Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காவிரியை எந்த ஒரு மாநிலமும் உரிமை கோர முடியாது:

Featured Replies

தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி: காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு- தமிழகம், கர்நாடகாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்

 

 
cauvery1jpg

கர்நாடகா, தமிழகம் இடையே நீண்ட காலமாக தொடரும் காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால் கர்நாடகாவில் மைசூரு, மண்டியா, கிருஷ்ணராஜசாகர் அணை உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் கடந்த 125 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இது தொடர்பாக மெட்ராஸ் - மைசூரு மாகாணங்களுக்கு இடையே கடந்த 1892-ம் ஆண்டு முதல் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து 1924-ம் ஆண்டு மீண்டும் 50 ஆண்டுகளுக்கு புதிய ஒப்பந்தம் போடப்பட்டது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் காவிரி பிரச்சினை தொடர்ந்ததால் மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தை ஏற்படுத்தியது. காவிரி வழக்கை விசாரித்த நடுவர் மன்றம் 1991-ல் இடைக்கால தீர்ப்பு வழங்கிய நிலையில், 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கியது. அதில், கர்நாடகா, தமிழகத்துக்கு 10 மாத கால இடைவெளியில் 192 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்று தீர்ப்பளித் தது.

இதை எதிர்த்து தமிழகம், 192 டிஎம்சி நீர் போதாது என்பதால் கூடுதலாக 72 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதே வேளையில் கர்நாடகா, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை 132 டிஎம்சியாக குறைத்து உத்தரவிடக்கோரி மேல்முறையீடு செய்தது. இதே போல கேரளாவும், புதுச்சேரியும் கூடுதல் நீரை திறந்துவிடக்கோரி மேல்முறையீடு செய்தன.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிராக தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் கடந்த 20 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,'' மாநிலங்களுக்கிடையே ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடக்கும் காவிரி வழக்கை, ஒரே மாதத்தில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்''என உத்தரவிட்டது.

 

சிறப்பு அமர்வு சுறுசுறுப்பு

இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் அமித்வ ராய், கான் வில்கர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வு காவிரி மேல்முறையீட்டு வழக்கை வாரத்தில் 3 நாட்கள் வீதம் நாள்தோறும் வேகமாக விசாரித்தது. தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, கர்நாடக அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், மத்திய அரசின் சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் உட்பட கேரளா, புதுச்சேரி அரசின் வழக்கறிஞர்களும் இறுதி வாதம் செய்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் உன்னிப்பாக கேட்ட சிறப்பு அமர்வு, “காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காதது ஏன் என மத்திய அரசுக்கும், தமிழகத்துக்கு உரிய நீரை திறக்காதது ஏன் என கர்நாடக அரசுக்கும் கேள்வி எழுப்பினர். கடந்த செப்டம்பர் 20-ம் தேதி இவ்வழக்கில் அனைத்து தரப்பு வழக்கறிஞர்களும் தங்களது இறுதி வாதத்தை நிறைவு செய்தனர்.

இதையடுத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான சிறப்பு அமர்வு, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. அடுத்த சில வாரங்களில் கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுவை மற்றும் மத்திய நீர்வளத்துறை ஆகியவை எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு காவிரி வழக்கில் 4 மாநிலங்களும், மத்திய அரசும் முன் வைத்த இறுதி வாதம், எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த ஆவணங்கள், மாநிலங்களுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தங்கள், மாநிலங்களின் நீர் ஆதாரம், நீர் தேவை, வேளாண் முறை உள்ளிட்டவற்றை மூன்று நீதிபதிகளும் தீவிரமாக ஆராய்ந்து, தீர்ப்பு எழுதும் பணியை தொடங்கினர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான அமித்வ ராய் இம்மாத இறுதியுடன் ஓய்வு பெறுவதால், தீர்ப்பை வேகமாக வெளியிடுவதில் உறுதியாக இருந்தனர். இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “தலைமுறை தலைமுறையாக நீளும் காவிரி விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். காவிரி மேல்முறையீட்டு வழக்கில் இன்னும் 4 வாரங்களில் தீர்ப்பளிக்கப்படும். அப்போது காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வரும்” என்றார்.

காவிரி வழக்கில் விசாரணை நிறைவடைந்து 150 நாட்கள் நெருங்கும் நிலையில் உச்ச நீதிமன்றம் நேற்று, “ காவிரி நடுவர் ன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இன்று காலை 10 மணிக்கு (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும்” என அறிவித்துள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியாவதால் கர்நாடகா - தமிழக விவசாயிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/india/article22769368.ece?homepage=true

காவிரியை எந்த ஒரு மாநிலமும் உரிமை கோர முடியாது:

cauvery-water.jpg?resize=600%2C450
காவிரி நதிநீரை எந்த ஒரு மாநிலமும் தங்களுக்கே சொந்தம் என உரிமை கோர முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நூற்றாண்டுகளாக நீடிக்கிறது காவிரி நதிநீர் பிரச்சனை. இதற்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் 2007-ம் ஆண்டு இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதில் 192 டி.எம்.சி.நீரை தமிழகத்துக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து கூடுதல் நீர் கோரி தமிழகம், கர்நாடகா, புதுவை, கேரளா மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் விசாரணை அண்மையில் நிறைவடைந்து தீர்ப்பு திகதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதியரசர் குழு காவிரி வழக்கில் காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க தொடங்கியது. அப்போது காவிரி நீரை எந்த ஒரு மாநிலமும் உரிமை கோர முடியாது என நீதிபதிகள் தீர்பளித்துள்ளனர்.

kaviri.jpg?resize=615%2C350

http://globaltamilnews.net/2018/67050/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

’காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்!’ - உசச்நீதிமன்றம் உத்தரவு #CauveryVerdict #LiveUpdates

 

காவிரி

 

*தீர்ப்பை வரவேற்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பால் கர்நாடகாவில் பெருமளவு தண்ணீர் பற்றாக்குறை தீரும் என்று கர்நாடகா தெரிவித்துள்ளது.

 

சித்தராமைய்யா

*இதுவே இறுதி தீர்ப்பு. மேல்முறையீடு செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

*காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

*’காவிரி நதி நீரை யாரும் உரிமைக் கொண்டாட முடியாது. எந்த மாநிலத்திற்கும் அந்த உரிமையில்லை’ என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.


*காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2007ம் ஆண்டு கர்நாடகா தமிழகத்துக்கு 192 டிஎம்சி நீர் தர வேண்டும் என்று  நடுவர் மன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

*தற்போது கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி அளவு கூடுதலாக தண்ணீர் எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாடு - கர்நாடகா  இடையில் நடக்கும் காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை தொடர்பான வழக்கில்  உச்ச நீதிமன்றம் தற்போது இறுதித் தீர்ப்பு வழங்கி வருகிறது. தலைமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வராய், கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வாசித்து வருகிறது.

https://www.vikatan.com/news/india/116576-supreme-court-to-pronounce-final-verdict-in-the-cauvery-dispute-case.html

  • தொடங்கியவர்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு: தமிழகத்துக்கு வழங்கப்பட்ட காவிரி நீரில் 14.75 டிஎம்சி குறைப்பு

 

 
cauvery


புது தில்லி: காவிரி நீரில் தமிழகத்துக்கு ஆண்டு தோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருப்பதன் மூலம், 14.75 டிஎம்சி தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் வழக்கில் 4 மாநிலங்கள் சார்பில் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பை வழங்கியது.

காவிரியில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கியிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று அளித்திருக்கும் தீர்ப்பில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம், தமிழகத்துக்கு 14.75 டிஎம்சி தண்ணீர் குறைவாகக் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரியில் இருந்து 264 டிஎம்சி தண்ணீர் வேண்டும் என்று தமிழகம் கோரியிருந்தது. ஆனால், 2007ல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு 192  டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில், தமிழகத்தில் 20 டிஎம்சி அளவுக்கு நிலத்தடி நீர் உள்ளது. எனவே, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது. நிலத்தடி நீரை உடனடியாக கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

காவிரியில் இருந்து 184.75 டிஎம்சி தண்ணீரை கர்நாடகாவுக்கு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவுக்கு கூடுதலாக 4.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவிரியில் இருந்து ஆண்டுதோறும் கேரளாவுக்கு 30 டிஎம்சி தண்ணீரும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரும் வழங்க வேண்டும் என்ற நடுவர்மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 15 ஆண்டுகளுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து எந்த மாநிலமும் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.

http://www.dinamani.com/tamilnadu/2018/feb/16/உச்ச-நீதிமன்ற-தீர்ப்பு-தமிழகத்துக்கு-வழங்கப்பட்ட-காவிரி-நீரில்-1475-டிஎம்சி-குறைப்பு-2864663.html

 

 

 

 

  • தொடங்கியவர்

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட காவிரி நதிநீர் வழக்கு: தீர்ப்பின் முக்கியம்சங்கள்!

 

 
law_3

 

புது தில்லி: காவிரி நதிநீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று வெளியிட்ட தீர்ப்பில் ஒரு முக்கியக் கருத்தை தெரிவித்திருந்தார்.

மேலும், காவிரியில் இருந்து ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை ஒதுக்கீடு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று வெளியிட்டது.

அந்த தீர்ப்பில், காவிரி நீர் என்பது தேசத்தின் பொதுச் சொத்து. காவிரி நதிநீரை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது என்று கருத்துக் கூறியிருந்தனர்.

காவிரி நதிநீர் எங்களுக்கேச் சொந்தம் என்று கர்நாடகம் கூறி வந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த கருத்தை முன் வைத்துள்ளனர்.

தமிழகத்தில் 20 டிஎம்சி அளவுக்கு நிலத்தடி நீர் உள்ளது. எனவே, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது.

காவிரியில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கியிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம், தமிழகத்துக்கு 14.75 டிஎம்சி தண்ணீர் குறைவாகக் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரியில் இருந்து 184.75 டிஎம்சி தண்ணீரை கர்நாடகாவுக்கு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவிரியில் இருந்து ஆண்டுதோறும் கேரளாவுக்கு 30 டிஎம்சி தண்ணீரும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரும் வழங்க வேண்டும் என்ற நடுவர்மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 15 ஆண்டுகளுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து எந்த மாநிலமும் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. குடியரசுத் தலைவர் மேற்பார்வையில் காவிரி மேலாண்மை வாரியம் செயல்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

குடிநீர் பயன்பாட்டை கருத்தில் கொண்டு பெங்களூருவுக்கு கூடுதல் நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், தமிழகத்துக்கு நிலத்தடி நீர் இருப்பதை நடுவர் மன்றம் கணக்கில் கொள்ளவில்லை என்றும், நிலத்தடி நீரை உடனடியாக கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், காவிரி நதிநீர் விவகாரத்தில் மெட்ராஸ் - மைசூர் இடையேயான ஒப்பந்தம் செல்லும் என்றும், அதன்படி, 1892, 1924ம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தங்கள் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களின்படி, தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா காவிரி நதியின் குறுக்கே புதிய அணைகளை கட்ட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவுக்கு கூடுதலாக வழங்கப்படும் 14 டிஎம்சி தண்ணீரில் பெங்களூர் நகரின் குடிநீர் தேவைக்கு 4 டிஎம்சியும், தொழில் நிறுவனங்களுக்கு 10 டிஎம்சியும் வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கர்நாடகம் வரவேற்பு தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக விவசாயிகள் தங்களது கவலையை வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் நவநீதகிருஷ்ணன், உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமிழகத்துக்கு பெரும் பின்னடைவு என்று தெரிவித்துள்ளார்.

http://www.dinamani.com/india/2018/feb/16/அதிகம்-எதிர்பார்க்கப்பட்ட-காவிரி-நதிநீர்-வழக்கு-தீர்ப்பின்-முக்கியம்சங்கள்-2864668.html

  • தொடங்கியவர்

காவிரி வழக்கில் தமிழக உரிமை பறிபோய் விட்டது; உடனே அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுக: ஸ்டாலின்

 

 
download%201

மு.க.ஸ்டாலின், காவிரி   -  கோப்புப் படம்

காவிரி நீர் குறைக்கப்பட்டு தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்க விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்ட்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 192 டி.எம்.சி. காவிரி தண்ணீரின் அளவு, தற்போது 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காவிரி நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பையும், இறுதித் தீர்ப்பையும், காவிரி நீர் திறந்துவிடக் கோரி உச்சநீதிமன்றம் அவ்வப்போது பிறப்பித்த உத்தரவுகளையும் இதுவரை மதிக்காத கர்நாடக மாநிலத்திற்கு, ஏற்கனவே வழங்கப்பட்டதை விட கூடுதலாக 14.5 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்து இருக்கிறது.

எனவே, புவியியல் மற்றும் சரித்திரரீதியாக தமிழகத்திற்கே உரித்தான காவிரி நீரைப் பெறுவதற்கான, நியாயமான ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் போதிய அளவில் முன்வைக்கத் தவறிய அதிமுக அரசுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்டவற்றின் உத்தரவுகளை மட்டுமல்ல முதலமைச்சர்கள், பொதுப்பணித்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளையும் அலட்சியப்படுத்தி வரும் கர்நாடக மாநிலத்திற்கு இப்படியொரு நிவாரணம் கிடைத்திருப்பது நடுநிலையாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்ட பிறகும், காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் அதை நிறைவேற்ற மறுத்த மத்திய பா.ஜ.க. அரசும், காவிரி இறுதி வழக்கு விசாரணையில் கருகிக்கிடக்கும் பயிர்களையும், காய்ந்து கிடக்கும் வயல்களையும் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு போகாமல் தவறவிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசும் தமிழகத்திற்கும், தமிழக விவசாயிகளுக்கும் மிகப்பெரும் பாதிப்பை உண்டாக்கிவிட்டன.

காவிரி நதிநீர்ப் பிரச்னையில் தலைவர் கருணாநிதி தமிழகத்திற்குப் பெற்றுத் தந்த உரிமைகளை, அதிமுக அரசு இன்றைக்கு பறிகொடுத்து விட்டது. ஆகவே, தமிழகத்திற்கான காவிரி நீரின் அளவு குறைக்கப்பட்டு, தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு உருவாகியுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்கவும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவெடுக்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

அந்தக் கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22771196.ece?homepage=true

  • தொடங்கியவர்

மகிழ்ச்சியான செய்தி: காவிரி தீர்ப்புக்கு சித்தராமையா வரவேற்பு

 

 
cmjpg

கர்நாடக முதல்வர் சித்தராமையா- கோப்புப் படம்

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கர்நாடக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி என அம்மாநில முதல்வர் சித்தராமையாக கூறியுள்ளார்.

கர்நாடகா, தமிழகம் இடையே நீண்ட காலமாக தொடரும் காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதாவது:

‘‘கர்நாடக மக்களுக்கும், காவிரி பாசன விவசாயிகளுக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி இது. இரு மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களை கருத்தில் கொண்டு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு’’ எனக் கூறினார்.

இதுபோலவே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சித் தலைவர்களும், விவசாய சங்கத் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

http://tamil.thehindu.com/india/article22771030.ece?homepage=true

 

  • தொடங்கியவர்

``நீதி கிடைக்கவில்லை” - உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் கொந்தளித்த டெல்டா விவசாயிகள் #CauveryVerdict

 
 

“உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தமிழக மக்கள் மற்றும் தமிழக விவசாயிகளுக்கான நீதி கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை” என்று காவிரி டெல்டா விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வி.இளங்கீரன் தெரிவித்துள்ளார்.

 

காவிரி டெல்டா

 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நம்மிடம் பேசிய காவிரி டெல்டா விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வி.இளங்கீரன், ”இந்த தீர்ப்பில் தமிழக மக்கள் மற்றும் தமிழக விவசாயிகளுக்கான நீதி கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால் 205 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று இடைக்காலத் தீர்ப்பு வெளியிடப்பட்டு அதன்பின் 192 டி.எம்.சியாக மாறி தற்போது 177.25 டி.எம்.சி என்று கூறியிருக்கிறார்கள். காவிரி நதி நீரை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது என்று ஒருவிவசாயிகள் விஷயம் மட்டும்தான் தமிழக விவசாயிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கக் கூடியதாக இருக்கிறது. அதேசமயம் ஒப்பீட்டளவில் கர்நாடகத்தை விட தமிழகத்தின் பாசன பரப்பளவு அதிகம். இந்நிலையில் அவர்களுக்கு அதிகமாகவும் தமிழகத்துக்கு குறைவாகவும் கூறியிருப்பது ஒருதலைப் பட்சமான தீர்ப்பாகவே நாங்கள் கருதுகிறோம்.

 

நம் விவசாயிகளுக்காக 264 டி.எம்.சி தண்ணீரை தமிழக அரசு கேட்டிருந்தது. 192 டி.எம்.சியின் அளவை 200 டி.எம்.சி அளவுக்கு உயர்த்தி தீர்ப்பு வரும் என்றுதான் நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அதையும் குறைத்து 177.25 என்று கூறியிருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருந்தாலும் இந்த தண்ணீரையே கர்நாடம் எப்படி கொடுக்கப் போகிறது என்ற தெளிவான தகவல் இன்னும் வரவில்லை. இதை மாநில அரசே நடைமுறைப்படுத்துமா ? மத்திய அரசா அல்லது உச்சநீதிமன்றமா என்பதையும் பார்க்க வேண்டும். ஏனென்றால் இதற்கு முன்பு உச்சநீதிமன்றம் கூறிய எதையும் கர்நாடக அரசு மதிக்காததோடு அதை நடைமுறைப்படுத்தவும் இல்லை. அப்படி இருக்கும்போது இந்த தண்ணீரை அவர்கள் அளிப்பார்களா என்பதும் சந்தேகம்தான். தீர்ப்பின் முழு விபரமும் வந்தால்தான் இன்னும் விரிவாகப் பேச முடியும்” என்றார்.  

https://www.vikatan.com/news/tamilnadu/116597-delta-farmers-protest-against-cauvery-dispute-verdict.html

  • தொடங்கியவர்

காவிரி தீர்ப்பில் யாரும் ஓட்டு அரசியல் செய்ய வேண்டாம்: கமல்ஹாசன் பேட்டி

 

 
24JANCHPRSKamaGQ4160C324jpgjpge

கமல் ஹாசன்   -  கோப்புப் படம்

காவிரி தண்ணீர் அளவு குறைந்தது வருத்தம் தான், ஆனால் தீர்ப்பு அழுத்தமாக இருப்பதில் மகிழ்ச்சி. இது தொடர்பாக ஓட்டு அரசியலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறியதாவது:

''ஆடுதாண்டும் காவேரி அகண்ட காவேரி ஆவது தமிழகத்தில் தான் அதனால் தீர்ப்பில் எனக்கு ஏமாற்றம்தான். நீரின் அளவு குறைக்கப்பட்டதில் எனக்கு வருத்தம் தான். நான் பத்தாண்டுகளுக்கு முன் குறிப்பிட்டிருந்தேன். நாமெல்லாம் குரங்காக இருந்த காலத்திலேயே காவிரி ஓடியது. அதனால் காவிரிக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்று கூறியிருந்தேன்.

அதையே உச்ச நீதிமன்றமும் தீர்ப்பாக கூறியுள்ளது எனக்கு ஆறுதலாக இருக்கிறது. ஆனால் தற்போது தமிழகத்திற்கான தண்ணீர் அளவு குறைவாக கிடைத்தாலும் அதை பத்திரப்படுத்தவேண்டியது தமிழர்களின் கடமை. அதைவிட முக்கியமான கடமை ஒன்று இருக்கிறது. அது இரு மாநிலங்களுக்கான ஒற்றுமை.

ஓட்டு வேட்டை என்று நினைத்துக்கொண்டு இந்த சச்சரவுகளை தூண்டுபவர்கள் தேசியம் மறந்து பேசுகிறார்கள் என்பதுதான் என் கருத்து. காவிரி நீர் இருவருக்கும் சொந்தம், யாரும் அதை தனியாக உரிமை கொண்டாட முடியாது என்பது தீர்ப்பு. இன்னும் 15 ஆண்டுகளுக்கு அப்பீலுக்கு போக முடியாது என்றும் தீர்ப்பு.

அதற்குள் நாம், கிடைக்கும் தண்ணீரை எப்படி சேமிப்பது பாசனத்துக்கு பயன்படுத்துவது என்பதைத்தான் சிந்திக்க வேண்டும். இந்த ஓட்டு விளையாட்டு விளையாடுகிறேன் பேர்வழி என்று சச்சரவுக்கு வழிவகுத்து விடக்கூடாது எப்ன்பதே  என்  தாழ்மையான வேண்டுகோள்.

ஓட்டப்பம் வீட்டைச்சுடும், தன்வினை தன்னைச்சுடும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அது நம் தமிழர்களுக்கும் அந்த கடமை இருக்கிறது, கர்நாடக மக்களுக்கும் அந்தக் கடமை இருக்கிறது. இதில் தண்ணீர் அளவு குறைந்தது வருத்தம்தான். ஆனால், தீர்ப்பு அழுத்தமாக இருப்பதில் மகிழ்ச்சித்தான்.

ஏற்கெனவே தீர்ப்பின் படி கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விடவில்லை, தற்போது இது நடக்குமா?

ஆர்ப்பாட்டத்தினால் அது நடக்காது என்று  நினைக்கிறேன்,. நான் சொல்வது பழைய யுக்தி. காந்தி காலத்து யுக்தி. இரு மாநிலங்களும் ஒற்றுமையாக கலந்து பேசி தீர்வு காண முடியும். காவிரி குடும்பம் என்ற ஒன்று இருந்தது. இரு மாநில விவசாயிகளும் கலவரம் உச்சத்தில் இருந்த போது கூடிப்பேசி கலவரத்தை முடிவுக்கு கொண்டு வந்து ஒற்றுமை காத்தார்கள்.

அந்த ஒற்றுமை மீண்டும் வரவேண்டும். நீங்கள் ஒற்றுமை காத்தால் தான் நதி இணைப்பு பற்றி எல்லாம் பேச முடியும். நதி தேசிய சொத்து என்று நினைத்தால் தான், நாம் அதை இணைப்பது பற்றி எல்லாம் பேச முடியும். ‘வீடு பற்றி எரியும் போது பீடி பத்த வைக்கிற’ இந்த ஓட்டு விளையாட்டினால் மக்கள் இரு தரப்பிலும் பாதிக்கப்படுகிறார்கள். எந்த கலாச்சாரத்திற்கும் அது உகந்ததல்ல.

கர்நாடகாவில் தேர்தல் நடக்கும் சூழ்நிலையில் இது பற்றி உங்கள் கருத்து?

ஓட்டு வேட்டை என்று சொன்னதே அதைத்தான், அந்த விளையாட்டு விளையாடக்கூடாது என்பது எனது அழுத்தமான கருத்து.

விவசாயமும் விவசாயிகளும் முக்கியம் என்று அமெரிக்கா வரையிலும் பேசி உள்ளீர்கள், 15 டிஎம்சி தண்ணீர் குறைவை எப்படி பார்க்கிறீர்கள்?

ஏமாற்றம் தான், அதிர்ச்சிதான், வருத்தம் தான், இருந்தாலும் கிடைத்திருக்கும் இந்த தீர்ப்பை பயன்படுத்திக்கொண்டு உள்ளதை வைத்து நாம் நமது பாசனத்துக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்ய வேண்டும். நிலத்தடி நீரை பாதுகாக்கவில்லை என்பது தான் முதல் குற்றம்.

நாம் செய்தது எல்லோரும் செய்தது அந்தக் குற்றத்தைத்தான். நிலத்தடி நீரை அதிகரிக்கும் வேலையை அனைவரும் செய்வோம். காவிரி நீரைப் பெறுவதில் சண்டைபோடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நாம் அதை பேசித்தான் பெற வேண்டும்.''

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22772540.ece?homepage=true

  • தொடங்கியவர்

காவிரி இறுதித் தீர்ப்பு! - அதிருப்தியில் தமிழக அரசியல் தலைவர்கள் #CauveryVerdict

 
 

தமிழ்நாடு - கர்நாடகா இடையில் நடக்கும் காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை தொடர்பான வழக்கில்  உச்ச நீதிமன்றம் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கியது.

 

காவிரி
 

 

’காவிரி நதி நீரை யாரும் உரிமை கொண்டாட முடியாது. எந்த மாநிலத்துக்கும் அந்த உரிமையில்லை’ என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2007-ம் ஆண்டு கர்நாடகா தமிழகத்துக்கு 192 டி.எம்.சி நீர் தர வேண்டும் என்று  நடுவர் மன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி அளவு கூடுதலாகத் தண்ணீர் எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ’இதுவே இறுதித் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்குச் செல்லும். மேல்முறையீடு செய்ய முடியாது’ என உச்ச நீதிமன்றம் உறுதியாகத் தெரிவித்துவிட்டது.

காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த இறுதித் தீர்ப்பை வரப்வேற்பதாகக் கர்நாடகா தரப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்.. 

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்

காவிரிநீர் குறைக்கப்பட்டு தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளதோடு, தலைவர் கலைஞர் தமிழகத்துக்குப் பெற்றுத்தந்த உரிமைகளை அ.தி.மு.க அரசு உச்ச நீதிமன்றத்தில் பறிகொடுத்தது வேதனையளிக்கிறது. ஆகவே, விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுடன் அனைத்துக் கட்சி கூட்டத்தை முதலமைச்சர் உடனே கூட்ட வேண்டும்.

அ.தி.மு.க எம்.பி நவநீதகிருஷ்ணன்

காவிரி வழக்கின் இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கான பங்கு போதாது. தண்ணீர் இல்லாமல் தமிழக விவசாயிகள் பலர் உயிரை மாய்த்து கொண்டனர். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும், மத்திய அரசு நிலுவையில் உள்ள கல்லணை உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தி தமிழக விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும். 

தி.மு.க முதன்மை செயலாளர் துரைமுருகன்

அ.தி.மு.க அரசு காவிரி வழக்கை சரியாக நடத்தவில்லை. எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட யாருடைய யோசனைகளுக்கும் அரசு செவிகொடுக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்துக்கு விழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி.
 
தமிழக அமைச்சர் ஜெயக்குமார்

காவிரியை கர்நாடகா சொந்தம் கொண்டாடிய நிலையில் யாரும் உரிமை கொண்டாட முடியாது என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. காவிரி தீர்ப்பு பற்றி முழுமையாக தெரிந்துக் கொண்ட பிறகே கருத்துக் கூற முடியும். 

எம்.எல்.ஏ டி.டி.வி.தினகரன்

காவிரி பிரச்னை தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை

தமிழகத்துக்கு காவிரி நீர் குறைப்பு என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. கர்நாடகம் தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்துவருகிறது. காவிரி நீர் தமிழகத்துக்கு கிடைக்காமல் போனதுக்கு தி.மு.க-வின் பங்கும் உள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க வேண்டும். 

ம.தி.முக பொதுச் செயலாளர் வைகோ

காவிரி வழக்கில் வில்லன் மத்திய அரசுதான். தமிழகத்தை நாசம் செய்யும் முடிவோடு நரேந்திர மோடி தலைமையிலான அரசு உள்ளது. காவிரி வழக்கில் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.

தனபாலன்- சுவாமிமலை விமலநாதன்

காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் பொதுச் செயலாளர் தனபாலனிடம் பேசியபோது, சுமார் 410 டி.எம்.சி. காவிரி நீரைப் பெற்று முப்போகம் விவசாயம் செய்து வந்தோம். இடைக்கால தீர்ப்பு 205 டி.எம்.சி. என்றார்கள். ஒருபோக சாகுபடி குறைந்தது.  அந்தத் தீர்ப்பின்படியும் தண்ணீர்த் தர மறுத்தார்கள்.  இறுதி தீர்ப்பு 192 டி.எம்.சி. என்றார்கள். குறுவை சாகுபடியை கைவிட்டோம். இப்போது, உச்ச நீதிமன்றம் 15 டி.எம்.சி. தண்ணீரை குறைத்திருக்கிறார்கள். 1 டி.எம்.சி. தண்ணீரைக் கொண்டு 6,000 ஏக்கர் சாகுபடி செய்யலாம். அந்த வகையில் சுமார் 90,000 ஏக்கர் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்படும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பற்றி கவலை கொள்ளாமல், மேலும் வதைக்கும் தீர்ப்பு ஏற்புடையதல்ல" என்றார்.

காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் சுவாமிமலை விமலநாதன், "2007ல் நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பின்படி கர்நாடகம் நீரை வழங்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அப்போதிருந்த காங்கிரஸ் அரசும் சரி, இப்போதுள்ள பி.ஜே.பி. அரசும் சரி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வரவில்லை. காரணம், கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க இரண்டு கட்சிகளும் போட்டியிடுவதுதான். கர்நாடக அணைகள் நிரம்பி வழியும் உபரி நீரைதான் தமிழகத்துக்குத் தருகிறார்கள். இந்தத் தீர்ப்பு ஒருபுறம் பாதிப்பை ஏற்படுத்தினாலும், தீர்ப்பின்படி கர்நாடகா தண்ணீரை தருவதற்கு மத்திய அரசு உத்தரவாதம் தருமா? காவிரி மேலாண்மை வாரியத்தை இப்போதாவது மத்திய அரசு அமைக்க முன்வருமா? இவையெல்லாம் கேள்விக்குறிகளாகவே இருக்கின்றன" என்றார். 

 

https://www.vikatan.com/news/tamilnadu/116608-tamilnadu-politicians-quote-about-cauvery-verdict.html

  • தொடங்கியவர்

காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது – தமிழகத்திற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த்

rajanikanth.jpg?resize=752%2C417

காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தனக்கு ஏமாற்றமளிப்பதாக தென்னிந்திய நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் மூலம் கருத்தை பதிவு செய்துள்ளார். காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு இன்று வெளியான நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தபோது தீர்ப்பை வைத்து ஓட்டு அரசியல் செய்ய வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு வேண்டுவதாக தெரிவித்துள்ளார்

இந்த தீர்ப்பு தொடர்பில் நடிகர் ரஜனிகாந்தின் கருத்தை அறிந்துகொள்ள ஊடகங்கள் அவரது வீட்டு வாசலில் காத்திருந்த போதும் அவர் ஊடகங்களுக்கு கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் டுவிட்டர் மூலம் ரஜின்காந்த் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவரது ட்விட்டரில் ‘காவிரி நதிநீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்றும் மறு பரிசீலனை மனுத்தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2018/67137/

  • தொடங்கியவர்

வேகமாக வளர்ந்து வரும் பெங்களூருக்காக நீர் கொள்கையை வளைத்த உச்ச நீதிமன்றம்

 

 
16INTHVLRCAUVERY

மேட்டூர் அணை   -  பிடிஐ

சர்வதேச தரத்தையும், முக்கியத்துவத்தையும் பெங்களூரு பெற்று வருவதாலும், மக்களின் குடிநீர் தேவையையும் கருத்தில் கொண்டும், சமகாலத்தில் மையமான பகுதியில் பெங்களூரு நகரம் இருப்பதாலும் கூடுதலாக 4.75 டிஎம்சி நீர் ஒதுக்குகிறோம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

அதேசமயம், காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு அளித்த தீர்ப்பில் கூறப்பட்ட விஷயங்களை ஏற்கமறுத்துவிட்டனர்.

கர்நாடக மாநிலத்துக்கும், தமிழகத்துக்கும் காவிரி நிதி நீரை பங்கீட்டுக் கொள்வதில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சினை இருந்து வருகிறது. காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு அளித்த தீர்ப்பில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்தது.

இந்த 192 டிஎம்சி நீர் போதாது கூடுதலாக 72 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை 132 டிஎம்சியாக குறைத்து உத்தரவிடக் கோரி கர்நாடக அரசும் மேல்முறையீடு செய்தது. இதே போல கேரளாவும், புதுச்சேரியும் கூடுதல் நீரை திறந்துவிடக்கோரி மேல்முறையீடு செய்தன.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் விசாரணை தொடங்கியது, 28 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. அந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வாலிகர், அமிதவ ராய் ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பில் காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு ஒதுக்கிய 192 டிஎம்சி நீரை 177.25 டிஎம்சி நீராகக் குறைத்து பில்லிகுண்டு அணையில் இருந்து திறந்துவிட வேண்டும் எனத் தெரிவித்தது. அதேசமயம், கர்நாடக மாநிலத்துக்கு கூடுதலாக 14.75 நீரை ஒதுக்கீடு செய்தது. அதாவது கர்நாடக மாநிலத்துக்கு காவிரி நடுவர் மன்றம் 270 டிஎம்சி நீர் ஒதுக்கிய நிலையில் இப்போது 284.75 டிஎம்சி நீர் ஒதுக்கியது. பெங்களூரு மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கூடுலாக 4.75 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்தது.

2007ம் ஆண்டு காவிரி நிதிநீர் தீர்ப்பாயம் அளித்த உத்தரவில், பெங்களூரு நகரத்தின் மூன்றில் ஒருபகுதி காவிரி நதி நீர் படுகையில் அமைந்து இருப்பதாலும், 50 சதவீத குடிநீர் தேவையை நிலத்தடி நீர் மூலமே பெற்றுக்கொள்ளும் என்பதாலும், கர்நாடகத்துக்கு அப்போது டிஎம்சி அளவைக் குறைத்தது.

இந்த தீர்ப்பில் கடந்த 2007ம் ஆண்டு காவிரி நிதிநீர் பங்கீடு தீர்ப்பாயத்தின் பரிந்துரைகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்கவில்லை.

மாறாக, பெங்களூரு வேகமாக வளர்ந்துவரும் நகரமாக இருக்கிறது, மக்களின் தேவை அதிகரிப்பு, செம்மையாகி வருகிறது என்பதை காரணமாக காட்டி நீதிபதிகள் கூடுதலாக டிஎம்சி நீரை பெங்களூரு நகருக்கு ஒதுக்கியுள்ளனர்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அளித்த தீர்ப்பில் “ காவிரி நிதிநீர் பங்கீடு தீர்ப்பாயம், மக்களின் அடிப்படை குடிநீர் தேவையை கணக்கில் எடுக்கவில்லை, குடிநீர் தேவை என்பது நிலையற்றது. உலக அளவில் பெங்களூரு நகரம் பெற்றுவரும் முக்கியத்துவம் கவனிக்கத்தக்கது. அந்த நகரம் நாளுக்கு நாள் அதிநவீனமடைந்து, செம்மைபட்டு வருகிறது.

தகவல் தொழில்நுட்பத்தின் மையப் புள்ளியாகவும், பெரும் வர்த்தக நகராகவும் உருப் பெற்று வருகிறது. நாட்டின் நரம்பு மண்டலமாக பெங்களூரு நகரம் மாறிவருவதால், நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கம் உயர்ந்து வருகிறது.

ஆதலால் மக்களின் தேவையை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இவை அனைத்தையும் மனதில் வைத்து 4.75 டிஎம்சி நீர் கூடுதலாக ஒதுக்கீடு செய்கிறோம்” எனத் தெரிவித்தனர்.

இதன்மூலம் காவிரி நீதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயம் கர்நாடக மாநிலத்துக்கு அளித்த 270 டிஎம்சி நீரைக் காட்டிலும் கூடுதலாக 14.75டிஎம்சி நீர் ஒதுக்கப்பட்டது. இதில் 10 டிஎம்சி நீர் தமிழகத்தில் நிலத்தடி நீர் இருப்பு நன்றாக இருப்பதால், அந்த பலன் கர்நாடக மாநிலத்துக்கு அளிக்கப்பட்டது.

மேலும், காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு அளித்த தீர்ப்பில் பெங்களூரு நகரம் தனது குடிநீர் தேவையில் 50 சதவீதம் நிலத்தடி நீர் மூலம் பெற்றுக்கொள்ளும் என்பதை நீதிபதிகள் ஏற்கவில்லை.

இப்போதுள்ள நிலையில், பெங்களூகு நகரம், புறநகரத்தில் வசிக்கும் மக்களுக்கு 33 டிஎம்சி நீர் இருப்பதுதான் போதுமானதாக இருக்கும். ஆனால், தீர்ப்பாயமோ 17.22 டிஎம்சி போதுமானதாகத் தெரிவித்தது என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

பெங்களூரு நகர மக்களின் தேவைக்கு மட்டும் 8.77 டிஎம்சி நீர் தேவைப்படும். இன்னும் 20 முதல் 30 ஆண்டுகளில் 30 டிஎம்சி நீர் தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுதவிர கடந்த சில நாட்களுக்கு முன் ஐக்கிய நாடுகள் சபை ஆதரவு பெற்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் உலகில் விரைவாக நீர் தீர்ந்துவிடும் நகரங்கள் பட்டியலில் பெங்களூரையும் பட்டியலிட்டு இருந்தது. அதற்கு ஏற்றார்போல், அந்த சிக்கலில் இருந்து மீளும் வகையில் பெங்களூரு நகருக்கு கூடுதலாக 4.75 டிஎம்சி நீர் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

(பிடிஐ தகவல்களுடன்)

http://tamil.thehindu.com/india/article22777004.ece?homepage=true

  • தொடங்கியவர்

காவிரி வழக்கில் கிடைத்திருப்பது தீர்ப்பா? தீர்வா?: கவிஞர் வைரமுத்து கேள்வி! 

 

 
vairamuthu

 

சென்னை: காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் கிடைத்திருப்பது தீர்ப்பா? தீர்வா? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று வெளியிட்டது.

அந்த தீர்ப்பில், காவிரி நீர் என்பது தேசத்தின் பொதுச் சொத்து. காவிரி நதிநீரை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது என்று கருத்துக் கூறியிருந்தனர்.

காவிரி நதிநீர் எங்களுக்கேச் சொந்தம் என்று கர்நாடகம் கூறி வந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த கருத்தை முன் வைத்துள்ளனர்.

தமிழகத்தில் 20 டிஎம்சி அளவுக்கு நிலத்தடி நீர் உள்ளது. எனவே, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது.

காவிரியில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கியிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம், தமிழகத்துக்கு 14.75 டிஎம்சி தண்ணீர் குறைவாகக் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரியில் இருந்து 284.75 டிஎம்சி தண்ணீரை கர்நாடகாவுக்கு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவிரியில் இருந்து ஆண்டுதோறும் கேரளாவுக்கு 30 டிஎம்சி தண்ணீரும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரும் வழங்க வேண்டும் என்ற நடுவர்மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 15 ஆண்டுகளுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து எந்த மாநிலமும் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் கிடைத்திருப்பது தீர்ப்பா? தீர்வா? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்துக்களாவது

தீர்ப்பா? தீர்வா? நிலம் நனையத் தண்ணீர் கேட்டோம்; நதி நனைய மட்டுமே கிடைத்திருக்கிறது. தீர்ப்பை ஏற்றுக்கொள்வது ஒருபுறம்; எதிர்கொள்வது மறுபுறம். என்ன செய்யப் போகிறோம்?

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

http://www.dinamani.com/tamilnadu/2018/feb/16/காவிரி-வழக்கில்-கிடைத்திருப்பது-தீர்ப்பா-தீர்வா-கவிஞர்-வைரமுத்து-கேள்வி-2864739.html

  • தொடங்கியவர்

’இது மக்கள் நலனுக்கு எதிரானது’ காவிரி தீர்ப்பு குறித்து பிரபலங்கள் #CauveryVerdict

 
 

கபினி அணை - காவிரி தண்ணீர்

 

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில், தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள பிலிகுண்டுலு அணையிலிருந்து, தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, ஏற்கெனவே நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட தண்ணீரின் அளவைக் காட்டிலும் குறைவாகும்.

 

கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வெளியிட்ட இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டிற்கு 192 டி.எம்.சி. தண்ணீரை, கர்நாடக மாநில அரசு ஆண்டுதோறும் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது அந்த அளவிலிருந்து 14.75 டி.எம்.சி. குறைத்து வழங்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 

காவிரி நதிநீர் தாவா குறித்த நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகம், தமிழகம், கேரளம் மாநில அரசுகள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், கடந்த செப்டம்பர் 20-ம் தேதி ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது.

நடுவர் மன்ற தீர்ப்பின்படி, கர்நாடக மாநிலத்திற்கு 270 டி.எம்.சி. தண்ணீர் என்ற பங்கீடு இருந்த நிலை மாறி தற்போது 284.75 தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கேரளா மற்றும் பாண்டிச்சேரிக்கான காவிரி நீர் ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காவிரிப் படுகையிலிருந்து கூடுதலாக 10 டி.எம்.சி. நிலத்தடி நீரை தமிழகம் எடுத்துக் கொள்ளலாம் என்றும், இதன் மூலம் நிலத்தடி நீர் அளவு தமிழகத்திற்கு 20 டி.எம்.சி-யாக உயரும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், "கர்நாடக மாநிலத்திற்கு ஓரளவு நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்திற்கு நடுவர் மன்றம் நதிநீர் ஒதுக்கீடு செய்ததில் எந்தவொரு நெறிபிறழ்வும் இல்லை. இந்தத் தீர்ப்பு மற்ற மாநிலங்களில் உள்ள நதிநீர்ப் பங்கீடு தொடர்பான வழக்குகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும். 1892 மற்றும் 1924-ம் ஆண்டுகளில் செய்து கொள்ளப்பட்ட நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தில், தங்களுக்கு பேரம் பேசுவதற்கான அதிகாரம் இல்லை என்ற கர்நாடக அரசின் வாதம் சரியல்ல. அப்படியானால், சுதந்திரத்திற்குப் பின்னர், அரசியல் சாசன சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் அந்த ஒப்பந்தங்களை கர்நாடக அரசு கண்டிக்கவில்லை? 

உச்ச நீதிமன்றம்இத்துடன் காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படுகின்றன. உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகள் அனைத்தும் தேசிய சொத்து" என்று கூறியுள்ளனர்.

இந்தத் தீர்ப்புக்கு முன்னதாக, பல்வேறு நிகழ்வுகளில் தமிழ்நாடு தொடர்ந்த மனுக்களின் அடிப்படையில் தண்ணீர் திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் பலமுறை கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட போதிலும், அம்மாநில அரசு அதை நிறைவேற்றவில்லை.

சுமார் 802 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்ந்தோடும் காவிரி ஆறு, தென்னிந்தியாவில் பாயும் நதிகளிலேயே மிகப் பெரியதாகும். கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தின் தலைக்காவிரி என்ற இடத்தில் உற்பத்தியாகி, பெரும்பாலும் கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் வழியாக பாய்ந்து, கடலில் கலக்கிறது. காவிரியின் ஒரு பகுதி பாண்டிச்சேரி மற்றும் கேரள மாநிலங்களையும் தொட்டுச் செல்கிறது.

சட்டபூர்வமான மொழியில் சொல்ல வேண்டுமானால், காவிரியைப் பொறுத்தவரை கர்நாடகம் மேல் பகுதி மாநிலமாகவும், தமிழ்நாடு கீழ்பகுதி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. இந்த மாநிலங்களுக்கிடையே காவிரி நதிநீர் பங்கீடானது, ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி பங்கிடப்பட்டு வந்தது. ஆனால், காலப்போக்கில் இரு மாநிலங்களுக்கும் இடையே நதிநீர் பங்கீடு தொடர்பாக தாவா ஏற்பட்டதால், காவிர நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 

அய்யாக்கண்ணு கருத்து

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணுகாவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை டெல்டா மாவட்ட விவசாயிகள் பலரும் வரவேற்றுள்ளனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.அய்யாக்கண்ணு, "தமிழகத்திற்கான தண்ணீர் பங்கீடு அளவை சற்றே குறைத்து, உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பு ஓரளவுக்கு ஏமாற்றமளித்தபோதிலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த வாரியம் அமைக்கப்பட்டால், நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழ்நாட்டிற்கான தண்ணீர் திறப்பை வாரியமே கண்காணிக்கும். தவிர, கர்நாடக மாநிலம் தன் பாசனப் பரப்பையும் அதிகரிக்க முடியாது" என்றார்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், "காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் நலனுக்கு எதிரானது. காவிரி வழக்கில் மேல்முறையீடு செய்யமுடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது; மேல்முறையீடு செய்ய அனுமதிக்க வேண்டும்" என்றார். 

அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான ஏ.நவநீதகிருஷ்ணன் கூறுகையில், "உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாகப் படித்துவிட்டு தமிழகம் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும். தமிழகத்தின் நிலத்தடி நீர் கணக்கிடப்பட்டு, காவிரி நீர் தமிழகத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது" என்றார்.

இந்தத் தீர்ப்பை வரவேற்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பால் கர்நாடகாவில் பெருமளவு தண்ணீர் பற்றாக்குறை தீரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

'காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்' என்பதே டெல்டா விவசாயிகளின் முக்கியக் கோரிக்கை. காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பில், அதற்கான உத்தரவை நீதிபதிகள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதுடன், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள தண்ணீரை முழுமையாக வழங்கினாலே, காவிரிப் பிரச்னைக்கு ஓரளவு தீர்வு ஏற்பட்டு விடும் என்பது உறுதி.

 

இதற்கிடையே, காவிரி தீர்ப்பையடுத்து, தமிழக - கர்நாடக எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரு மாநில பேருந்துகளும், அந்தந்த மாநிலங்களின் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.

https://www.vikatan.com/news/coverstory/116642-this-is-against-our-people-says-politicians.html

  • தொடங்கியவர்

காவிரி தீர்ப்பில் கர்நாடகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

காவிரி நதிநீர் விவகாரத்தில் தனது தீர்ப்பை வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம் தமிழகத்தின் பங்கை 192 டி.எம்.சியில் இருந்து 177.25 டி.எம்.சியாக குறைத்துள்ளது.

உச்ச நீதிமன்றம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தமிழகத்தின் பங்கு 14.75 டி.எம்.சி குறைந்திருந்தாலும், கர்நாடக அரசு முன்வைத்த வாதங்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

கர்நாடகாவில் உற்பத்தியாகும் நதி என்பதால் அம்மாநிலம் தான் விரும்பும் வகையில் காவிரி நீரைப் பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி அமிதவா ராய் மற்றும் நீதிபதி ஏ.என்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு.

இரு மாநிலங்கள் வழியாகப் பாயும் அந்த நதி ஒரு தேசிய சொத்து என்றும் ஒரு மாநிலத்துக்கு மட்டுமே சொந்தமானதாக கருத முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர்.

இதற்கு முன்பு 1892 மற்றும் 1924 ஆகிய ஆண்டுகளில் மைசூர் சமஸ்தானத்துக்கும் சென்னை மாகாண அரசுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தங்களை காவிரி நடுவர் மன்றம் புதிய தீர்வுகளைக் கட்டுப்படுத்தும் அம்சமாக ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது என்ற கர்நாடக அரசின் வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. "அந்த ஒப்பந்தங்களில் எந்த அரசியல் ரீதியான ஏற்பாடும் இல்லை. அவை இந்திய இறையாண்மையை பாதிக்கும் வகையிலும் இல்லை," என்று கூறினர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராபடத்தின் காப்புரிமைDDNEWS Image captionஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

"அந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்ட காலத்தில் கர்நாடக அரசுக்கு தனது தரப்பை முன்வைப்பதற்கான வாய்ப்பு இல்லை எனும் கர்நாடக அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்டாலும், 1947இல் சுதந்திரம் அடைந்த பிறகோ, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகோ நிச்சயமாக அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கும். கர்நாடக (1956இல்) மாநிலம் உருவாக்கப்பட்டபின்னும் அந்த இரு ஒப்பந்தங்களையும் கர்நாடக எதிர்க்கவில்லை. எனவே அந்த ஒப்பந்தங்களை கருத்தில் கொள்ளமுடியாததாக கூற முடியாது," என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

காவிரி நடுவர் மன்றத்தால் மதிப்பீடு செய்யப்பட்ட தமிழகத்தில் உள்ள காவிரிப் பாசன விளைநிலப் பரப்பு தவறானது என்றோ பிழையானது என்றோ கூற முடியாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

தமிழகத்தின் வீட்டு உபயோகத்திற்கும் தொழிற்சாலைகளுக்கும் தேவைப்படும் நடுவர் மன்றம் கணக்கிட்ட அளவில் எந்த மாற்றத்தையும் செய்யாத நீதிமன்றம் அதில் எந்த குறுக்கீடும் செய்யத் தேவை இல்லை என்று கூறியுள்ளது.

cauveryபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கேரளா மற்றும் புதுச்சேரிக்கு காவிரி நடுவர் மன்றம் நிர்ணயித்த 30 டி.எம்.சி மற்றும் 7 டி.எம்.சி ஆகியவற்றில் நீதிமன்றம் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

இறுதிப் பங்கீட்டு முறையை வகுத்து அமல்படுத்தும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகள் சட்டத்தின் பிரிவு 6Aவின் படி தங்கள் முடிவுக்கே விட்டுவிட வேண்டும் என்ற மத்திய அரசின் வாதங்களையும் ஏற்க மறுத்த நீதிமன்றம் காவிரி நடுவர் மன்றமே பங்கீட்டு முறையை வகுத்துள்ளதாக கூறியுள்ளது.

 

http://www.bbc.com/tamil/india-43089745

  • தொடங்கியவர்

பறிகொடுத்தது தமிழகம்

 

''அலங்கு கதிர்க் கனலி நால்வையின் தோன்றினும் இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்  அநதண் காவிரி வந்து கவர்ப்பு ஊட்டத் ஆடுகண் கரும்பின் வெண்பு நுடங்கும்...'' என புறநானூறு பாடுகின்ற காவிரி தமிழனோடு ஒன்றாகி உயிராகி ஊனாகி அவன் உயிர் பிரிந்து சாம்பலான போதும் அதனை தன்னுள் கரைத்து சுமக்கின்ற தாயாவாள். தமிழ் இலக்கியங்களில் பொன்னி என்றும் அழைக்கப்பட்ட காவிரி இன்று கர்நாடகாவிடம் தாரை வார்க்கப்பட்டுள்ளாள்.  

பொன்னியின் செல்வன் என புவி ஆண்ட சக்கரவர்த்தியான இராஜ ராஜ சோழன் போற்றப்பட காரணமான காவேரி தாய் இன்று தமிழகத்தின் மாற்றான்தாய் போல மாற்றப்பட்டுள்ளாள். பொன்னி நதி பெருக்கெடுத்து வளம் பூத்துக்குலுங்கிய தமிழ்நாடு என்று சிறப்பிக்கப்பட்ட தமிழகத்தின் நீர் வளம் சுரண்டப்பட்டு இன்று அந்நிய மண்ணில் கையேந்தி தோற்றுப்போயுள்ளது. இழக்கப்பட்டது நீர் மட்டும் அல்ல.. தமிழனின் உரிமையும்தான்.

நாம் குரங்காக இருந்த போதும் காவிரி இருந்தது. அதனால் யாரும் அதனை உரிமை கொண்டாடக்கூடாது என்கிறார்கள். உண்மைதான் நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்றெல்லாம் தனிப்பட்ட யாருக்கும் சொந்தமானது அல்ல. அது இறைவனை போல எல்லோருக்குமே. ஆனால் அதனால் எல்லோரும் பயன்பெற வேண்டும் என்பது தான் முக்கியம். இங்கு காவிரி பிரச்சினை 200 ஆண்டு காலமாக முடிவு எட்டப்படாத பிரச்சினையாக இருந்த நிலையில் இப்போது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இறுதித் தீர்ப்பு ஏற்புடையதா எனபது கேள்விக்குறியே! இத்தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவும் முடியாது. காவிரி கர்நாடகாவில் ஊற்றெடுத்து தமிழகத்துக்குள் ஓடுகிறது. பெரும்பாலான பகுதி தமிழகத்திலேயே உள்ளது.

காவிரி கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்கு சம மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் ஊற்றெடுக்கிறது. இதன் நீளம் 800 கி.மீ. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ரூரல், சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாகவும் தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. காவிரிக்கு 'பொன்னி' என்று பெயர் வந்ததற்கு அதன் நீரில் அடங்கியிருந்த தாதுக்களில் தங்கத் தாது சற்று அதிக அளவில் இருந்திருக்கிறது. அதேபோல இந்த ஆறு தான் செல்லுமிடமெல்லாம் பூங்காக்களை விரித்துச் செல்லுவதால் காவிரி எனப் பெயர் பெற்றது.

கர்நாடகாவில் காவிரியின் நீளம் 320 கி.மீ .தமிழ்நாட்டில் காவிரியின் நீளம் 416 கி.மீ . கர்நாடக தமிழக எல்லையில் காவிரியின் நீளம் 64 கி.மீ .ஆகும்.கர்நாடகாவை விட தமிழகத்திலேயே அதிகமாக காவிரி தவழ்கிறது. காவிரி நீரானது பாசனத்திற்காகவும், மக்களின் அன்றாடத் தேவைகளுக்காகவும் நீர் மின்உற்பத்திக்காகவும் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. காவிரியின் குறுக்கே பல அணைகளும் குடிநீர் நீரேற்று நிலையங்களும் தடுப்பணைகளும் நீர்மின் நிலையங்களும் கட்டப்பட்டுள்ளன.

காவிரி ஆற்றின் சிவன சமுத்திர அருவியின் இடது பக்கம் 1902-இல் அமைக்கப்பட்ட நீர்மின் நிலையமே ஆசியாவின் முதல் நீர்மின் நிலையம் ஆகும்.

காவிரி டெல்டாவில் புதுச்சேரியின் காரைக்கால் பகுதி உள்ளதால் காவிரி கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நேரடியாக பாய்கிறது. நீர் பங்கீடு என்று வரும்போது கேரள மாநிலமும் உரிமை கோர காரணம் காவிரியின் துணை ஆறாகிய கபினி கேரளாவில் உற்பத்தியாவதும், கபினி மற்றும் அதன் துணை ஆறுகளின் நீர் பிடிப்பு பகுதிகளும் அமராவதி மற்றும் பவானியின் நீர் பிடிப்பு பகுதிகளும் கேரளாவில் இருப்பதே. இந்நிலையில் காவிரி தொடர்பில் கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையே சுமார் 200 வருடங்களாக நிலவிய பிரச்சினையில் கி.பி.1807ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே காவிரி நதிநீரை பகிர்ந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட பேச்சுவார்த்தைகள் தொடங்கின.

இது தொடர்பாக மெட்ராஸ் –- மைசூரு மாகாணங்களுக்கு இடையே கடந்த 1892ஆம் ஆண்டு முதல் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து 1924-ஆம் ஆண்டு மீண்டும் 50 ஆண்டுகளுக்கு புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் நூற்றாண்டுகள் கடந்தும் இப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை.

1986-ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். காவிரி நதிநீர் விவகாரத்துக்கு தீர்வு காண நடுவர் மன்றம் ஒன்றை அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பினார்.

காவிரி பிரச்சினை தொடர்ந்ததால் மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தை ஏற்படுத்தியது. 1990ஆம் ஆண்டு வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அப்போது மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்தது.

25.6.1991இல் காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணை வழங்கப்பட்டது. இந்த இடைக்கால ஆணைப்படி மேட்டூர் அணைக்கு 205 டி.எம்.சி. நீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் கர்நாடகா தமது பாசனப்பரப்பை 11.20 இலட்சம் ஏக்கருக்கு மேல் விரிவாக்கம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் கர்நாடகா ஏற்கவில்லை. இடைக்கால ஆணைக்கு எதிராக அவசர சட்டத்தை கர்நாடகா பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.

காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு 1991 டிசம்பர் 11 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக கர்நாடகத்தில் கட்டுக்கடங்காத வன்முறை வெடித்தது. தமிழர்களுக்கு எதிராகக் கொலைகளும், கொள்ளையும் தீவைப்பும் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் அகதிகளாக வெளியேறி தமிழகம் வந்து சேர்ந்தன.

இந்நிலையில் 2007-ஆம் ஆண்டு பெப்ரவரி 5-ஆம் திகதி இறுதித் தீர்ப்பு வழங்கியது. அதில், கர்நாடகா, தமிழகத்துக்கு 10 மாத கால இடைவெளியில் 192 டி.எம்.சி. காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து தமிழகம், 192 டி.எம்.சி. நீர் போதாது என்பதால் கூடுதலாக 72 டி.எம்.சி. நீரை திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தது. இதே வேளை கர்நாடகா, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை 132டி.எம்.சி.யாக குறைத்து உத்தரவிடக் கோரி மேன்முறையீடு செய்தது. இதே போல கேரளாவும், புதுச்சேரியும் கூடுதல் நீரை திறந்துவிடக்கோரி மேன்முறையீடு செய்தன.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் கடந்த 20 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி 9-ஆம் திகதி இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், '' மாநிலங்களுக்கிடையே ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடக்கும் காவிரி வழக்கை, ஒரே மாதத்தில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்'' என உத்தரவிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் நேற்றுதான் தீர்பளித்துள்ளது. அந்த தீர்ப்பில் காவிரியிலிருந்து வழங்கப்படும் தமிழகத்துக்கான நீர் குறைக்கப்பட்டு கர்நாடகாவிற்கு வழங்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி.தண்ணீர் கிடைக்கும்.

கடந்த 2007ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம், தமிழகத்துக்கு 192 டி.எம்.சி.தண்ணீர் வழங்க உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேவேளையில், கேரளாவுக்கு 30 டி.எம்.சி. புதுச்சேரிக்கு 7 டி.எம். சி. என்ற நடுவர் மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், காவிரி நதி நீரில் உரிமை கொண்டாட எந்த ஒரு தனிப்பட்ட மாநிலத்துக்கும் உரிமை இல்லை எனவும் தெரிவித்துள்ளது. காவிரி விடயத்தில் ஒவ்வொரு தீர்ப்பின் போதும் நீர் குறைக்கப்பட்டு ,குறைக்கப்பட்டு 205 இல் இருந்து இறுதியாக 177 க்கு வந்துவிட்டது. இதற்கு என்ன காரணம். கருணாநிதியும் ஜெயலலிதாவும் தொடர்ந்து இவ் காவிரி விவகாரத்தில் உயிர்ப்புடன் செயல்பட்டது போல இப்போதைய எடப்பாடி அரசு செயற்படவில்லை என்பதே உண்மை. ஜெயலலிதாவின் இறுதிக் காலகட்டத்தில் காவிரி பிரச்சினையில் அவர் எடுத்த முன்னெடுப்புகள் காரணமாக அவரது கொடும்பாவிகள் எரிக்கப்பட்டு அவருக்கு திவசம் கூட கர்நாடகாவில் நடத்தினர். அந்த அளவு அவர் உயிர்ப்புடன் செயற்பட்டார். ஆனால் இன்று தீர்ப்பு வெளியாகி எதிர்க்கட்சிகள் விமர்சித்து கொண்டும் கர்நாடக விவசாயிகள் கொண்டாட்டத்திலும் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும் அமைச்சர் ஜெயகுமார் இன்னும் தீர்ப்பை நாங்கள் வாசிக்கவில்லை. வாசித்து விட்டு கருத்து கூறுகின்றோம் என்கிறார். இது கருத்து கூற வேண்டிய விடயமா? தமிழக உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் எதுவும் செய்யாமல் தங்களது அரசை காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியிலேயே ஆட்சியாளர்கள் உள்ளனர். தமிழகம் தனது உரிமையை இழந்துள்ள இந்த நிலையில் தான் தமிழகத்தில் தலைவர் ஒருவர் இல்லாத வெற்றிடம் வேதனை அளிக்கிறது. தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீர் உரிமையான 192 டி.எம்.சி. நீரை வழங்க வைக்க கர்நாடகாவை வற்புறுத்தி வந்த அரசு கடைசியாக இருக்கும் பங்கில் 14.75 டி.எம்.சி.யை கோட்டை விட்டு நிற்கிறது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி தண்ணீர் வழங்க மட்டும் மறுப்பு தெரிவித்து வந்த கர்நாடகா இன்றைய தீர்ப்பை கொண்டாடி வருகிறது.

தமிழகம் இத்தனை ஆண்டுகள் காவிரி நீருக்காக சட்டப்போராட்டங்களை நடத்தி காத்திருந்தது. ஆனால் தரவே முடியாது முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்று விடாப்பிடியாக இருந்த கர்நாடகாவிற்கே தீர்ப்பு சாதகமாகியுள்ளது. காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு வழக்கு போட்டதே தவிர அதில் முழுக்கவனம் செலுத்தவில்லை என்பது எதிர்க்கட்சிகளினதும் விவசாய சங்கங்களின் குற்றச்சாட்டு. கர்நாடக முதல்வர் சித்தராமையா காவிரி தொடர்பில் அடிக்கடி டில்லிக்கு பயணித்தார். பா.ஜ.க. வழக்கறிஞர் பாலி நாரிமனை டில்லியில் நேரில் சந்தித்து காவிரி நீர் தங்களுக்கே ஏன் கிடைக்க வேண்டும் என்று விளக்கினார்.ஆனால் முதல்வர் பழனிசாமி அதை செய்தாரா?ஓராண்டில் எத்தனை முறை காவிரி நீர் வழக்கில் வாதாடும் வழக்கறிஞர்களை முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்திருக்கின்றனர். இறுதித் தீர்ப்பு வெளிவந்த சில நிமிடங்களில் தீர்ப்பை வரவேற்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார் சித்தராமையா.ஆனால் முதல்வரும், துணை முதல்வரும் இது குறித்து வாய்திறக்காமல் விமர்சனங்கள் வரும் வரை மெளனம் சாதித்தனர். நீர் இன்றி விவசாய பயிர்கள் கருகுவதும் விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்வதும் போராட்டங்கள் நடத்துவதும் தொடர்கதையாக உள்ள நிலையில் அதனை தடுப்பதற்கான முயற்சியை தமிழக அரசு எடுக்கத் தவறிவிட்டது. கர்நாடக அரசை பாராட்டியே ஆக வேண்டும். அம்மாநில முதல்வர் அம்மக்களுக்கு எது தேவையோ அதனை போராடி பெற்றிருக்கிறார். அங்குள்ள கர்நாடக அமைப்புகளும் கூட தமிழகத்துக்கு நீர் கொடுக்கக் கூடாது என தொடர்ந்து கடும் போராட்டங்களிலும் வன்முறைகளிலும் ஈடுபட்டன. அவற்றுக்கு இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சிதான். ஆனால் தமிழகத்தில் அந்த உணர்வுகள் இன்று இல்லாதது வேதனையானது. ஜிமிக்கி கம்மலையும் நடிகைகள் கண் சிமிட்டுவதையும் கொண்டாடுபவர்கள் நம் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் காப்பாற்ற தமிழ் உணர்வுகளுக்காக ஒன்றிணைவது குறைவு. தண்ணீர் இன்றி, விவசாயம் பொய்த்து, அதனால் கடன் வாங்கி உயிரிழக்கும் விவசாயிகளின் துயர நிலைக்கு தீர்வு எப்போது எட்டப்படும். இந்த காவிரி நீர் குறைப்பால் தமிழகத்தில் வறண்ட நிலம் மேலும் வறண்டுதான் போகும். கருகிப்போவது பயிர்கள் மட்டும் அல்ல மனிதம். காவிரி நீரால் பெறப்படும் விவசாயம் ஒருவருக்கானது அல்ல. ஊர் வயிற்றுக்கு சோறு போடுவதற்கான தாகம். அது இன்று மறுக்கப்பட்டுவிட்டது.

 உலகத்தில் தொன்மையான மொழி தமிழ் மட்டும் அல்ல இந்தியாவிலேயே தனக்கென தனி அடையாளம் கலாசாரம் அனைத்தையும் கொண்ட ஒரே இனம் தமிழினம் மட்டுமே. தமிழ் இலக்கியத்தில் புறநானூறு ,தேவாரம் என அனைத்திலும் புகழப்பட்ட காவிரியின் உரிமை இன்று பறிபோய்விட்டது. உணர்வு இல்லாத மெத்தன அரசுகள் தமிழகத்தை ஆளும் வரை...சினிமா கிரிக்கெட் போன்ற களியாட்டங்களில் மட்டும் தன்னை கட்டிப்போட்டுக்கொள்ளாது இன உணர்வு மிக்க ஒரு சமுதாயம் உருவாகும் வரை காவிரி மட்டும் அல்ல கீழடி போன்ற தமிழனின் பெருமை பாடும் தொன்மைகள் அனைத்தும் தொலைக்கப்படும் அல்லது குழிதோண்டி புதைக்கப்படும் என்பதில் ஐயமில்லை.  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-02-17#page-4

  • தொடங்கியவர்

காவிரிப் பிரச்சினை... தமிழகம் இனி என்ன செய்ய வேண்டும்?- பட்டியலிடுகிறார் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

 

 
0ae2c220

காவிரி நதிநீர்ப் பங்கீடு மற்றும் நதிகள் இணைப்பு தொடர் பாக கடந்த 30 ஆண்டு களுக்கும் மேலாக நீதிமன்றங்களில் சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார் திமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன். காவிரி தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசு இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிஇருக்கும் நிலையில், தீர்ப்பு குறித்தும் தீர்வுகள் குறித்தும் அவரிடம் கேள்விகளை முன்வைத்தோம்.

     

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து நிறைய விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன, தீர்ப்பு சரியானதுதானா?

உச்ச நீதிமன்றம் 14.75 டிஎம்சி தண்ணீரை குறைத்ததற்கு சொல்லி இருக் கும் காரணங்கள் சரியானவையாக இல்லை. பெங்களூரு நகரம் சர்வதேச அந்தஸ்து பெற்றுள்ளதற்காக கூடுதலாக தண்ணீர் தருகிறோம் என்கிறது உச்ச நீதிமன்றம். ஆனால், ஏற்கெனவே பெங்களூரு மாநகரம் நாளென்றுக்கு 140 கோடி லிட்டர் காவிரி நீரைப் பெற்று அதில் 52 சதவீதத்தை வீணாக்குகிறது என்று சமூகப் பொருளாதார ஆய்வுக் கழகம் கூறியுள்ளதை உச்ச நீதிமன்றம் பொருட்படுத்தவில்லை.

0b174249
 

தண்ணீர் குறைப்புக்கு தமிழகத்தின் நிலத்தடி நீரை உச்ச நீதிமன்றம் காரணமாகச் சொல்லி இருப்பது சரியா?

தமிழகத்தின் காவிரிப் படுகையில் நிலத்தடி நீர் இருக்கிறது என்பதற்கு 1972-ம் ஆண்டு ஐநா நிறுவனம் கொடுத்த கணக்கையும் அதன் பின்னர் 1980-ல் இந்திய அரசு நிறுவனம் கொடுத்த கணக்கையும் சான்றாகக் காட்டிய உச்ச நீதிமன்றம், கர்நாடகத்தில் காவிரிப்படுகையில் கிடைக் கும் நிலத்தடி நீர் பற்றி கணக்கு இல்லை என்று கைவிரிக்கிறது. இது உண்மைக்குப் புறம்பானது.

மேலும் இந்த வழக்கு 802 கிமீ தூரம் உள்ள காவிரி நதிநீர்ப் படுகையில் தண்ணீரின் அளவு 740 டிஎம்சி என்று கணக்கிட்டு, நடுவர் மன்றத்திடம் தமிழகத்தின் சார்பில் 562 டிஎம்சி தண்ணீரும் கர்நாடகத்தின் சார்பில் 465 டிஎம்சி தண்ணீரும் கேட்டதற்கான வழக்கு. அதாவது, காவிரியில் ஓடி வரும் நீரைப் பகிர்ந்து கொள்வதற்கான (Cauvery Water Dispute) வழக்குதானே தவிர, காவிரிப் படுகையின் நிலத்தடி நீரைப் (Cauvery Ground Water Dispute) பகிர்ந்து கொள்வதற்கான வழக்கு அல்ல.

மெட்ராஸ் மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கு கடந்த காலகட்டங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களும் துணை ஒப்பந்தங்களும் இன்றும் செல்லுபடியாகுமா?

சென்னை மாகாணமும் மைசூர் அரசும் 1892-ம் ஆண்டு கையொப்பமிட்ட ஒப்பந்தத்தின்படி பிரிட்டிஷ் அரசு, கிரிஃபின் என்ற ஆங்கிலேயரை நடுவராக நியமித்தது. 1910-ல் கண்ணம்பாடியில் மைசூர் அரசு 41.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையைக் கட்டும்போது சென்னை மாகாண அரசு எதிர்ப்பு தெரிவித்தது. பின்பு இரண்டு அரசுகளும் 11 டிஎம் சி-க்கு அணையைக் கட்ட ஒப்புக்கொண்டு, அதையும் மீறி மைசூர் அரசு 41.5 டிஎம்சி-யில் அணையை கட்ட ஆரம்பித்தது.

இப்படியான சிக்கல் இருக்கும் போது அதைத் தீர்க்க 1924-ல் இரண்டாவது ஒப்பந்தம் போட்டப்பட்டது. இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 1929, 1933 ஆகிய ஆண்டுகளில் சில பிரச்சினைகள் குறித்து துணை ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.

0b1742cb
 

1929 ஒப்பந்தத்தின்படி கிருஷ்ணராஜசாகர் அணையும் சென்னை மாகாண மேட்டூர் அணை திட்டத்தையும் நிறைவேற்ற ஒப்புக் கொள்ளப்பட்டது. நாடு விடுதலைக்குப் பின் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு தமிழகத்தின் கொள்ளேகால், கோலார், குடகு பகுதிகள் கர்நாடக மாநிலத்துக்குச் சென்றுவிட்டன. இந்த ஒப்பந்தங்களுமே காலாவதி ஆகிவிட்டன என்று கர்நாடகம் சொல்லி வந்ததை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாமல் 1892, 1924 ஒப்பந்தங்கள் மற்றும் 1929, 1933 துணை ஒப்பந்தங்கள் ஆகியவை செல்லும் என்றும் தீர்ப்பளித்துவிட்டது.

இதனால் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தமிழகத்தின் உரிமைகளை சீராய்வு மனுவின் மூலமாக என்னென்ன உரிமைகளை மீட்க முடியுமோ, அதை மீட்க தமிழக அரசு முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தங்கள் காலாவதியாகவில்லை என்பது தமிழகத்துக்கு கிடைத்த பாதுகாப்பாகும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தீர்ப்பு கட்டாயமாக்கி இருக்கிறது, மேலாண்மை வாரியம் உண்மையிலேயே பயன் தருமா?

மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டாலும் கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, சாரங்கி, கபினி ஆகிய 4 அணைகளின் நிர்வாகமும் வாரியத்தின் கீழ் கொண்டு வந்தால் மட்டுமே அது நியாயமானதாக அமையும். இதேபோல தமிழகத்தின் மேட்டூர், பவானி சாகர், அமராவதி ஆகிய 3 அணைகளும் கேரளத்தின் பாணாகர சாகர் அணையும் வாரியத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தீர்ப்பு வெளியான நாளிலிருந்து ஆறு வாரத்துக்குள் இந்தப் பணி முடிவாக வேண்டும். இதனையும் உச்ச நீதிமன்ற கவனத்துக்கு தமிழக அரசு கொண்டு செல்ல வேண்டும்.

கர்நாடகம் மட்டுமின்றி, மத்திய அரசும் மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு ஒத்துழைப்பு தரவில் லையே?

முதலில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று மேலாண்மை வாரியத்தை அமைப் போம் என்று உறுதியளித்த பின்பு அந்த நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியது. மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் தனது வாதத்தை மாற்றி முன்வைத்தது.

பாஜக-வின் மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக செய்யும் வஞ்சகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மத்திய அரசு மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப் பங்கீடு சட்டப்பிரிவு 6 (ஏ) கீழ் செயல்திட்டம் என்ற ‘ஸ்கீம்’ (Scheme) அமைப்பு முறையின் கீழ் தான் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று ஆணையம் உருவாக்க முடியும் என்று வாதத்தையும் வைத்தது. மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர்த் தகராறு சட்டப் பிரிவு 6(ஏ) தண்ணீர் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துவிட்டால், அதை செயல்படுத்த அதற்குரிய தனிப்பொறியமைவை (SCHEME) மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்பதில் ஆங்கிலத்தில் ‘May’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அச்சொல், ‘அமைக்கலாம்’ என்ற பொருள் தருவதால், அதை மாற்றி ‘அமைக்க வேண்டும்’ எனப் பொருள் தரும் ‘Shall’ போட வேண்டுமென்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியபோது, நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் ரஞ்சித்குமார், “அதைக் கட்டாயமாக்கி மாற்ற வேண்டாம், ‘May’ அப்படியே இருக்கட்டும், மத்திய அரசு பார்த்துக் கொள்ளும்” என்று கூறினார். இதுவும் தீர்ப்பில் வந்துள்ளது.

KS%20Radha%20Krishnan
 

காவிரி நீரை அளவிடுவதில் தற்போதுள்ள நடைமுறை சரியானதா?

தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரியின் தண்ணீரை அளவெடுக்கிறார்கள். நியாயமாக பார்த்தால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் இடத்திலிருந்தே அளவிட வேண்டும். இதையும் சீராய்வு மனுவில் வலியுறுத்த வேண்டும். ஏனெனில், பிலிகுண்டுலுவில் இருந்து மேலே 70 கிமீ தொலைவு வரையுள்ள காவிரியின் மேற்குப் பகுதி தமிழகத்தின் எல்லையாகும். பிலிகுண்டுலுவில் இருந்து இயற்கையாக உற்பத்தியாகின்ற தண்ணீர் சிற்றாறுகளின் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்ட நீர்நிலைகளுக்கு வரும் தண்ணீரும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு, மாதேஸ்வரன் மலைப் பகுதியில் வரும் தண்ணீரையும் காவிரித் தண்ணீர் என்று கர்நாடகம் கணக்கு காட்டியது உண்டு. எனவே பிலிகுண்டுலுவைத் தவிர்த்து கர்நாடக அணைகளை கணக்கிட்டால் 15 முதல் 20 டிஎம்சி தண்ணீர் நமக்கு கிடைக்கும். இந்த நியாயத்தையும் கர்நாடகம் மறுக்கின்றது.

தீர்ப்பை அடுத்து மேகதாது உட்பட கர்நாடகம் காவிரியில் கட்டவிருக்கும் புதிய அணைகளின் நிலை என்ன?

கர்நாடகம் தற்போது மேகதாது, ராசி மணல், சிவசமுத்திரம் ஆகிய இடங்களில் 4 பெரிய அணைகளைக் கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கான அறிக்கைகளும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேகதாது அணையின் உயரம் 441.8 மீட்டர் [1546 அடி உயரம்]. அதில் 75 டிஎம்சி நீரை தேக்க முடியும். இது மேட்டூர் அணையின் கொள்ளளவை விட அதிகம். ராசிமணல், சிவசமுத்திரம் ஆகிய இடங்களில் கட்டப்படவுள்ள 3 அணைகள் மூலம் மேலும் 45 டிஎம்சி நீர் தேக்கப்படும். இதோடு தடுப்பணைகளையும் காவிரியின் குறுக்கே கட்ட திட்டங்களை தீட்டியுள்ளது. ஆனால், இந்த தீர்ப்பின் விளைவாக கர்நாடகம் புதிய அணைத் திட்டங்களை நிறைவேற்றவோ அதற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கவோ முடியாது.

தீர்ப்பால் தமிழகம் எதிர்கொள்ளவிருக்கும் பாதிப்புகள் என்ன?

தமிழகத்தின் சாகுபடி பரப்பு மேலும் குறையும். 88,500 ஏக்கர் நெற்பயிர் விளைச்சல் கேள்விக்குறியாகும். காவிரி - வெண்ணாற்றிலிருந்து பிரியும் 36 கிளை ஆறுகள், ‘ஏ’ பிரிவு வாய்க்கால் மற்றும் சாதாரண வாய்க்கால்கள் என்பதெல்லாம் காணாமலே போகும் வாய்ப்பு உண்டு. காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தில் தொய்வு ஏற்படும். ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்திலும் சிக்கல் ஏற்படும். ஆயிரக்கணக்கான ஏரிகள் நீர்வரத்து இல்லாமல் பாதிக்கும்.

வேறு எதுமாதிரியான தீர்வுகள் இருக்கின்றன?

டெல்டா மாவட்டங்களுக்கு மாற்று நீராதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும். காவிரி படுகையில் தஞ்சை மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஆயக்கட்டு, குடிமராமத்து செயல்பாட்டை மேம்படுத்த கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். காவிரி உட்பட கர்நாடகத்தின் 13 ஆறுகளில் 2,000 டிஎம்சி தண்ணீர் அரபிக் கடலுக்குச் செல்கிறது. இந்த உபரி நீரை திருப்பினால் கர்நாடக அணைகளுக்கே கூடுதல் தண்ணீர் கிடைக்கும். உதாரணத்துக்கு, ஹேமாவதி அணைக்கே 200 டிஎம்சி தண்ணீர் திருப்பலாம்.

இன்று நடக்கவிருக்கும் அனைத் துக் கட்சிக் கூட்டத்தில் முக்கியமாக எதைப் பற்றி விவாதிக்க வேண்டும்?

மேலே குறிப்பிட்ட அனைத்தையும் விவாதிக்க வேண்டும். மேலும் சட்டப் பேரவையை அவசரமாகக் கூட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும். சீராய்வு மனுத்தாக்கல் செய்வது குறித்து ஆலோசிக்க வேண்டும். தமிழக அனைத்துக் கட்சி தலைவர்கள் அனைவரும் பிரதமர் மோடியை சந்தித்து ஒரே குரலாக காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மேலாண்மை வாரியம் தவிர்த்து தீர்ப்பில் நல்ல விஷயமே இல் லையா?

தீர்ப்பின் மூலம் காவிரியில் மணல் அள்ளுவதை தடுக்கலாம். ஏனெனில், காவிரி நதி மேலாண்மை வாரியத்தின் கைகளுக்கு சென்றுவிட்டால் தமிழக அரசு மணல் அள்ளும் உரிமையை தவறாகப் பயன்படுத்த முடியாது.

http://tamil.thehindu.com/tamilnadu/article22822130.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.