Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். இந்துக் கல்லூரி அதிபர் நியமனம் முறையற்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

Featured Replies

யாழ். இந்துக் கல்லூரி அதிபர் நியமனம் முறையற்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

 


யாழ். இந்துக் கல்லூரி அதிபர் நியமனம் முறையற்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
 

யாழ். இந்துக் கல்லூரி அதிபர் நியமனம் முறையற்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

புதிய அதிபர் நியமனத்தை, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் குற்றச்சாட்டு தொடர்பில் அறிவதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சியை தொடர்பு கொள்வதற்கு பல தடவைகள் நாம் முயற்சித்த போதும் அவை பயனளிக்கவில்லை.

 

http://newsfirst.lk/tamil/2018/01/யாழ்-இந்துக்-கல்லூரி-அதி/

 

யாழ். இந்துக் கல்லூரியின் தற்போதைய அதிபர் நியமனம் முரணானது – இலங்கை ஆசிரியர் சங்கம்:-

இலங்கை ஆசிரியர் சங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டு குறித்து, பாடசாலையோ, பழையமாணவர் சங்கமோ, பாடசாலை அதிபர்களோ தமது பக்க கருத்தை அனுப்பி வைக்குமிடத்து முழுமையாக பிரசுரிக்கப்படும்…

ஆர்..

யாழ். இந்துக் கல்லூரியில் தற்போது புதிதாக வழங்கப்பட்டுள்ள அதிபர் நியமனம் முறைகேடானதாகும். இத்தகைய தகுதியற்ற நியமனங்களை வழங்க மேற்கொள்ளப்பட்ட அரசியல் தலையீட்டை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

தற்போது பதில் அதிபராக நியமிக்கப்பட்டவருக்கு – பல தடவைகள் இடமாற்றங்கள் வந்த போதிலும் – கல்வியமைச்சின் உத்தரவை முறையாகப் பின்பற்றாமல் – அரசியல் தலையீடுகள் மூலம் தொடர்ந்தும் யாழ். இந்துக் கல்லூரியிலேயே பணியாற்றியிருந்தார்.

யாழ்.இந்துக் கல்லூரியின் அதிபர் ஓய்வு பெற்றதன் பின்னர் – தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிபர், இடமாற்ற விதிமுறைகளுக்கு அமைய நியமிக்கப்படவில்லை. இவர் – தான் நீண்ட காலம் இப்பாடசாலையில் சேவையாற்றிய ஒருவர் எனக் காரணம் காட்டியுள்ள போதிலும் – 2016 சுற்றுநிருப இலக்கம் 18/2015 நிபந்தனைகளுக்கு அமைய 2016.01.05 முதல் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். ஆயினும் இவர் தனது கடமையை அங்கு பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை.

பின்னர் – 2017 வருடாந்த இடமாற்றச் சுற்றறிக்கைக்கு அமைய 2017.06.01 முதல் யாழ்.திருக்குடும்பக் கன்னியர் மடம் பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆயினும் – அங்கும் இவர் தனது கடமையைப் பொறுப்பேற்கவில்லை.

இவ்வாறு – கல்வியமைச்சால் வழங்கப்பட்ட இரண்டு இடமாற்றத்தையும் முறையாக பின்பற்றாமல் ஒரே பாடசாலையில் கற்பித்ததன் மூலமே சிரேஸ்ட உத்தியோகத்தர் என்று போலியான காரணம் காட்டி முறைகேடான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பாடசாலையில் அதிபர் ஓய்வுபெறும்போது – 1998/23 சுற்றறிக்கையின் அடிப்படையில் வெற்றிடங்கள் நிரப்பப்படவேண்டும். ஆனால் – இதற்கு மாறாக அரசியல்வாதிகளுக்கு சேவகம் செய்பவர்களுக்கு பாடசாலை அதிபர்களாக நியமனம் வழங்குவதை க் கல்வியமைச்சு உடன் நிறுத்த வேண்டும்.

இவ்வாறான அதிபர்கள் தமக்கு நியமனங்களைப் பெற்றுத்தந்த அரசியல்வாதிகளுக்கு விசுவாசமாக நடந்துகொண்டு முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  எனவே – யாழ்.இந்துக் கல்லூரியின் அதிபர் நியமனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசியல் தலையீடு நீக்கப்பட்டு, 1998/23 சுற்றறிக்கையின் அடிப்படையில் பொருத்தமானவர்களுக்கு நியமனம் வழங்கப்படவேண்டும் என்பதை இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்துகின்றது.

ஜோசப் ஸ்ராலின்
பொதுச்செயலாளர்.
இலங்கை ஆசிரியர் சங்கம்.

Press-report-.jpg?resize=560%2C800

 

http://globaltamilnews.net/2018/59935/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.