Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் விதிமுறைகளை மீறி நியமனம். – உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தொண்டராசிரியர்கள் முடிவு

Featured Replies

தேர்தல் விதிமுறைகளை மீறி நியமனம். – உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தொண்டராசிரியர்கள் முடிவு:-

Thondar3.jpg?resize=653%2C490

அரசாங்கம் தேர்தல் விதிமுறைகளை மீறி தெரிவு செய்யப்பட்ட சில தொண்டராசிரியர்களுக்கு நியமனங்களை வழங்கவுள்ளதாக பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வடமாகாண தொண்டராசிரியர்கள் நிரந்தர நியமனம் கோரி வடமாகாண ஆளுனர் அலுவலகம் முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்தினார்கள். அதன் போது கருத்து தெரிவிக்கையில் ,

இன்றைய தினம் நாங்கள் போராட்டம் நடத்துகின்றோம். ஆளுநர் கொழுப்பு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாம் பல வருடங்களாக நியமனம் கோரி வருகின்றோம். எமக்கான நியமனங்கள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி அலரி மாளிகையில் 182 தொண்டராசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படுகின்றது.

தேர்தல் காலத்தில் நியமனத்திற்கான வாக்குறுதிகளை வழங்கி விட்டு தேர்தல் முடிந்த பின்னர் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. தேர்தல் விதிமுறைகள் மீறல் ஆகும். அதேவேளை அன்றைய தினம் நியமனம் வழங்கப்படவுள்ளவர்களில் பலர் அரசியல் செல்வாக்கு காரணமாக நியமனம் பெறவுள்ளவர்கள்.அத்துடன் சிவில் பாதுகாப்பு திணைகளத்தின் கீழ் ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்பட வுள்ளது. இவ்வாறன நிலையில் நாம் புறக்கணிக்கப்பட்டால் , எமக்கான நிரந்தர நியமனம் கிடைக்க பெறும் வரையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். என தெரிவித்தனர்.

Thondar2.jpg?resize=653%2C490Thondar1.jpg?resize=653%2C490Thondar.jpg?resize=653%2C490

http://globaltamilnews.net/2018/65747/

  • தொடங்கியவர்
தேர்தலை புறக்கணிக்கவுள்ள வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள்
 
 

வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தினர் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன் இன்று (07) காலை போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

எமக்கான நியமனம் வழங்கப்படும் என பல தடவைகள் உறுதியளிக்கப்படும், இதுவரை நியமனங்கள் வழங்கப்படவில்லை. நாமும் பல தடவைகள் போராட்டத்தில் ஈடுபட்டும் உறுதியளிக்கப்பட்டவாறு நியமனங்கள் வழங்கப்படவில்லை. மத்திய, மாகாண அரசாங்களுக்கு பல மகஜர்களை கையளித்து விட்டோம். எனினும் எமது நிலைமை தொடர்பாக எவரும் கவனமெடுக்கவில்லை. இதனால் நாமும் எமது குடும்பத்தினரும் வறுமையில் வாடுகின்றோம். குடும்பத்தினருடன் உயிரை மாய்த்து கொள்வதை தவிர வேறு வழி எமக்கு தெரியவில்லை.

இதனால் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலை நாமும் எமது குடும்பத்தினரும் புறக்கணிக்க எண்ணியுள்ளோம்.

மேலும், எதிர்வரும் 15ஆம் திகதி 182 தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தேர்தல் விதிமுறை மீறலாகும். அத்துடன் 182 பேருக்கும் முறைகேடான வகையிலேயே, தேர்தல் கால வாக்குறுதிகளுக்கமைய நியமனம் வழங்கப்படவுள்ளது.

182 பேரில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் பணியாற்றியோரும் உள்ளனர். 624 தொண்டர் ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டு 182 பேருக்கு மட்டுமே நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/தேர்தலை-புறக்கணிக்கவுள்ள-வடமாகாண-தொண்டர்-ஆசிரியர்கள்/71-211288

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.