Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாசோன் பலகாயவின் பணியகத்தில் தேடுதல் – பெற்றோல் குண்டுகள், இனவாத பிரசுரங்கள் மீட்பு

Featured Replies

மகாசோன் பலகாயவின் பணியகத்தில் தேடுதல் – பெற்றோல் குண்டுகள், இனவாத பிரசுரங்கள் மீட்பு

 

Mahasohon Balakayaகண்டியில் இன வன்முறைகளைத் தூண்டி விட்டதாக குற்றம்சாட்டப்படும், மகாசோன் பலகாயவின் பணியகத்தில் நேற்று நடத்தப்பட்ட தேடுதலின் போது, பெற்றோல் குண்டுகள், வன்முறைகளைத் தூண்டும் பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கண்டி, குண்டசாலைப் பகுதியில் உள்ள நட்டரன்பொத்த பகுதியில் இருந்த மஹாசோன் பலகாயவின் பணியகமே நேற்று சிறிலங்கா காவல்துறையினரைால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.

இதன்போது, இனவாதத்தைக் தூண்டும் வகையிலான சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், ஆறு பெற்றோல் குண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மஹாசோன் பலகாயவின் செய்தியாளர் சந்திப்புக்குப் பயன்படுத்தப்படும், ஒலிவாங்கி, இனவாதத்தைத் தூண்டும் கைப்பட்டிகள், கணினி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேவேளை, மஹாசோன் பலகாயவின், தலைவரான அமித் ஜீவன் வீரசிங்க உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2018/03/14/news/29776

  • தொடங்கியவர்

எச்சரிக்கை : இனவாதத்தை பரப்பும் ஆவணங்கள் மீட்பு.!

 

 
 

கண்டி மாவட்­ட­மெங்கும்  பர­விய  வன்­மு­றை­களின் பிர­தான  சந்­தே­க ந­ப­ரான  மஹ­சொஹொன் பல­காய எனும் அமைப்பின் தலைவர் அமித் வீர­சிங்­கவின் குண்­ட­சாலை–நத்­த­ரம்­பொத்­தவில் உள்ள அலு­வ­லகம் நேற்று பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் அதி­கா­ரி­களால் முற்­று­கை­யி­டப்­பட்டு சோதனை செய்­யப்­பட்­ட­துடன் அதி­லிருந்து பல சான்­று­கள் கைப்­பற்றப்பட்டு கொழும்­புக்கு மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­கா­க கொண்­டு­வ­ரப்­பட்­டது. பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பிர­தானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்­வாவின் நேரடி மேற்­பார்­வையில் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பதில் பணிப்­பாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஜகத் விஷாங்­கவின் ஆலோ­சனை பிர­காரம் குழு­வினால்  இந்த அலு­வ­லகம் சுற்றி வளைக்­கப்ப்ட்டு, பல்­வேறு பொருட்கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

Ruwan_Gunasekera.jpg

தற்­போது 2018 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க அவ­ச­ர­கால விதி விதா­னங்­க­ளுக்கு அமை­வாக 14 நாள் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்ப்ட்டு விசா­ரணைச் செய்­யப்ப்டும் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யான  அமித் வீர­சிங்­க­வி­ட­மி­ருந்து வெளி­பப்­டுத்­தப்ப்ட்ட தக­வல்­க­ளுக்கு அமை­வாக இந்த அலு­வ­ல­கத்தை சுற்றி வளைத்­த­தா­கவும் இதன்­போது ஆயி­ரக்­க­ணக்­கான இன­வா­தத்தை தூன்டும் ஆயி­ரக்­க­ணக்­கான போஸ்­டர்கள், பதா­தைகள், கையே­டு­களை கைப்­பற்­றி­ய­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர்  பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுத்த இந்த திடீர் சுற்­றி­வ­ளைப்பின் போது, பொது­மக்­க­ளி­டையே பகிந்­த­ளிக்க தயார் நிலையில் இருந்த ஆயி­ரக்­க­ணக்­கான மிக­க­டு­மை­யாக இன­வா­தத்தை தூன்டும் சொற்­பி­ர­யோ­கங்கள் அடங்­கிய கையே­டுகள், போஸ்டர், பதா­தை­க­ளுக்கு மேல­தி­க­மாக பல வங்கிப் புத்­த­கங்­களும் சிக்­கி­யுள்­ளன. அத்­துடன் நிதி வைப்­பி­லிட்­ட­மைக்­கான பல பற்றுச் சீட்­டுக்­களும் அங்­கி­ருந்து கைப்­பற்­ரப்ப்ட்­டுள்ள நிலையில் அமித் வீர­சிங்­கவின் மஹ­சொஹொன் பல­கா­யவின் நிதிப் பின் புலலம் தொடர்பில் விசா­ர­ணைகள் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இத­னை­விட அந்த அலு­வ­ல­கத்தில் இருந்து வாகன அனு­ம­திப்­பத்­தி­ரங்கள்,  இன­வாத சொற்­ப­தங்கள் அடங்­கிய விப­ரங்கள், ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை நடாத்த தயார்  செய்­யப்ப்ட்­டி­ருந்த இலச்­சி­னை­யுடன் கூடிய ஒலி­வாங்கி என்­ப­னவும் கைப்­பற்­றப்­பட்­ட­தா­கவும் அமித்­திடம் முன்­னெ­டுக்­கப்ப்ட்ட விசா­ர­ணை­களில் வன்­மு­றை­க­ளுக்கு என தயார்ச் எய்­யப்ப்ட்ட 7 பெற்றோல் குன்­டு­க­ளையும் மீட்­ட­தா­கவும் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

 இந் நிலையில் அந்த அலு­வ­ல­கத்தில் இருந்த 4 கன­ணி­களின் சி.பி.யூ.க்களையும் கைப்­பற்­றிய பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் அவற்­றையும் நான்காம் மாடிக்கு எடுத்து வந்­துள்­ளனர்.

 அந்த சி.பி.யூ. க்களும், அமித்தின் தொலை­பே­சியும் அதில் உள்ள தக­வல்­களை பகுப்­பாய்வு செய்து வெளி­பப்­டுத்­து­வ­தற்­காக பயங்­க­ர­வாத புல­ன­யவுப் பிரி­வி­னரால் குற்றப் புல­ன­யவுப் பிரிவின் சிறப்பு புல­ன­யவுக் குழு­விடம் கையளிக்கப்ப்ட்டுள்ளன. குறிப்பாக அமித்தின் தொலைபேசிக்கு வந்த அழைப்புக்கள், அவர் அழைத்த அழைப்புக்கள் குறுஞ்செய்திகள் தொடர்பில் தகவல்களை வெளிபப்டுத்தவும்,  சி.பி.யூ.வில் உள்ள தரவுகளை பெறவுமே இவாறு  குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு நிபுணர்கள் அடங்கிய கூழ்விஒடம் கையளிக்கப்ப்ட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.