Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வறுமையின் சவால்கள் : மட்­டக்­க­ளப்பு மாவட்டம்

Featured Replies

வறுமையின் சவால்கள் : மட்­டக்­க­ளப்பு மாவட்டம்

 

 

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் வறுமை நிலை 19.4% (2014) மாக இருந்து, தற்­பொ­ழுது 11.3% (2017) மாக குறை­வ­டைந்­துள்­ளது. தேசி­ய­மட்ட வறுமை நிலை 6.7% மாக காணப்­ப­டு­கின்­றது. மட்­டக்­க­ளப்பு மாவட்ட மாதாந்த தலா வறுமை வரு­மான மட்டம் 4281/= ஆக உள்­ளது. இதன் கார­ண­மாக தேசிய வறு­மைப்­பட்­டி­யலில் மட்­டக்­க­ளப்பு 3 ஆவது இடத்­தி­லுள்­ளது.

வறு­மைக்­கான கார­ணங்கள்:  

 மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 7518 குடும்­பங்­க­ளுக்கு மல­ச­ல­கூட வசதி இல்லை. இவர்கள் பொது இடங்கள் மற்றும் அய­ல­வர்­களின் மல­ச­ல­கூ­டங்­க­ளையே பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

 27419 குடும்­பங்­க­ளுக்கு சுத்­த­மான குடிநீர் வசதி இல்லை. இவர்­களும் குடி­நீருக்­காக பொது வச­தி­க­ளையே பயன்­ப­டுத்­து­கின்­றனர்.

 தற்­கா­லிக வீடு­களில் வசிப்­போரின் எண்­ணிக்கை – 12482

 பிறப்பு சான்­றிதழ் அற்­றோரின் எண்­ணிக்கை – 4522

 தேசிய அடை­யாள அட்டை இல்­லா­தோரின் எண்­ணிக்கை – 7347

 822Km கிரா­மியப் பாதைகள் புன­ர­மைக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது.

  நிறை­கு­றை­வான பிள்­ளைகள் பிறத்தல் – 5798 (P.An)

 பாலியல் திரு­ம­ணங்கள் நடை­பெறல் –1836 (P.An)

 போசாக்குக் குறை­வான குடும்­பங்­களின் எண்­ணிக்கை –7580

 தொற்­றா­நோய்­களின் தாக்கம் அதி­க­ரித்துச் செல்லல்

 அடிப்­படை வச­திகள் திருப்­தி­க­ர­மாக இன்மை. (மீள்­கு­டி­யேற்ற பகுதி)

 சமூக காப்­பு­று­தித்­திட்டம் இன்மை.

 போதைப்­பொருள் பாவனை அதி­க­ரித்துச் செல்லல்.

 விவ­சாய உற்­பத்­தி­க­ளுக்கு உரிய விலை கிடைக்­கா­மையும் உள்­ளீ­டு­களின் விலை அதி­க­ரிப்பும்.

 விவ­சா­யிகள் கடன் பொறியில் சிக்­கி­யுள்­ளமை – சிறு­கடன் நிறு­வ­னங்­களின் செயற்­பாடு.

 கால­நிலை மாற்­றங்கள். (வரட்சி/ வெள்ளம்)

 யானை­களின் பாதிப்பு.

 திட்­ட­மி­டப்­ப­டாத செலவு முறைகள்.

 மின்­சார வச­தி­யற்ற குடும்­பங்கள் – 21608

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் மிக மோச­மாக வறு­மை­யி­லுள்ள பிர­தேச செய­லாளர் பிரி­வு­க­ளாக வவு­ண­தீவு, கிரான், பட்­டிப்­பளை, வாகரை, வெல்­லா­வெளி என்­பன காணப்­ப­டு­கின்­றன.

வறுமை நிவா­ரணம் வழங்­கப்­பட

வேண்­டியோர் விபரம்:

 வலது குறைந்­தோரின் எண்­ணிக்கை – 6,879

 வித­வை­களின் எண்­ணிக்கை – 27,805

 மந்த போசாக்­குள்ள குடும்­பங்­களின் எண்­ணிக்கை – 7,580

 அநா­தை­களின் எண்­ணிக்கை– 1,885

 சிரேஷ்ட பிர­ஜை­களின் எண்­ணிக்கை (65 வய­திற்கு மேற்­பட்டோர்)– 26,521

 மேற்­படி பொரு­ளா­தார ரீதியில் நலி­வுற்ற குடும்­பங்­க­ளுக்கு மட்டும் சமுர்த்தி முத்­திரை வழங்­கப்­பட வேண்டும்.

வறு­மையை குறைப்­ப­தற்­கான

சிபார்­சுகள்:

 சிறிய/ நடுத்­தர தொழில் முயற்­சி­களை அதி­க­ரித்­தலும் அவர்­களை ஒன்­று­ப­டுத்தி வலை­ய­மைப்­பாக செயற்­ப­டலும் சந்தை வச­தி­களை ஏற்­ப­டுத்­தலும்.

 புதிய விற்­பனை நிலை­யங்­களை ஆரம்­பித்தல்.

 வாழ்­வா­தார மூலப்­பொ­ருட்­களில் கிடைப்­ப­னவை அதி­க­ரித்தல்.

 போதைப்­பொருள் பாவ­னையால் ஏற்­படும் விளை­வுகள் பற்றி விழிப்­பூட்டல்.

 வீட்டுத் தோட்­டங்­களை விருத்தி செய்தல்.

 நவீன கோழிப் பண்­ணை­களை உரு­வாக்கல்.

 நவீன இன கறவைப் பசுக்­களை வழங்கல்.

 அழி­வ­டைந்த சிறிய தொழிற் சாலை­களை மீள இயங்க செய்தல். (உ+ம்) ஓட்டு, செங்கல், அரிசி ஆலைகள், கட­தாசி ஆலை.

 விவ­சாயம் சார் கைத்­தொ­ழில்­களை விருத்தி செய்­தலும் பெறு­மதி சேர் உற்­பத்­தி­களை ஊக்­கு­வித்­தலும். (Value chain, Agro based Industries)

 அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­களை விருத்தி செய்தல். (சுகா­தாரம், கல்வி, கிரா­மிய விதிகள்)

 பாட­சா­லை­களில் மாண­வர்கள் இடை­வி­ல­கலை குறைத்தல். (11%)

 மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் க.பொ.த. சாதா­ரண தர, உயர்­த­ரங்­களை கற்ற இளை­ஞர்கள் 100,000 பேர் வரை வேலை­யின்றி இருப்­ப­தாக ஆய்­வுகள் மூலம் அறி­யப்­பட்­டுள்­ளது. இவர்­களின் திற­மைகள் அடை­யாளம் காணப்­பட்டு உரிய தொழில் பயிற்­சிகள் வழங்­கப்­படல் வேண்டும்.

 புதிய தொழில் முயற்­சியை உரு­வாக்­கலும், அவற்றை பதிவு செய்­தலும், தொழில் பயிற்சி வழங்­கலும்.

 தேவை­யற்ற சமூக செல­வு­களைக் குறைத்­தலும் சேமிப்பு பழக்­கத்தை ஊக்­கு­வித்­தலும்.

 விவ­சாய உற்­பத்­தி­க­ளுக்கு உரிய நிதியைப் பெற்­றுக்­கொடுத்தல்.

 தர­மான உள்­ளீ­டு­களை நியா­ய­மான விலையில் விவ­சா­யி­க­ளுக்கு உரி­ய­நே­ரத்தில் பெற்­றுக்­கொ­டுத்தல்.

 மானா­வாரி பயிர்ச்­செய்கை நிலங்­களை நீர்ப்­பா­சன வளங்­க­ளாக மாற்றி மூன்று போக பயிர்ச்­செய்­கையை ஊக்­கு­வித்தல்.

 வழங்­கப்­படும் கடன்கள் உரிய இலக்கை அடையும் வகையில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றதா என்­பது கண்­கா­ணிக்­கப்­படல் வேண்டும்.

சமுர்த்தி திட்டம்

 சமுர்த்தி திட்­டத்தின் மூலம் அண்­ண­ள­வாக 2000 மில்­லியன் உணவு முத்­தி­ரைக்­காக வரு­டாந்தம் செலவு செய்­யப்­ப­டு­கின்­ற­துடன் உத்­தி­யோ­கத்­தர்­களின் சம்­பளக் கொடுப்­ப­ன­வாக வரு­டாந்தம் ரூபா 300 மில்­லியன் செலவு செய்­யப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இது தவிர சமூக காப்­பு­றுதி கொடுப்­ப­ன­வாக வரு­டாந்தம் ரூபா 85 மில்­லியன் வழங்­கப்­ப­டு­கின்­றது. இது­வரை 28,140 குடும்­பங்­க­ளுக்கு இக் கொடுப்­ப­னவு வழங்­கப்­பட்­டுள்­ளது.

 சமுர்த்தி வங்­கி­க­ளி­லுள்ள மொத்த சேமிப்பில் (ரூபா 3256 மில்­லி­யனில்) ரூபா 2263 மில்­லியன் கட­னாக வழங்­கப்­பட்­டுள்­ளது.

 1000 மில்­லியன் தொடர்ந்தும் சமுர்த்தி வங்­கிப்­பணம் RDB, DFCC அரச வங்­கி­களில் நிலை­யான வைப்பில் இடப்­பட்டு செல்­வந்­தர்கள் கடன் பெற்று வரு­கின்­றனர்.

 சமுர்த்தி வங்­கி­களில் பெறப்­படும் துறைசார் உற்­பத்­தி­க­ளுக்­கான கடன்கள் தொடர்­பாக உற்­பத்­தி­யாளர் சங்­கங்­களை உரு­வாக்கி (Producers Society) உற்­பத்தி பொருட்­க­ளுக்­கான சந்தை வச­தி­களை உரு­வாக்கி கடன் பெற்­றோரின் வரு­மா­னத்தை அதி­க­ரித்­தலும் அதன் மூலம் அக் குடும்­பங்­களை மேம்­ப­டுத்தல். (EAS Online இல் பதிவு செய்ய முடியும்)

இது­வரை 29 சமுர்த்தி வங்­கி­க­ளாலும் சேமிக்­கப்­பட்ட தொகை ரூபா 3,256 மில்­லியன் ஆகும். இதில் (1997 முதல்) வழங்­கப்­பட்ட மொத்த கடன்­தொகை ரூபா 2263 மில்­லியன் ஆகும். இது 34,662 குடும்­பங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் இது­வரை எந்­த­வொரு குடும்­பமும் வறு­மையில் இருந்து மீட்­கப்­பட்­டுள்­ள­தாக புள்­ளி­வி­ப­ரங்கள் இல்லை. எனவே இது தொடர்­பாக உரிய சமுர்த்தி உத்­தி­யோ­கத்­தர்­களின் நட­வ­டிக்­கைகள் உன்­னிப்­பாக அவ­தா­னிக்­கப்­பட்டு உரிய ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைக்கு அவர்கள் உட்­ப­டுத்­தப்­படல் வேண்டும். இதில் இடம்­பெறும் ஊழல், மோச­டிகள் ஒழிக்­கப்­படல் வேண்டும்.

சில முகா­மை­யா­ளர்கள் நிலை­யான வைப்பில் பணத்தை வைத்­தி­ருக்­கவே விரும்­பு­கின்­றனர். எனவே 50% குறை­வான கடன்­களை வழங்­கிய வங்கி முகா­மை­யா­ளர்­க­ளுக்­கெ­தி­ரா­கவும் உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படல் வேண்டும்.

வறு­மையை குறைக்கும் வகையில் இது­வரை எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைகள்  

மீள்­கு­டி­யேற்றப் பகு­தி­களில் வசிக்கும் 7871 குடும்­பங்­க­ளுக்கு மல­ச­ல­கூட வசதி, புதிய வீடுகள், வாழ்­வா­தார அபி­வி­ருத்தி உத­விகள், குடி நீர் இணைப்­புகள், மின்­சார வசதி என்­பன 1891, போரினால் கண­வனை இழந்த வித­வை­க­ளுக்கும், 615 வலது குறைந்த குடும்­பங்­க­ளுக்கும், 549 புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட நபர்­க­ளுக்கும், போரினால் அங்­கத்­த­வரை இழந்த 264 குடும்­பங்­க­ளுக்கும், 311 காணாமல் போனோரைக் கொண்ட குடும்­பங்­க­ளுக்கும், 4241 போரினால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கும் இது­வரை வழங்­கப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் இவர்­களின் வாழ்க்­கைத்­தரம் ஓர­ளவு மேம்­பட்­டுள்­ளது.

இயற்கை அனர்த்­தத்தால் பாதிக்­கப்­பட்ட விவ­சா­யிகளுக்கு ரூபா 143 மில்­லியன் நஷ்­ட­ஈ­டாக வழங்­கப்­பட்­டுள்­ள­துடன் 6 புதிய நெல் களஞ்­சி­ய­சா­லைகள் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­மூலம் 3000 மெற்­ரிக்தொன் நெல் களஞ்­சி­யப்­ப­டுத்த முடியும். இதே­வேளை யானை­களில் இருந்து விவ­சா­யி­களைப் பாது­காக்க 50.7km யானை வேலி அமைக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் 1100 மில்­லியன் பெறு­ம­தி­யான 63 குளங்கள், கால்­வாய்கள் புன­ர­மைப்பு செய்­யப்­பட்­டுள்­ளது.

சிறு­கைத்­தொழில் முயற்­சி­யா­ளர்­களை ஊக்­கு­விக்கும் நோக்கில் EAS Online System ஒன்று உரு­வாக்­கப்­பட்டு அவர்­க­ளது உற்­பத்­திகள் தர­கர்­க­ளின்றி நேர­டி­யாக சந்­தைப்­படுத்தும் வச­திகள் செய்­யப்­பட்டு இது­வரை 1500 சிறு கைத்­தொழில் முயற்­சி­யா­ளர்கள் இதில் இணைந்து தம் உற்­பத்­தி­களை சந்­தைப்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

பாரம்­ப­ரிய உணவு விற்­பனை நிலை­யங்கள், மட்­டு­நகர் கொம்­மா­துறை, உன்­னிச்சை பகு­தி­களில் அமைக்­கப்­பட்டு இதில் 40 பெண்கள் ஈடு­பட்டு தமது வரு­மா­னத்தை ஈட்டி வரு­கின்­றனர்.

இது­வரை 230 இளம் முயற்­சி­யா­ளர்­க­ளுக்கு உற்­பத்தி வியா­பார முயற்சி தொடர்­பான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதுடன் 1150 பேருக்கு பெறுமதி சேர் உற்பத்தி தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென ரூபா 40 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது.

இது வரை யுத்தத்தால் பாதிக் கப்பட்ட 13,652 பேருக்கு ரூபா 400 மில்லியன் நஷ்ட ஈடாக வழங்கப்­பட்டுள்ள­துடன் 400 பேருக்கு சுய தொழில் கடன்களும் வழங்கப் பட்டுள்ளது. (ரூபா 51 மில்லியன்)

மாவட்ட மட்டத்தில் Micro credit form ஒன்றை அமைத்து சகல கடன்களும் ஒரு (Package) ஆக வடிவமைக்கப்பட்டு எவ்வித Duplication இன்றி உற்பத்தி நோக்கம் கருதிய கடன்களுக்கு மட்டுமே முன்னுரிமையளிக்கப்பட்டு சகல துறைசார் திணைக்களங்களின் தொழில்நுட்ப ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டு இக்கடன்கள் வழங்கப்பட்டு முறையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுமாயின் நிச்சயமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையைக் குறைக்க முடியும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-15#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.