Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்­மையைக் கண்­டறிய அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டுங்கள்

Featured Replies

உண்­மையைக் கண்­டறிய அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டுங்கள்

 

காணா­மல்­போனோர் பிரச்­சினை தொடர்ச்­சி­யாக தீர்க்­கப்­ப­டாமல் நீடிக்­கின்ற நிலையில் அது­தொ­டர்­பான சர்ச்­சை­களும் நீடித்­துக்­கொண்­டேதான் இருக்­கின்­றன. யுத்தம் முடி­வ­டைந்­த­தி­லி­ருந்தே இந்த ­கா­ணாமல் போனோர் தொடர்­பான விவ­காரம் சர்ச்­சைக்­குள்­ளாகி வரு­கின்­றது. யுத்­த­கா­லத்­திலும் அதற்குப் பின்­ன­ரான காலத்­திலும் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் கடத்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்ற உண்மை இது­வரை வெளி­வ­ராமல் இருக்­கின்­றது.

காணாமல் போனோர் தொடர்­பான பிரச்­சினை தீர்க்­கப்­ப­டா­தது மட்­டு­மன்றி அது­தொ­டர்­பான சர்ச்­சை­களும் அவ்­வப்­போது ஏற்­பட்டு வரு­கின்­றன. குறிப்­பாக முன்­னைய அர­சாங்க காலத்தில் இந்­தக்­கா­ணா­மல்­போனோர் தொடர்­பாக கருத்து வெளி­யிட்­டி­ருந்த உயர் அதி­காரி ஒருவர் இலங்­கையில் காணா­மல்­போனோர் என்று எவரும் இல்லை என்றும் காணாமல் போன­தாக கூறப்­பட்­ட­வர்கள் வெளி­நா­டு­களில் இருக்­கலாம் என்றும் தெரி­வித்­தி­ருந்தார். அப்­போ­தைய நிலை­மையில் அந்த உயர் அதி­கா­ரியின் கூற்­றா­னது கடும் சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

அதன் பின்னர் அப்­போ­தைய அர­சாங்­கத்­தினால் பர­ண­கம ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்டு காணா­மல்­போனோர் தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­பட்­டி­ருந்­தது. அந்த ஆணைக்­கு­ழு­விற்கு 20ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட முறைப்­பா­டுகள் காணா­மல்­போனோர் தொடர்பில் கிடைத்­தி­ருந்­தன. எனினும் எந்­த­வொரு பிரச்­சி­னைக்கும் தீர்வு கிட்­ட­வில்லை. தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்­ததும் இந்தப் பிரச்­சி­னைக்கு விரைந்து தீர்­வு­கா­ணப்­படும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. எனினும் நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் கூட காணாமல் போனோர் தொடர்பில் சர்ச்­சைக்­கு­ரி­ய­ வி­ட­யங்கள் வெளி­யி­டப்­பட்டு வந்­தன.

விசே­ட­மாக யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்­டி­ருந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க காணா­மல்­போ­ன­வர்கள் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என்ற தொனியில் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். இந்­தக்­க­ருத்­தா­னது பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் கடும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. அதனை அடுத்து வடக்கில் மற்றும் கிழக்கில் காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் தொடர் போராட்­டங்­களை நடத்த ஆரம்­பித்­தி­ருந்­தனர். அந்­தப்­போ­ராட்­டங்கள் இன்னும் தொடர்ந்­து­கொண்­டுதான் இருக்­கின்­றன.

ஒரு­முறை இந்த போராட்­டக்­கா­ரர்கள் மத்­தியில் சென்­றி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தான் இது­தொ­டர்பில் ஆராய்ந்து பார்ப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்தார். அதன்­பின்னர் கருத்து வெளி­யிட்­டி­ருந்த ஜனா­தி­பதி காணா­மல்­போ­ன­வர்கள் முகாம்­களில் இருப்­ப­தாக கூறப்­பட்­டாலும் தான் அது­தொ­டர்பில் தேடிப்­பார்த்­த­போது அவ்­வாறு யாரும் இல்லை என்று குறிப்­பிட்­டி­ருந்தார். இந்­நி­லையில் காணா­மல்­போனோர் விவ­காரம் தொடர்பில் அர­சாங்­கத்தை நம்பி எந்­தப்­ப­யனும் இல்லை என்று பாதிக்­கப்­பட்ட மக்கள் கூறு­வ­தற்கு ஆரம்­பித்­த­துடன் விரக்தி நிலைக்கு சென்­றனர்.

இதன் பின்­ன­ணியில் நேற்று முன்­தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் ஒன்றை மேற்­கொண்­டிருந்தார். அதன்­போது மக்கள் ஜனா­தி­ப­தியின் யாழ். வரு­கையை எதிர்த்து ஆர்ப்­பாட்டம் நடத்­தி­யி­ருந்­தனர். இத­னை­ய­டுத்து யாழில் நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்த மக்­களின் ஆர்ப்­பாட்டம் தொடர்பில் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். அதா­வது நான் இங்கு வரும்­போது காணா­மல் ­போனோர் தொடர்பில் ஆர்ப்­பாட்டம் நடை­பெற்­றது. நாங்கள் காணாமல் போனோர் சம்­பந்­த­மாக அதற்­கான சட்டம் ஒன்றை உரு­வாக்கி அதற்கு ஒரு குழு ஒன்றை நிய­மித்­துள்ளோம். காணாமல் போனோர் தொடர்­பான குடும்­பங்­களின் நலன் தொடர்பில் அந்தக் குழு செயற்­பட்டு வரு­கின்­றது. எங்­க­ளு­டைய வேலைத்­திட்டம் தொடர்பில் சரி­யாக தெளிவு­ப­டுத்தி உள்ளோம். நீங்­களும் நாங்­களும் ஒன்­று­சேர்ந்து இந்த நாட்­டுக்­காக எங்­க­ளு­டைய கட­மை­களை செய்வோம். இனங்கள் மத்­தியில் ஒற்­று­மையை ஏற்­ப­டுத்­துவோம். எங்­க­ளிடம் இருக்­கின்ற முறுகல் நிலையை இல்­லாது செய்வோம். அதற்­காக எல்­லோரும் அர்ப்­ப­ணிப்­புடன் பணி­யாற்­றுவோம் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தி­ருந்தார்.

அந்­த­வ­கையில் அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள இந்த காணா­மல்­ போனோர் தொடர்­பான அலு­வ­லகம் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காணும் என நம்­பு­வ­தாக ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருக்­கின்றார். ஆனால் பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­ வ­ரையில் இந்த காணா­மல்­போனோர் அலு­வ­லகம் தொடர்­பாக அதி­ருப்தி கலந்த நிலைப்­பாட்­டுட­னேயே இருக்­கின்­றனர்.

இந்த காணா­மல்­போனோர் அலு­வ­ல­க­மா­னது கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனி­வாவில் இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையில் உள்­ள­டக்­கப்­பட்ட ஒரு பரிந்­து­ரையின் அடிப்­ப­டையில் உரு­வாக்­கப்­பட்­டது. இந்த ஜெனிவா பிரே­ரணை 2015 ஆண்டு ஒக்­டோபர் மாதம் இலங்­கையின் இணை அனு­ச­ர­ணை­யுடன் நிறை­வேற்­றப்­பட்­டது. அவ்­வாறு இலங்­கையின் இணை அனு­ச­ர­ணை­யுடன் நிறை­வேற்­றப்­பட்ட இந்த பிரே­ர­ணையில் உள்­ள­டக்­கப்­பட்ட காணா­மல்­போனோர் அலு­வ­லகம் குறித்த பரிந்­து­ரையை நடை­மு­றைப்­ப­டுத்த கிட்­டத்­தட்ட அர­சாங்­கத்­திற்கு மூன்று வருட­காலம் எடுத்­துள்­ளது. தற்­போது இந்த அலு­வ­லகம் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­துடன் அதற்­கான ஆணை­யா­ளர்கள் ஜனா­தி­ப­தி­யினால் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

ஆனால் இது தொடர்பில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளைப் ­பொ­றுத்­த­வ­ரையில் நம்­பிக்­கை­யற்ற தன்மை காணப்­ப­டு­கின்­றது. எனவே இது­தொ­டர்­பான நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்ப நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதா­வது கடந்த எட்டு வரு­ட­கா­ல­மாக காணா­மல்­போனோர் விவ­கா­ரத்­திற்கு முன்­னைய அர­சாங்­கமோ தற்­போ­தைய அர­சாங்­கமோ ஆக்­க­பூர்­வ­மான தீர்வைக் காண­வில்லை. மாறாக சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்­க­ளையே இந்த காணாமல் போனோர் விட­யத்தில் அனைத்துத் தரப்­பி­னரும் தெரி­வித்­தி­ருந்­தனர்.

எனவே இந்த சூழலில் விரக்­திக்­குள்­ளா­கி­யி­ருக்கும் பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்பில் சிந்­திக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். காணா­மல்­போனோர் அலு­வ­லகம் பாதிக்­கப்­பட்ட மக்­களின் கவ­லைகள் குறித்து ஆராயும் என ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருக்­கின்ற போதிலும் அதில் முற்­று­மு­ழு­தாக நம்­பிக்கை கொள்­வ­தற்கு பாதிக்­கப்­பட்ட மக்கள் தயா­ரில்லை. அதற்கு கடந்­த­காலம் முழு­வ­து­மாக மேற்­கொள்­ளப்­பட்ட அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களே கார­ண­மாக உள்­ளன.

அர­சாங்கம் இந்த விட­யத்தை ஒரு நெருக்­கடி மிக்­க­ வி­ட­ய­மா­கவே பார்த்து வரு­கின்­றது. அதா­வது எங்கே இந்த காணா­மல்­போனோர் விவ­காரம் தொடர்பில் ஆக்­க­பூர்­வ­மான விட­யங்­களை எடுத்தால் தென்­னி­லங்­கையில் அர­சாங்­கத்தின் இருப்­புக்கு ஆபத்து ஏற்­பட்­டு­வி­டுமோ என்ற அச்­சத்­தி­லேயே அர­சாங்கம் செயற்­பட்டு வரு­வதை காண­மு­டி­கின்­றது. மாறாக காணா­மல்­போனோர் தொடர்­பான பிரச்­சி­னையின் தாற்­ப­ரி­யத்தை உணர்ந்து மக்­க­ளுக்கு உண்­மையை பெற்­றுக்­கொ­டுக்க அர­சுக்கு ஆர்வம் இருப்­ப­தாக தெரி­ய­வில்லை. எவ்­வா­றெ­னினும் தொடர்ந்து காணாமல் போனோரின் உற­வி­னர்­களின் ஆர்ப்­பாட்­டங்கள் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. மக்கள் வீதி­களில் போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். ஆனால் அவர்­க­ளுக்கு நீதி கிடைப்­ப­தாக தெரி­ய­வில்லை. தற்­போது காணாமல் போனோர் குறித்த அலு­வ­லகம் நிய­மிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதன் தொழிற்­பா­டுகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. ஆணை­யா­ளர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்கள் ஏற்­க­னவே தமது செயற்­பா­டுகள் எவ்­வாறு அமையும் என்­பது குறித்து அறி­விப்பை வெளி­யிட்­டுள்­ளனர். அது­மட்­டு­மன்றி தமது செயற்­பா­டுகள் வெற்­றி­ய­டை­வ­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறு பொது­மக்­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

எனவே காணா­மல்­போ­னோ­ரது உற­வி­னர்­க­ளுக்கு விரைவில் நீதி கிடைப்­ப­தற்கு வழி­வ­கை­களை செய்­ய­வேண்டும். பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையில் நான்கு கார­ணி­களில் முத­லா­வது கார­ணி­யாக இந்த உண்­மையை கண்­ட­றிதல் என்ற விடயம் காணப்­ப­டு­கின்­றது. அதன்கீழ் காணா­மல்­ போ­னோ­ருக்கு என்ன நடந்­தது என்ற உண்மை கண்­ட­றி­யப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. விசே­ட­மாக வீதி­களில் போரா­டிக்­கொண்­டி­ருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை தெரியப்படுத்தப்படவேண்டும். இதனூடாகவே அந்த மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க முடியும். அதனால் அரசாங்கம் தொடர்ந்தும் இவ்வாறு காலத்தை இழுத்தடித்துக்கொண்டிருக்காமல் காணாமல் போனோர் விவகாரத்திற்கு தீர்வுகாண்பதற்கு நடவடிக்கை எடுத்தாகவேண்டும். எந்தக்காரணம் கொண்டும் இந்த விவகாரத்தை தொடர்ந்தும் தாமதப்படுத்தக்கூடாது. தென்னிலங்கையில் கடும் போக்குவாதிகள் எதிர்க்கின்றனர் என்பதற்காக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்காமல் இருக்க முடியாது. எனவே இந்த செயற்பாட்டில் அரசாங்கம் அர்ப்பணிப்புடனும் இதயசுத்தியுடனும் செயற்படுவதற்கு முன்வரவேண்டும். காணாமல் போனோரது உறவினர்கள் வீதிகளில் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருப்பதற்கு இடமளிக்காமல் அவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அதிகாரத்தில் இருப்போர் முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-21#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.