Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண சுகாதார அமைச்சர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளுக்கு விஜயம்!

Featured Replies

வடமாகாண சுகாதார அமைச்சர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளுக்கு விஜயம்!

 

வடமாகாண சுகாதார அமைச்சர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளுக்கு விஜயம்!

வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் மல்லாவி மருத்துவமனை,மாங்குளம் மருத்துவமனை,ஒட்டுசுட்டான் மருத்துவமனை, முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனை,புதுக்குடியிருப்பு மருத்துவ மனைகளுக்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன் அண்மையில் ஏற்பட்ட வைரஸ் தொற்று தொடர்பில் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்ட மருத்துவமனையின் பொது வைத்திய நிபுணர் மற்றும் மருத்துவமனை இயக்குனர் மற்றும் சம்மந்தப்பட்ட சிகிச்சை பிரிவினரையும் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வடமாகாண சுகாதார அமைச்சர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளுக்கு விஜயம்!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் ஊடகங்களுக்கு அவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது..

வடமாகாண சுகாதார அமைச்சர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளுக்கு விஜயம்!

முல்லைத்தீவில் அண்மைக்காலமாக சுவாச தொற்றினால் பாதிக்கப்பட்டு நோயாளர்கள் பொது மருத்துவ மனைக்கு அனுமதிக்கப்படுவது அங்கு இந்த நோயின் தாக்கத்தினால் சிலர் இறப்பினை அடைந்துள்ளார்கள்.

கடந்த மூன்று மாதங்களுக்குள் நூறுவரையான நோயாளர்கள் வீடுதியில் தங்கவைத்து சிகிச்சையளிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார்கள்.இவற்றில் 11 பேர் உயிரிழந்துள்ளார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மருத்துவமனையில் இருந்து யாழ்ப்பாண மருத்துவமனைக்கு மேலதிக சிசிச்கைக்காக அனுப்பப்பட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இன்று(05) காலையில் ஒரு நோயாளி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.இவரும் மருத்துவமனையில் தங்கி மூன்று வாரங்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

ஏற்கனவே இவர் சுவாச நோயினாலும் சக்கரை நோயினாலும் பாதிக்கப்பட் 74 அகவையுடைய ஒரு வயோதிபரே உயிரிழந்துள்ளார்.இந்த வைரஸ் தொற்று தொடர்பில் ஓரளவிற்கு நிலமை கட்டுப்பாட்டுக்குள்தான் இருப்பதாக வைத்திய நிபுணர் எனக்கு தெரிவித்துள்ளார்.

இன்று இறந்த நோயாளிகூட சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.இந்த வைரஸ் தொற்றுடன் வருபவர்களை தனியான பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது.

மற்றவர்களுக்கு தொற்றுகின்ற அபாயத்தை தடுக்கும் முகமாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. நோயின் தாக்கம் அதிகரிக்கப்பட்டவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தனியாக மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்ற.

அத்துடன் மருத்துவமனையில் இந்த நோய் தொடர்பில் முற்பாதுகாக்கு நடவடிக்கைகள் மருத்துவமனையில் பணிபுரிகின்ற அனைவருக்கும் வழங்கப்பட்டு அதற்கான தடுப்பு முறைகள் பின்பற்றுகின்றார்கள்.

இந்த மருத்துவமனைகளில் இந்த வைரஸ் தொற்று தொடர்பில் இதுவரைக்கும் எமக்கு கிடைக்கப்பெற்ற மருத்துவ பரிசோதனை அறிக்கைகளின் படி இன்புளுவன்ஸா பி. என்கின்ற வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிரிழந்தவரின் தொற்றுக்கு இன்புளுவன்ஸா ஏ என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலமையின் கீழ் இந்த நோயின் திடீர் பரவல் என்று கருத்து கொள்ளமுடியாது குறிப்பிட்ட வைரசின் உடைய மிதமிஞ்சிய தாக்கத்தினால் ஏற்பட்ட ஒரு தொற்று என்றுதான் நாங்கள் இதனை கூறலாம்.

இது தவிர்க்கக்கூடியது மக்களிடையே நோய் சம்மந்தமான தெளிவான விளிப்புணர்வு இருக்கவேண்டும். அறிவு போதாமையினால் இது சம்மந்தமான பயத்தில் இருக்கின்றார்கள் இது ஒரு வைரஸ் தொற்று நோய் சுவாச தொகுதியினை தாக்குகின்றது.

காற்றின்ஊடாகவே இந்த கிருமி பரவுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. ஆகவே மக்கள் மிகவும் நெருக்கமாக கூடுகின்ற பகுதிகளை தவிர்த்துக்கொள்வது நல்லது.

காற்றோட்டம் உள்ள இடங்களாக எங்கள் வதிவிடங்களையும் மாற்றிக்கொள்ளவேண்டும் சுவாச அறிகுறிகள்,இருமல்,காச்சல் போன்றவை மூன்று நாட்களுக்கு மேலே இருக்குமாக இருந்தால் இவர்கள் கட்டயாமாக மருத்துவமனை சென்று சிகிச்சை ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.

இதில் ஏற்கனவே ஆஸ்த்துமா,சலரோகம் இருதயம் சம்மந்தமான வருத்தங்களை கொண்டிருப்பவர்கள் இவ்வாறான குணம் குறிகள் காணப்பட்டால் முதலிலேயே மருத்துவரை நாடுவது நல்லது பலவீனமான நிலையில் இருப்பவர்களுக்கு இந்த நோயின் தொற்று ஏற்படும் போது தீவிரம் அடையும் வாய்ப்புள்ளது.

இறந்தவர்களில் பெரும்பாலனவர்கள் ஏற்கனவே வேறு வருத்தங்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சுகாதார அமைச்சர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளுக்கு விஜயம்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/mullaitheevu-hospital-visit-05

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.