Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`துபாய் அரசு கற்றுக்கொடுத்த பாடம் இது!' - ஸ்ரீதேவி மரணமும் ஜெயலலிதா எம்பாமிங்கும்

Featured Replies

`துபாய் அரசு கற்றுக்கொடுத்த பாடம் இது!' - ஸ்ரீதேவி மரணமும் ஜெயலலிதா எம்பாமிங்கும்

 
 

ஸ்ரீதேவி

Chennai: 

நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம், திரையுலகத்தினரை மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியிருக்கிறது. அவருடைய மறைவு திரையுலகுக்கு மிகப்பெரும் இழப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேசமயம், அவருடைய மரணத்தில் எழும் சர்ச்சைகள் விவாதப் பொருளாகியிருக்கின்றன. 

 

துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற நடிகை ஸ்ரீதேவி, கடந்த 25-ம் தேதி அதிகாலை மாரடைப்பில் இறந்ததாகத் தகவல் வெளியானது. நடிகை ஸ்ரீதேவியின் பிரேதப் பரிசோதனை சான்றிதழ் மற்றும் தடயவியல் அறிக்கை நேற்று வெளியானது. அதில், ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாகவும் அவரது மரணத்தில் குற்றவியல் நடவடிக்கைகள் எதுவும் இல்லை' எனவும் தகவல்கள் வெளியாகின. இன்று, அவரது உடல் எம்பாமிங் செய்யப்பட்டு, மும்பைக்குக் கொண்டு வரப்பட உள்ளது. 

ஸ்ரீதேவியின் மரணம் குறித்து நம்மிடம் பேசிய சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தின் புகழேந்தி, " ஸ்ரீதேவியின் மரணத்துக்கும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கும் பிறகு எழுந்த மர்மங்களிலும் கேள்விகளிலும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆனால், இந்த இரு மரணங்களும் அரசு என்னும் அமைப்பால் எப்படிக் கையாளப்பட்டன என்பதில் பெரிய வேற்றுமைகள் இருக்கின்றன. ஸ்ரீதேவி இறந்தபின்னர் அந்த இறப்பை துபாய் அரசு எப்படிக் கையாண்டது?; விசாரணை நடைமுறைகள் எவ்வளவு கடுமையாக இருந்தன என்பதில் தமிழக ஆட்சியாளர்களுக்கான செய்தி ஒன்றும் இருக்கிறது. ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவர் நன்றாக இருப்பதாகச் சொன்ன நேரம் திடீரென மாரடைப்பு வந்ததாகச் சொல்லப்பட்டது. அதன்பிறகு அவருடைய உடல் எம்பாமிங் செய்யப்பட்டது. அதற்கு முன்னரே ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து வெளியே சந்தேகங்கள் நிலவி வந்தன. பொதுவாக, மற்ற நாடுகளில் மரணத்தில் சின்ன சந்தேகம் இருந்தால்கூட உடலை எம்பாமிங் செய்வதில்லை. ஏனென்றால், எம்பாமிங் மூலம் உடலில் செலுத்தப்படும் ரசாயன திரவம் இறப்புக்கான காரணம் குறித்து தெரியாமல் செய்துவிடும். ஸ்ரீதேவி விஷயத்தில் எம்பாமிங் நடவடிக்கைகள் தாமதமானதற்கும் இதுதான் காரணம். 

புகழ்

அடுத்ததாக, ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் உள்பட அனைவரிடமும் மீண்டும் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அறையிலிருந்த சி.சி.டி.வி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. ஜெயலலிதா விஷயத்தில் சி.சி.டி.வி காட்சிகள் மாயமாகி விட்டன. ஜெயலலிதாவுக்கு வீனஸ் ப்ளட் சாம்பிள் என்னும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. அப்போது அவருடைய ரத்தத்தில் 6.2 என்ற அளவுக்கு பொட்டாசியம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக ஒருவரின் ரத்தத்தில் 6 என்ற அளவில் பொட்டாசியம் கலந்திருந்தாலே ஆபத்துதான். ஜெயலலிதாவுக்கு இது முன்னரே இருந்ததா? அப்படியிருந்தது எனில், அதை ஏன் கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. மேலும், ஜெயலலிதாவுக்கு எதற்கு எம்பாமிங் செய்தார்கள் என்றே தெரியவில்லை. 

 
 

ஏனெனில், அவருடைய உடல் 19 மணிநேரம்தான் வெளியே இருந்தது. அதற்கு எம்பாமிங் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. இறப்புக்குப்பின் அவருக்கு ரத்த மாதிரியும் எடுக்கப்படவில்லை. சில விஷயங்களை மூடி மறைப்பதற்கான அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால்தான் மரணம் நிகழ்ந்து ஓராண்டு ஆகியும் மர்மங்கள் தொடர்கின்றன. ஒரு மாநில முதல்வரின் உண்மையான உடல்நிலை குறித்து அம்மாநில மக்களுக்குத் தெரிவிக்கும் பொறுப்பு ஆளும் அரசுக்கு உள்ளது. ஆனால், அது ஜெயலலிதா விஷயத்தில் பின்பற்றப்படவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஸ்ரீதேவி மரணத்தில் துபாய் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் நமக்கெல்லாம் பாடங்கள். எதிர்காலத்தில் இங்கும் இதுபோன்ற நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்” என்கிறார் புகழேந்தி.

https://www.vikatan.com/news/india/117677-lesson-from-sridevis-death.html

  • கருத்துக்கள உறவுகள்

ஶ்ரீதேவி மரணம்

ஜெயலலிதா கொலை

இரண்டுக்கும் ரொம்ப வித்தியாசம்.

  • தொடங்கியவர்

4,700 உடல்கள்... அவற்றில் ஸ்ரீதேவி சடலமும் ஒன்று... அஷ்ரப் என்கிற ஆபத்பாந்தவன்!

 
 

டிகை ஸ்ரீதேவியின் உடல், துபாயிலிருந்து இந்தியாவுக்கு நேற்று கொண்டுவரப்பட்டது. அமீரகச் சட்டப்படி நடைமுறைகளை மேற்கொள்ள மூன்று நாள்கள் ஆகின.  ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முதலில் சொல்லப்பட்டது. அதனால் தீவிர போலீஸ் விசாரணைக்குப் பிறகே அவரின் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர துபாய் அனுமதியளித்தது. அதேவேளையில், ஸ்ரீதேவியின் உடலை போனி கபூர் பெயரில் இந்தியாவுக்கு அனுப்பப்படவில்லை. அமீரகச் சட்டத்தின்படி, சுற்றுலா விசாவில் செல்பவர்கள் மரணமடைந்தால், உடல்களை ஒப்படைப்பதில் கடினமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அந்நாட்டைச் சேர்ந்த குடியுரிமை பெற்ற ஒருவர், அதற்கு உறுதியளிக்க வேண்டும். அந்த வகையில், கேரளாவைச் சேர்ந்த அஷ்ரப், ஸ்ரீதேவியின் உடலைத் தாய்நாட்டுக்குக் கொண்டு வர உதவியுள்ளார்.

ஸ்ரீதேவி

 

எம்பாமிங்கூட அஷ்ரப் பெயரில்தான் மேற்கொள்ளப்பட்டது. எம்பாமிங் விண்ணப்பத்திலும் இவரே கையொப்பமிட்டுள்ளார்.  நடிகை ஸ்ரீதேவியை உயிரற்ற உடலாகப் பார்த்த தருணம் குறித்துக் கூறிய அஷ்ரப், ``நான் நடிகை ஸ்ரீதேவியின் உடலைப் பார்த்தபோது அவர் அழகுற உறங்குவது போன்றே இருந்தது. சினிமாவில் எப்படிப் பார்த்தேனோ, அதே அழகுடன் அப்போதும் இருந்தார். சில மீடியாக்கள்தான் அவரின் பின்தலையில் அடிபட்டிருப்பதாகத் தவறான தகவல் வெளியிட்டுள்ளன. கனத்த இதயத்துடன் அவரின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்'' என்கிறார்

அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களிடையே மிகவும் பரிச்சயமானவர் அஷ்ரப். அமீரகத்தில் இறக்கும் இந்தியர்களின் உடல்களைத் தாய்நாட்டுக்கு அனுப்பும் சேவையில், கடந்த 16 ஆண்டுகளாக ஈடுபட்டுவருகிறார். இதுவரை 4,700 உடல்களை அமீரகத்திலிருந்து பல நாடுகளுக்கு அனுப்ப உதவியாக இருந்துள்ளார். 

ஆஜ்மனில் வசித்து வந்த அஷ்ரப், ஒருமுறை ஷார்ஜா மருத்துவமனைக்கு உடல் நலம் பாதித்த நண்பர் ஒருவரைப் பார்க்கச்சென்ற சமயத்தில், இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் அங்கு அழுதுகொண்டு நின்றிருந்தனர். அவர்களை அஷ்ரப் விசாரித்தபோது... `எங்கள் தந்தை இறந்துவிட்டார். அவரின் உடலைத் தாய்நாட்டுக்கு எப்படிக் கொண்டுசெல்வது  எனத் தெரியவில்லை' எனக் கதறினர். அஷ்ரப் அந்த இளைஞர்களுக்கு உதவும் நடைமுறைகளை மேற்கொண்டார். அதற்கு ஐந்து நாள்கள் பிடித்தன. அந்தளவுக்கு அமீரகத்தின் சட்டதிட்டங்கள் கடுமையாக இருந்தன. 

கட்டட வேலைக்கும் கூலி வேலைக்கும் அமீரகத்துக்கு வருபவர்களால்,  கடினமான சட்டதிட்டங்களை அவ்வளவு சாதாரணமாக திருப்தி செய்துவிட முடியாது என்பதை உணர்ந்துகொண்ட அஷ்ரப், தொடர்ந்து தானே முன்வந்து இந்தச் சேவையைச் செய்யத் தொடங்கினார். அப்போது, அமீரக இந்தியர்களுக்கு அஷ்ரப் ஓர் ஆபத்பாந்தவனாகக் காட்சியளிப்பார். முதலில் மாதத்துக்கு 5 அல்லது 6 உடல்களை இந்தியாவுக்கு அனுப்பிக்கொண்டிருந்தவர், இப்போது 30 முதல் 40 உடல்களை அனுப்பிவைக்கிறார். இன்னொரு விஷயம் என்னவென்றால், அஷ்ரப்பின் சேவையைக் கேள்விப்பட்டு வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்துகூட அழைப்புகள் வருகின்றன. `எங்கள் தந்தை இறந்துவிட்டார். தயவுசெய்து அவர் உடலை மீட்டு அனுப்புங்கள்' என்ற வார்த்தைகள்தான்  மறுமுனையிலிருந்து அழுதவாறே கேட்கும். 

ஸ்ரீதேவி சடலத்தை மீட்க உதவிய அஸ்ரப்

photo credit : virendra saklani /gulf news

முதலில் இந்தியர்களுக்கு மட்டும் உதவிக்கொண்டிருந்த அஷ்ரப், இப்போது எல்லோருக்கும் உதவத் தொடங்கியுள்ளார். ஓர் உடலை தாய்நாட்டுக்கு அனுப்ப ஆவணங்கள் ஒப்படைப்பது முதல், உடலைப் பெற்றுத்தருவது வரை 200 தினார் வரை செலவாகும். இந்தத் தொகையை மட்டுமே சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் இருந்து அவர் வாங்கிக்கொள்கிறார். மற்றபடி எந்தப் பணமும் பெறுவதில்லை. 

``பிறப்புபோலவே இறப்பும் வாழ்வின் ஓர் அங்கம்தான். ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் அன்புக்குரியவர்களின் முகத்தைக் கடைசியாக ஒருமுறை பார்த்துவிடவேண்டும் என்று துடிப்பார்கள். எப்போது, உடல் வருமோ என்று பதறியபடி தாய்நாட்டில் காத்திருப்பார்கள். அந்த வேதனையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால்தான் என்னால் முடிந்தவரை இதை ஒரு சேவையாகச் செய்கிறேன். என்னால் உதவி பெற்று உடலுடன் தாய்நாட்டுக்குச் செல்பவர்கள், எனக்கு போன் செய்து நன்றி கூறுவதைக்கூட நான் விரும்புவதில்லை. அதனால் `தாய்நாடு சென்ற பிறகு, தேவையில்லாமல் எனக்கு போன் செய்ய வேண்டாம்' என்று சொல்லிவிடுவேன். அதேபோல், போனில்கூட அதிக நேரம் நான் யாரிடமும் பேசுவதில்லை. ஏனென்றால், என்னால் உதவி பெறக்கூடியவர்கள் யாராவது அதனால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது அல்லவா!'' என்று கூறும் அஷ்ரப், ``இந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் உடலைக்கூட அனுப்பிவைக்கவேண்டிய நிலை எனக்கு வரும் என்று கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை" என்றார். 

https://www.vikatan.com/news/india/117755-sridevis-body-repatriated-by-gulf-indian-businessman-ashraf.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.