Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறு­பான்மை மக்கள் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு வாக்­க­ளிக்க வேண்டும்....இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை

Featured Replies

சிறு­பான்மை மக்கள் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு வாக்­க­ளிக்க வேண்டும்

1-f9044615e97f4f6854c1d52404259963e68fd231.jpg

 

இராஜாங்க அமைச்சர் விஜயகலா  மகேஸ்வரன் கோரிக்கை   
(எம்.எம்.மின்ஹாஜ்)

எனது கணவர் மகேஸ்­வரன் படு­கொலை செய்­யப்­பட்­ட­போது . இருந்த அர­சாங்கம் எது? அன்­றைய ஜனா­தி­பதி யார்? பாது­காப்பு அமைச்சர் யார்? பாது­காப்பு செய­லாளர் யார்? அதே­போன்று ஜோசப் பர­ரா­ஜ­சிங்கம், ரவிராஜ், சிறி­பத்தி சூரிய ஆரச்சி, ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, மகேஸ்­வரன் ஆகி­யோரை படு­கொலை செய்­தது யார்?. இவ்­வா­றான அட்­டூ­ழி­யங்­க­ளுக்கு பிரா­யச்­சித்­த­மாக சிறு­பான்மை மக்கள் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு வாக்­க­ளிக்க வேண்டும் என சிறுவர் மற்றும் மகளிர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்தார்.

கொழும்பு கெம்பல் பார்க் மைதா­னத்தில் நேற்று நடை­பெற்ற ஐக்­கிய தேசியக் கட்­சியின் விசேட மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி ­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

ஐக்­கிய தேசியக் கட்சி 1946 சிறு­பான்­மை­யி­ன­ருடன் இணைந்து ஆரம்­பிக்­கப்­பட்ட கட்­சி­யாகும். தற்­போது பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்கள் இருக்­கையில் கட்­சியின் பொதுச்­ செ­ய­லா­ள­ராக கபீர் ஹாஷிம் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இதனை நாம் வர­வேற்­கின்றோம். 2010 ஆம் ஜனா­தி­பதி தேர்­தலில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவை பொது வேட்­பா­ள­ராக நிய­மித்­தது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வாகும். யுத்­தத்தின் போது எமது தமிழ் மக்கள் அழிக்­கப்­பட்­டனர். எனினும் அத­னையும் பொருட்­ப­டுத்­தாமல் சரத் பொன்­சே­கா­வுக்கு வாக்­க­ளித்தோம். அதன்­ பின்னர் 2015 ஆம் ஆண்டில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பொது ­வேட்­பா­ள­ராக நிய­மித்த போதும் நாம் வாக்­க­ளித்தோம். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கூற்றை மதித்தே சிறு­பான்­மை­யின மக்கள் வாக்­க­ளித்­தனர்.

  இந்த ஆட்­சியில் பல ஏக்கர் காணி­களை நாம் விடு­வித்­துள்ளோம். அத்­துடன் அங்கு தமது உற­வு­களை இழந்து வாழ்­ப­வர்­களின் வாழ்க்­கையை விருத்தி செய்­துள்ளோம். வெள்ளை வேன், கொலை, கொள்ளை கலா­சா­ரத்தை ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்கம் முடி­வுக்கு கொண்டு வந்­துள்­ளது. யுத்­தத்தை முடி­வுக்கு கொண்டு வந்­த­தாக கூறும் முன்­னைய அர­சாங்கம் என்ன செய்­தது? முள்­ளி­வாய்­க்காலில் அப்­பாவி தமிழ் மக்­களை கொலை செய்­தது. ‍மொட்டு சின்­னத்தின் தலை­வர்கள் பல­வி­த­மான கருத்­துக்­களை கூறு­கின்­றனர். எனினும் இவர்­களின் செயற்­பாட்­டினால் சிறு­பான்­மை­யின மக்கள் பாதிக்­கப்­பட்­டனர்.

தற்­போது ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்­தி­யுள்ளோம். முன்­னைய காலங்­களில் போராட்­டங்கள் நடத்த முடி­யாத நிலைமை காணப்­பட்­டது. ஆனால் தற்­போது போராட்­டங்கள் பல நடத்­தப்­பட்­டாலும் அர­சாங்கம் மெளனம் காத்து வரு­கின்­றது.

 உள்­ளூ­ராட்சி மன்­றத்தில் 25 வீதம் பெண் பிர­தி­நி­தித்­துவம் கிடைத்­துள்­ளது. இதற்கு ஐக்­கிய தேசியக் கட்­சியே கார­ண­மாகும். நாம் இதற்­காக பாரா­ளு­மன்­றத்­திற்குள் போரா­டினோம். தற்­போது 10 இலட்சம் தொழில் வாய்ப்­பு­களை வழங்­கு­வ­தாக பிர­தமர் கூறி­யுள்ளார். இதன்­போது வடக்கு கிழக்கு இளை­ஞர்­க­ளுக்கு விகி­தா­சார அடிப்­ப­டையில் வேலை­வாய்ப்­பு­களை வழங்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். நாம் அதனை எதிர்­பார்த்­துள்ளோம். இந்த ஆட்­சியில் சரி­ச­ம­மாக வேலை­வாய்ப்­புகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. அத்­துடன் கிராம அபி­வி­ருத்­திக்கும் சரி­ச­ம­மாக நிதி ஒதுக்­கீடு செய்­யப்­ப­டு­கின்­றது.

எனவே, சிறு­பான்­மை­யின மக்கள் ஐக்­கிய தேசி யக் கட்­சியை ஆத­ரிக்க வேண்டும். முன்­னைய ஆட்­சியின் போது சிறு­பான்மை மக்­க­ளுக்கும் வடக்கு கிழக்கு மக்­க­ளுக்கும் எந்­த­வொரு சேவை­யையும் செய்­ய­வில்லை. காணாமல் போனோர் அலு­வ­லகம் அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இது போன்ற பல ஒதுக்­கீ­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. இந்த அர­சாங்­கத்­திற்கு பிரா­யச்­சித்தம் செய்ய வேண்டும். முன்­னைய ஆட்­சியின் போது எமது உடமை­களை துறையா­டினர். எனது கணவர் மகேஸ்­வரன் படு­கொலை செய்­யப்­பட்டார். அப்­போ­தி­ருந்த அர­சாங்கம் எது? அன்­றைய ஜனா­தி­பதி யார்? பாது­காப்பு அமைச்சர் யார்? பாது­காப்பு செய­லாளர் யார்?. மகேஸ்­வரன் அன்று பாரா­ளு­மன்­றத்தில் சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளுக்­காக குரல் கொடுத்தார். ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், சிறிபத்தி சூரிய ஆரச்சி, ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, மகேஸ்வரன் ஆகியோரை படுகொலை செய்தது யார்?. அதே போன்று ஊடகவியலாளர் பலர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு பிராயச்சித்தமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதி பதியாக்க வேண்டும் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-08#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.