் இல்லை.

தமிழ் அர­சுக் கட்சி குறித்து விக்னேஸ்வரன் அடிக்­கடி வெளி­யிட்ட கருத்­துக்­கள் மகிழ்ச்சி தந்­தன

வன்­முறை சாராத கட்சி என்­ற­வ­கை­யில் இயற்­கை­யா­கவே இலங்கை தமிழ் அர­சுக் கட்­சி­யு­டன்­தான், எனது தொடர்­பு­கள் சார்ந்­தி­ருந்­தன என்று அவர் கூறு­வது மகிழ்ச்சி அளிக்­கின்­றது. 2013ஆம் ஆண்­டின் தேர்­தல் அறிக்கை தனக்­குத் தரப்­பட்­ட­தா­க­வும், அதி­லி­ருந்த கொள்­கை­கள் சரி­யெ­னப் பட்­ட­தா­க­வும் கூறு­கின்­றார்.

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி ஆரம்­பிக்­கப்­பட்ட காலம் தொடக்­கம் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தேர்­தல் அறிக்­கை­க­ளில் இத்­த­கைய அல்­லது இத­னைத் தழு­விய விட­யங்­களே இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.

உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர் பத­வி­யில் இருந்து ஓய்வு பெற்­ற­தைத் தொடர்ந்து வெளி­யிட்ட பத்­தி­ரிகை அறிக்­கை­க­ளில் (இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சியை மையப்­ப­டுத்­திய) தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பின்­னால் மக்­களை அணி­தி­ர­ளும் படி பல தட­வை­கள் கோரிக்கை விடுத்­தி­ருந்­தார். இந்­தக் கட்­சி­யின் கொள்­கை­யின்­பால் இருந்த பிடி­மா­னமே இதற்­குக் கார­ண­மாக இருந்­தி­ருக்­கும்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி ­ன­ரால் அர­சி­ய­லுக்கு வர­வ­ழைக்­கப்­பட்ட போது அந்­தக் கட்சி பதிவு செய்­யப்­பட்ட ஒரு கட்சி அல்ல என்­பது தனக்­குத் தெரி­யாது என்று கூறு­கின்­றார். கூட்­ட­மைப்பு பதி­யப்­பட்­டி­ருந்­தால் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் வீட்­டுச் சின்­னத்­தில் அவர்­கள் ஏன் போட்­டி­யி­டு­கின்­றார்­கள் என்று அவர் ஆராய்ந்து பார்த்­தி­ருக்க வேண்­டும்.

2014ஆம் ஆண்டு வவு­னி­யா­வில் நடை­பெற்ற ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் கலந்து கொள்­வ­தற்­காக விக்­னேஸ்­வ­ரன் கொழும்­பில் இருந்து புறப்­பட்­டார். அவர் கூட்­டத்­துக்கு வரு­கின்­றார் என்­ப­தற்­காக சுமந்­தி­ரனே வண்­டி­யின் சார­தி­யாக இருந்து செலுத்தி வந்­தார். நான் இவர்­க­ளின் இருக்­கை­க­ளுக்­குப் பின்­புற இருக்­கை­யில் அமர்ந்­தி­ருந்­தேன்.

கொழும்­பில் இருந்து வவு­னியா செல்­லும் வரை­யான நேரப்­கு­தி­யில் நடை­பெற்ற உரை­யா­ட­லில், இன அழிப்­புப் பிரே­ரணை முக்­கிய இடம் பிடித்­தி­ருந்­தது. இன அழிப்பு என்­பது அதி­கூ­டிய நிறுவு தரத்­தின் மேல் நிறு­வப்­பட வேண்­டி­ய­தொன்று, அதி­க­பட்ச அள­வி­லான சான்­று­கள் சமர்ப்­பிக்­கப்­ப­டா­த­வி­டத்து அது நிரா­க­ரிக்­கப்­ப­ட­லாம்.

தென்­சூ­டா­னின் முன்­னு­தா­ர­ ணத்தை நாமும் கவ­னத்­திற் கொள்ள வேண்­டும். ஆனால் போர்க்­குற்­றம் என்­கின்ற வரை­வி­லக்­க­ணத்­திற்­குள் நின்று சிறந்த சான்­று­களை முன்­வைக்­கும் போது, சான்­று­க­ளி­னு­டைய பெறு­மா­னத்­தைக் கருத்­திற் கொண்டு இன அழிப்பு நடை­பெற்­றது என்ற தீர்ப்­பைப் பெறும் வகை­யில் எமது செயற்­பா­டு­கள் அமைய வேண்­டும் என்ற விட­யம் குறித்து விக்­னேஸ்­வ­ர­னும் சுமந்­தி­ர­னும் கருத்­தொ­ரு­மித்­துக் கலந்­து­ரை­யா­டி­னர்.

இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லின் பின்­னர்­ கூட, குறித்த பிரே­ரணை வட­மா­கா­ண­ச­பை­யில் முன்­வைக் கப்­ப­ட­வில்லை.

ஆனால் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் இன அழிப்­புப் பிரே­ரணை வட­மா­காண சபை­யில் முன்­வைக்­கப்­பட் டது. அது­வும் ஆரம்­பத்­தில் அதனை முன்­மொ­ழிய முனைந்த சிவா­ஜி­லிங்­கம் முன்­மொ­ழி­யாது, விக்­னேஸ்­வ­ரன் முன்­மொ­ழிந் தமை­யா­னது ஆச்­ச­ரி­யப்­ப­டக்­கூ­டிய ஒரு செய்­தி­தானே? அவ்­வாறு ஒரு அவ­சி­யம் இருந்­தி­ருந்­தால்­கூட அது ஏன் தலை­மைக்­குத் தெரி­வித்­தி­ருக்­கப்­ப­டக் கூடாது.

அர­சி­யல் கட்­சி­யின் தேர்­தல் அறிக்­கையை ஏற்று, அந்த அர­சி­யற் கட்­சி­யின் உழைப்­பி­னால் அதி­கூ­டிய வாக்­கு­க­ளைப் பெற்று, முத­ல­மைச்­ச­ராகி வன்­முறை சாராத கட்சி என்ற வகை­யில் இயற்­கை­யா­கவே இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யு­டன் சார்பு நிலை கொண்­டி­ருந்த நிலை­மை­யை­யெல்­லாம் திடு­திப் பென ஏன் அவர் மாற்­றிக் கொண்­டார்?

இப்­போது என்­னு­டைய ஒத்த கருத்­து­டை­ய­வர்­கள் தமிழ் மக்­கள் பேரவை என்ற நாமத்­தோடு ஒரு மக்­கள் இயக்­க­மா­கப் பரி­ண­மித்­துள்­ளார்­கள் என்று குறிப்­பி­டு­ கின்­றார். இத்­தனை மாற்­றத்­துக்­கும் கார­ணம் 2014ஆம் ஆண்டு இறு­திப் பகு­தி­யில் நடை­பெற்ற இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மாநாடே ஆகும்.

கட்­சி­யின் தலை­மைப் பதவி கிட்­டா­த­தால் 
விக்­னேஸ்­வ­ரன் ஏமாற்­ற­முற்­றார்

கட்­சி­யின் தலை­மைப் பதவி மாவை சேனா­தி­ரா­ஜா­வைச் சென்­ற­டைந்­த­மை­தான் இதற்­கெல்­லாம் கார­ணம். எதிர்­பார்ப்பு கன­வா­யிற்றே என்­ப­தைச் சகித்­துக் கொள்­வது கடி­னம் தான். ஆனால், அத்­த­கைய எதிர்­பார்ப்பு நியா­ய­மா­ன­ தொன்­றல்ல.

விக்­னேஸ்­வ­ரன், அர­சி­ய­லுக்கு வரு­முன்­னர் குறிப்­பிட்­டி­ருந்­தார், நீங்­கள் எல்­லாம் நிர்ப்­பந்­திப்­ப­தால் வட­மா­கா­ண­சபை முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக நிற்­கின்­றேன்.

அதே­வேளை இரண்­டரை வரு­டங்­கள் மாத்­தி­ரமே பத­வி­யி­லி­ருப்­பேன், என்று பெரு­ம­ன­தோடு குறிப்­பிட்­டி­ருந்­தார். ஆனால் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மாநாட்­டின் பின்­னர் வேறொரு விஸ்­வ­ரூ­பம் எடுத்து விட்­டார். இவர் எமக்கு மிக­வும் வேண்­டி­ய­வர். இவ­ரது மன­நிலை மாற்­றம் தமிழ் மக்­க­ளின் துர்ப்­பாக்­கி­யமோ என்று கூடக் கவ­லை­ய­டை­கின்­றோம்.

ஊர்­கூ­டித் தேர் இழுக்க வேண்­டிய நேரத்­தில் ஏற்­பட்ட, இந்­தத் துர்ப்­பாக்­கி­யத்தை நினைத்து ‘விதியே விதியே தமிழ்ச் சாதியை என்­செய நினைத்­தாய்’ என்று பாரதி கேட்­டது போலக் கேட்­கத் தோன்­று­கி­றது.

இடைக்­கால அறிக்­கை­யில் கூட்­டாட்சி இல்லை;வடக்கு – கிழக்கு இணைப்பு இல்லை, சுய­நிர்­ணய உரிமை இல்லை என்­றெல்­லாம் சொல்­லு­கின்­றார். இடைக்­கால அறிக்கை வெளி­வந்­த­போது அதனை நிரா­க­ரிப்­ப­தா­கச் சொன்­னார். பின்­னர், தான் அதை முழு­மை­யாக வாசிக்­க­வில்லை என்­றும் சொன்­னார். அவர் குழம்­பா­மல் இருப்­ப­தும், மக்­க­ளைக் குழப்­பா­மல் இருப்­ப­தும் அதி முக்­கிய தேவை­யா­கும்.

அர­ச­மைப்பு என்­பது இன்­றைய நிலை­யிலே புரிந்­து­ணர்­வோடு, இணக்­கப்­பாட்­டோடு உரு­வாக்­கப்­பட வேண்­டிய ஒன்று. இவை இரண்­டும் இல்­லை­யென்­றால் நீடித்து நிலைத்­தி­ருக்­கக் கூடிய ஒரு தீர்வு அடை­யப்­பட மாட்­டாது. கூட்­டாட்சி என்­பது நாட்­டுக்கு நாடு, காலத்­திற்­குக் காலம் வேறு­பட்ட பொருள் கோட­லைக் கொண்­ட­தாக வழங்­கி­வ­ரு­கின்ற, வளர்ந்து வரு­கின்ற ஒரு கோட்­பாடு.

பிரிட்­ட­னது ஒற்­றை­யாட்சி முறை கூட, வட­ அ­யர்­லாந்து மற்­றும் ஸ்கொட்­லாந்து போன்ற பிராந்­தி­யங்­கள் பிரிந்து செல்­லக்­கூ­டிய தத்­து­வங்­க­ளைக் கொண்­டி­ருக்­கின்ற அள­வுக்­குத் தற்­போது மாற்­ற­ம­டைந்­துள்­ளது. அர­சி­யல் தீர்­வில் கூட்­டாட்சி, சுய­நிர்­ண­யம் என்­பவை எழு­தப்­ப­டு­வ­தற்கு மேல் செயற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தி­லேயே அதி­கம் தங்­கி­யுள்­ளன. இடைக்­கால அறிக்­கையை ஆறு உப­கு­ழுக்­க­ளின் அறிக்கை, இடைக்­கால அறிக்கை, பின் இணைப்­புக்­கள் எனும் எல்­லா­வற்­றை­யும் ஒரு­சே­ரப் படித்தே பொருள்­கோ­டல் செய்ய வேண்­டும். இப்­போது இருக்­கின்ற வாய்ப்பை எல்­லோ­ரும் சேர்ந்து பயன்­ப­டுத்த வேண்­டும்.

எது­எது இல்லை என்று கரு­து­கின்­றோமோ, அவ்­வ­வற்­றைப் பெற்­றுக் கொள்­ளக் கூடிய விதத்­தில் என்ன உத்­தி­கள் கையா­ளப்­பட வேண்­டும் என்று ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் பேசிக் கொள்ள வேண்­டும். எமது தனிப்­பட்ட மதிப்­புக்­கள், பிடி­வா­தங்­கள் என்­பவை தமிழ் மக்­க­ளின் தலை­வி­தியை மாற்­றி­வி­டக் கூடாது. அடுத்த தரப்­பி­னரை அகௌ­ர­வப்­ப­டுத்­திக் கொண்டு புரிந்­து­ணர் வோடு கூடிய நல்­லி­ணக்­கத்தை எய்த முடி­யுமா?

சிங்­கள இனம் குறித்த விக்கியின் கடும் கருத்­துக்­கள் நியா­ய­மற்­றவை. ஆறாம் நூற்­றாண்­டுக்கு முன்­னர் சிங்­கள மக்­கள் இங்கு இருக்­க­வில்லை என்­பது புரிந்­து­ணர்வை வளர்ப்­ப­தற்கு உர­மா­குமா? விச­மா­குமா? அப்­ப­டி­யென்­றால் 16ஆம் நூற்­றாண்­டுக்கு முன்பு கிறிஸ்­த­வர்­கள் இலங்­கை­யில் இருக்­க­வில்­லையே என்­ப­தும் ஒரு வாத­மாகி அது அந்த மக்­க­ளைப் புண்­ப­டுத்­தாதா?

எங்­க­ளு­டைய தலை­வர்­க­ளின் பிடி­வா­தம் கார­ண­மாக எத்­த­னையோ விட­யங்­களை இழந்­தி­ருக்­கின்­றோம். 1926களில் கண்­டிய குழு­மத்­தி­னர் கூட்­டாட்­சி­யைக் கேட்­ட­போது எம்­மு­டைய தலை­வர்­கள் தங்­கள் வித்­து­வச் செருக்­குக் கார­ண­மாக அதனை ஏற்­க­வில்லை. டொன­மூர் திட்­டத்தை எதிர்த்து அர­சி­யல் நிர்­ணய சபை­யைப் புறக்­க­ணித்­தார்­கள்.

நான்கு ஆண்­டு­க­ளின் பின்­னர், அந்­தச் சபைக்­குச் சென்­றார்­கள். சோல்­பரி ஆணைக்­கு­ழு­வின் முன் ஐம்­ப­துக்கு ஐம்­பது கேட்டு ஐம்­பத்­தைத்­துக்­கு, நாற்­பத்­தைந்து யோசனை முன்­வைக்­கப்­பட்ட போது அத­னை­யும் ஏற்க மறுத்­தார்­கள். பண்டா – செல்வா ஒப்­பந்­தம் வந்­த­போது, ஜி.ஜி பொன்­னம்­ப­லம், செல்­வ­நா­ய­கம் தமிழ் மக்­களை விற்­று­விட்­டார் என்று பரப்­புரை செய்­தார்.
டட்லி – செல்வா ஒப்­பந்­தத்­தின்­போ­தும், இதுவே நடை­பெற்­றது.

1987 ஆம் ஆண்டு வடக்கு – கிழக்­குக்­கான இடைக்­கால நிர்­வா­க­சபை அறி­விக்­கப்­பட்ட போது நாம் கொடுத்த மூன்று பெயர்­க­ளைப் பெற்ற ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன அதில் ஒரு­வ­ரைத் தலை­வ­ரா­கத் தெரிவு செய்த போது அத­னைச் சாது­ரி­ய­மாக நகர்த்­தா­மல் அந்த வாய்ப்­பையே போட்­டு­டைத்­தோம்.

அர­ச­மைப்­புக்­கான 13ஆவது திருத்­தத்­தின் பின்­னர், வடக்கு – கிழக்கு இணைப்பு என்­பது நிபந்­த­னை­யோடு கூடி­ய­தாக இருந்­தது. சரியோ பிழையோ, தேர்­தல் நடை­பெற்று வடக்கு – கிழக்கு மாகாண சபை அமைக்­கப்­பட்­டதே! அதே போன்று ஒரு தேர்­தல் மூலம் வடக்கு கிழக்கை இணைத்­தி­ருக்க முடி­யாதா? அந்த வாய்ப்­பை­யும் நழுவ விட்­டோம்.

1999 ஆம் ஆண்டு பிராந்­தி­யங்­க­ளின் ஒன்­றி­யம் என்ற வகை­யி­லான நீலன் – பீரிஸ் தீர்­வுத் திட்­டம் அர­ச­மைப்­புச் சட்­ட­மாக வந்­தது. பின்­னொரு நாளில் அன்­டன் பால­சிங்­கமே அது வர­வேற்­கத்­தக்க தீர்­வுப் பொறி­முறை என்று குறிப்­பிட்­டி­ருந்­தார். அதனைக் கூட நழு­வ­விட்­டோம். இவ்­வாறு வெண்­ணெய் திரண்டு வந்து போதெல்­லாம் தாழியை உடைத்த வெற்றி வீரர்­க­ளின் வாரி­சு­கள் தான் நாங்­கள்.

ஒரே நாட்­டுக்­குள் தான் எமக்­கான தீர்வு 
கிட்ட வேண்­டும்

இது ஒரு நாடு, இந்த நாட்­டுக்­குள்ளே தான் எமக்­கான தீர்வு. தீர்­வின் அடிப்­படை புரிந்­து­ணர்­வு­ட­னான, விட்­டுக் கொடுப்­பும், நீடித்து நிலைக்­கக் கூடிய நல்­லி­ணக்­க­மும் ஆகும். வடக்கு – கிழக்கு இணைப்­புத் தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் முன்­மொ­ழிவு உண்டு. இது இடைக்­கால அறிக்கை மட்­டும் தான். இறுதி வடி­வம் இன்­னும் வெளி­வ­ர­வில்லை.

தோசை சுடு­ப­வ­ளுக்கு எப்­போது அதைப் புரட்­டிப் போட வேண்­டும் என்று தெரிய வேண்­டும், என்று தொண்­ட­மான் ஒரு முறை கூறி­யி­ருக்­கின்­றார். சமை­யற்­க­லைப் புத்­த­கத்­தைப் படித்­து­விட்­டு­மட்­டும், வந்து தோசை சுட முடி­யாது. அது போலத்­தான் அர­சி­யற் கலையை நூல்­களை வாசித்­து­விட்டு மட்­டும் கையாள முடி­யாது. மக்­கள் விக்­னேஸ்­வ­ரனை முத­ல­மைச்­ச­ராக்­கி­யது , தீர்­வுக்­கா­கச் செயற்­பட்­டுக் கொண்­டி­ருக்­கின்ற தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­தும், அதில் சேர்ந்­துள்ள ஒவ்­வாரு கட்­சி­யி­ன­தும் செயற்­பாட்­டோடு சேர்ந்து பலம் சேர்க்க வேண்­டும் என்­ப­தற்­கா­கத் தான்.

நடப்­பி­யல் அறிந்து, அதை நகர்த்த வேண்­டும். ஏட்­டுச் சுரைக்­காய் கறிக்­கு­த­வாது. கம்­ப­வா­ருதி, விக்­னேஸ்­வ­ரன் ஐயா பற்­றிப் பல பக்­கக் கட்­டுரை வரைந்­தி­ருக்­கின்­றார். அவற்­றைப் படித்­தோம், ஆனால் பெரிதுபடுத்­த­வில்லை. அவற்­றின் இலக்­க­ண­மாக அவர் இருந்து விடக் கூடாது என்று இன்­றும் நாங்­கள் விரும்­பு­கின்­றோம்.

அண்­மை­யில் கன­கீஸ்­வ­ரன் முன்­னி­லை­ யில் மூன்று மணித்­தி­யா­லங்­கள் விக்­னேஸ்­வ­ரன், சம்­பந்­த­னு­டன் மனம் திறந்து கலந்­து­ரை­யா­டி­னார். அதற்­குப் பின் 84 வய­தி­லும் சம்­பந்­தன், எல்லா விட­யங்­க­ளை­யும் அறிந்து வைத்­துள்­ளார் என்று விக்­னேஸ்­வ­ரனே குறிப்­பிட்­டும் இருக்­கின்­றார். மாற்­றுத் தலைமை தேவை­யில்லை என்­றும் சொல்­லி­யி­ருக்­கின்­றார். இந்த நிலை­யில் இவ்­வா­றான அறிக்கை ஏன்?

தமிழ் அர­சுக் கட்சி தனது கொள்கை வழியே தான் செல்­கின்­றது. நடப்­பி­யல் தழுவி நடந்து கொள்­கின்­றது. இதனை மக்­க­ளுக்கு விளக்­கி­யுள்­ளோம். மக்­க­ளும் நம்­பிக்­கை­யோடு ஏற்­றுக் கொண்­டுள்­ளார்­கள். தூங்­கு­வது போல் பாசாங்கு செய்­வோரை என்ன செய்­வது? சிங்­கள மக்­க­ளுக்கு கூட்­டாட்சி பற்றி விளக்­கு­வ­தில் சுமந்­தி­ரன் ஏற்­க­னவே ஈடு­பட்­டுள்­ளார். சோபித தேர­ரின் அணி­யி­னால் அண்­மை­யில் மாத்­த­றை­யில் நடத்தப்பட்ட கூட்­டத்­தில் கலந்து அவர் கூட்­டாட்சி பற்­றிக் கூறிய விட­யம் அமோக வர­வேற்­பைப் பெற்­றது.

எலும்­புத் துண்டு பற்­றி­யெல்­லாம் முதலமைச்சர் பேசு­கின்­றார். இது இரண்­டாம், மூன்­றாம் தரப் பேனாக்­க­ளின் வாச­கங்­கள். இதை நீங்­க­ளும் சொல்­லு­வது நிலத்­திற் கிடந்­ததை கால் காட்­டும் என்ற குறளை நினைக்­கச் செய்­கின்­றது. இது உங்­கள் தரா­த­ரத்­திற்­கு­ரிய பாவனை அல்ல.

துய­ரோடு இருக்­கின்ற எல்­லாத் தமி­ழர்­கள் சார்­பி­லும் கேட்­டுக் கொள்­கின்­றேன், தமிழ் மக்­க­ளின் நம்­பிக்கை வீணா­கக்­கூ­டாது’’ – என்று அந்த அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்டுள்­ளது.

http://newuthayan.com/story/58926.html

  • கருத்துக்கள உறவுகள்

26000998_181355052608436_152988615530334

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.