Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு கிடைத்துள்ள இரண்டு அறிக்கைகளிலும் இரண்டு கட்­சி­களினதும் முக்­கியஸ்தர்கள் தொடர்பு

Featured Replies

எனக்கு கிடைத்துள்ள இரண்டு அறிக்கைகளிலும் இரண்டு கட்­சி­களினதும் முக்­கியஸ்தர்கள் தொடர்பு

 

ஜன­நா­யக போர்­வையில் பாரிய ஊழல் என்­கிறார் ஜனா­தி­பதி

(ஆர்.யசி)

ஊழல்கள் குறித்து என்­னிடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள இரண்டு ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கை­க­ளிலும் பிர­தான இரண்டு கட்­சி­களின் முக்­கிய உறுப்­பி­னர்கள் தொடர்­பு­பட்­டுள்­ளனர்.

எனது அறிக்கை எவ­ரையும் காப்­பாற்ற உரு­வாக்­கப்­பட்­ட­தல்ல என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். ஜன­நா­யகம் சுதந்­திரம் என்ற போர்­வையில் இன்று மிகப்­பெ­ரிய ஊழல் இடம்­பெற்று வரு­கின்­றது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

மெத­ரி­கி­ரிய பிர­தே­சத்தில் நேற்று நடை­பெற்ற மக்கள் சந்­திப்பில் கலந்­து­கொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்.  ஒவ்­வொரு அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்­திலும் மக்­களின் சொத்­துக்கள் பாரிய அளவில் சூறை­யா­டப்­பட்­டுள்­ளன. கடந்த காலத்­திலும் இது மிகவும் மோச­மா­ன­தாக அமைந்­தது. ஆகவே மக்­களின் சொத்­துக்­களை சூறை­யாடும் நிலை­மை­களில் இருந்து நாட்­டையும் மக்­க­ளையும் காப்­பாற்றும் நோக்­கத்­தி­லேயே கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மக்கள் என்னை ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்து மாற்­றத்­திற்­கான பொறுப்பை எனது கைகளில் ஒப்­ப­டைத்­தனர்.  

ஆகவே ஊழல் குற்­றங்கள் குறித்து ஆராய எனக்கு மிகப்­பெ­ரிய பொறுப்பு இருந்­தது. இதன் கார­ண­மா­கவே பாரிய நிதி மோச­டிகள் தொடர்பில் கண்­ட­றிய ஒரு ஆணைக்­கு­ழுவும், மத்­திய வங்கி ஊழல் குறித்து கண்­ட­றிய பிறி­தொரு ஆணைக்­கு­ழு­வையும் நிய­மித்து உண்­மை­களை கண்­ட­றியும் நகர்­வு­களை மேற்­கொண்டேன். இந்த இரண்டு ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கையும் எனக்கு ஒரே நேரத்தில் கிடைத்­தன. நான் திட்­ட­மிட்டு இவ்­வாறு இரண்டு அறிக்­கை­யையும் ஒரே நேரத்தில் எடுத்­த­தாக சிலர் கூறு­கின்­றனர். வேறு சிலரும் அவ்­வாறு நினைக்­கலாம். ஆனால் அவ்­வாறு எந்த நகர்­வு­க­ளையும் நான் செய்­ய­வில்லை.

மேலும் பாரா­ளு­மன்­றத்தில் இரண்டு தரப்­பி­னரும் அடித்­துக்­கொள்ள காரணம் என்ன? இந்த இரண்டு ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கைகள் அதில் உள்­ள­டங்­கிய விட­யங்கள் குறித்தே இவர்கள் இரு தரப்­பி­னரும் அடித்­துக்­கொண்­டனர். இந்த ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கைகள் பிர­தான இரண்டு அர­சியல் கட்­சி­க­ளி­னதும் முக்­கிய நபர்­களின் தொடர்­புகள் உள்­ளதை வெளி­ப­டுத்­து­கின்­றன. அர­சாங்­கத்தில் இருந்­து­கொண்டு எதிக்­கட்­சியின் சிலரை பார்த்து திருடர் என்­கின்­றனர், எதிர்க்­கட்­சியும் அர­சாங்­கத்தின் ஒரு சிலரை கள்­ளர்கள் என கூறிக்­கொண்டு உள்­ளனர். இப்­போது மக்கள் குழப்­பத்தில் உள்­ளனர். தேர்தல் மூலம் நாம் தெரிவு செய்ய நபர்கள் இவ்­வாறு அடித்­துக்­கொள்­கின்­றனர். இதில் கள்ளர் யார் நல்­லவர் யார் என்று தெரி­யாது தடு­மா­று­வது நாட்டு மக்­க­ளே­யாகும்.

இந்த நாட்­டினை சரி­யான பாதைக்கு கொண்டு செல்­லவோ, அல்­லது தூய்­மை­யான நாடாக மாற்­றவோ முதலில் கள்­ளர்­களை பிடித்து கள­வு­களை நிறுத்த வேண்டும். உலகின் வளர்ச்­சி­கண்ட நாடு­களை பார்த்து எம்மால் அவ்­வாறு இருக்க முடி­ய­வில்லை என ஏங்­கு­கின்றோம். எமது நாட்டை அவ்­வா­றான தூய்­மை­யான அழ­கான நாடாக மாற்ற முடி­யா­த­மைக்கு எமது அர­சியல் வாதி­களின் ஊழல் கொள்­ளை­களே கார­ண­மாகும். மன்னர் காலத்தில் இருந்த இறுக்­க­மான சட்­டத்தின் மூல­மாக கள­வுகள் இடம்­பெ­ற­வில்லை. களவு செய்தால் நேர­டி­யாக கொலை நடக்கும். எனினும் இன்று உள்ள ஜன­நா­யகம் சுதந்­தி­ரத்தை அடிப்­ப­டை­யாக கொண்டு தமது புத்­தி­சா­லித்­த­னத்தின் மூல­மாக சட்­டத்தை ஏமாற்றி பாரிய ஊழல் மோச­டி­களை இவர்கள் செய்து வரு­கின்­றனர். ஒரு சிறிய குழுவினரே இதனை மோசமாக செய்து வருகின்றனர். நாட்டின் மக்களின் சொத்துக்களை யாரும் கொள்ளையடிப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எனது ஆட்சியில் ஊழல் வாதிகள் செயற்பட முடியாது. அவ்வாறு செயற்படும் ஊழல் வாதிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சட்டத்தின் மூலமாக தண்டனை வழங்கப்படும் என்றார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-13

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.