Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்­தி­ரி­கா­வின் கருத்து கண்­மூ­டித்­த­ன­மா­னதே

Featured Replies

சந்­தி­ரி­கா­வின் கருத்து கண்­மூ­டித்­த­ன­மா­னதே

 

கூட்டு அர­சின் தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும் களவு செய்­ய­மாட்­டார்­கள் என்று தெரி­வித்து அவர்­கள் மட்­டில் தனது பகி­ரங்க ஆத­ரவை முன் வைத்­துள்­ளார் முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா குமா­ர­துங்க.

வியாங்கொட பிர­தே­சத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற மக்­கள் சந்­திப்­பி­லேயே இவ்­வா­றாக தனது நம்­பிக்கையை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார் சந்­தி­ரிகா.

பிணை­முறி விவ­கா­ரத்தை மைய­மாக வைத்தே அவர் தனது கருத்­துக்­க­ளைப் பதி­வு­செய்­தி­ருந்­தார். பிணை­முறி விவ­கா­ரத்­தில் தவறு செய்­த­வர்­க­ளுக்கு மைத்­திரி – ரணில் கூட்டு அரசு நிச்­ச­யம் தண்­ட­னை­யைக் கொடுக்­கும் என்­ற­வா­றாக சந்­தி­ரிகா தனது நம்­பிக்­கையை வெளிப்­ப­டுத்­தி­னார்.

மத்­திய வங்­கி­யில் இடம்­பெற்ற பிணை­முறி மோசடி விவ­கா­ரத்­தில் அதன் முன்­னாள் ஆளு­நர் கூட்டு அர­சால் வீட்­டுக்கு அனுப்­பப்­பட்­டமை, நிதி அமைச்­சர் பத­வி­யில் இருந்து நீக்­கப் பட்­டமை ஆகி­ய­வற்றை தனது நம்­பிக்­கைக்­கான சான்­றா­தா­ரங்­க­ளாக வைத்­துள்­ளார் சந்­தி­ரிகா.

 

ஆனால் மைத்­திரி – ரணில் இரு­வ­ரும் களவு செய்­ய­மாட்­டார்­கள் என்று அவர் வெளிப்­ப­டுத்­து­வது தமிழ் மக்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் பெரும் அபத்­தமே.

தமிழ் மக்­க­ளின் பெரு­வா­ரி­யான வாக்­கு­க­ளைப் பெற்று ஆட்­சிக்கு வந்த இந்­தக் கூட்டு அரசு, முடி­வ­டைந்­துள்ள தனது 50 வீத­மான ஆயுட்­கா­லத்­தில் தமி­ழர்­க­ளுக்­காக எதை முழு­மை­யா­கச் செய்­துள்­ளது, சாதித்­துள்­ளது என்ற கேள்வி கேட்­கப்­ப­டும் பட்­சத்­தில் முழு­மை­யான பதில் நிச்­ச­யம் கிடைக்க வாய்ப்­பில்லை.

எனின் இந்த அர­சின் இரு உயர் அதி­கா­ரத் தரப்­புக்­க­ளான மைத்­திரி, ரணில் களவு செய்­யா­த­வர்­களா?
கூட்டு அர­சால் வழங்­கப்­பட்ட ஏகப்­பட்ட வாக்­கு­று­தி­கள் தொடர்பிலும், பரப்­பு­ரை­கள் தொடர்பிலும் இன்னமும் காத்­தி­ர­மான நகர்­வு­கள் வெளிப்­ப­ட­வில்லை.

படை­யி­னர் வச­முள்ள நிலத்தை விடு­விக்க வேண்­டும், இரா­ணு­வப் பிர­சன்­னத்­தைக் குறைக்க வேண்­டும், காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் விடயத்­தில் தெளி­வு­ப­டுத்­தல் வேண்­டும், அர­சி­யல் கைதி­க­ளின் விடு­த­லைக்கு வழி­ச­மைக்க வேண்­டும் என்று எண்­ணற்ற பிரச்­சி­னை­க­ளு­ட­னும், போராட்­டங்­க­ளு­ட­னும்­தான் தமி­ழர் தாய­கம் தமி­ழர் திரு­நா­ளாம் தைத் திரு­நாளைக் கண்­டுள்­ளது, தொடர்ந்­தும் பய­ணிக்­கத் தயா­ரா­க­வுள்­ளது, பய­ணிக்­கும்.

மேற்­கு­றிப்­பிட்ட அத்­தனை விட­யங்­க­ளி­லும் கூட்டு அரசு எமக்­கு­ரிய தீர்­வைத் தரும் என்ற நம்­பிக்­கை­யி­லேயே தமிழ்க்­கூட்­ட­மைப்­பும் தனது ஆத­ரவை இந்த ஆட்­சிக்கு வழங்­கி­யது, வழங்கி வரு­கி­றது.

ஆனால் கூட்டு அரசோ, வெறும் வார்த்தை ஜாலங்­க­ளால் ஒவ்­வொன்­றை­யும் கடந்து சென்­று­கொண்­டி­ருக்­கி­றது என்­பதே உண்மை.

தனது உரை­யின்­போது, ‘முன்­னாள் அர­ச­த­லை­வர் மகிந்த பில்­லி­யன் கணக்­கில் கொள்­ளை­யில் ஈடு­பட்­டார்.

அது தொடர்­பில் தற்­போ­தும் விசா­ர­ணை­கள் நடை­பெற்று வரு­கின்­றன’ என்­றும் சந்­தி­ரிகா குறிப்­பிட்­டி­ ருந்­தார். மகிந்­த­வு­டன் ஒப்­பி­டு­கை­யில் மைத்­திரி சிறந்­த­வ­ராக சந்­தி­ரி­கா­வுக்­குத் தோன்­ற­லாம்.

ஆனால் தமி­ழர்­க­ளைப் பொறுத்தவரை­யில், அவர்­க­ளின் பிரச்­சினை பிணை­முறி தொடர்­பா­னது மட்­டு­மானதல்ல. எனவே தமி­ழர்­க­ளின் கோரிக்­கை­கள் மட்­டில் மகிந்­த­வின் காலத்து ஆட்­சிக்­கும், கூட்டு ஆட்­சிக்­கும் இடை­யில் பெரி­ய­ள­வில் வேறு­பாடு காணப்­ப­ட­வில்லை.

அவ்­வா­றான வேறு­பாட்டை என்று தமி­ழர் தாய­கம் காண்­கி­றதோ அன்­று­தான் சந்­தி­ரி­கா­வின் கருத்தை தமிழ் மக்­கள் ஏற்­றுக்­கொள்­வார்­கள்.

தமது நிலம் கிடைக்­கா­த­வரை, தமது உற­வு­கள் விடு­விக்­கப்­ப­டா­த­வரை, தம்­ம­வர்­க­ளுக்கு என்ன ஆயிற்று என்ற நிலைப்­பாட்­டில் தெளி­வில்­லா­த­வரை மைத்­திரி, ரணில் இரு­வ­ரும் களவு செய்­ப­வர்­க­ளா­கவே தமிழ் மக்­க­ளுக்­குத் தோன்­று­வார்­கள்.

http://newuthayan.com/story/62933.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.