Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிர­தமர் ரணி­லுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை?

Featured Replies

பிர­தமர் ரணி­லுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை?

Vimal55-72444955eeb2bec8ad0c08fd29106956ec7af733.jpg

 

இறு­தித்­தீர்­மானம் ஞாயிற்றுக்கிழமை என்­கிறார் விமல்  

(எம்.சி.நஜி­முதீன்)

மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்­க­விற்கு எதி­ராக கூட்டு எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்றில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை ஒன்றை சமர்ப்­பிப்­ப­தற்கு எதிர்­பார்த்­துள்­ளது. எனவே, அது குறித்து எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை கூட்டு எதிர்க்­கட்­சியின் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்­தின்­போது இறுதித் தீர்­மானம் மேற்­கொள்­ளப்­படும் என்று தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.  

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பொரளை என்.எம். பெரேரா நிலை­யத்தில் நடை­பெற்­றது. அந்­நி­கழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், நூறு நாள் திட்­டத்தில் புதிய நாட்டை உரு­வாக்­கு­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­துக்­கொண்டு ஆட்­சிக்கு வந்த நல்­லாட்சி அர­சாங்கம் அக்­கா­லப்­ப­கு­தியில் அறு­ப­துக்கு மேற்­பட்ட மோச­டி­க­ளையே மேற்­கொண்­டுள்­ளது. மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்பில் நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுவின் அறிக்கை குறித்து, ஜனா­தி­பதி தனது அறிக்­கை­யினை தெரி­வித்­துள்ளார். ஆணைக்­கு­ழுவின் ஊடக பேச்­சா­ள­ருக்­கு­ரிய பணி­யினை மேற்­கொண்­ட­தா­கவே அவ­ரது அறிக்­கையை நோக்க வேண்­டி­யுள்­ளது. 

ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­யை­யி­லுள்ள சில விட­ய­யங்­களை மக்­க­ளுக்குத் தெரி­விப்­பது ஜனா­தி­ப­தியின் பணி­யல்ல. மாறாக ஆணைக்­கு­ழுவின் அறிக்கை குறித்து சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்­கை­களை அவர் மேற்­கொள்ள வேண்டும். பிர­தமர் ரணில் விக்­ர­சிங்க மத்­திய வங்­கியை தனது பொறுப்பின் கீழ் ஏன் கொண்டு வந்தார்? குறித்த மோச­டியை மேற்­கொள்­வ­தற்­கா­கவே தனது பொறுப்பின் கீழ் மத்­திய வங்­கியை கொண்­டு­வந்­துள்ளார். மேலும் தனது சிங்­கப்பூர் நண்பர் அர்­ஜுன மகேந்­தி­ரனை மத்­திய வங்­கியின் ஆளு­ந­ராக நிய­மித்­ததும் அதற்­கா­க­வே­யாகும்.

ஆகவே இது­போன்ற நிதி மோசடி நாட்டில் ஒரு­போதும் இடம்­பெற்­ற­தில்லை. அதனால் நாட்டின் பொரு­ளா­தாரம் சீர­ழிந்­துள்­ளது. சாதா­ரண மக்கள் முதல் அனைத்து தரப்­பி­னரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அதன் மூலம் மத்­திய வங்­கிக்கும் அப­கீர்த்தி ஏற்­பட்­டுள்­ளது. இலங்கை வங்­கி­களில் முத­லீடு செய்­தி­ருந்த தமது முத­லீ­டு­களை வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் தங்­களின் நாடு­க­ளுக்குத் திருப்பிக் கொண்­டுள்­ளனர். அதன் மூலம் இலங்கை ரூபாவின் பெறு­மதி குறை­வ­டைந்­துள்­ளது. அதனால் பொருட்­களின் விலை அதி­க­ரித்­தது.

ஆகவே இம்­மோ­ச­டிக்­கான பொறுப்­பி­லி­ருந்து ஜனா­தி­ப­தி­யினால் விடு­ப­டவும் முடி­யாது. ஏனெனில் அர்­ஜுன மகேந்­தி­ர­னுக்­கான நிய­மனம் வழங்­கி­யமை, டி.யூ. குண­கே­க­ரவின் அறிக்கை பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிப்­ப­தற்கு முன்னர் பாரா­ளு­மன்­றத்தை கலைத்­தமை உள்­ளிட்ட விட­யங்­களை ஜனா­தி­ப­தியே மேற்­கொண்டார். ஆகவே அம்­மோ­ச­டிக்­கான பொறுப்­பி­லி­ருந்து ஜனா­தி­பதி, பிர­தமர் உட்­பட அர­சாங்­கத்­தினால் விடு­ப­ட­மு­டி­யாது.

ஆகவே ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்க வேண்டும். மேலும் கூட்டு எதிர்க்­கட்சி பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக உட­ன­டி­யாக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை ஒன்றை சமர்ப்­பிப்­ப­தற்கு எதிர்­பார்த்­துள்­ளது. கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்­களின் கூட்டம் எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது. அதன்­போது குறித்த விடயம் தொடர்பில் இறு­தித்­த­தீர்­மானம் எடுக்­க­வுள்ளோம்.

எனவே நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­ப­டு­கின்ற வேளையில் ஜனா­தி­பதி உட்­பட அர­சாங்­கத்தில் அங்கம் வகிப்­ப­வர்­களின் நிலைப்­பாட்டைக் கண்­டு­கொள்ள முடியும். மேலும் குறித்த மோச­டி­யா­னது திட்­ட­மி­டப்­பட்டு மேற்­கொள்­ளப்­பட்ட ஒன்­றாகும். எனினும் அர­சாங்கம் சக­ல­தையும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவி கரு­ணா­நா­யக்க மீது சுமத்­தி­விட்டு பிர­தான சூத்­தி­ர­தா­ரிகள் தப்­பிக்­க­வைக்க முற்­ப­டலாம். எனினும் அதற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க முடி­யாது.

அம்­மோ­ச­டியல் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவே பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாவார். அத்­துடன் அம்­மோ­ச­டிக்கு இணை அனு­ச­ரணை வழங்­கிய குற்­றச்­சாட்­டுக்கு ஜனா­தி­பதி உட்­ப­டு­கிறார். மேலும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை வெளி­யி­டு­வது மாத்­திரம் அவரின் பணி­யல்ல. சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக அவர் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். ஜனா­தி­பதி தனது நிலைப்­பாட்டை நட­வ­டிக்­கையை ரீதியில் மேற்­கொள்ள வேண்டும்.

மேலும் குறித்த மோச­டியின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக பிர­தமர் உள்ளதால் அவருக்கு பிரதமர் பதவியை வகிப்பதற்கு தார்மீகம் இல்லை. எனவே அவர் இராஜினாமாச் செய்ய வேண்டும், அல்லது அவரை ஜனாதிபதி பதவி நீக்க வேண்டும். அத்துடன் குறித்த மோசடியுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் தமது பதவிகளை வகிகப்பதற்கு தார்மீகமற்றவர்கள்.

 அவர்கள் அனைவரையும் பதவி நீக்க வேண்டும். அதற்கான வழிவகைகளை ஜனாதிபதி மேற்கொண்டாலே அவர் தனது பொறுப்புகளை மேற்கொண்டதாகக் கருதலாம். மேலும் குறித்த அறிக்கையினை சட்டமா அதிபருக்கு அனுப்புவதில் பிரயோசனம் கிடைக்கப்போவதில்லை என்றார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-06#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.