Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திரக் கிண்ணத்தின் முதல் போட்டியில் இலங்கை - இந்தியா

Featured Replies

சுதந்திரக் கிண்ணத்தின் முதல் போட்டியில் இலங்கை - இந்தியா

 

 

இலங்­கையின் 70ஆவது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு நடத்­தப்­படும் சுதந்­திரக் கிண்ண முத்­த­ரப்பு கிரிக்கெட் தொடரின் போட்டி அட்­ட­வணை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

nidahas-trophy-2018.jpg

அதன்­படி இத் தொடரின் முதல் போட்­டியில் இலங்கை மற்றும் இந்­திய அணிகள் பலப்­ப­ரீட்சை நடத்­து­கின்­றன.

இலங்­கையின் 50ஆவது சுதந்­திர தினத்­தை முன்­னிட்டு நடத்­தப்­பட்ட சுதந்­திரக் கிண்ண கிரிக்கெட் தொட­ரா­னது தற்­போது 20 வரு­டங்­க­ளுக்குப் பிறகு மீண்டும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளது.

இலங்கை -– இந்­தியா – பங்­க­ளாதேஷ் அணிகள் மோதும் இந்த சுதந்­திரக் கிண்ண முத்­த­ரப்பு போட்டித் தொட­ரா­னது இரு­ப­துக்கு 20 போட்­டி­யாக நடத்­தப்­படுகின்­றது.

எதிர்­வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி ஆரம்­ப­மாகும் இத் தொடர் மார்ச் மாதம் 18ஆம் திகதி வரை நடை­பெறவுள்­ளது.

இப் போட்­டிகள் அனைத்தும் கொழும்பு ஆர்.பிரே­ம­தாச சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் இரவு போட்­டி­யாக நடை­பெ­ற­வுள்­ளன.

இத் தொட­ருக்­கான போட்டி அட்­ட­வணை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

அதன்­படி மார்ச் மாதம் 6ஆம் திகதி நடை­பெறும் முதல் போட்­டியில் இலங்கை – இந்­தியா மோது­கின்­றன.

மார்ச் 8: பங்­க­ளாதேஷ் – இந்­தியா

மார்ச் 10: இலங்கை – பங்­க­ளாதேஷ் 

மார்ச் 12: இலங்கை -– இந்­தியா

மார்ச் 14: பங்­க­ளாதேஷ் – இந்­தியா

மார்ச் 16: இலங்கை – பங்­க­ளாதேஷ்  ஆகிய

அணிகள்  மோதுகின்றன. இத் தொடரின் இறுதிப் போட்டி மார்ச் மாதம் 18ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/30807

  • தொடங்கியவர்

சுதந்திர கிண்ண டி20 போட்டிகளில் ஷெஹான் மதுசங்க இல்லை

சுதந்திர கிண்ண டி20 போட்டிகளில் ஷெஹான் மதுசங்க இல்லை

 

வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுசங்க நடக்கவிருக்கும் சுதந்திர கிண்ண இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாமாட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அணியுடன் நடந்த இறுதி இருபதுக்கு இருபது போட்டியில் விளையாடும் போது ஏற்பட்ட உபாதை காரணமாகவே இவரால் இப்போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரையில் இப்போட்டிகள் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://tamil.adaderana.lk/news.php?nid=100120

  • தொடங்கியவர்

`தோனி, கோலிக்கு ஓய்வு!’ - இலங்கை முத்தரப்பு டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

 
 

இலங்கை, வங்கதேசம் அணிகளுடனான முத்தரப்பு டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

India_13086.jpg

 

Photo Credit: Twitter/BCCI

இலங்கையின் 70-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகளுடனான நிதாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 போட்டி தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெறும் இந்த தொடர் வரும் மார்ச் 6-ம் தேதி தொடங்கி, 18-ம் தேதி முடிவடைகிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும், எதிரணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். முடிவில் முதல் 2 இடங்களைப்  பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும். இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைப்பளு காரணமாக கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோஹித் ஷர்மா கேப்டனாகவும், ஷிகர் தவான் துணைக் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளனர். தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் விரார் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட, ரோஹித் ஷர்மா இந்திய அணிக்குக் கேப்டனாக செயல்பட்டார். 

இந்திய அணி: 

 

ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவான் (துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், யுஷ்வேந்திர சாஹல், அக்‌ஷர் படேல், விஜய் சங்கர், ஷ்ரதுல் தாக்குர், ஜெயதேவ் உனத்கட், முகமது சிராஜ், ரிஷாப் பாண்ட் (விக்கெட் கீப்பர்).  

https://www.vikatan.com/news/sports/117441-rohit-sharma-to-lead-india-in-nidahas-trophy-2018.html

  • தொடங்கியவர்

முத்தரப்பு டி20 தொடர்: கோலி, தோனி இல்லை: இந்திய அணி அறிவிப்பு: 3 தமிழக வீரர்களுக்கு இடம்

 
 
indian%20team%202

கேப்டன் விராட் கோலி, எம்.எஸ். தோனி   -  பிசிசிஐ ட்விட்டர்

இலங்கையில் மார்ச் மாதம் நடைபெற உள்ள டி20 முத்தரப்பு தொடரில், பங்கேற்கும் இந்திய அணில் கேப்டன் விராட் கோலி, அனுபவ வீரர் எம்.எஸ். தோனி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, முற்றிலும் இளம் வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஷிகர் தவான் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மார்ச் 6-ம் தேதி முதல் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, இலங்கை தவிர மூன்றாவதாக பங்கேற்கும் அணி குறித்த தகவல் இல்லை.

இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை தேசிய தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் இன்று அறிவித்தார். இதில் சமீபத்தில் உள்நாட்டில் நடந்த சயீத் முஷ்டாக் அலி டி 20 தொடர், ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடிய வீரரக்ளுக்கு முக்கியத்துவம் அளித்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேசமயம், தென் ஆப்பிரிக்கத் தொடரில் கடுமையாக விளையாடி ஓய்வின்றி இருந்த கேப்டன் விராட் கோலி, எம்.எஸ்.தோனி, வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தில் சிக்காமல் தடுக்க, போதுமான ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்துவரும் தொடர்களில் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது என பிரசாத் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று விளையாடிய வீரர்களுக்கும், திறமையை சீராக வெளிப்படுத்திவரும் வீரர்களுக்கும் அதிகமாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ரிஸ்பா பந்த், ஆஃப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர், வேகப்பந்துவீச்சாளர் முகம்மது சிராஜ், ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாண்டயா இடத்தை நிரப்பும் வகையில் தமிழக வீரரும், வேகப்பந்துவீச்சாளருமான விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரிஷி பந்த் விக்கெட் கீப்பர் பணியைச் செய்யக்கூடியவர் என்றபோதிலும், தினேஷ் கார்த்திக்கும் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், ரிஷப் பந்த் பேட்ஸ்மன், பீல்டராக மட்டும் செயல்படுவார்.

மேலும், இந்த சீசனில் 2 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி வீரர்கள் விவரம்:

ரோகித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான்(துணைக் கேப்டன்), கே.எல். ராகுல், சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், அக்சர் படேல், விஜய் சங்கர், சர்துல் தாக்கூர், ஜெயதேவ் உனட்கத், முகம்மது சிராஜ், ரிஷ்பா பந்த்(விக்கெட் கீப்பர்)

http://tamil.thehindu.com/sports/article22849493.ece?homepage=true

  • தொடங்கியவர்

சுதந்திரக் கிண்ணம் : இலங்கை குழாம் அறிவிப்பு ; மெத்தியூஸ் வெளியே !

 

 

 

பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்று விளையாடும் முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் விபரம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

cricket.jpg

இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸின் பெயர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட குழுவில் இடம்பெறவில்லை.

பங்களாதேஷில் இடம்பெற்ற முக்கோணத் தொடரின் போது அஞ்சலோ மெத்தியூஸ் உபாதைக்குள்ளானார்.

இந்நிலையில் அவர் குறித்த காயத்தில் இருந்து இதுவரை மீண்டு வரவில்லையென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுதந்திரக் கிண்ணத் தொடருக்கு இலங்கை கிரிக்கெட் அணிக்கு டினேஷ் சந்திமால் தலைமை தாங்குகிறார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகும் சுதந்திரக் கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை குழாம் வருமாறு,

டினேஷ் சந்திமல் ( அணித் தலைவர் ), உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக, குஷல் மெண்டிஸ், தசுன் சானக்க, குஷல் ஜனித் பெரேரா, திஸர பெரேரா, ஜீவன் மெண்டிஸ், சுரங்க லக்மால், நிரோஷன் டிக்வெல்ல, சதீர சமரவிக்கிரம, இசுரு உதான, ஜெப்ரி வென்டர்ஸா, அகில தனஞ்சய, அமில அபென்சோ, அஸித பெர்னாண்டோ, லகிரு குமார, நுவான் பிரதீப், துஷ்மந்த சாமிர, தனஞ்சய டி சில்வா.

http://www.virakesari.lk/article/31076

  • தொடங்கியவர்

இலங்கை வரும் பங்களாதேஷ் குழாமில் காயத்திலிருந்து மீளாத ஷகீப்

17457925_1469857836421110_66225477443805

அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சுதந்திர கிண்ண T-20 முத்தரப்பு தொடருக்கான பங்களாதேஷ் குழாமுக்கு காயத்தில் இருந்து முழுமையாக சுகம் பெறாத நிலையில் அணித்தலைவர் ஷகீப் அல் ஷஸன் அழைக்கப்பட்டுள்ளார்.

சொந்த மண்ணில் நடைபெற்ற இலங்கையுடனான போட்டியின்போது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முன்னணி சகலதுறை வீரர் ஷகீப் அல் ஹஸன் விளையாடவில்லை. இந்நிலையில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுடனான முத்தரப்பு தொடருக்கான 16 பேர் கொண்ட பங்களாதேஷ் குழாம் இன்று (26) அறிவிக்கப்பட்டது.

 

இந்த குழாமுக்கு ஷகீப் அழைக்கப்பட்டபோதும் அவரது விரல் காயம் முழுமையாக சுகமடையவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் இந்த முத்தரப்பு தொடரின் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் மாத்திரம் ஆடுவார் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹஸன் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம், மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் பங்களாதேஷ் அணியின் தற்போதைய பந்துவீச்சு பயிற்சியாளருமான கோட்னி வோல்ஷ் இந்த தொடரில் பங்களாதேஷ் அணியின் இடைக்கால பயிற்சியாளராக செயற்படவுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் நடந்த முத்தரப்பு ஒரு நாள் போட்டியின் இறுதி ஆட்டத்தின்போதே 30 வயதான ஷகீப் அல் ஹஸனின் விரலில் காயம் ஏற்பட்டு அதற்கு தையலும் போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற இலங்கையுடனான டெஸ்ட் மற்றும் T-20 போட்டிகளுக்கான அணிக்கு சேர்க்கப்பட்டபோதும் அவர் ஆடாத நிலையில் மஹ்மூதுல்லாஹ் பங்களாதேஷ் அணியின் தலைவராக செயற்பட்டார்.

குறிப்பாக இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு தொடரை இலக்கு வைத்து இரண்டு போட்டிகள் கொண்ட T-20 தொடரில் ஷகீப் அல் ஹஸனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

 

பங்களாதேஷின் சுதந்திர கிண்ண தொடருக்கான அணியில், இறுதியாக இலங்கையுடன் இடம்பெற்ற இரண்டு T-20 போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆடிய அணியில் இருந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷகிப், இம்ருல் கைஸ், நூருல் ஹஸன் ஆகியோர் சேர்க்கப்பட்டு, மொஹமது சைபுத்தீன், சாகிர் ஹஸன், ஆதிப் ஹொஸைன் மற்றும் மொஹமது மிதுன் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளராக இருந்த சந்திக்க ஹத்துருசிங்க இலங்கை அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றதை அடுத்து ஜிம்பாப்வேயில் பிறந்த ரிச்சர்ட் ஹால்சால் பங்களாதேஷ் அணியின் இடைக்கால பயிற்சியாளராக செயற்பட்டார். அவர் 2014 நடுப்பகுதி தொடக்கம் பங்களாதேஷ் அணியின் களத்தடுப்பு மற்றும் உதவி பயிற்சியாளராக செயற்பட்டவராவார். ஹத்துருசிங்கவுக்கு பதில் புதிய பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கப்படாத நிலையிலேயே அவருக்கு தலைமை பயிற்சியாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

ஹால்சால் பயிற்சியாளர் பொறுப்பில் இடம்பெறாததற்கான காரணம் கூறப்படாத நிலையிலேயே தற்பொழுது வோல்சுக்கு இடைக்கால பயிற்சியாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

வரும் மார்ச் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சுதந்திரக் கிண்ண முத்தரப்பு தொடரில் பங்களாதேஷ் அணி தனது முதல் போட்டியாக மார்ச் 8ஆம் திகதி இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை ஒட்டியே இந்த முத்தரப்பு தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் மின்னொளியிலேயே அனைத்துப் போட்டிகளும் நடைபெறவுள்ளன. ஆரம்ப சுற்றில் ஒரு அணி ஏனைய அணியுடன் தலா இரண்டு போட்டிகளில் ஆடவுள்ளது. அதன் நிறைவில் முதல் இரண்டு இடங்களையும் பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

பங்களாதேஷ் குழாம்

ஷகீப் அல் ஹஸன் (தலைவர்), மஹ்முதுல்லாஹ், தமிம் இக்பால், சௌம்யா சர்கர், இம்ருல் கைஸ், முஷ்பிகுர் ரஹிம் (விக்கெட் காப்பாளர்), சபீர் ரஹ்மான், முஸ்தபிசுர் ரஹ்மான், ருபெல் ஹொஸைன், தஸ்கின் அஹமது, அபூ ஹைதர், அபூ ஜயெத், ஆரிபுல் ஹக், நஸ்முல் இஸ்லாம், நூருல் ஹஸன், மஹெதி ஹஸன்.

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நிரோஷன், மாலிங்க மற்றும் மெதிவ்ஸின் இழப்பு குறித்து குருசிங்கவின் விளக்கம்

Niroshan Dickwella

சுதந்திர கிண்ண முத்தரப்பு T-20 தொடருக்கான இலங்கை அணியில் இருந்து அதிரடி ஆட்டக்காரரும், விக்கெட் காப்பாளருமான நிரோஷன் திக்வெல்ல நீக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனையளிப்பதாக இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.

 
 

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தையொட்டி, இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு T-20 தொடர் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளது.

 

இந்த தொடருக்கான இந்திய அணி மற்றும் பங்களாதேஷ் அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தொடரை நடத்துகின்ற இலங்கை அணி வீரர்களின் விபரம் நேற்று (28) அறிவிக்கப்பட்டது. இதில் பங்களாதேஷில் இடம்பெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரின் போது காயத்திற்கு உள்ளாகிய அஞ்செலோ மெதிவ்ஸ் உபாதையிலிருந்து மீளாத காரணத்தினால், இந்த குழாமில் உள்ளடக்கப்படவில்லை. மெதிவ்ஸ் இல்லாத இலங்கையை டெஸ்ட் அணித் தலைவரான தினேஷ் சந்திமால் வழிநடத்தவுள்ளார்.

இதேவேளை, பங்களாதேஷ் அணிக்கெதிரான T-20 தொடரில் பெரிதும் பிரகாசிக்காமையினால் அப்போதைய இலங்கை குழாமில் உள்வாங்கப்படாத வேகப்பந்து வீச்சாளர்களான சுரங்க லக்மால் மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் இத்தொடருக்கான இலங்கை அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், தற்போது நடைபெற்றுவருகின்ற உள்ளூர் T-20 போட்டித் தொடரில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற நட்சத்திர வீரர் லசித் மாலிங்க தொடர்ந்தும் அணியிலிருந்து புறக்கணிப்பட்டுள்ளார்.

இதில் இலங்கை அணிக்காக அண்மைக்காலமாக விளையாடி வந்த இளம் நட்சத்திர வீரர் நிரோஷன் திக்வெல்ல மற்றும் லசித் மாலிங்க ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெறாதது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க க்ரிக் பஸ் இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியில், இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு இந்த அணித் தெரிவு சிறந்த உதாரணமாகும். தற்போது எமது அணியில் துடுப்பாட்ட வீரர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் கடும் போட்டி நிலவி வருகின்றது. இதனால் வீரர்களுக்கு தமது திறமைகளை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதிலும், அண்மைக்காலமாக இலங்கை அணியில் இடம்பெற்று சிறப்பாக விளையாடி வருகின்ற நிரோஷன் திக்வெல்ல அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. ஆனால் குசல் ஜனித் பெரேரா உபாதையிலிருந்து குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் யாராவாது அணியிலிருந்து வெளியே செல்ல வேண்டும்.

எனினும், தற்போது திக்வெல்ல எமது இறுதி 15 பேர் கொண்ட அணியில் இடம்பெறாவிட்டாலும், எதிர்காலத்தில் இலங்கை அணிக்காக விளையாடவுள்ள முன்னிலை வீரராக உள்ளார்” எனத் தெரிவித்தார்.

இதில் கடந்த வருடம் முற்பகுதியில் நடைபெற்ற தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கெதிரான T-20 தொடர்களை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்த நிரோஷன் திக்வெல்ல, இலங்கை அணியின் நிரந்தர வீரராக இடம்பிடித்து டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T-20 போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வந்தார்.  

எனினும், அண்மையில் நிறைவுக்குவந்த பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் முதல் T-20 போட்டியில் 11 ஓட்டங்களைப் பெற்றக்கொண்ட திக்வெல்ல, 2ஆவது போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். இதன்படி, அவர் இறுதியாகப் பங்கேற்ற 5 T-20 போட்டிகளில் 13.4 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் முறையே 17, 13, 25, 1 மற்றும் 11 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இவ்வாறு திக்வெல்ல தொடர்ந்து மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்துவதற்கு முக்கிய காரணமாக அவரை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறக்காமல் அடிக்கடி துடுப்பாட்ட வரிசையை மாற்றுவது என தெரிவிக்கப்படுகின்றது.

 
 

இதேநேரம், அண்மைக்காலமாக இலங்கை அணியில் வாய்ப்பு கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டுவரும் லசித் மாலிங்க தொடர்பில் அசங்க குருசிங்க கருத்து வெளியிடுகையில், ”மாலிங்க தற்போது இடம்பெற்றுவருகின்ற உள்ளூர் T-20 போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் கடந்த 2 மாதங்களாக அவர் எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடியிருக்கவில்லை. அதிலும் கடந்த காலங்களில் அவரால் திறமைகளை வெளிப்படுத்த முடியாது போனமை தொடர்பில் அவர் நன்கு அறிந்தும் வைத்துள்ளார். நான் மாலிங்கவுடன் பேசியபோது அவர் மனவேதனையுடன் இருப்பதை அறிய முடிந்தது.

எனினும், சுரங்க லக்மாலும், நுவன் பிரதீப்பும் மீண்டும் அணிக்குள் திரும்பியுள்ளதால் மாலிங்கவை இணைத்துகொள்வது கடினமாக உள்ளது. நாம் ஒரு போட்டித் தொடரை மாத்திரம் கருத்திற்கொண்டு அணித் தேர்வினை மேற்கொள்வதில்லை. எமது இலக்கு 2019 உலகக் கிண்ணப் போட்டிகளாகும். எனவே, மாலிங்க தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி திறமைகளை வெளிப்படுத்தினால் நிச்சயம் அணியில் இணைத்துகொள்ளப்படுவார்” என தெரிவித்தார்.

இந்நிலையில் அஞ்செலோ மெதிவ்ஸ் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், மெதிவ்ஸ் எமது அணியில் உள்ள சிறந்த வீரராவார். அவர் அணியில் இடம்பெறாதது மிகப் பெரிய இழப்பாகும். உண்மையில் எம்மைப் போல மெதிவ்ஸும் தனது உபாதை குறித்து அதிகம் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றார்.

இதேவேளை, முத்தரப்பு T-20 தொடரை முன்னிட்டு இலங்கை வீரர்களுக்காக நடத்தப்பட்டு வருகின்ற பயிற்சி முகாமில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான மஹேல ஜயவர்தனவும் இணைந்துகொண்டதாகத் தெரிவித்த அசங்க குருசிங்க, மஹேலவின் அனுபவம் நிச்சயம் இலங்கை வீரர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

”உண்மையில் எமது பயிற்சி முகாமுடன் இணைந்துகொள்ளுமாறு நாம் மஹேலவிடம் கேட்டிருந்தோம். அவர் அதற்கு உடனே சம்மதமும் தெரிவித்திருந்தார். அதிலும் T-20 போட்டியில் சிறப்பாக விளையாடி அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக மாத்திரமல்லாது, ஒரு பயிற்றுவிப்பாளராகவும் அவருக்கு நிறைய அனுபவம் இருக்கின்றது. எனவே, இப்பயிற்சி முகாமின் போது T-20 போட்டியில் முதல் 6 ஓவர்களில் எவ்வாறு துடுப்பெடுத்தாட வேண்டும் என்பது தொடர்பிலும் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கினார்” எனவும் அவர் தெரிவித்தார்.

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்க இலங்கை சென்றடைந்தது இந்திய கிரிக்கெட் அணி

 

 
 

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை, வங்காளதேசம் அணிகளுடனான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றடைந்தது. #T20ITriSeries #TeamIndia #BCCI

 
முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்க இலங்கை சென்றடைந்தது இந்திய கிரிக்கெட் அணி
 
கொழும்பு:

இந்தியா, இலங்கை, வங்காள தேச அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இலங்கையில் நடக்கிறது. இந்த தொடர் 6-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கு நிதாஹாஸ் டிராபி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் முன்னணி வீரர்கள் தென்ஆப்பிரிக்கா தொடரில் தொடர்ந்து விளையாடியதன் காரணத்தாலும், ஐபிஎல் தொடருக்குப்பின் தொடர்ந்து வெளிநாட்டு தொடர்கள் இருப்பதாலும் கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் டோனி, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, புவனேஸ்வர் குமார், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் இந்தியா தொடரை சந்திக்கிறது.

201803042356567276_1_indiasrilanka-0403._L_styvpf.jpg

இந்நிலையில், இந்த முத்தரப்பு டி20 தொடரில் விளையாட இருக்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்றிரவு இலங்கை சென்றடைந்தது. 6-ம் தேதி நடைபெறும் முதல் டி20 போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்ள இருக்கிறது. #T20ITriSeries #TeamIndia #BCCI

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/04235656/1148957/Indian-Cricket-Team-arrives-in-Colombo-ahead-of-T20I.vpf

  • தொடங்கியவர்

சுதந்திரக் கிண்ண இருபதுக்கு 20 தொடர் நாளை ஆரம்பம்

 

 

 

இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகள் பங்குகொள்ளும் சுதந்திரக் கிண்ணத் தொடர் நாளை 6 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

28741284_10209142466473498_1673301779_n.

சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளாக நடைபெறும் இப்போட்டித் தொடரின் அனைத்துப் போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

லீக் போட்டிகளில், ஒவ்வொரு அணியும் எதிரணிகளை தலா இரண்டு முறை எதிர்த்தாடும். புள்ளிகள் அடிப்படையில் முதலிரு இடங்களுக்கு முன்னேறும் இரு அணிகள் 18 ஆம் திகதியன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாடும்.

இலங்கை சுநத்திரமடைந்து 50 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட சர்வதேச ஒருநாள் முத்தரப்பு சுதந்திரக் கிண்ணத் தொடரில் இலங்கை, இந்தியா, நியூஸிலாந்து ஆகியன விளையாடியிருந்தன. இதில் குறித்தஒரு அணி எதிரணியை தலா மூன்று முறை எதிர்த்து விளையாடியிருந்தது. 9 லீக் போட்டிகளில் 4 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன. 

28536871_10209142466553500_1155856983_n.

இறுதிப் போட்டியில் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணியை மொஹமட் அஸாருதீன் தலைமையிலான இந்திய அணி எதிர்த்தாடியது. 

முதலில் துடுப்பெடுத்தாட  தீர்மானித்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 307 ஓட்டங்களை குவித்தது. துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக சச்சின் (128), கங்குலி (109) சிறப்பாகத் துடுப்பெடத்தாடினர். 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணிக்கு சனத் ஜயசூரிய (32) மற்றம் ரொமேஷ் களுவித்தாரண (24) ஜோடி சிறந்த ஆரம்பத்தை கொடுத்தது. இதையடுத்து அரவிந்த டி சில்வா மற்றும் மார்வன் அத்தபத்து ஜோடி  அதிரடிக துடப்பெடுத்தாடி இலங்கை அணியை சிறப்பான நிலைக்கு இட்டுச் சென்றனர். அத்தபத்து (36), அர்ஜுன (23) ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் அரவிந்த இந்திய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த வண்ணமிருந்தார். இலங்கை அணி 43.3 ஓவர்களில் 272 ஓட்டங்களை பெற்றபோது அரவிந்த 105 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இலங்கை அணியின் வெற்றிக்கு கைவசம் 5 விக்கெட்டுகள் இருக்க, 39 பந்துகளில் 36 ஓட்டங்களே தேவையாகவிருந்தது. உப்புல் சந்தன (4), குமார் தர்மசேன (2) ஆகியோர் தங்களது விக்கெட்டு தரைவார்க்க, மறுமுனையில் நிதானமாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தரொஷான் மஹநாம 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க போட்டியில் திருப்புமுனை ஏற்பட்டது. இதன்போது இலங்கை அணிக்கு 12 பந்துகளில் 13 ஓட்டங்களே வெற்றிக்கு தேவைப்பட்டது. இறுதியில் இலங்கை அணி 49.3 ஓவர்களில் 301 ஓட்டங்களைப் பெற்று 6 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. போட்டியின் நாயகனாக சச்சின் டெண்டுல்கர் தெரிவானதுடன், தொடரின் நாயகனாக அரவிந்த டி சில்வா தெரிவானார். 

இலங்கையில் 1998 இல் நடைபெற்ற பொன்விழா  சுதந்திர கிண்ணத்தை இந்தியா வெற்றிக்கொண்டிருப்பினும், இந்தியாவில் 1997 நடைபெற்ற  பொன்விழா  சுதந்திர கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியிருந்தமை நினைவுகூரத்தக்கது.

மெத்தியூஸ் காயம்

பங்களாதேஷில் இடம்பெற்ற முக்கோண ஒரு நாள் தொடரின் போது காயத்துக்குள்ளான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான இலங்கை அணித்தலைவர் எஞ்சலோ மெத்தியூஸ், அசேல குணரட்ன, ஷெஹான் மதுஷங்க ஆகியோர் உபாதைக்குள்ளாகிருப்பதால்,  இலங்கை கிரிக்கெட் குழாத்தில் இணைக்கப்படவில்லை. 

சந்திமால் தலைமை

பங்களாதேஷில் நடைபெற்ற மூவகைப் போட்டிகளிலும் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு இலங்கை அணியை சிறப்பாக வழிநடத்திய இலங்கை டெஸ்ட் அணித்தலைவரான தினேஷ் சந்திமால் இத்தொடரிலும் இலங்கை அணிக்கு தலைமை தாங்குகிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் உப அணித்தலைவராக செயற்படவுள்ளார்.

காயத்திலிருந்து மீண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா, வேகப்பந்துவீச்சாளர்களான நுவன் பிரதீப் மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தற்போது பூரணமாக குணமாகியுள்ளதால் மீண்டும் இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் சபை அண்மையில் நடத்திய உள்ளூர் இருபதுக்கு 20 தொடரில் விளையாடிய லசித் மாலிங்க 3 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்த போதிலும், உத்தேச குழத்தில் கூட இடம் கிடைக்காமை அவரது துரதிர்ஷ்டமே. 

இலங்கை குழாம்

தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), சுரங்க லக்மால் ( உப அணித்தலைவர்) , உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், தசுன் சானக்க, குசல் பெரேரா, திசர பெரேரா, ஜீவன் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, நிரோஷன் திக்வெல்ல, இசுரு உதான, ஜெப்றி வெண்டர்சே, அக்கில தனஞ்சய, அமில அபொன்சோ, அசித்த பெர்ணான்டோ, லஹிரு குமார, நுவன் பிரதீப், துஷ்மந்த சமீர, தனஞ்சய டி சில்வா

தோனி, கோஹ்லிக்கு ஓய்வு

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, மஹேந்திர சிங் தோனி, ஹார்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. கோஹ்லிக்கு பதிலாக ரோஹித் ஷர்மா இந்திய அணியை வழிநடத்துகிறார். இக்குழாத்தில், தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், வொஷிங்டன் சுந்தர் இணைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் அஷ்வின், ஜடேஜா ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.

இந்திய குழாம்

ரோஹித் ஷர்மா ( அணித்தலைவர்) , ஷிகர் தவான், லோக்கேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூதா, வொஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால், அக்ஸர் பட்டேல், விஜய் சங்கர், ஷ்ரதுல் தாகூர், ஜயதேவ் உனட்கட், மொஹமட் சிராஜ், ரிஷாப் பாண்ட்

ஷகிப் விளையாடுவாரா?

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஷகிப் அல் ஹசன் பங்களாதேஷில் அண்மையில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின்போது காயத்துக்குள்ளானார். இதனால், எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது. தற்போது பூரண குணமடையாவிட்டாலும், சுதந்திரக் கிண்ணத் தொடரக்கான பங்களாதேஷ் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். இவர் பங்களாதேஷ் பங்குகொள்ளும்  கடைசி இரண்டு லீக் போட்டிகளிலும் விளையாடுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறித்துள்ளது.

இதேவேளை, சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பங்களாதேஷின் சர்வதேச ஒருநாள் அணித்தலைவரான மஷ்ரபி மொர்தசாவை மீண்டும் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் சபை கேட்டிகொண்டிருந்த போதிலும் அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்திரந்தமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் குழாம்

ஷகிப் அல் ஹசன் ( அணிதலைவர்), மஹ்மதுல்லா ரியாத், தமீம் இக்பால், செளம்யா சர்கார், முஷ்விக்குர் ரஹீம், சபீர் ரஹ்மான், முஸ்தாபீஸஹர் ரஹ்மான், ருபேல் ஹுசைன், அபு ஜெய்த், தஸ்கின் அஹமட், இம்ருல்க கயிஸ், நூருல் ஹசன், மெஹெதி ஹசன், அரிபுல் ஹக், நஸ்முல் இஸ்லாம், அபு ஹைதர் 

 

போட்டி அட்டவணை

6 ஆம் திகதி இலங்கை எதிர் இந்தியா, 8 ஆம் திகதி இந்தியா எதிர் பங்களாதேஷ், 10 ஆம் திகதி இலங்கை எதிர் பங்களாதேஷ், 12 ஆம் திகதி இலங்கை எதிர் இந்தியா, 14 ஆம் திகதி இந்தியா எதிர் பங்களாதேஷ், 16 ஆம் திகதி இலங்கை எதிர் பங்களாதேஷ், 18 ஆம் திகதி இறுதிப் போட்டி

http://www.virakesari.lk/article/31299

  • தொடங்கியவர்

சுதந்திர கிண்ண சவால்கள் எவ்வாறு இருக்கும்?

Nidahas-Trophy-1-696x464.jpg

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தினை நினைவுகூறும் விதமாக இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகள் பங்குபெறும் சுதந்திர கிண்ண முக்கோண (Nidahas Trophy) T-20 தொடர் செவ்வாய்க்கிழமை (06) ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகின்றது. 

சுதந்திரக் கிண்ணம் ஒரு அறிமுகம்  

பிரித்தானிய ஆளுகையில் இருந்து 1948ஆம் ஆண்டு விடுதலை பெற்றுக் கொண்ட இலங்கை குடியரசு 1998ஆம் ஆண்டில் 50ஆவது சுதந்திர தினத்தினைக் கொண்டாடியிருந்தது. இலங்கையின் இந்த 50ஆவது சுதந்திர தினத்தினையும் இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உருவாக்கப்பட்டு 50 வருடங்கள் பூர்த்தியானதையும் நினைவுகூறும் விதமாக, இலங்கை கிரிக்கெட் சபை “சுதந்திர கிண்ணம்” என்னும் பெயரிலமைந்த முக்கோண ஒரு நாள் தொடர் ஒன்றினை அப்போது முதல் தடவையாக (1998 இல்)  நடாத்தியிருந்தது. 

 

 

1998 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதிப் பகுதியில் ஆரம்பமாகியிருந்த இந்த சுதந்திர கிண்ண தொடரில் இலங்கை அணியுடன் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதியிருந்ததுடன், தொடரின் இறுதிப் போட்டியில் 6 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்தியா முதல் சுதந்திர கிண்ண தொடரின் சம்பியன் பட்டத்தினை சுவீகரித்திருந்தது.

இது முடிவடைந்து, 20 வருடங்களின் பின்னர் இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தினையும், இலங்கை கிரிக்கெட் சபை ஆரம்பிக்கப்பட்டு 70 வருடங்கள் பூர்த்தியாவதையும் நினைவுகூறும் விதமாக இம்முறை T-20 தொடராக மீண்டும் சுதந்திர கிண்ணப் போட்டிகள் நடைபெறுகின்றது.

இம்முறைக்கான தொடரில் இலங்கை அணியோடு மோதுவதற்காக இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் விருந்தாளிகளாக இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்திருக்கின்றன.

இலங்கை அணி

கடந்த ஆண்டில் (2017 இல்) மிகவும் மோசமான பதிவு ஒன்றினை வைத்திருந்த இலங்கை, இந்த ஆண்டினை தாம் பங்குபற்றிய மூன்று வகைப் போட்டித் (டெஸ்ட், ஒரு நாள், T-20) தொடர்களினையும் கைப்பற்றி புதுவருடத்தை அதிரடியாக ஆரம்பித்திருக்கின்றது.  

இதற்கு காரணமாக இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளரான சந்திக்க ஹதுருசிங்க நியமிக்கப்பட்டதனை கூற முடியும். புதிய பயிற்றுவிப்பாளரின் வருகைக்கு பின்னரான இலங்கைத்தரப்பு அவர் அறிமுகம் செய்த வியூகங்கள் மூலம் புதிய பரிணாமத்தினை அடைந்திருக்கின்றது. இந்த வியூகங்கள் மூலம் புத்துயிர் பெற்றுள்ள இலங்கை அணி அதன் மூலம் பங்களாதேஷ் அணியுடன் அவர்களது சொந்த மண்ணில்  இடம்பெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட T-20 தொடரினை 2-0 என கைப்பற்றியிருப்பதுடன், T-20 போட்டிகளில் பெற்றுவந்த தொடர்ச்சியான தோல்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றது. இந்த சிறப்பான துவக்கம் நடைபெறப் போகின்ற சுதந்திர கிண்ணத்திலும் மேலும் முன்னெடுத்துச் செல்லும் என நம்பப்படுகிறது.  

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான இலங்கை அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் காயம் காரணமாக சுதந்திர கிண்ணத் தொடரில் இருந்து விலகியிருக்கின்றார். இதனால், இலங்கைக்கு அதிஷ்டம் பொருந்திய அணித்தலைவர் என அழைக்கப்படும் தினேஷ் சந்திமால் இந்த  T-20 தொடரில் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார்.  

Kusal Mendisஇலங்கை அணியின் துடுப்பாட்டத்திற்கு தொடரில் வலுச்சேர்க்கும் முக்கிய வீரர்களாக குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா ஆகியோர் காணப்படுகின்றனர். இதில் இளம் வீரரான குசல் மெண்டிஸ் இலங்கை அணிக்காக இறுதியாக விளையாடிய இரண்டு T-20 போட்டிகளிலும் அதிரடியான முறையில் அரைச்சதம் விளாசியிருந்ததோடு இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் உள்ளூர் T-20 தொடரின் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருக்கின்றார். அதோடு, குசல் பெரேரா,  காயத்திலிருந்து மீண்டு தற்போது இடம்பெறும் உள்ளூர் T-20 தொடரில் 43, 64 என்கிற ஓட்டங்கள் குவித்திருப்பது அவர் சிறந்த நிலையில் இருப்பதனை காட்டுகின்றது.

Kusal-Perera-2-300x200.jpgஇவர்கள் தவிர சகலதுறை வீரர்களான திசர பெரேரா, தசுன் சானக்க, தனுஷ்க குணத்திலக்க போன்ற இரும்புக்கர வீரர்கள் இருப்பது இலங்கை அணியின் துடுப்பாட்டத்திற்கு மேலும் பலம் சேர்ப்பதாகும். பங்களாதேஷுக்கு எதிராக இடம்பெற்ற T-20 தொடரில் இலங்கை வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்த திசர பெரேரா இதுவரையில் இலங்கை அணிக்காக T-20 போட்டிகளில் மொத்தமாக 557 ஓட்டங்களினை பெற்றுத்தந்திருப்பதோடு, 48  விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய அனுபவத்தினையும்  கொண்டிருக்கின்றார். அதோடு அண்மையில் இடம்பெற்ற உள்ளூர் T-20 போட்டியொன்றில் பெரேரா வெறும் 30 பந்துகளுக்கு 10 சிக்ஸர்கள் அடங்கலாக 84 ஓட்டங்களினையும் விளாசியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Thisara-2-200x300.jpgஇது தவிர காயம் காரணமாக இன்னுமொரு சகலதுறை வீரரான அசேல குணரத்னவின் சேவையும் அண்மைய போட்டிகளில் சிறப்பாக செயற்படாத காரணத்தினால் விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்லவின் சேவையும் இலங்கை அணிக்கு இல்லாமல் போயிருப்பது துரதிஷ்டமான விடயங்களில் ஒன்றாகும்.

மேலும், அணித்தலைவர் தினேஷ் சந்திமால், உபுல் தரங்க ஆகியோர் இலங்கைக்காக இருக்கும் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்கள் என்பதோடு, இவர்களிடமும் இலங்கை அணி சிறப்பானதொரு பங்களிப்பினை எதிர்பார்த்து நிற்கின்றது.

 

 

துடுப்பாட்டம் தவிர்த்து இலங்கை அணியின் பந்துவீச்சினை உற்றுநோக்கும் போது, பெரிதும் இளம் வீரர்களினையே இலங்கை அணி தம்மிடையே கொண்டிருக்கின்றது. இதில் T-20 போட்டிகளில் பெரிதான அனுபவத்தினை கொண்டிராத வேகப்பந்து வீச்சாளர்களான நுவான் ப்ரதீப், துஷ்மந்த சமீர ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இலங்கை அணியின் சிரேஷ்ட வலதுகை வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் T-20 ஒரு வருடத்தின் பின்னர் குழாத்திற்குள் சேர்க்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு உப அணித்தலைவர் பதவியும் வழங்கப்பட்டிருக்கின்றது.  

இவர்கள் மூவருடன் சேர்த்து T-20 போட்டிகளின் சிறப்பு வீரர்களில் ஒருவரான இசுரு உதான இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சுத்துறையினை முன்னெடுக்கவுள்ளார். உபாதை காரணமாக இலங்கை அணியின் மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான ஷெஹான் மதுசங்கவுக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

வேகப்பந்து வீச்சாளர்கள் தவிர்ந்து இலங்கை அணிக்கு சுழல் வீரர்களாக அகில தனன்ஞய, ஜீவன் மெண்டிஸ் மற்றும் அமில அபொன்சோ ஆகியோர் கடமை புரிய வந்திருக்கின்றனர். இதில் அனுபவமிக்கவரான ஜீவன் மெண்டிஸ், இலங்கை அணிக்கு நீண்ட காலத்திற்குப் பின்னர் திரும்பி பாராட்டும்படியான ஆட்டத்தினை வெளிக்காட்டியிருக்கின்றார். அதோடு மெண்டிசுக்கு மேலதிகமாக துடுப்பாடும் திறமையும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த குழாம் சுதந்திர கிண்ணத்தில் எதிரணிகளுக்கு சவால்தரும் வகையில் செயற்படும் என எதிர்பார்க்கலாம்.

இலங்கை குழாம்

தினேஷ் சந்திமால் (அணித் தலைவர்), சுரங்க லக்மால் (துணைத் தலைவர்), உபுல் தரங்க, தனுஷ்க குணத்திலக்க, தனன்ஞய டி சில்வா, குசல் மெண்டிஸ், தசுன் சானக்க, குசல் ஜனித் பெரேரா, திசர பெரேரா, ஜீவன் மெண்டிஸ், இசுரு உதான, அகில தனன்ஞய, அமில அபொன்சோ, நுவான் பிரதீப், துஷ்மந்த சமீர

இந்திய அணி

இலங்கை நாட்டுக்கு கிரிக்கெட் விளையாட்டு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நட்புறவான நாடுகளின் ஒன்றான இந்தியா இரண்டாவது தடவையாகவும் இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை கெளரவிக்கும் பொருட்டு இந்த தொடரில் பங்கேற்கின்றது.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளின் முடிசூடா சம்பியனாக திகழும் இந்திய அணி இறுதியாக அவர்களது தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தில் அந்நாட்டு அணியுடன் இடம்பெற்ற T-20 தொடரினை 2-1 என கைப்பற்றியிருக்கின்றனர். இதோடு இந்தியா, இலங்கை அணிக்கு எதிரான தம்முடைய இறுதி ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவுகள் அனைத்தும் இந்தியா அணி சுதந்திரக் கிண்ணத் தொடரில் மிகவும் சவாலாக ஏனைய அணிகளுக்கு காணப்படும் என்பதை உறுதி செய்கின்றது.

 

 

T-20 தரவரிசையில் 3ஆம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் அவர்களது அணித் தலைவர் விராத் கோலி, மஹேந்திர சிங் டோனி, பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் புவ்னேஸ்வர் குமார் ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வினை வழங்கியிருக்கின்றது. இந்திய அணியில் இந்த முக்கிய வீரர்கள் இல்லாது போனாலும் அவர்கள் மிகவும் திறமைமிக்க குழாத்தினையே இலங்கைக்கு அனுப்பியிருக்கின்றனர்.

Rohit-3-300x200.jpgஇத்தொடரில் இந்திய அணியினை தலைமை தாங்கும் ரோஹித் ஷர்மா இலங்கை அணிக்கெதிராக T-20 போட்டிகளில் அதிகுறைந்த பந்துகளில் (35) சதம் கடந்த சாதனையை வைத்திருக்கின்றார். T-20 போட்டிகளில் 1,700 ஐ அண்மித்த ஓட்டங்கள் வரையில் இதுவரையில் பெற்றிருக்கும் சர்மா இத்தொடரில் ஜொலிக்க எதிர்பார்க்கப்படும் ஒரு துடுப்பாட்ட வீரராவர். அதோடு, ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கும் சிக்கர் தவானும் எதிரணிகளுக்கு நெருக்கடி தரக்கூடிய அதிரடி வீரர் ஆவார். அதோடு உள்ளூர் போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தினை காண்பித்து அணிக்கு திரும்பியிருக்கும் சுரேஷ் ரெய்னாவும் இந்தியத் தரப்புக்காக போராடக் கூடியவர்.  

Shikar-Dawan-1-200x300.jpgஇவர்களோடு லோக்கேஷ் ராகுல், மனீஷ் பாண்டே, அக்ஷார் பட்டேல், தினேஷ் கார்த்திக்,  தமிழகத்தினை சேர்ந்த அறிமுக வீரர் விஜய் சங்கர் போன்றோர் இந்திய அணியின் மேலதிக துடுப்பாட்ட முத்துக்களாகும்.

பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் சுழல் வீரரான யுஸ்வேந்திர சாஹல்  ஏனைய அணிகளுக்கு மிரட்டல் விடுக்க கூடியவர்களில் பிரதானமானவர். இவர் இதுவரையில் வெறும் 16 T-20 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை வெறும் 8.40 என்கிற சராசரியோடு கைப்பற்றியிருக்கின்றார். சாஹலோடு வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியின் சுழல்பந்து துறையினை பலப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Chahal-2-300x200.jpgஇந்திய அணி சர்வதேசப் போட்டிகளில் அனுபவம் குறைந்த வேகப்பந்து வீச்சாளர்களான மொஹமட் சிராஜ், ஜய்தேவ் உனட்கட் மற்றும் சர்துல் தாக்கூர் ஆகியோருக்கு இத்தொடர் மூலம் சிறப்பாக செயற்படுவதற்கு வாய்ப்பு தந்திருக்கின்றது.

இந்தியக் குழாம்

ரோஹித் சர்மா(அணித் தலைவர்), சிக்கர் தவான், தினேஷ் கார்த்திக், மனீஷ் பாண்டே, அக்ஷார் பட்டேல், சுரேஷ் ரெய்னா, சர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், தீபக் ஹூடா, மொஹமட் சிராஜ், றிசாப் பாண்ட், லோக்கேஷ் ராகுல், விஜய் சங்கர், ஜய்தேவ் உனட்கட்

பங்களாதேஷ் அணி

சுதந்திரக் கிண்ணத் தொடரில் முதற்தடவையாக பங்குபெறும் பங்களாதேஷ் அணியின் அண்மைய T-20 போட்டிகளின் பதிவுகள் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. இறுதியாக தாம் விளையாடிய 13 T-20 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியினை மாத்திரமே அவர்கள் பெற்றிருக்கின்றனர்.

அதோடு இத்தொடருக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த பங்களாதேஷ் அணித் தலைவரும் நட்சத்திர சகலதுறை வீரருமான சகீப் அல் ஹஸனும் காயம் காரணமாக தொடரில் இருந்து இறுதி நேரத்தில் விலகியிருக்கின்றார். அதோடு, அணியில் பெரும்பாலான வீரர்கள் அனுபவம் குறைந்தவர்களாகவே காணப்படுகின்றனர். எனவே, நடைபெறப் போகின்ற சுதந்திரக் கிண்ணத் தொடரில் அதிக சவால்களை எதிர்கொள்ளும் அணியாக பங்களாதேஷ் அணியே காணப்படுகின்றது.

பங்களாதேஷ் அணிக்கு துடுப்பாட்டத்தில் பலம் சேர்க்க கூடியவர்களாக அவ்வணியினை தொடரில் தலைமை தாங்கப் போகும், மஹ்மதுல்லா மற்றும் தமீம் இக்பால் ஆகியோர் காணப்படுகின்றனர். இதில், தமிம் இக்பால் பங்களாதேஷ் அணிக்காக இருக்கும் வீரர்களில் அதிக ஓட்டங்கள் (1286 சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு தமிம் தற்போது இடம்பெற்று வரும் பாகிஸ்தான் சுபர் லீக் (PSL) தொடரிலும் பெசாவர் ஷல்மி அணிக்காக சிறப்பான முறையில் பிரகாசித்து வருகின்றார்.

Tamim-2-300x200.jpgதமிம் மஹ்மதுல்லா தவிர பங்களாதேஷ் அணியின் விக்கெட் காப்பாளர் முஷ்பிகுர் ரஹீம், செளம்ய சர்க்கர், சப்பீர் ரஹ்மான் சகீபின் இடத்தினை நிரப்ப அணிக்குள் நுழைந்திருக்கும் லிடன் தாஸ் மற்றும் இம்ருல் கைஸ் போன்றோர் பங்களாதேஷ் அணிக்கு ஓட்டங்கள் சேர்க்க எதிர்பார்க்கப்படுவர்களில் முதன்மையாக காணப்படுகின்றனர்.

 

 

Mustafizur-1-200x300.jpgபங்களாதேஷ் அணியின் பந்துவீச்சுத்துறையை நெறிப்படுத்தக் கூடியவர்களாக இளம் வேகப்பந்து வீச்சாளர்களான முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கீன் அஹமட் ஆகியோர் உள்ளனர். முஸ்தபிசுர் ரஹ்மான் T-20 போட்டிகளில் 16.92 என்கிற சிறந்த பந்துவீச்சு சராசரியினைக் கொண்டிருக்கின்றார். இந்த இருவரோடும் ரூபெல் ஹொசைனின் அனுபவமும் பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சுத்துறையினை மேம்படுத்தும் மற்றுமொரு விடயமாகும். பங்களாதேஷ் அணியின் பிரதான சுழல் வீரர்களாக மெஹதி ஹசனோடு இணைந்து நஷ்முல் இஸ்லாம் செயற்படவிருக்கின்றார்.

அனுபவம் குறைந்த இந்த இளம் பங்களாதேஷ் அணிக்கு இந்த முக்கோண T-20 தொடர் பல பாடங்கள் கற்பதற்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை.

பங்களாதேஷ் குழாம்

மஹ்மதுல்லா (அணித் தலைவர்), அபு ஜாயேத், இம்ருல் கைஸ், மெஹதி ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான், நூருல் ஹசன், சப்பீர் ரஹ்மான், தமிம் இக்பால், அபு ஹைதர், அரிபுல் ஹக், முஸ்பிகுர் ரஹீம், நஷ்முல் இஸ்லாம், ருபெல் ஹொசைன், செளம்யா சர்க்கார், தஸ்கின் அஹமட்

மோதல்களின் முடிவுகள்

இலங்கை எதிர் இந்தியா
T-20 போட்டிகள் – 10
இலங்கை வெற்றி – 4
இந்தியா வெற்றி – 6

adssd.jpg

இலங்கை எதிர் பங்களாதேஷ்
T-20 போட்டிகள் – 9
இலங்கை வெற்றி – 7
பங்களாதேஷ் வெற்றி – 2

asds-1.jpg

இந்தியா எதிர் பங்களாதேஷ்
T-20 போட்டிகள் – 5
இந்தியா வெற்றி – 5
பங்களாதேஷ் வெற்றி – 0

dsadsadsad.jpgஇறுதியாக

மூன்று அணிகளில் எந்த அணி குறைவான தவறுகளை விடுகின்றதோ அந்த அணிக்குத்தான் இந்த முக்கோண T-20 தொடரின் வெற்றியாளராக முடியும் என்பது மறுக்க இயலாத உண்மையாகும். எனவே, கிரிக்கெட் இரசிகர்களுக்கு இந்த மூன்று ஆசிய அணிகளில் சிறந்த T-20  அணி எதுவென்று பார்க்க சுதந்திரக் கிண்ணத் தொடர் ஒரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தந்திருக்கின்றது.

சுதந்திர கிண்ண போட்டித் தொடர் அட்டவணை

முதல் போட்டி – இலங்கை எதிர் இந்தியா – மார்ச் 06
இரண்டாவது போட்டி – பங்களாதேஷ் எதிர் இந்தியா – மார்ச் 08
மூன்றாவது போட்டி – பங்களாதேஷ் எதிர் இலங்கை – மார்ச் 10
நான்கவது போட்டி – இலங்கை எதிர் இந்தியா – மார்ச் 12
ஐந்தாவது போட்டி – பங்களாதேஷ் எதிர் இந்தியா – மார்ச் 14
ஆறாவது போட்டி – இலங்கை எதிர் பங்களாதேஷ் – மார்ச் 16
இறுதிப் போட்டி – மார்ச் 18

தொடரின் போட்டிகள் யாவும் கொழும்பு R. பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்.

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் இந்தியா-இலங்கை இன்று மோதல்

 

 
 

3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இலங்கையில் இன்று தொடங்குகிறது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.

 
 
 
 
3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் இந்தியா-இலங்கை இன்று மோதல்
இந்திய அணி வீரர்கள் நேற்று பயிற்சியின் போது கால்பந்து ஆடினார்கள்.
கொழும்பு:

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் போட்டியை நடத்தும் இலங்கையுடன், இந்தியா, வங்காளதேசம் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

போட்டியின் தொடக்க நாளான இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. கேப்டன் விராட்கோலி, டோனி, புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகிய 6 முன்னணி வீரர்களுக்கு இந்த போட்டி தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ரோகித் சர்மா தலைமையில் இரண்டாம் தர இந்திய அணி இதில் பங்கேற்கிறது. வாஷிங்டன் சுந்தர், தீபக் ஹூடா, ஷர்துல் தாகூர், விஜய் சுந்தர், ரிஷாப் பான்ட் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை அவர்கள் சரியாக பயன்படுத்தி கொண்டால் அணியில் தங்களது இடத்தை நிரந்தமாக்கி கொள்ள வழிபிறக்கக்கூடும். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றி கண்ட நம்பிக்கையுடன் இந்திய அணி இந்த போட்டியில் களம் காணும்.

சமீபத்தில் வங்காளதேசத்தில் நடந்த 3 நாடுகள் இடையிலான ஒருநாள் போட்டியில் சன்டிமால் தலைமையிலான இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அந்த உத்வேகத்துடன் இலங்கை அணி இந்த போட்டி தொடரை எதிர்கொள்ளும். காயம் காரணமாக மேத்யூஸ் அணியில் இடம் பெறவில்லை. கடந்த ஆண்டில் நடந்த இலங்கை பயணத்தில் இந்திய அணி எல்லா ஆட்டங்களிலும் (5 ஒருநாள், 3 டெஸ்ட், ஒரே ஒரு 20 ஓவர்) எளிதில் வெற்றி வாகை சூடியது. ஆனால் இந்த முறை இந்திய அணி முன்பு போல் எளிதில் வெற்றியை சுவைக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. 20 ஓவர் போட்டியில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.

இந்தியா-இலங்கை அணிகள் இதுவரை சர்வதேச 20 ஓவர் போட்டியில் 14 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இந்திய அணி 10 முறையும், இலங்கை அணி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இன்று 15-வது தடவையாக இரு அணிகளும் மோதுகின்றன. வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை டி ஸ்போர்ட் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இந்த போட்டிக்கான இரு அணி வீரர்கள் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான் (துணைகேப்டன்), லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்‌ஷர் பட்டேல், விஜய் சங்கர், ஷர்துல் தாகூர், ஜெய்தேவ் உனட்கட், முகமது சிராஜ், ரிஷாப் பான்ட்.

இலங்கை: சன்டிமால் (கேப்டன்), சுரங்கா லக்மல் (துணைகேப்டன்), உபுல் தரங்கா, குணதிலகா, குசல் மென்டிஸ், தசுன் ஷனகா, குசல் பெரேரா, திசரா பெரேரா, ஜீவன் மென்டிஸ், இஸ்ரு உதனா, அகிலா தனஞ்ஜெயா, அமிலா அபோன்சா, பிரதீப், சமீரா, தனஞ்ஜெயா டி சில்வா. 

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/06083542/1149224/T20-cricket-between-3-countries-India-and-Sri-Lanka.vpf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
ஆர்.பிரேமதாச மைதானத்துக்கு பலத்த பாதுகாப்பு
 

image_8204f86024.jpgஇலங்கை மற்றம் இந்திய அணிகளுக்கு இடையில் சுதந்திர கிண்ணத்துக்கான முதலாவது போட்டி, இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை, தவ்ஹித் ஜமைத்துலா அமைப்பு இன்று குறித்த மைதானத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும், இதனால் அங்கு கலகம் அடக்கும் பொலிஸார் தயார் நிலையில் இருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஆர்-பிரேமதாச-மைதானத்துக்கு-பலத்த-பாதுகாப்பு/175-212348

  • தொடங்கியவர்
 
முதல் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்துள்ளார்.
  • தொடங்கியவர்

இலங்கை அணிக்கு வெற்றி இலக்கு 175 !

 

இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக இந்திய அணி 175 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.

sl.jpg

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்குபற்றும் சுதந்திரக்கிண்ண முத்தரப்பு இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடர் இன்று கொழும்பில் ஆரம்பமானது.

ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் விளையாடுகின்றன.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இந்திய அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

http://www.virakesari.lk/article/31340

  • தொடங்கியவர்

குஷலின் அதிரடியில் இந்தியாவை வென்றது இலங்கை

 

 

சுதந்திரக் கிண்ண மும்முனை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை 5 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

273716.4.jpg

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்குபற்றும் சுதந்திரக்கிண்ண முத்தரப்பு இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடர் இன்று கொழும்பில் ஆரம்பமானது.

273714.jpg

ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் விளையாடின.

273713.jpg

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இந்திய அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

273712.jpg

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது.

273710.jpg

இந்திய அணி சார்பில் தவான் 90 ஓட்டங்களையும் பாண்டியா 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சாமிர 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

273709.jpg

இந்நிலையில் 175 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி குஷல் ஜனித்தின் அதிரடியில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்த இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிரடியாக விளையாடிய குஷல் ஜனித் பெரேரா 66 ஓட்டங்களையும் திஸர பெரேரா ஆட்டமிழக்காது 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

273708.jpg

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் வொஷிங்டன் சுந்தர் மற்றும் ஷால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2 புள்ளிகளைப்பெற்று முன்னிலையிலுள்ளது.

http://www.virakesari.lk/article/31342

  • தொடங்கியவர்
குசல் பெரேராவின் அதிரடி துடுப்பாட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய இலங்கை86816d632d4e1e1d465e4b81cd8d5f33-1068x71

குசல் பெரேராவின் அதிரடி துடுப்பாட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய இலங்கை

 

குசல் பெரேராவின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் சுதந்திர கிண்ண முத்தரப்பு T20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி இந்தியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக தொடர்ச்சியான ஏழு T20 தோல்விக்கு இலங்கை அணி முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

பச்சை புற்கள் போர்த்தியதாக காணப்பட்ட ஆர். பிரேமதாச மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (6) மின்னொளியில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் முதலில் களத்தடுப்பை தீர்மானித்தார். எனினும் முதலில் துடுப்பெடுத்தாடுவது குறித்து கவலை அடையவில்லை என்று நாணய சுழற்சியில் தோற்றபோது, இந்திய அணித் தலைவர் ரோஹித் ஷர்மா குறிப்பிட்டார்.

இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சுத் துறையை பலம் சேர்க்க துஷ்மந்த சமீர மற்றும் நுவன் பிரதீப் இணைக்கப்பட்டிருந்ததோடு சுழல் பந்து வீச்சாளர்களாக அகில தனஞ்சய மற்றும் ஜீவன் மெண்டிசுடன் திசர பெரேராவும் பந்துவீச்சாளர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்திய அணியில் கே.எல். ராகுல் நீக்கப்பட்டு விஜே சங்கர் சேர்க்கப்பட்டிருந்தார். இடதுகை சுழல் பந்து சகலதுறை வீரரான அக்சர் படேல் இந்தியாவின் கடைசி பதினொருவரில் இருக்கவில்லை.     

 

இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணிக்கு இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்ப இரு ஓவர்களிலேயே அதிர்ச்சி கொடுத்தனர். அணித் தலைவர் ரோஹித் ஷர்மா முதல் ஓவரிலேயே சமீரவின் பந்துக்கு ஓட்டமேதும் பெறாமல் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரை விசிய நுவன் பிரதீப் முதல் வரிசையில் வந்த சுரேஷ் ரெய்னாவை வந்த வேகத்திலேயே ஒரு ஓட்டத்துடன் வெளியேற்றினார்.   

எனினும் மறுமுனையில் ஆடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சிக்கர் தவான் இலங்கை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து பந்துகளை பவுண்டரி எல்லை கோட்டுக்கு வெளியில் செலுத்தினார். மனிஷ் பாண்டேவுடன் சேர்ந்து அவர் 3 ஆவது விக்கெட்டுக்கு 95 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதன் மூலம் இந்திய அணியின் ஓட்டங்கள் 13 ஓவர்களுக்குள் நூறைத் தாண்டியது.

இதன்போது தவான் 49 பந்துகளில் 6 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களுடன் 90 ஓட்டங்களை பெற்றபோது தனுஷ்க குணதிலக்கவின் பந்துக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். தவான் தனது T20 சதத்தை 10 ஓட்டங்களால் தவறவிட்டபோதும் அவர் T20 சர்வதேச கிரிக்கெட்டில் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும். முன்னதாக கடந்த நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிராக பெற்ற 80 ஓட்டங்களே அவரது அதிகூடிய ஓட்டங்களாக இருந்தது.

மனிஷ் பாண்டே 35 பந்துகளில் 37 ஓட்டங்களையும், ரிஷாப் பாண்ட் 23 பந்துகளில் 23 ஓட்டங்களையும் பெற்றனர். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை குவித்தது. இலங்கை சார்பில் பந்துவீச்சில் துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் வேகமாக துடுப்பெடுத்தாட முயன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். குசல் மெண்டிஸ் 6 பந்துகளில் 11 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததோடு தனுஷ்க குணதிலக்க 12 பந்துகளில் 19 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.

எனினும் முன் வரிசையில் வந்த குசல் பெரேரா போட்டியை இலங்கை அணிக்கு சாதகமாக திசை திருப்பினார். முகம்கொடுத்த இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் விளாசிய அவர், ஷர்துல் தாகூர் வீசிய மூன்றாவது ஓவரில் அடுத்தடுத்து ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசி எதிரணியை திக்குமுக்காடச் செய்தார். இந்த ஓவரில் அவர் மொத்தமாக 26 ஓட்டங்களைக் குவித்தார்.

தொடர்ந்தும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிக்காட்டிய குசல் பெரேரா 22 பந்துகளில் தனது 8ஆவது T20 அரைச்சதத்தை பெற்றார்.

இதன் போது இலங்கை அணி பவர் பிளே ஓவர்களில் மாத்திரம் 75 ஓட்டங்களை குவித்தது. பவர் பிளே ஓவர்களில் இலங்கை பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் இதுவென்பதோடு, பவர் பிளே ஓவர்களில் இந்திய அணி கொடுத்த இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களும் இதுவாகும்.

எனினும் குசல் பெரேரா 37 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 66 ஓட்டங்களுடன் ஸ்டம்ப் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியபோது இலங்கை அணி சற்று பின்னடைவை சந்தித்தது.

 

எனினும் போதிய ஓட்டவேகம் இருந்ததால் பிந்திய ஓவர்களில் இலங்கை அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தபோதும் அதனால் சமாளிக்க முடிந்தது. குறிப்பாக அண்மைக் காலத்தில் தொடர்ச்சியாக சோபித்து வரும் திசர பெரேரா கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி இலங்கை அணியை வெற்றிவரை அழைத்துச் சென்றார். 10 பந்துகளுக்கு முகம் கொடுத்த திசர பெரேரா ஆட்டமிழக்காது 22 ஓட்டங்களை விளாசினார்.

இதன் மூலம் இலங்கை அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 175 ஓட்டங்களை அடைந்தது. ஆர். பிரேமதாச அரங்கில் இரண்டாவதாக துடுப்பாடி பெறப்பட்ட அதிகூடிய வெற்றி இலக்கு இதுவாகும். இதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி பெற்ற 173 ஓட்டங்களே சாதனையாக இருந்தது.   

தனது முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு வழங்கிய நிலையில் இலங்கை வந்திருக்கும் இந்திய அணிக்கு வொஷிங்கடன் சுந்தர் மற்றும் யுஸ்வேந்திரா சாஹா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இலங்கை அணியின் வெற்றிக்கு தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உதவிய குசல் பெரேரா போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்த வெற்றியுடன் சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T20 தொடரின் புள்ளிப் பட்டியலில் இலங்கை அணி 2 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்து இலங்கை அணி மார்ச் மாதம் 10ஆம் திகதி பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.     

ஸ்கோர் விபரம்

Full Scorecard

 
India

174/5

(20 overs)

Result

175/5

(18.3 overs)

Sri Lanka

Sri Lanka won by 5 wickets

India’s Innings

BATSMEN         R B
R.Sharma c Jeevan Mendis b Dushmantha Chameera 0 4
S.Dhawan c Thisara Perera b Danushka Gunathilaka 90 49
S.K.Raina b Nuwan Pradeep 1 3
M.Pandey c Danushka Gunathilaka b Jeevan Mendis 37 35
R.pant c Nuwan Pradeep b Dushmantha Chameera 23 23
D.Karthik not out 13 6
Extras
10
Total
174/5 (20 overs)
Fall of Wickets:
1-1, 2-9, 3-104, 4-153, 5-174
BOWLING O M R W ECON
Dushmantha Chameera 4 0 33 2 8.25
Nuwan Pradeep 3 0 38 1 12.67
Akila Dhananjaya 4 0 37 0 9.25
NLTC Perera 3 0 25 0 8.33
BMAJ Mendis 3 0 21 1 7.00
Danushka Gunathilaka 3 0 16 1 5.33

Sri Lanka’s Innings

BATSMEN         R B
Danushka Gunathilaka c Rishabh Pant b Jaydev Unadkat 19 12
BKG Mendis c Shikhar Dhawan b Washington Sundar 11 6
Kusal Janith st. by Dinesh Karthik b Washington Sundar 66 37
LD Chandimal b Yuzvendra Chahal 14 11
WU Tharanga b Yuzvendra Chahal 17 18
MD Shanaka not out 15 18
NLTC Perera not out 22 10
Extras
11
Total
175/5 (18.3 overs)
Fall of Wickets:
1-12, 2-70, 3-98, 4-127, 5-136
BOWLING O M R W ECON
J.Unadkat 3 0 35 1 11.67
W.Sundar 4 0 28 2 7.00
S.Takur 3.3 0 42 0 12.73
Y.Chahal 4 0 37 2 9.25
V.Shankar 2 0 15 0 7.50
S.K.Raina 2 0 14 0 7.00

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்

 

 
 

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடக்கும் 2-வது லீக்கில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதுகின்றன.

 
 
 
 
முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்
 
கொழும்பு:

இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய மூன்று நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கொழும்பில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். இதன் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 2-வது லீக்கில் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் தான் இறுதிப்போட்டி வாய்ப்பில் சிக்கலின்றி நீடிக்க முடியும் என்பதால் இந்திய வீரர்கள் மிகவும் கவனமுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.

தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 174 ரன்கள் குவித்த போதிலும், குசல் பெரேராவின் (37 பந்தில் 66 ரன்) அதிரடியின் உதவியுடன் இலங்கை அணி வெற்றிக்கனியை பறித்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் ஒரே ஓவரில் 27 ரன்களை வாரி வழங்கியதே நமது அணிக்கு பாதகமாக அமைந்தது. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டு வருவோம் என்று கேப்டன் ரோகித் சர்மா கூறியிருக்கிறார்.

வங்காளதேச அணியில் கேப்டன் ஷகிப் அல்-ஹசன் காயத்தால் கடைசி நேரத்தில் விலகியது அந்த அணிக்கு பின்னடைவாகும். ஆனாலும் அந்த அணியில் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. அதனால் வங்காளதேச வீரர்கள் கடும் சவால் அளிப்பார்கள் என்று நம்பலாம். இவ்விரு அணிகள் இதுவரை ஐந்து 20 ஓவர் ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இவை அனைத்திலும் இந்தியாவே வெற்றி கண்டிருக்கிறது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், ரிஷாப் பான்ட், விஜய்சங்கர், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், ஷர்துல் தாகூர், ஜெய்தேவ் உனட்கட்.

வங்காளதேசம்: தமிம் இக்பால், சவும்யா சர்கார், இம்ருல் கேயஸ், மக்முதுல்லா (கேப்டன்), முஷ்பிகுர் ரஹிம், சபிர் ரகுமான், முஸ்தாபிஜூர் ரகுமான், ருபெல் ஹூசைன், தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன், ருபெல் ஹூசைன்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டி ஸ்போர்ட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/08083759/1149634/T20-match-IndiaBangladesh-clash-on-today.vpf

  • தொடங்கியவர்

பங்களாதேஷ் - இந்தியா : முதலில் துடுப்பெடுத்தாடுகிறது பங்களாதேஷ்

 

 
 

 

சுதந்­திரக் கிண்ண முத்­த­ரப்பு இரு­ப­துக்கு 20 கிண்ணத் தொடரின் இரண்­டா­வது போட்­டியில் இந்­தியா மற்றும் பங்­க­ளாதேஷ் அணிகள் இன்று பலப்­ப­ரீட்சை நடத்­து­கின்­றன.

ban.jpg

இலங்­கையின் 70 ஆவது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு நடத்­தப்­படும் சுதந்­திரக் கிண்ண முத்­த­ரப்பு இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடரை இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் நடத்­து­கி­றது.

இதில் இன்றைய 2 ஆவது போட்டியில் இந்­தியா மற்றும் பங்­க­ளாதேஷ் அணிகள் பங்­கேற்று விளை­யாடி வரு­கின்றன.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி 3 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 20 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஆரம்­ப­மான இத் தொடரின் முதல் போட்­டியில் தொடரை நடத்தும் இலங்கை மற்றும் இந்­திய அணிகள் மோதின.

இப் போட்­டியில் குசல் ஜனித் பெரே­ராவின் அதி­ரடி ஆட்­டத்­தால் நிலை­கு­லைந்­து­போன இந்­தியா தோல்­வியை சந்­தித்­தது.

ஆரம்­பத்­தி­லேயே அதிர்ச்சி தோல்வி கண்­டுள்ள ரோஹித் ஷர்மா தலை­மை­யி­லான இந்­திய அணி இன்று தனது இரண்­டா­வது போட்­டி­யில் மோத­வுள்­ளது.

இதில் பங்­கேற்­றுள்ள மற்­றைய அணி­யான பங்­க­ளாதேஷ் அணி தனது முத­லா­வது போட்­டியில் இன்று களம் காண்­கின்­றது.

இப் போட்­டியில் இந்­திய அணி எப்­ப­டியும் வெற்­றி­பெற்று தனது தொடரின் அடுத்­த­கட்­டத்­திற்கு அணியை எடுத்­துச்­செல்­லவே முயற்சிக்கும்.

மறு­மு­னையில் பங்­க­ளாதேஷ் அணியும் பலம்­மிக்க அணி­யாகக் காணப்­ப­டு­வதால் இந்­தி­யா­வுக்கு சிறந்­த­தொரு போட்­டியைக் கொடுக்கும் என்­பதில் ஐய­மில்லை.

பங்­க­ளாதேஷ் அணியின் சகிப் அல் ஹசன் காயத்தின் கார­ண­மாக தொட­ரி­லி­ருந்து வில­கி­யதால் மெஹ்மு­துல்லா அணியை வழி­ந­டத்­து­கிறார்.

பங்­க­ளாதேஷ் அணியின் துடுப்­பாட்டம் மற்றும் பந்­து­வீச்சு என இரு பிரிவுகளும் சரி­ச­ம­மாக உள்­ளதால் இந்­திய அணிக்கு சவால் விடுக்கும் விதத்தில் ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை இந்திய அணியும் முதல் போட்டியில் இலங்கையிடம் அடைந்த தோல்விக்கு பங்களாதேஷ்  அணிக்கெதிரான போட்டியில் வெற்றி கொண்டு தங்களை காத்துக்கொள்ள போராடும்.

இந்திய அணியும் பலமான அணியாக காணப்படுகிறது. துடுப் பாட்டத்தில் ரோஹித், தவான் போன்ற அனுபவ வீரர்களும் பந்து வீச்சில் சஹால், உனாட்கட் மற்றும் சஹால் ஆகியோரும் உள்ளனர்.

ஆக இன்றைய போட்டியில் யார் வெல்லப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

http://www.virakesari.lk/article/31406

93/4 * (13.4/20 ov)

  • தொடங்கியவர்

`15 எக்ஸ்ட்ராக்கள்; தவறவிட்ட 4 கேட்சுகள்!’ - இந்திய அணிக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்கதேசம்

 
 

நிதாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 தொடரின் லீக் சுற்றில் இந்திய அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. 

india_21187.jpg

 

Photo Credit: Twitter/ICC

இலங்கையின் 70-ம் ஆண்டு சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் நடந்து வருகிறது. கொழும்புவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது. இதையடுத்து இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஃபீல்டிங் தேர்வு செய்தார். 

 

வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக தமீம் இக்பால் மற்றும் சவுமியா சர்க்கார் ஆகியோர் களமிறங்கினர். தமீம் 15 ரன்களிலும், சவுமியா சர்க்கார் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்த பின்னர் வங்கதேச வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேறினர். அந்த அணியில் அதிகபட்சமாக லிண்டன் தாஸ் 34 ரன்களும், ஷபீர் அகமது 30 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் உனத்கட் 3 விக்கெட்டுகளும், விஜய் சங்கர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் இந்திய அணி உதிரிகளாக 15 ரன்கள் விட்டுக்கொடுத்ததுடன், 4 கேட்சுகளையும் தவறவிட்டது குறிப்பிடத்தக்கது. 

https://www.vikatan.com/news/sports/118661-india-vs-bangladesh-t20i-indian-bowlers-restricts-bangladesh-to-139.html

  • தொடங்கியவர்

சுதந்திரக் கிண்ணத் தொடர் : முதல் வெற்றியை ருசித்தது இந்தியா

 

 

சுதந்திரக் கிண்ணத் தொடரின் லீக் சுற்றின் இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணி நிர்ணயித்த 140 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இந்திய அணி 18.4 ஓவர்களில் அடைந்து 6 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

india.jpg

இலங்கையின் 70 ஆம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு இருபதுக்கு 20 தொடர் நடைபெற்று வருகிறது. 

இந்தத் தொடரில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணியை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது. 

இதையடுத்து இந்தியா - பங்களாதேஷ் அணிகள் மோதிய இரண்டாவது போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிடிபெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இலங்கையுடன் மோதிய அதே அணிதான் எந்த மாற்றமும் இன்றி பங்களாதேஷுடன் மோதியது.

அதன்படி பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக தமீம் இக்பால் மற்றும் சவுமியா சர்க்கார் ஆகியோர் களமிறங்கினர். 

தமீம் 15 ஓட்டங்களுடனும் சவுமியா சர்க்கார் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்த பின்னர் பங்களாதேஷ் வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேறினர். 

அந்த அணியில் அதிகபட்சமாக லிண்டன் தாஸ் 34 ஓட்டங்களையும், ஷபீர் அஹமட் 30 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். 

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது பங்களாதேஷ். 

இந்தப் போட்டியில் இந்திய அணி உதிரிகளாக 15 ஓட்டங்களை வாரிக்கொடுத்ததுடன் நான்கு பிடியெடுப்புகளையும் தவறவிட்டிருந்தது. 

இதனைத் தொடர்ந்து வெற்றி இலக்கைத் துரத்த களமிறங்கிய இந்திய அணிக்கு தவான் மற்றும் ரோஹித் ஜோடி களமிறங்கியது. இதில் ரோஹித் 17 ஒட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த பாண்டும் 7 ஓட்டங்களுடன் வெளியேறினார். 

அதன்பிறகு தவானுடன் இணைந்த ரெய்னா அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த உதவினார். ஆனால் அவரும் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க முறுமுணையில் நின்ற தவான் 55 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் மணிஸ் பாண்டே மற்றும் தினேஸ் கார்த்திக் ஆகியோர் இறுதிவரை களத்தில் நின்று இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் இந்திய அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்து 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

http://www.virakesari.lk/article/31413

  • தொடங்கியவர்

இலங்கை-வங்காளதேசம் இன்று மோதல்

 

 
 

முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் 3-வது லீக் ஆட்டத்தில் இலங்கை-வங்காளதேச அணிகள் மோதுகின்றன.

 
 
 
 
இலங்கை-வங்காளதேசம் இன்று மோதல்
 
முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் 3-வது லீக் ஆட்டத்தில் இலங்கை-வங்காளதேச அணிகள் மோதுகின்றன. சன்டிமால் தலைமையிலான இலங்கை அணி தனது தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இருந்தது. வங்காளதேச அணி தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வி கண்டிருந்தது. வங்காளதேச அணி இறுதிப்போட்டி வாய்ப்பை சிக்கலின்றி தக்கவைப்பதற்கு இன்றைய மோதலில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.

இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 9 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 7-ல் இலங்கையும், 2-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன.

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/10092552/1150014/Sri-Lanka-vs-Bangladesh-conflict-on-today.vpf

  • தொடங்கியவர்

இலங்கை 163/4

  • தொடங்கியவர்

மறுபடியும் குசல் பெரேரா அதிரடி : பங்களாதேஷுக்கு இமாலய வெற்றி இலக்கு

 

 

சுதந்திரக் கிண்ணத் தொடரின் இன்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய ஆணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

danuska-gunathilake.jpg

இந்நிலையில் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற 3 ஆவது இருபதுக்கு - 20 போட்டியில்  நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி இலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக்களமிறங்கிய இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸும் குணதிலக்கவும் நல்ல ஆரம்பத்தினை கொடுத்தனர்.

குசல் மெண்டிஸ் 57 ஓட்டங்களையும் குணதிலக்க 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அதிரடியைக் காட்டி வெற்றிக்கு வித்திட்ட குசல் ஜனித் பெரேரா இம் முறையும் தனது அதிரடியால் இலங்கை அணி ஸ்தீரமான ஓட்ட எண்ணிக்கையைபெற வழிவகுத்தார்.

குசல் பெரேரா 78 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில் அதிரடியாக விளையாடிய உபுல் தரங்க 15 பந்துகளில் 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 214 ஓட்டங்களைப்பெற்றது.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் முஸ்தபிகுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் மஹமதுல்லா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இப் போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள பங்களாதேஷ் அணி 215 ஓட்டங்களைப் பெறவேண்டும்.

போட்டி முடிவடையும் வரை பொறுத்திருந்து பார்ப்போம் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் நிலைத்திருக்குமா பங்களாதேஷ் என்று அல்லது இப் போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைபெறுமா இலங்கை என்று.....

http://www.virakesari.lk/article/31504

  • தொடங்கியவர்

பரபரப்பான போட்டியில் பங்களாதேஷ் திரில் வெற்றி

 

இலங்கை அணிக்கெதிரான இன்றைய விறுவிறுப்பான போட்டியில் பங்களாதேஷ் அணி 5 ஓட்டங்களால் திரில் வெற்றிபெற்றுள்ளது.

ban.jpg

சுதந்திரக் கிண்ணத் தொடரின் இன்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய ஆணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்நிலையில் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற 3 ஆவது இருபதுக்கு - 20 போட்டியில்  நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி இலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக்களமிறங்கிய இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸும் குணதிலக்கவும் நல்ல ஆரம்பத்தினை கொடுத்தனர்.

குசல் மெண்டிஸ் 57 ஓட்டங்களையும் குணதிலக்க 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அதிரடியைக் காட்டி வெற்றிக்கு வித்திட்ட குசல் ஜனித் பெரேரா இம் முறையும் தனது அதிரடியால் இலங்கை அணி ஸ்தீரமான ஓட்ட எண்ணிக்கையைபெற வழிவகுத்தார்.

குசல் பெரேரா 78 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில் அதிரடியாக விளையாடிய உபுல் தரங்க 15 பந்துகளில் 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 214 ஓட்டங்களைப்பெற்றது.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் முஸ்தபிகுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் மஹமதுல்லா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் 215 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற நிலையில் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய பங்களாதேஷ் அணி இறுதியில் 5 விக்கெட்டுகளால் திரில் வெற்றிபெற்றது.

பங்களாதேஷ் அணிசார்பாக துடுப்பாட்டத்தில் முஸ்பிகுர் ரஹீம் ஆட்டமிழக்காது 72 ஓட்டங்களையும் தமிம் இக்பால் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் சுதந்திரக் கிண்ணத் தொடரில் விளையாடும் 3 அணிகளும் 2 போட்டிகளில் விளையாடி தலா ஒவ்வொரு போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில் 3 அணிகளும் தலா 2 புள்ளிகளைப்பெற்றுள்ளன.

http://www.virakesari.lk/article/31507

  • தொடங்கியவர்

இலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமாலுக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை

Chandimal.jpg?resize=800%2C519

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமாலுக்கு எதிர்வரும் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர கிண்ண முத்தரப்பு இருபதுக்கு இருபது போட்டியின் நேற்றைய பங்களாதேஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது இலங்கை அணி மந்தமான நிலையில் பந்துவீசிய காரணத்தால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கை அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் நான்கு ஓவர்கள் குறைவாக வீசியது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை நடைபெற இருக்கும் இந்தியாவிற்கு எதிரான போட்டியிலும், 14ம் திகதி நடைபெறவுள்ள பங்களாதேசுக்கெதிரான போட்டியிலும் சந்திமால்; விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏனைய இலங்கை வீரர்களுக்கு 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அடுத்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணியின் தலைவராக திஸர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Chandimal-2.jpeg?resize=800%2C448

http://globaltamilnews.net/2018/70393/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.