Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பிலும் மலையகத்திலும் கூட்டணியின் வெற்றி நிச்சயம்...அமைச்சர் மனோ கணேசன் கூறுகிறார்.

Featured Replies

கொழும்பிலும் மலையகத்திலும் கூட்டணியின் வெற்றி நிச்சயம்

p27-b93605fdd85c683b4cb3adf8c8474852ffc77371.jpg

 

அமைச்சர் மனோ கணேசன் கூறுகிறார்.

 

கொழும்பிலும், மலையகத்திலும் முற்போக்கு கூட்டணியின் வெற்றி நிச்சயம் என்று அக்கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான , மனோ கணேசன்  தெரிவித்தார். கொழும்பு கொச்சிக் கடையில் நடைபெற்ற முற்போக்கு கூட்டணியின் இறுதி பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய  போதே அவர் இவ்வாறு  குறிப்பிட்டார்.

தனது உரையில்  அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,  
நாம் இந்த அரசாங்கத்தில் பலமான ஒரு பங்காளி கட்சி என்பது உண்மை. அந்த பலம், இந்த தேர்தலுடன் இன்னமும் அதிகரிக்க வேண்டும். அந்த அதிகரிப்பை நோக்கியே நான் காய் நகர்த்துகிறேன். இது நம் அரசாங்கம், மைத்திரி நம் ஜனாதிபதி, ரணில் நம் பிரதமர் என்ற புகழ் பாடும் பாட்டை மாத்திரம்  நாம் பாடிக்கொண்டு இருந்தால், இவர்கள் வந்து தாளமும் போட்டு, நடனமும் ஆடிவிட்டு போய் விடுவார்கள்.
 எமக்கு இறுதியில் ஒன்றும் கிடைக்காது. நம்மை வெறும் வாக்கு வங்கியாக பயன்படுத்திவிட்டு புறக்கணித்துவிடுவார்கள். வெறும் கருவேப்பிலையாக பயன்படுத்துவிட்டு தூக்கி எறிந்துவிடுவார்கள். இந்த பாடத்தை வரலாறு எனக்கு கற்று கொடுத்துள்ளது. ஆகவேதான் நான் எப்போதும் இந்த பெரும்பான்மை கட்சிகள், பெரும்பான்மை அரசியல்வாதிகள் தொடர்பில் உஷாராக இருக்கின்றேன்
உண்மையில் எமது கூட்டணிக்கு, பாராளுமன்றத்தில் ஆறு எம்.பி. க்கள் உள்ளனர். அதில் இருவர் அமைச்சரவை அமைச்சர்கள். ஒருவர் இராஜாங்க அமைச்சர். மேல் மாகாணசபையிலும், மத்திய மாகாணசபையிலும் மொத்தமாக பத்து மாகாணசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த தேர்தலில் நாம் கொழும்பு, நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, பதுளை ஆகிய எட்டு மாவட்டங்களில் போட்டியிடுகிறோம்.

இந்த தேர்தலில் இந்த எல்லா மாவட்டங்களிலும், நூற்றுக்கு மேற்பட்ட பிரதேச சபை,  நகரசபை, மாநகரசபை உறுப்பினர்களை நாம் பெறுவோம்.  ஆகவே  நாம் ஒரு சுயேச்சை குழு அல்ல. நாம் ஒரு சிறு குழுவும் அல்ல. நான் ஒருசில தனிநபர்களை கொண்ட சிறு கட்சி அல்ல. நாம் ஒரு தொழிற்சங்கம் அல்ல. நாம் இந்த அரசாங்கத்தில் பலம்கொண்ட ஒரு பங்காளி கட்சி.  அந்த பலம், இந்த தேர்தலுடன் இன்னமும் அதிகரிக்க வேண்டும். அந்த அதிகரிப்பை நோக்கியே நாம் காய் நகர்த்துகிறோம்.  
இன்று எமக்கு எதிராக போட்டியிடும் ஒருசிலருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  மீது பெரும் காதல், பற்று, பாசம் ஏற்பட்டு விட்டது. தாம்  மைத்திரிபால சிறிசேனவின் கூட்டணியில் இருக்கிறோம் என மார் தட்டுகிறார்கள். , மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி ஆக்கியது, நாம். நாடு முழுக்க ஓடி திரிந்து, அவருக்கு வாக்கு தேடியது நாம். மகிந்தவை வீட்டுக்கு அனுப்பக்கூடிய அரசியல் சூழலை பாடுபட்டு போராடி உருவாக்கியது, நாம்.

இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் ஒருசிலர், கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவுக்கு வாக்கு கேட்டவர்கள்.  ஓடி திரிந்து, மஹிந்தவுக்கு வாக்கு தேடியவர்கள். இன்று மஹிந்த எங்கள் முயற்சியால் தோற்றுப்போய் விட்டதால், இவர்கள் ஓடி வந்து, நாங்கள் உருவாக்கிய ஜனாதிபதி மைத்திரியுடன் கூடி நிற்கிறார்கள். ஒருவேளை மைத்திரி தோற்றுப்போய், மஹிந்த வெற்றிபெற்றிருந்தால்   இவர்கள் இந்நேரம் மஹிந்தவுடன் கூடி நிற்பார்கள். நாம் கொலை செய்யப்பட்டு தூக்கி எறியப்பட்டு இருப்போம். இதுதான் உண்மை.

கொழும்பில் ஒருசில இடங்களில்  ஐ.தே.க.  என்ற கட்சி இன்று ஒரு சுயேச்சை குழு என்ற நிலைக்கு கீழிறங்கி விட்டது. அந்த அளவுக்கு கொழும்பில் ஐ.தே.க.  தன் செல்வாக்கை இழந்து விட்டது. ஐ.தே.க.வுக்கு வாக்குகளை வழமையாக வழங்கும் பெருந்தொகையான  சிங்கள, முஸ்லிம் மக்கள்கூட இந்த முறை தமது வாக்குகளை எமது ஏணி சின்னத்துக்கு அளிக்க முடிவு செய்து விட்டார்கள். இது கண்கூடாக தெரிகிறது. தமிழ் மக்களின் வாக்கு கொழும்பில் எப்போதும் எம்மிடம்தான் இருக்கிறது. இந்த முறை அது இன்னமும் அதிகரித்து விட்டது.
இலங்கையின் மிகப்பெரிய மாநகரம் கொழும்பு. கொழும்பு மாநகரில்தான் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்கள், அமைச்சுகள் மற்றும் சர்வதேச தூதரகங்கள் இருக்கின்றன. இங்கேதான் இந்நாட்டின் தேசிய அரசியல் மற்றும் வர்த்தக முடிவுகள் எடுக்கப்படுகின்றன. ஆகவே கொழும்பில் நாம் பலமான சமூகமாக  வாழ வேண்டும். இங்கு எம் அரசியல் பலம் காலத்தின் கட்டாயம். அத்துடன் கொழும்பில் எழும் எம் பலமிக்க குரல், கொழும்பு வாழ் தமிழருக்காகவும் மட்டுமல்ல, நாடெங்கும் வாழும் தமிழருக்காகவும், தமிழ் பேசும் அனைத்து மக்களுக்காகவும் ஒலிக்கும்.

எங்கள் கட்சி சின்னமான ஏணிக்கு கொழும்பில் வழங்கப்படும் ஒவ்வொரு வாக்கும் இந்த நிலைப்பாட்டை சாத்தியமாக்கும். இந்த உண்மைகளை நமது மக்கள் உணர்ந்துக்கொண்டுள்ளார்கள். கொழும்பில் எமது அரசியல் பலத்தை உயர்த்திக்கொள்ள இதுதான் வேளை என்பதை மக்கள் உணந்துள்ளார்கள்.

இந்நிலையில் கொழும்பு தேர்தல் களத்தில் பெரும் கட்சிகளாகிய நாம்  முட்டி மோதிக்கொண்டு இருக்கும் போது, ஒருசில  குழுக்கள், ஒருசில சந்தா சங்கங்கள் இங்கே உள்ளே வந்து சிரிப்பு மூட்டுகிறார்கள்.  இவர்கள் வந்து சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்கள். விறுவிறுப்பான தேர்தல் களத்தில் இவர்களின் பணி எமக்கு சிரிப்பு மூட்டுவதாக அமைந்துள்ளது. அதுவரைக்கும் அவர்களுக்கு நன்றி என்றார். .

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-08#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.