Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாமல் ராஜபக்ஸ ரஸ்ய விமான நிலையத்தில் முடக்கப்பட்டார்

Featured Replies

நாமல் ராஜபக்ஸ ரஸ்ய விமான நிலையத்தில் முடக்கப்பட்டார்

Namal-Rajapaksa.jpg?resize=624%2C387
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ரஸ்ய விமான நிலையத்தில் வைத்து முடக்கப்பட்டுள்ளார். ரஸ்யாவிலிருந்த அமெரிக்கா செல்வதற்கு நாமல் ராஜபக்ஸவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ரஸ்யாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் ஓர் கண்காணிப்பாளராக நாமல் ராஜபக்ஸ பங்கேற்றிருந்தார்.

 

தாம் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய எத்தனித்த போது விமான நிலைய அதிகாரிகள் அதற்கு அனுமதிக்கவில்லை என டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் அவர் தெரிவித்துள்ளார். என்ன காரணத்திற்காக இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ரஸ்யாவிற்கும் ராஜபக்ஸ குடும்பத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. இந்த நிலையில் நாமல் ராஜபக்ஸ அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/2018/71853/

  • தொடங்கியவர்
அமெரிக்க செல்ல முடியாமல் நாடு திரும்பினார் நாமல்
 
 

image_f93d815769.jpgமொஸ்கோவில் இருந்து, எமிரேட்ஸ் விமானம் மூலம் அமெரிக்கா செல்ல நாமல் ராஜபக்ஸவுக்கு அனுமதி வழங்கப்படாமைக் காரணமாக,மீண்டும் நாட்டுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாமல் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற ரஷ்யாவின் ஜனாதபதித் தேர்தலை சுயேட்சை கண்காணிப்பாளராக கண்காணிக்கச் சென்ற போதே, இந்தச் சம்பவத்திற்கு முகம் கொடுத்ததாகவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

 “ எமிரேட்ஸ் விமான நிறுவன அதிகாரிகளுக்கு அமெரிக்க அதிகாரிகள் அழுத்தம் விடுத்தமையாலேயே, தமக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், தான், இலங்கையின் எதிர்கட்சி உறுப்பினர் என்ற ரீதியில் மொஸ்கோவில் இருந்து அமெரிக்க செல்ல நினைக்கவில்லை என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

எனினும், தனக்கு அனுமதி வழங்காமைக்கான காரணத்தை இதுவரை தனக்கு அறிவிக்கவில்லையென்றும் நாமல் பதிவிட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/அமெரிக்க-செல்ல-முடியாமல்-நாடு-திரும்பினார்-நாமல்/175-213096

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

தனக்கு அனுமதி வழங்காமைக்கான காரணத்தை இதுவரை தனக்கு அறிவிக்கவில்லையென்றும் நாமல் பதிவிட்டுள்ளார்.

சித்தப்பா.. அமெரிக்கா ஜனாதிபதியுடன் கதைத்து நிறுத்தியிருக்ககூடும்...

  • தொடங்கியவர்

அமெரிக்காவின் பயண கண்காணிப்பு பட்டியலில் நாமல்?

 

eagle-flag-usaமகிந்த ராஜபக்சவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அமெரிக்காவுக்குள் நுழைய, தடைவிதிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிட அமெரிக்கத் தூதரகம் மறுத்துள்ளது.

நேற்றுமுன்தினம் மொஸ்கோவில் இருந்து அமெரிக்காவுக்குச் செல்ல முற்பட்ட நாமல் ராஜபக்ச, அமெரிக்க அதிகாரிகளின் உத்தரவின் பேரில், விமானத்தில் ஏறவிடாமல் தடுக்கப்பட்டார்.

இதுகுறித்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் கருத்தை அறிய ஊடகங்கள் முற்பட்ட போது, தனிநபர்களின் நுழைவிசைவு விவகாரங்கள் பற்றிப் பேசுவதற்கு அமெரிக்க சட்டம் தம்மைத் தடுப்பதாக பதிலளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சிறிலங்காவில் பணச்சலவை குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் நாமல் ராஜபக்ச, அமெரிக்காவின் பயண கண்காணிப்பு பட்டியலில் (Travel watch list)  உள்ளடக்கப்பட்டிருக்கலாம் என்று ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/03/23/news/29982

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.