Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போதை மருந்து, திருக்கைவால் சுறா கடற்படையினரால் மீட்பு

Featured Replies

போதை மருந்து, திருக்கைவால் சுறா கடற்படையினரால் மீட்பு

 

யாழ் வல்வெட்டித்துறை கடற்கரைப் பகுதியில், 90 கிலோ எடையுடைய கேரள கஞ்சா, நான்கு கிலோ ஹாஷிஷ் மற்றும் 4 கிலோ அபின் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

 

தமக்குக் கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தியபோதே மேற்படி போதை மருந்துகளை மீட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை துறைமுகப் பகுதியில், தகவல் ஒன்றின் அடிப்படையில் சோதனையிட்ட கடற்படையினர், சட்ட விரோதமான முறையில் திருக்கைவால் சுறா ஒன்று விற்கப்படவிருந்ததைக் கண்டுபிடித்தனர்.

சுமார் நாற்பத்தைந்து கிலோ எடையுள்ள இந்த சுறாவை விற்க முயன்ற நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/29062

  • தொடங்கியவர்

போதை மயமாகும் வல்வெட்டித் துறை கடல் பரப்பு…

IMG_1971.jpg?resize=800%2C532

வல்வெட்டித்துறை மயிலியதனை கடற்கரை பகுதியில் உள்ள பற்றைக்காட்டினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான போதை பொருட்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து மீட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை ஆதி கோவிலடியை சேர்ந்த மீனவர் ஒருவருக்கு பெருமளவான போதை பொருட்கள் கடல் வழியாக கொண்டு வரபட்டு அவை கடற்கரையை அண்மித்த பற்றைக்காட்டினுள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதாக கடற்படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை தேடுதல் நடத்தப்பட்டது.

அதன் போது மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் , 88 கிலோ கேரளா கஞ்சா , 4 கிலோ அபின் மற்றும் 4 கிலோ ஹசஸ் ஆகிய போதை பொருட்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட போதை பொருளின் பெறுமதி சுமார் 3 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டு உள்ளது.

போதை பொருளை கடத்தி வந்த நபர் தொடர்பிலும் அவற்றை கொள்வனவு செய்வதற்கு தயராக இருந்த நபர் தொடர்பிலும் தகவல்கள் கிடைக்க பெற்று உள்ளதாகவும் , அவை தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிசாருக்கு அறிவிக்கபட்டு உள்ளதாகவும், சாட்சியங்களின் அடிப்படையில் அவர்களை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு உள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

IMG_1973.jpg?resize=800%2C532

http://globaltamilnews.net/2018/59901/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.