Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத் வீரசேகர குழுவுக்கும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்குமிடையில் ஜெனிவாவில் வாதப்பிரதிவாதம்

Featured Replies

சரத் வீரசேகர குழுவுக்கும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்குமிடையில் ஜெனிவாவில் வாதப்பிரதிவாதம்

 

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற  இலங்கை தொடர்பான  ஒரு உபகுழுக்கூட்டத்தில் புலம்பெயர் அமைப்பினருக்கும்  தென்னிலங்கையிலிருந்து கலந்துகொண்ட   எளிய  அமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையில் மீண்டும்  வாதப்பிரதிவாதங்கள்   ஏற்பட்டன. 

 sssss.jpg

இலங்கையின் வடக்கு, கிழக்கில் ஐக்கிய நாடுகள் விசாரணை அலுவலகத்தை அமைக்க முடியுமா என  புலம்பெயர் அமைப்பினர் கேள்வி எழுப்பினர்.  இதன்போதே சர்ச்சை ஏற்பட்டது.  

எளிய அமைப்பின்  பிரதிநிதிகள்  ஏற்பாடு செய்திருந்த  இந்த   உபகுழுக்கூட்டத்தில் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும்  கலந்து கொண்டிருந்தனர்.  

 

 

அத்துடன்   இந்த  உபகுழுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த புலம்பெயர் அமைப்புக்களின்  பிரதிநிதிகள் எளிய அமைப்பினரிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பியிருந்தனர்.  

 

முதலில் கருத்து வெளியிட்ட எளிய அமைப்பின்  பிரதிநிதிகள் யுத்தத்தின் போது உயிரிழந்தவர்கள்   தொடர்பாக உங்களுக்கு என்ன தெரியும் என  புலம்பெயர் அமைப்பினரைப் பார்த்து  கேட்டார்.  

 

 

அப்போது குறுக்கிட்ட புலம்பெயர் அமைப்பின்   பிரதிநிதி மணிவண்ணன்  எங்களுக்கு எல்லாம் தெரியும் என்றார். 

 

தொடர்ந்து உரையாற்றிய எளிய அமைப்பின் பிரதிநிதிகள் தயவு செய்து எங்களைப் பேசவிடுகள் என்று கூறி தமது கருத்துக்களை முன்வைக்க  ஆரம்பித்தனர். 

 

இந்த நிகழ்விற்கு  ரியர் எட்மிரல்  சரத் வீரசேகர தலைமைதாங்கினார். அப்போது எளிய அமைப்பின் பிரதிநிதியொருவர் குறிப்பிடுகையில்  நீங்கள் உங்கள் கேள்விகளை எங்களிடம் கேட்கலாம் என குறிப்பிட்டார். 

 

இதன்போது புலம்பெயர் அமைப்புக்கள் கேள்விகளை தொடுத்தனர். அதனையடுத்து  எளிய அமைப்பின் பிரதிநிதி சரத் வீரசேகர குறிப்பிடுகையில்;

 

இலங்கையில் இருந்த ஐ.நா. அதிகாரிகூட யுத்தத்தில்  7ஆயிரம் பேர் அளவிலேயே உயிரிழந்திருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார். 

 

அதாவது  புலி உறுப்பினர்களையும் சேர்த்தே   இந்த  எண்ணிக்கையிலேயே உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்திருந்தார்.  அது ஒரு உத்தியோகப்பூர்வ ஆவணம். அது அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களுடன்  ஒத்துப்போகின்றது.  

 

மே 13 ஆம் திகதிவரை  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  7 ஆயிரம் அளவிலேயே  இருந்தது.  இவ்வாறு சரத் வீரசேகர உரையாற்றிக்கொண்டிருந்த போது புலம்பெயர் அமைப்பினர் அவரை இடைமறித்து குறுக்கு கேள்விகளை எழுப்பினர்.  அப்போது யுத்தம்  தொடர்பான சில விடயங்களை   நாடுகடந்த தமிழீழ  அரசாங்கத்தின் பிரதிநிதியான  மணிவண்ணன்  வெளியிட்டுக்கொண்டிருந்தார்.  அந்த சந்தர்ப்பத்தில் அது உங்கள் கருத்து என சரத் வீரசேகர குறிப்பிட்டார். 

 

அந்த கட்டத்தில் கருத்து வெளியிட்ட மணிவண்ணன் குறிப்பிடுகையில்,

 இந்த புள்ளிவிபரங்களில்  பிரச்சினை இருப்பதனாலேயே   சுயாதீன விசாரணையை கோருகின்றோம். பல குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. அதனால் விசாரணையை நடத்துவோம் என்றார்.  அத்துடன் இதன்போது இரண்டு தரப்புக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் மேசையில் தட்டிய  எளிய அமைப்பின் பிரதிநிதிகள்   உங்கள்  கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டுவிட்டது.  

 நாங்கள் மிகவும் புனிதமான மனித உரிமை பேரவை என்ற  இடத்தில் இருக்கின்றோம்.  எங்களிடம் ஒரு கதை  இருக்கிறது. உங்களிடம்  ஒரு கதை இருக்கிறது.   நாங்கள்   ஒரு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். அதற்கென சில கொள்கைகள் உள்ளன.   நாம் எமது பக்கத்தை கூறுகின்றோம். இன்னொரு  வடிவம்   வேறுவகையாக   இருக்கலாம் என்றார். 

இந்நிலையில்    நாடுகடந்த அரசாங்கத்தின் சார்பில் மணிவண்ணன் உரையாற்றுகையில்,

 

 நீங்கள் ஒரு பக்கத்தையே  எடுக்கின்றீர்கள்.  இலங்கையில்  அனைத்து மக்களுக்கும் வாழ்வதற்கான உரிமை உள்ளது. அதனை கேள்விக்குட்படுத்த முடியாது.   2008 ஆம்ஆண்டுக்கு முதலே ஐ.நா. காண்காணிப்பாளர்களை வெளியேற்றிவிட்டீர்கள். 

 

நீங்கள்  ஒரு இனப்படுகொலை யுத்தத்தை நடத்தினீர்கள். நீங்கள் ஏன் யுத்த சூனியவலயத்தில்  தாக்குதல்  நடத்தினீர்கள்.  நீங்கள் ஏன் அங்கு   ஆயுதப்பிரயோகங்களை நடத்தினீர்கள். ஏன் மருத்துவ மனைகள் மீது ஷெல்தாக்குதல்களை நடத்தினீர்கள்.  நீங்கள் மூன்று இலட்சம் மக்களை விடுதலை செய்ததாக கூறுகின்றீர்கள்.  தமிழ் மக்கள் உங்களை அழைத்து தம்மை விடுவிக்குமாறு கோரினார்களா?  உணவு அங்கு அனுப்பப்படவில்லை.  நீங்கள் அந்த மக்களை   செங்கம்பளத்திலா வரவேற்றீர்கள்.  

 

ஆனால்  அவர்களை முகாம்களுக்குள் போட்டீர்கள்.  இப்படியான  நல்ல பணிகளை   முன்னெடுத்திருந்தால் ஏன் சர்வதேச  பொறிமுறைக்கு  அஞ்சுகின்றீர்கள். குற்றமொன்றும் செய்திருக்காவிடின் ஏன்  சர்வதேச விசாரணைக்கு அஞ்சுகின்றீர்கள்.   ஐ.நா. அதிகாரிகளை ஏன் இலங்கையில் அனுமதிக்காமல் இருக்கின்றீர்கள்.  வடக்கு, கிழக்கில்  உங்களால்  விசாரணை அலுவலகத்தை   ஸ்தாபிக்க  முடியுமா என நான் சவால் விடுக்கின்றேன்.  ஏன் தமிழ்  மக்களின் காணிகளை அபகரித்தீர்கள்? இவ்வாறு மணிவண்ணன் கேள்வி எழுப்பும் போதும்  எளிய அமைப்பினர் குறுக்கீடு செய்தனர். 

 

என்னை  கேள்வி எழுப்புவதற்கு  இடமளியுங்கள் என்று கோரிய  மணிவண்ணன்  எனக்கு கேள்வி  எழுப்ப   இடமளியுங்கள்  என்று கேட்டுவிட்டு   கேள்வி எழுப்புகையில் உங்களிடம்  பெண்கள்  தமது பிள்ளைகளையும் கணவன் மாரையும் ஒப்படைத்தார்கள். ஆனால் அவ்வாறு  பொறுப்பேற்கப்பட்ட   பட்டியலைக்கூட  நீங்கள் இதுவரை வெளியிடவில்லை. ஏன்  அந்த  ஆவணத்தை வெளியிடாமல் இருக்கின்றீர்கள்.  ஏன் இந்தக்கேள்விக்கு பதிலளிக்காமல்  இருக்கின்றீர்கள் என்று கேள்வி எழுப்பினார். 

http://www.virakesari.lk/article/31839

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

வட­கி­ழக்கில் ஐ.நா.விசா­ரணை அலு­வ­ல­கத்தை நிறு­வ­மு­டி­யுமா?

11-6aa6b536fae73d487344bb607269f938e3234e15.jpg

 

சரத் வீர­சே­கர குழு­விடம் புலம்­பெயர் பிர­தி­நி­திகள் ஜெனி­வாவில் பகி­ரங்க கேள்வி; உப­குழுக் கூட்­டத்தில் கடும் சர்ச்சை 

(ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நேற்று முன்­தினம் மாலை இடம்­பெற்ற இலங்கை தொடர்­பான ஒரு உப­கு­ழுக்­கூட்­டத்தில் புலம்­பெயர் அமைப்­பி­ன­ருக்கும் தென்­னி­லங்­கை­யி­லி­ருந்து கலந்­து­கொண்ட எளிய அமைப்பின் பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டையில் மீண்டும் வாதப்­பி­ர­தி­வா­தங்கள் ஏற்­பட்­டன.

இலங்­கையின் வடக்கு கிழக்கில் ஐக்­கிய நாடுகள் விசா­ரணை அலு­வ­ல­கத்தை அமைக்க முடி­யுமா என புலம்­பெயர் அமைப்­பினர் கேள்வி எழுப்­பினர். இதன்­போதே சர்ச்சை ஏற்­பட்­டது.

எளிய அமைப்பின் பிர­தி­நி­திகள் ஏற்­பாடு செய்­தி­ருந்த இந்த உப­கு­ழுக்­கூட்­டத்தில் புலம்­பெயர் அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

அத்­துடன் இந்த உப­கு­ழுக்­கூட்­டத்தில் கலந்து கொண்­டி­ருந்த புலம்­பெயர் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் எளிய அமைப்­பி­ன­ரிடம் சர­மா­ரி­யான கேள்­வி­களை எழுப்­பி­யி­ருந்­தனர். முதலில் கருத்து வெளி­யிட்ட எளிய அமைப்பின் பிர­தி­நி­திகள் யுத்­தத்தின் போது உயி­ரி­ழந்­த­வர்கள் தொடர்­பாக உங்­க­ளுக்கு என்ன தெரியும் என புலம்­பெயர் அமைப்­பி­னரைப் பார்த்து கேட்டார்.

 

அப்­போது குறுக்­கிட்ட புலம்­பெயர் அமைப்பின் பிர­தி­நிதி மணி­வண்ணன் எங்­க­ளுக்கு எல்லாம் தெரியும் என்றார். தொடர்ந்து உரை­யாற்­றிய எளிய அமைப்பின் பிர­தி­நி­திகள் தயவு செய்து எங்­களைப் பேச­வி­டுகள் என்று கூறி தமது கருத்­துக்­களை முன்­வைக்க ஆரம்­பித்­தனர். இந்த நிகழ்­விற்கு ரியர் எட்­மிரல் சரத் வீர­சே­கர தலை­மை­தாங்­கினார். அப்­போது எளிய அமைப்பின் பிர­தி­நி­தி­யொ­ருவர் குறிப்­பி­டு­கையில் நீங்கள் உங்கள் கேள்­வி­களை எங்­க­ளிடம் கேட்­கலாம் என குறிப்­பிட்டார்.

இதன்­போது புலம்­பெயர் அமைப்­புக்கள் கேள்­வி­களை தொடுத்­தனர். அத­னை­ய­டுத்து எளிய அமைப்பின் பிர­தி­நிதி சரத் வீர­சே­கர குறிப்­பி­டு­கையில்;

இலங்­கையில் இருந்த ஐ.நா. அதி­கா­ரி­கூட யுத்­தத்தில் 7ஆயிரம் பேர் அள­வி­லேயே உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என்று குறிப்­பிட்­டி­ருந்தார். அதா­வது புலி உறுப்­பி­னர்­க­ளையும் சேர்த்தே இந்த எண்­ணிக்­கை­யி­லேயே உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என தெரி­வித்­தி­ருந்தார். அது ஒரு உத்­தி­யோ­கப்­பூர்வ ஆவணம். அது அர­சாங்­கத்தின் புள்­ளி­வி­ப­ரங்­க­ளுடன் ஒத்­துப்­போ­கின்­றது.

 

மே 13ஆம் திக­தி­வரை உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை 7 ஆயிரம் அள­வி­லேயே இருந்­தது. இவ்­வாறு சரத் வீர­சே­கர உரை­யாற்­றிக்­கொண்­டி­ருந்த போது புலம் பெயர் அமைப்­பினர் அவரை இடை­ம­றித்து குறுக்கு கேள்­வி­களை எழுப்­பினர். அப்­போது யுத்தம் தொடர்­பான சில விட­யங்­களை நாடு­க­டந்த தமி­ழீழ அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­யான மணி­வண்ணன் வெளி­யிட்­டுக்­கொண்­டி­ருந்தார். அந்த சந்­தர்ப்­பத்தில் அது உங்கள் கருத்து என சரத் வீர­சே­கர குறிப்­பிட்டார்.

 

அந்த கட்­டத்தில் கருத்து வெளி­யிட்ட மணி­வண்ணன் குறிப்­பி­டு­கையில் இந்த புள்­ளி­வி­ப­ரங்­களில் பிரச்­சினை இருப்­ப­த­னா­லேயே சுயா­தீன விசா­ர­ணையை கோரு­கின்றோம். பல குற்­றச்­சாட்­டுக்கள் காணப்­ப­டு­கின்­றன. அதனால் விசா­ர­ணையை நடத்­துவோம் என்றார். அத்­துடன் இதன்­போது இரண்டு தரப்­புக்­கு­மி­டையில் வாக்­கு­வாதம் ஏற்­பட்­ட­துடன் மேசையில் தட்­டிய எளிய அமைப்பின் பிர­தி­நி­திகள் உங்கள் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கப்­பட்­டு­விட்­டது.

 நாங்கள் மிகவும் புனி­த­மான மனித உரிமை பேர­வைய என்ற இடத்தில் இருக்­கின்றோம். எங்­க­ளிடம் ஒரு கதை இருக்­கி­றது. உங்­க­ளிடம் ஒரு கதை இருக்­கி­றது. நாங்கள் ஒரு நாட்டைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கிறோம். அதற்­கென சில கொள்­கைகள் உள்­ளன. நாம் எமது பக்­கத்தை கூறு­கின்றோம். இன்­னொரு வடிவம் வேறு­வ­கை­யாக இருக்­கலாம் என்றார்.

இந்­நி­லையில் நாடு­க­டந்த அர­சாங்­கத்தின் சார்பில் மணி­வண்ணன் உரை­யாற்­று­கையில் நீங்கள் ஒரு பக்­கத்­தையே எடுக்­கின்­றீர்கள். இலங்கை அனைத்து மக்­க­ளுக்கும் வாழ்­வ­தற்­கான உரிமை உள்­ளது. அதனை கேள்­விக்­குட்­ப­டுத்த முடி­யாது. 2008 ஆம்­ஆண்­டுக்கு முதலே ஐ.நா. காண்­கா­ணிப்­பா­ளர்­களை வெளி­யேற்­றி­விட்­டீர்கள். நீங்கள் ஒரு இனப்­ப­டு­கொலை யுத்­தத்தை நடத்­தி­னீர்கள். நீங்கள் ஏன் யுத்த சூனி­ய­வ­ளை­யத்தில் தாக்­குதல் நடத்­தி­னீர்கள். நீங்கள் ஏன் அங்கு ஆயு­தப்­பி­ர­யோ­கங்­களை நடத்­தி­னீர்கள். ஏன் மருத்­துவ மனைகள் மீது ஷெல்­தாக்­கு­தல்­களை நடத்­தி­னீர்கள். நீங்கள் மூன்று இலட்சம் மக்­களை விடு­தலை செய்­த­தாக கூறு­கின்­றீர்கள். தமிழ் மக்­களை உங்­களை அழைத்து தம்மை விடு­விக்­கு­மாறு கோரி­னார்­களா? உணவு அங்கு அனுப்­பப்­ப­ட­வில்லை. நீங்கள் அந்த மக்­களை செங்­கம்­ப­ளத்­திலா வர­வேற்­றீர்கள். ஆனால் அவர்­களை முகாம்­களை போட்­டீர்கள். இப்­ப­டி­யான நல்ல பணி­களை முன்­னெ­டுத்­தி­ருந்தால் ஏன் சர்­வ­தேச பொறி­மு­றைக்கு அஞ்­சு­கின்­றீர்கள். குற்­ற­மொன்றும் செய்­தி­ருக்­கா­விடின் ஏன் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு அஞ்­சு­கின்­றீர்கள். ஐ.நா. அதி­கா­ரி­களை ஏன் இலங்­கையில் அனு­ம­திக்­காமல் இருக்­கின்­றீர்கள். வடக்கு, கிழக்கில் உங்­களால் விசா­ரணை அலு­வ­ல­கத்தை ஸ்தாபிக்க முடி­யுமா என நான் சவால் விடுக்­கின்றேன். ஏன் தமிழ் மக்­களின் காணி­களை அப­க­ரித்­தீர்கள்? இவ்வாறு மணிவண்ணன் கேள்வி எழுப்பும் போதும் எளிய அமைப்பினர் குறுக்கீடு செய்தனர். என்னை கேள்வி எழுப்புவதற்கு இடமளியுங்கள் என்று கோரிய மணிவண்ணன் எனக்கு கேள்வி எழுப்ப இடமளியுங்கள் என்று கேட்டுவிட்டு கேள்வி எழுப்புகையில் உங்களிடம் பெண்கள் தமது பிள்ளைகளையும் கணவன் மாரையும் ஒப்படைத்தார்கள். ஆனால் அவ்வாறு பொறுப்பேற்கப்பட்ட பட்டியலைக்கூட நீங்கள் இதுவரை வெளியிடவில்லை. ஏன் அந்த ஆவணத்தை வெளியிடாமல் இருக்கின்றீர்கள். ஏன் இந்தக்கேள்விக்கு பதிலளிக்காமல் இருக்கின்றீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-22#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.