Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பும் ஜே.வி.பி.யும் பொறுப்புக்கூறவேண்டும்...கடுமையாக சாடுகின்றார் மஹிந்த ராஜபக் ஷ

Featured Replies

கூட்டமைப்பும் ஜே.வி.பி.யும் பொறுப்புக்கூறவேண்டும்

6-84cfcf743fb0ce9eb8246665dda00469cdc463b2.jpg

 

கடுமையாக சாடுகின்றார் மஹிந்த ராஜபக் ஷ
(இராஜதுரை ஹஷான்)

நல்லாட்சி அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் துணை போகும்  மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தாம் எதிர்க் கட்சி போன்று நடந்து கொள்வதாக  மக்கள் மத்தியில் போலி நாடகத் தினை அரங்கேற்றி வருவதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணருமான மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். 

நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்று வருட கால அர சியல் செயற்பாடு தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. 

கடந்த மூன்று வருடகாலமாக நாட்டின் மக்களின் அடிப்படை உரிமைகள் பல பறிபோயுள்ளன. குறித்த பிரதான கட்சிகளும் ஜனநாயக மீறலுக்கு உடந்தையாக செயற்பட்டுள்ளமைக்காக மக்களுக்கு பொறுப்பு கூறும் கடப்பாடு காணப்படுகின்றது.

தேசிய அரசாங்கத்தின் ஆட்சி ஆரம்பமான காலத்தில் இருந்து எனது தரப்பினரின் உரிமைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. எனக்கு சார்பாக செயற்படுபவர்கள் இந்நாட்டு பிரஜைகள் மட்டுமல்ல மக்களின் பிரதிநிதியாகவே காணப்படுகின்றனர்.

2015ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரிய அநீதி இழைக்கப்பட்டது. குறைவான உறுப்பினர்களை கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சி பதவி வழங்கப்பட்டதுடன் ஆறு ஆசனங்களைப் பெற்ற மக்கள் விடுதலை முன்னியிற்கு எதிர்தரப்பில் முக்கிய வகிபாகம் வழங்கப்பட்டது. இது .எவ்விதத்திலான அரசியல் யுக்தி என கருத முடியும். பாராளுமன்ற வரலாற்றின் முதல் ஜனநாயக உரிமை மீறலின் முதற்கட்டம் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது.

மக்கள் மத்தியில் நல்லாட்சி அரசாங்கம் இவ்விரு கட்சிகளிடமும் எதிர்ப்பினை வெளிகாட்டுவது போல் இன்றுவரை போலியான நாடகத்தினை அரங்கேற்றி வருகின்றது. எதிர்க்கட்சி என்பது அரசின் நன்மை தீமைகளை விமர்சிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் உள்ள எதிர்கட்சி பெயரளவிலே எதிர்கட்சியாக செயற்பட்டு அரசுக்கு ஆதரவாகவும் மக்களுக்க எதிராகவும் செயற்படுகின்றது.

பாரம்பரியமாக பின்பற்றி வந்த உள்ளுராட்சி சபை தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதற்கு பாராளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வாதப்பிரதி வாதங்கள் இடம் பெற்றன. அதன் பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியியும் பெயரளவிலே தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தின . மூன்றின் இரண்டு பெரும்பான்மை ஆதரவினை பெற மக்கள் விடுதலை முன்னணி உதவியது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. குறித்த விடயத்தினை சாதித்து கொள்ளும் நோக்கில் செயற்படுவதுடன். மக்கள் விடுதலை முன்னணியும் தமது ஆதரவினை வழங்கியே வருகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது பதவி காலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் வியாக்கியானம் கோரிய பொழுது இரு பிரதான எதிர்கட்சிகளும் எவ்விதமான பாரிய எதிர்ப்பினையும் தெரிவிக்கவில்லை. அதற்கு காரணம் தங்களின் இலட்சியத்தினை மேலதிகமான ஒருவருட காலத்தில் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற நப்பாசையாகும்.

மக்கள் தாம் கடந்து வந்த பாதையினை மறந்து விட கூடாது.1971ஆம் ஆண்டில் இருந்து ஆட்சி அதிகாரத்தினை பெறும் நோக்கத்திலே மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்டு வருகின்றது .1987மற்றும் 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் இடம் பெற்ற கலவரத்தில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர். அரச சொத்துக்கள் பல அழிக்கப்பட்டன. இதன் தாக்கம் இன்றுவரை மக்களின் மனங்களில் மாறாத வடுவாக காணப்படுகின்றது. குறித்த கலவரத்தின் பிரதான கருவி யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான நோக்கம் நாட்டினை பிரிக்கும் அரசியலமைப்பினை உருவாக்கி தமது இலட்சியத்தினை நிறைவேற்றிக் கொள்வதேயாகும் .நாட்டில் 30வருடகாலமாக இடம் பெற்ற யுத்தத்தில் பல உயிர் தியாகத்தின் மூலமே வெற்றிப் பெறமுடிந்தது .நாட்டினை பிரிக்கும் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் பலரது தியாகங்கள் பயனற்று போய்விடும்.

2014 ஆம் ஆண்டு எனது ஆட்சியின் இறுதி கட்டத்தில் உமா ஓயா நீர்பாசனத்திட்டத்தின் நிர்மாணப்பணிகளில் தாமதம் ஏற்பட்டது. ஆட்சி மாற்றத்தின் பிறகு உமா ஓயா திட்டத்தில் எவ்வித முன்னேற்றகரமான நிர்மாணப்பணிகளும் முன்னெடுக்கப்படாமையின் காரணமாக அப்பிரதேச மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் வாழ்விடம் உட்பட விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பிரதான எதிர்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றில் இதுவரை பேசவில்லை.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் மக்களின் ஜனநாயக உரிமை தொடர்பில் குரல் கொடுத்ததன் காரணமாக கூட்டு எதிர்கட்சியின் உரிமைகள் பல நல்லாட்சி அரசாங்கத்தில் முடக்கப்பட்டுள்ளன. சுய நலன் கருதி செயற்படுபவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கடந்து மூன்று வருட காலமாக பறிபோயுள்ள மக்களின் அடிப்படை உரிமை தொடர்பில் எதிர்காலத்தில் நல்லாட்சி அரசாங்கமும். பிரதான இரு எதிர்கட்சிகளும் நிச்சயம் பொறுப்பு கூற வேண்டியது அவசியம் எனறுள்ளது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-22#page-1

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.