Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதயங்க விடுதலை ! பேஸ்புக்கில் பதிவு

Featured Replies

உதயங்க விடுதலை ! பேஸ்புக்கில் பதிவு 

 

 

(எம்.எப்.எம்.பஸீர்)

மிக் விமான கொள்வனவு தொடர்பில் சந்தேக நபராக கருதி தேடப்பட்டு வரும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க, தான் விடுதலை செய்யப்பட்டதாக பேஸ்புக்கில் பதிவினை இட்டுள்ளார். 

Udayanga-Weeratunga.jpg

எனினும் இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குனசேகரவை தொடர்புகொன்டு கேட்ட போது, அது தொடர்பில் உத்தியோகபூர்வமாக எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்பதால் உறுதியாக கூற முடியாது என தெரிவித்தார். 

அத்துடன் 7 பேர் கொண்ட சிறப்புக் குழு அபுதாபி சென்றுள்ள நிலையில் அது தொடர்பில் தகவல் கிடைக்கும் வரை எதுவும் கூற முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் உதயங்க வீரதுங்க என அவரது புகைப்படத்துடன் கூடிய முகப்புத்தக கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த நான்காம் திகதி அமெரிக்கா நோக்கி செல்ல முற்பட்ட போது நான்  ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து அந் நாட்டின் இன்டர்போல் பொலிஸாரினால் தடுக்கப்பட்டேன். இதன்போது அவர்கள் என்னை தடுத்து விசாரணை செய்ததில் எனக்கு எதிராக எவ்வித சர்வதேச சிவப்பு அறிவித்தலும் இல்லை என்பதும் சர்வதேச குற்றச்சாட்டுக்கள் இல்லை என்பதும் உறுதியானது. அதன் பின்னர் அவர்கள் விடுதலை செய்தனர். எனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை.  என்னை தற்போதைய அரசாங்கம் அரசியல் ரீதியாக பழி வாங்குவதால், தற்போதைக்கு இலங்கை வரும் எண்ணம் எனக்கில்லை.

 

பொலிஸாரின் இந்த செயற்பாட்டுக்கு எதிராக நான் சர்வதேச நீதிமன்றில் நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்வேன். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மையப்படுத்தியே என்னை கைதுசெய்ய முயல்கின்றனர் எனக் கருத்துப்பட்ட பதிவினை அவர் இட்டுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த பதிவின் நம்பகத்தன்மை தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் எவரும் உறுதி செய்யவில்லை.

http://www.virakesari.lk/article/30415

  • தொடங்கியவர்

உத­யங்க விடு­தலை; முகநூலில் பதிவு

s-3969bb4d655c9b0d574cff8b0aefdc59837f1b2e.jpg

 

உத்­தி­யோ­க­பூர்வ தகவல் எதுவும் இல்லை என்­கிறார் பொலிஸ் பேச்­சாளர்  

(எம்.எப்.எம்.பஸீர்)

மிக் விமான கொள்­வ­னவு தொடர்பில் சந்­தேக நப­ராக கருதி தேடப்­பட்டு வரும் ரஷ்­யா­வுக்­கான முன் னாள் இலங்கை தூதுவர் உத­யங்க, தான் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக தனது முகப்­புத்­த­கத்தில் பதி­வினை இட்­டுள்ளார். எனினும் இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­க­ரவை தொடர்­பு­கொண்டு கேட்ட போது,  

அது தொடர்பில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக எந்த தக­வலும் இது­வரை கிடைக்­க­வில்லை என்­பதால் உறு­தி­யாக கூற முடி­யாது என தெரி­வித்தார்.

அத்­துடன் 7 பேர் கொண்ட சிறப்புக் குழு  அபு­தாபி சென்­றுள்ள நிலையில் அது தொடர்பில் தகவல் கிடைக்கும் வரை எதுவும் கூற முடி­யாது என அவர் சுட்­டிக்­காட்­டினார். இது தொடர்பில் உத­யங்க வீர­துங்க என அவ­ரது புகைப்­ப­டத்­துடன் கூடிய முகப்­புத்­தக கணக்கில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

கடந்த நான்காம் திகதி அமெ­ரிக்க நோக்கி செல்ல முற்­பட்ட போது நான் ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தில் வைத்து அந் நாட்டின் இன்­டர்போல் பொலி­ஸா­ரினால் தடுக்­கப்­பட்டேன். இதன்­போது அவர்கள் என்னை தடுத்து விசா­ரணை செய்­ததில் எனக்கு எதி­ராக எவ்­வித சர்­வ­தேச சிவப்பு அறி­வித்­தலும் இல்லை என்­பதும் சர்­வ­தேச குற்­றச்­சாட்­டுக்கள் இல்லை என்­பதும் உறு­தி­யா­னது. அதன் பின்னர் அவர்கள் விடு­தலைச் செய்­தனர். எனக்கு எதி­ராக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்கள் அனைத்தும் பொய்­யா­னவை. என்னை தற்­போ­தைய அர­சாங்கம் அர­சியல் ரீதி­யாக பழி வாங்­கு­வதால், தற்­போ­தைக்கு இலங்கை வரும் எண்னம் எனக்­கில்லை.

பொலி­ஸாரின் இந்த செயற்­பாட்­டுக்கு எதி­ராக நான் சர்­வ­தேச நிதி­மன்றில் நட்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்வேன். உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை மையப்­ப­டுத்­தியே என்னை கைது செய்ய முயல்­கின்­றனர். என கருத்துப்பட பதிவினை அவர் இட்டுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த பதிவின் நம்பகத்தன்மை தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் எவரும் உறுதி செய்யவில்லை.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-09#page-1

  • தொடங்கியவர்

உதயங்க வீரதுங்க விடுதலை – பேச்சு முடியும் வரை நாட்டை விட்டு வெளியேற முடியாது…

Udayanga-Weeratunga.jpg?resize=800%2C466

துபாயில் வைத்து கைது செய்யப்பட்ட ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் நெருங்கிய உறவினருமான, உதயங்க வீரதுங்க விடுதலை செய்யப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் இலங்கை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை நிறைவுறும்வரையில் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது

http://globaltamilnews.net/2018/66080/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.