Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுக்கு நிதி உதவி வழங்கிய 13 பேருக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் வழக்கு…

Featured Replies

புலிகளுக்கு நிதி உதவி வழங்கிய 13 பேருக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் வழக்கு…

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.

funding-the-LTTE-to-stand-trial-in-Swiss

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கிய 13 பேருக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சுமார் 15 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உலகத் தமிழ் இணைப்புக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. போலி சம்பளப் பட்டியல்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடன் பெற்றுக்கொண்டு இவ்வாறு நிதி திரட்டப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஊழல் மோசடி, பணச் சலவை, கப்பம் பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த நபர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் சுவிட்சர்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்படாத காரணத்தினால், பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/2018/59596/

  • தொடங்கியவர்

கொடுத்தது சரி, வாங்கியது தவறு!

 

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் பதின்மூன்று பேர் எதிர்வரும் திங்களன்று ஸ்விட்ஸர்லாந்தின் குற்றவியல் நீதிமன்றில் ஆஜராகவுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஸ்விட்ஸர்லாந்து, ஜேர்மன் மற்றும் இலங்கை நாட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

3_LTTE.JPG

கைது செய்யப்பட்டவர்களுள் உலகத் தமிழ் ஒருங்கமைச்சு சங்கத்தின் நிறுவனர் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரும் அடங்குவர்.

1999 முதல் 2009ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில், தவறான வழிகளில் நிதிசேர்ப்பு நடவடிக்கைகள் மூலம் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து சுமார் 15.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை இவர்கள் சேர்த்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி பதின்மூவர் மீதும் மோசடி, போலி ஆவணப்படுத்தல், பணச் சலவை மற்றும் பணம் பறித்தல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஸ்விட்ஸர்லாந்தில் எல்.டி.டி.ஈ. இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்படாமையால் அவ்வியக்கத்துக்கு நிதி வழங்கியதன் பேரில் சந்தேக நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.

எனினும் பொய்யான ஆவணங்கள் மற்றும் பயமுறுத்தல்கள் மூலம் பணம் திரட்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் தண்டனை வழங்கப்பட முடியும்.

இவ்வாறு பெறப்பட்ட நிதி சிங்கப்பூர், டுபாய் வழியாக எல்.டி.டி.ஈ. இயக்கத்துக்குச் சென்று சேர்ந்ததாகவும் அவற்றை ஆயுதங்கள் வாங்க விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகவும் கருதப்படுகிறது.

http://www.virakesari.lk/article/29017

  • தொடங்கியவர்

சுவிட்சர்லாந்து நீதிமன்றிற்கு எதிரில் தமிழர்கள் போராட்டம்…

Tamils-protest-outside-Swiss-court03.jpg

சுவிட்சர்லாந்து நீதிமன்றிற்கு எதிராக தமிழர்கள் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டியதாக 13 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளமையை கண்டித்து இவ்வாறு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

13 பேர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் 15 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் திரட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிதிச் சலவை, நிதி மோசடி, போலி ஆவணங்களை சமர்ப்பித்தமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து நீதிமன்றில் இந்த 13 பேருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 1999ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் இவ்வாறு நிதி திரட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த 13 பேருக்கு எதிராக பிழையாக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

Tamils-protest-outside-Swiss-court3-1.jp

Tamils-protest-outside-Swiss-court3.jpg?

http://globaltamilnews.net/2018/60368/

  • 1 month later...
  • தொடங்கியவர்

விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டு! 12 தமிழர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணை

 

 

 

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி உதவி செய்ததாக சந்தேகத்தின் பேரில் 12 தமிழர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டு வார இடைவெளிக்குப்பின் Bellinzonaவிலுள்ள Federal Criminal நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

முதல் கட்ட விசாரணையின் இறுதிச்சுற்று முடிவடைந்த நிலையில், அரச சட்டத்தரணியின் முடிவுக்காக குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு காத்திருக்கிறது.

திங்கட்கிழமை காலை குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு சட்டத்தரணிகளும், அரச தரப்பு சட்டத்தரணிகளும் சமீபத்திய ஆதாரம் குறித்து விவாதித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பின் சட்டத்தரணிகள், எட்டு ஆண்டுகளுக்குமுன் இந்த வழக்கு தொடங்கியதிலிருந்தே வழக்குடன் தொடர்புடையவர்களான Vaudஐச் சேர்ந்த இரண்டு பொலிஸாரை விசாரிக்க அனுமதி கோரினர்.

தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்த அரச சட்டத்தரணி.

அந்த காலகட்டத்தில் சுவிட்சர்லாந்தில் இயங்கிக் கொண்டிருந்த World Tamil Coordinating Committee (WTCC) என்னும் தமிழ் அமைப்பின் காசாளர் சார்பாக வழக்காடிய சட்டத்தரணிகள், குறிப்பாக அரச சட்டத்தரணி அலுவலகம் மற்றும் WTCC அலுவலகங்களுக்கிடையே தொடங்கப்பட்டிருக்கவேண்டிய தொலைபேசித் தொடர்புகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தது குறித்து கேள்வி எழுப்பினார்.

மேலும் இலங்கையின் சிவில் யுத்தம் குறித்து நன்கறிந்த இன்னொரு வரலாற்று நிபுணர் மற்றும் இதர சாட்சிகளையும் நேர்காணல் செய்யவும் கோரிக்கை விடுத்தார்.

அரச சட்டத்தரணி, குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு சட்டத்தரணிகள் சமர்ப்பித்த கோரிக்கைகளை எதிர்த்து கடுமையாக வாதிட்டார்.

அவர் WTCCயானது விசாரணை தொடங்கிய பத்து நாட்களுக்குப்பின் தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டதை சுட்டிக்காட்டினார். இது கணிப்புகளை அர்த்தமற்றதாக்கும் என்றார் அவர். தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார்.

போருக்கு நிதியுதவி

ஜனவரியிலிருந்து சுவிட்சர்லாந்தில் வாழும் 12 தமிழர்கள் மற்றும் ஒரு ஜேர்மானியர் என மொத்தம் குற்றம் சாட்டப்பட்ட 13 பேர் நீதிமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டுள்ளார்கள்.

அவர்கள்மீது ஒரு குற்றவியல் அமைப்புக்கு உதவுதல், மோசடி, போலியான ஆவணங்களை உருவாக்குதல், சட்ட விரோதப் பணப்பரிமாற்றம், பணம் பறிப்பு ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அவர்கள்மீது விடுதலைபுலிகளின் போருக்கு நிதி உதவி செய்யும் ஒரு பெரும் அமைப்பை சுவிட்சர்லாந்தில் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

புலம்பெயர்தலுக்கான ஃபெடரல் அலுவலகமும், 2002 மற்றும் 2006க்கு இடையேயான காலகட்டத்தில் WTCCயின் கல்வித்துறையின் பல்வேறு பாடத்திட்டப் பிரிவுகளுக்கு 100,000 பிராங்குகள் வழங்கியதாக செய்திகள் வெளியாகின.

இந்த வழக்கு விசாரணை சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய கிரிமினல் விசாரணைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

 

http://www.tamilwin.com/swiss/01/174822?ref=home-feed

  • தொடங்கியவர்

விடுதலைப் புலிகள் மீது சுவிஸ் வழக்கறிஞர்கள் கடுமையான நிலைப்பாடு

 

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் இயக்கமானது குற்றவாளிகளின் இயக்கமென்று சுவிட்சர்லாந்தின் முதன்மை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் குறித்த கருத்தை வழக்கறிஞர் Juliette Noto தெரிவித்துள்ளார்.

குற்றப்பின்னணி கொண்ட ஒரு அமைப்புக்கு இருக்க வேண்டிய அனைத்தும் அம்சங்களும் விடுதலைப் புலிகள் அமைக்கும் இருப்பதாக அவர் கருதுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சட்டத்திட்டங்களை வகுத்து அதன் அடிப்படையில் விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்பட்டு வந்ததாக கூறும் Juliette Noto,

அந்த இயக்கத்தின் உண்மையான நோக்கத்தை குற்றவியல் நடவடிக்கைகளால் எதிர்கொண்டதாகவும், ஆனால் அவை அனைத்தும் மிக நுணுக்கமாக மேற்கொள்ளப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் இயக்கம் மீது இருக்கும் அதே பார்வையை தாம் சுவிட்சர்லாந்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழுவுடன் பொருத்திப் பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த இயக்கத்தில் உறுப்பினராக இருக்கும் ஒருவர் அவர்களது செயல்பாடுகளில் மிகவும் ஈடுபாட்டுடன் இயங்குவதாகவும்,

ஆனால் அந்த இயக்கத்தை ஆதரிப்பவர்கள் அதன் கருத்தியலில் முழு ஈடுபாட்டுடன் இயங்குவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போர் நிறுத்த காலகட்டங்களில், குறிப்பாக 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நவம்பர் 2005 வரை விடுதலைப்புலிகள் இயக்கமானது தங்கள் அரசியல் எதிரிகளை படுகொலை செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டுமின்றி, திருகோணமலை பகுதியில் இஸ்லாமிய இனத்தை நிர்மூலம் செய்ததையும், அதே காலகட்டத்தில் 2 அமைச்சர்கள் படுகொலை செய்யப்பட்டதையும் Noto சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் ஆதாயத்திற்காக படுகொலை செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த வழக்கறிஞர் Noto,

பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுதலைப்புலிகள் இயக்கமே கலவரத்தையும் போரையும் ஊக்குவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனிவா ஒப்பந்தத்தை ஒருக்காலும் மதிக்காத விடுதலிப்புலிகள் இயக்கம் எப்போதுமே பயங்கரவாத நடவடிக்கைகளில் மட்டுமே ஆர்வம் காட்டியுள்ளது என்றார்.

தற்போது வழக்கை எதிர்கொள்ளும் உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் 13 பேரும், விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் மிகத் தெளிவான பார்வை கொண்டவர்கள்.

ஆதலால், உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழு சுவிட்சர்லாந்தில் சேகரித்த நிதி மொத்தமும் விடுதலைப்புலிகள் அமைப்புக்காகவே என வழக்கறிஞர் Juliette Noto திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுவிட்சர்லாந்து ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி http://m.20min.ch

 

http://www.tamilwin.com/swiss/01/174864?ref=imp-news

  • தொடங்கியவர்

சுவிஸ் அரசிற்கு எதிராக திரண்ட புலம்பெயர் தமிழர்கள்

 

சுவிட்ஸ்லாந்து நாடாளுமன்றத்திற்கு முன்னால் புலம்பெயர்ந்த தமிழர்கள் திரண்டு அந்த நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக பாரிய கண்டப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயங்கமாக அடையாளப்படுத்தி, அந்த இயக்கத்திற்காக உழைத்த தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை தண்டிக்கும் நோக்கில் சுவிட்ஸர்லாந்ர் காவல்துறை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியன இணைந்து தொடர்ந்துள்ள வழக்கை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டது.

சுவிஸ் அரசிற்கு எதிராக திரண்ட புலம்பெயர் தமிழர்கள்

சுவிட்ஸ்லாந்தின் பேர்ன் நகரில் அந்த நாட்டு நாடாளுமன்றத்திற்கு முன்னால் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றுதிரண்டு பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது சுவிட்ஸர்லாந்து உட்பட ஐரோப்பிய வாழ் ஏராளமான புலம் பெயர் தமிழர்கள் பங்கேற்றிருந்தனர்.

சுவிஸ் அரசிற்கு எதிராக திரண்ட புலம்பெயர் தமிழர்கள்

தமிழர்களின் உரிமைகளுக்காக மூன்று தசாப்தமாக போராடிய தமிழீழ விடுதலை புலிகளை கொடூரமான ஆயுத ரீதியான யுத்தம் மூலம் ஸ்ரீலங்கா அரசாங்கம் 2009 ஆம் ஆண்டு மௌனிக்க செய்திருந்தது.

இந்த நிலையில் விடுதலை புலிகளை பயங்கரவாத இயக்கமான அடையாளப்படுத்தி, அவர்களுடன் இணைந்து செயற்பட்ட தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.

சுவிஸ் அரசிற்கு எதிராக திரண்ட புலம்பெயர் தமிழர்கள்

பயங்கரவாத அமைப்புக்கு நிதி சேகரித்ததாக சுவிட்ஸலாந்தின் அரசாங்கம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியன தொடர்ந்துள்ள இந்த வழக்கு, தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை திட்டமிட்டு தண்டிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தே புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் இளைஞர்கள் பெண்கள், பெரியோர் என பலர் பங்குபற்றியிருந்ததுடன், சுவிட்ஸ்லாந்து அரசாங்கத்தின் செயற்பாடுகளை வன்மையாக கண்டித்துள்ளனர்.

விடுதலை புலிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது வலுவாக இருந்த புலம்பெயர்ந்த மக்கள், தற்போதும் மௌனம் கலைத்து ஒற்றுமைப்பட வேண்டும் என சுவிஸ் தமிழ் ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தியுள்ளது.

சுவிஸ் அரசிற்கு எதிராக திரண்ட புலம்பெயர் தமிழர்கள்

https://news.ibctamil.com/ta/internal-affairs/Diaspora-tamils-protest-against-switzerland

  • தொடங்கியவர்

உண்மைக்காய் எழுவோம் (சுவிஸ்) 24-02-2018

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

சுவிசில் புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு – விசாரணைகள் முடிவு, தீர்ப்பு ஜூனில்

 

gavelசுவிட்சர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள 13 ஈழத் தமிழர்களுக்கும் எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு நேற்று முடிவடைந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் நாள் அறிவிக்கப்படும்.

1999ஆம் ஆண்டுக்கும், 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், விடுதலைப் புலிகளுக்காக 15 மில்லியன் சுவிஸ் பிராங் நிதியை சேகரித்து, பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணைபோனார் என்று சுவிஸ், ஜேர்மனி, சிறிலங்காவைச் சேர்ந்த 13 பேருக்கு எதிராக சுவிஸ்“ சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குத் தொடர்ந்திருந்தது.

பெலின்சோனா சமஷ்டி குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 8 வாரங்களாக நடந்து வந்த இந்த வழக்கு நேற்று முடிவுக்கு வந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு ஜூன் 14ஆம் நாள் அறிவிக்கப்படும்.

இந்த வழக்கிற்கு 3.79 சுவிஸ் பிராங் (4 மில்லியன் டொலர்) செலவு ஏற்பட்டுள்ளதாகவும், தமது கட்சிக்காரரான பிரதிவாதிகள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், இந்த செலவுத் தொகையை அவர்கள் செலுத்த நேரிடும் என்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் சட்டவாளரான ஜீன் – பியரே கர்பாடே தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/03/15/news/29798

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.