Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘சசிகலாவின் கணவர்’ என்ற அடையாளத்துடன் தமிழ் பற்றாளர் ம.நடராஜனின் மரணம் கடந்து போனது..

Featured Replies

‘சசிகலாவின் கணவர்’ என்ற அடையாளத்துடன் தமிழ் பற்றாளர் ம.நடராஜனின் மரணம் கடந்து போனது..

காலைக்கதிர் ஆசிரியர் தலையங்கம்…

nadarajan.jpg?resize=615%2C350

 

 

ஈழத்தமிழரின்பால் நீங்காப் பற்றுக்கொண்டிருந்த ஒரு தமிழ் உணர்வாளனின் மரணம், வெறும் தமிழக அரசியல்வாதி என்ற ஏளனப் பார்வையுடன் கடந்து போயிருக்கின்றது.
‘சசிகலாவின் கணவர்’ என்ற அடையாளத்துடன் தமிழ் பற்றாளர் ம.நடராஜனின் மரணத்தை இலங்கைத் தமிழர்கள் வெறும் செய்தியாக நோக்கி, அத்தோடு புறம் தள்ளிச் சென்றிருக்கின்றமை வேதனையிலும் வேதனை.

ஈழத் தமிழர்களுக்காக என்றும் கொதித்துக் கொண்டிருந்த இதயம் அது. இலங்கைத் தமிழர்களின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றபோது அவர்களின் கனலும் ஆயுதங்களும் அடங்கின. ஆனால் தமிழ் மறவன் நடராஜனின் மனம் அடங்கவில்லை. ஈழத் தமிழர்களுக்காக இறுதிவரை கனன்று கொண்டிருந்த நெஞ்சம் அவருடையது என்பது மிகு வார்த்தையல்ல.

ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தைத் தமது உள்நாட்டு அரசியல் நடவடிக்கைகளுக்காகச் சாதகமாகப் பயன்படுத்தும் தமிழகத்தின் அற்ப அரசியல்வாதிகளினின்றும் அவர் முற்றும் வேறுபட்டிருந்தார். அந்தப் பணியை அவர் இன உணர்வாக ஆற்றினாரேயன்றி, அரசியலாகச் செய்யவேயில்லை.  தமிழரின் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டது. அதன் அடையாளமே இல்லாமல் செய்யும் கைங் கரியங்களே இங்கு தொடர்ந்து நடக்கின்றன.  ஆனால், அந்தப் போராட்டத்தில் தம்மையே ஆகுதியாக்கிய ஈழமறவர்களுக்காக ‘நினைவழியா முற்றம்’ ஒன்றை மிகப் பெரும் செலவில் அமைத்து அந்தப் போராளிகளின் நினைவைத் தமிழி னம் காலம் காலமாகச் சுமந்து, நினைந்து போற்றுவதற்காக முள்ளி வாய்க்கால் முற்றத்தைத் தஞ்சையிலே அமைத்தவர் நடராஜன்.

ஈழப் போராட்டத்தின் பரிமாணங்களை ஒரே இடத்தில் தரிசிக்கக் கூடியதாக அதன் அடையாளங்களை உருக்கொடுத்து பிரமாண்டமான கட்டமைப்பாக உருவாக்கியிருக்கின்றார் அவர்.  உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறனை முன்னிறுத்தி, இதற்காகத் தனது முழு உதவிகளையும் வழங்கி, அர்ப்பணித்து, அதனை நிஜமாக்கிக் காட்டியிருக்கின்றார் நடராஜன்.  முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற அந்தப் பிரமாண்ட கட்டமைப்புக்குள் நுழைந்து சிற்பங்களையும், பல நூற்றுக் கணக்கான போராளிகள், மாவீரர்களின் படங்கள், ஓவியங்களையும் போராட்டம் பற்றிய ஆவணங்களையும் பார்வையிட்டால் ஈழப் போராட்டத்தின் கனதி, ஆழம், அர்ப்பணிப்பு, உயர்வு, அதற்குள் பொதிந்து கிடக்கும் அளவிடமுடியாத தியாகம், ஒப்பிட முடியாத வீரச் சிறப்பு எல்லாம் ஒரு தடவை நம்மை சிலிர்ப்பூட்டி உணர்வைக் கொப்பளிக்க வைக்கும்.  இலங்கையில் ஈழத் தமிழன் புரிந்த ஒப்புயர்வற்ற போராட்டத் தின் வரலாற்றுப் பதிவு ஒரு சிறிய பகுதியேனும் பொறிக்கப்பட்டிருப் பின், அது அவர் தஞ்சையில் அமைத்த முள்ளிவாய்க்கால் முற் றத்தில்தான் எனலாம்.

அதை உருவாக்கும் காலத்தில் இந்திய, தமிழக அரசுகள் சட்ட ரீதியாகவும், பிறவழிகளிலும் கொடுத்த தொல்லைகள், கஷ்டங் கள் ஏராளம். அவற்றை எல்லாம் சகித்துக் கொண்டும் தானும் ஒரு தமிழ் வீரமறவன் என்ற உணர்வுடன் அந்தப் பணிக்கு செயலுருக் கொடுத்து வெற்றி கண்டவர் நடராஜன்.  தமது சொந்த நிலத்தில், தமது சொந்தப் பணத்தில், தமது சொந்த உழைப்பில் ஈழத் தமிழர்களுக்காக ஆற்றிய அவரது அரும்பணி அது.  ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை தலைவர் பிரபாகரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அந்த விடுதலை வேள்வியின் சரிதத்தை ‘டிஜிட்டல்’ திரையில் முழு ஆவணமாக்கும் முயற்சியே கடைசி வரை அவரது கனவாக இருந்தது.

ஈழத் தமிழர்களின் கடந்த காலப் போராட்டங்களை ஓரளவு பதிவுக்குள் கொண்டு வந்த அவர், அதனைக் கோத்து ஆரமாக் கும் முயற்சியாகச் சமகால எழுத்துருவாக்கிகள் பலருடனும் தொடர்பைப் பேணினார். இடையறாது பணியாற்றினார்.  ஆனாலும், நோயும், அரசியல் நெருக்கடிகளும் அவரை வாட்டின. அந்த முயற்சியில் அவர் எவ்வளவு தூரம் வெற்றி ஈட்டினார் என்பதை அவரது வாரிசுகள்தாம் இனிமேல் வெளிப் படுத்த வேண்டும்.

1960களில் தீயாய்ப் பரவிய திராவிட இயக்கங்களின் ஆரம்பம் முதலே, இளைஞனாகத் தன்னை இணைத்துக் கொண்டவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவனாக இருந்தபோதே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று போராடிக் கைதாகிச் சிறை சென்றவர். எம்.ஜி. ஆர். ஆட்சியில் தமிழக மக்கள் தொடர்புத்துறையில் பிரதான அதிகாரியாகப் பணியாற்றியவர்.

ஈழத் தமிழர்களின் உரிமைக்கான எழுச்சிப் போராட்டமும், அதற்காகத் தலைவர் பிரபாகரனின் தலைமையில் திரண்ட போராளிகளின் ஒப்புயர்வற்ற தியாகமும் நடராஜன் மனதைக் கவர்ந்தன. உண்மை உணர்வோடு அந்தப் போராட்டத்தை நேசித்தார். போராளிகளுக்காகவும், ஈழத் தமிழ் மக்களுக்காகவும் குரல் எழுப்பினார்.
அந்தப் போராட்டப் பெருமையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வந்து தரிசித்து, வணங்கிப் போற்றுவதற்கு ஓர் புனித ஆலயமாக ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ என்ற பிரமாண்டத்தை நிறுவியிருக்கின்றார்.

ஈழத் தமிழருக்காய் குரல் எழுப்பிய அவர்களுக்காய் அழுது கொண்டிருந்த – ஓர் இதயம் அடங்கிப்போனது. அது புரியாமல் ‘சசிகலா கணவர் மரணம்’ என்ற அளவோடு நாம் அதனைச் செய்தியாக்கி நிற்கிறோம். நம் மண்ணுக்காக தங்கள் உயிரையும் உடலையும் ஆகுதியாக்கிய மாவீரர் களையே மறந்து விட்ட நமது சமூகம், நமக்காக அழுத ஓர் இதயத்தையா நினைவில் கொள்ளப்போகின்றது?

kalai.png?resize=221%2C800

http://globaltamilnews.net/2018/72083/

  • கருத்துக்கள உறவுகள்

அய்யாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள் !!

  • தொடங்கியவர்

மறுப்பக்கம்: முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு நிலத்தை தந்த நடராஜன்

 

இலை­மறை காய்போல அவர் வெளியே தெரி­யா­விட்­டாலும் தமி­ழக அர­சி­யலில் பல முக்­கிய மாற்­றங்கள் இடம்­பெற கார­ண­மாக இருந்­தவர் நட­ராஜன். ஜெய­ல­லிதா என்ற மாபெரும் ஆளுமை தமி­ழ­கத்­துக்கு கிடைக்­கப் பெற்றமைக்கு பல கார­ணங்கள் இருக்­கலாம். ஆனால், முக்­கிய காரணம் இந்த நட­ராஜன் தான். அது மட்டுமல்ல ஈழத் தமி­ழர்­களின் இனப்படு­கொ­லையை கண்­முன்னே கொண்­டு­வரும் வகையில் அமைக்­கப்­பட்ட முள்ளி­வாய்க்கால் நினை­வேந்தல் முற்றம் தஞ்சாவூரில் அமையப்பெற தனது சொந்த நிலத்தை வழங்­கி­யதும் நட­ரா­ஜனே! ஆனால் சசி­க­லாவின் குடும்பம் என்றால் எதிர்­ம­றை­யான விட­யங்­கள் மட்­டுமே கண்­முன்னே ­வ­ரு­வது வழக்கம். சசி­க­லாவின் கணவர் நட­ரா­ஜனும் அப்­ப­டித்தான் தொடர் சர்ச்­சை­களில் சிக்­கினார். இவர் நட­ராஜன் என்று அறி­யப்­பட்­டதை விட சசி­க­லாவின் கணவர் என்று அறி­யப்­பட்­டதே அதிகம். புதிய பார்வை ஆசி­ரியர், ஈழ தமி­ழர்­க­ளுக்­காக தொடர்ந்து குரல் கொடுத்த தமிழ் ஆர்­வலர் போன்ற பல முகங்கள் நட­ரா­ஜனுக்கு இருந்­தாலும் ஜெய­ல­லி­தாவின் மர்ம மரணம், அதனை தொடர்ந்து இடம்­பெற்ற சசி­க­லாவின் அர­சியல் பிர­வேசம், சொத்­துக் ­கு­விப்பு வழக்­குகள் ,மன்னார்குடி உற­வு­களின் அத்துமீறல்கள் என்­பன நட­ரா­ஜனின் மறு­பக்­கத்தை பார்க்க விடாமல் செய்­து­விட்­டன.

''இருப்­ப­தி­லேயே கஷ்­ட­மான விஷயம் - நாம் தவ­றாகப் புரிந்­து­கொள்­ளப்­ப­டும்­போது ஏற்­ப­டு­கிற வேத­னைதான். அப்­ப­டிப்­பட்ட வேத­னையை வாழ்நாள் முழுக்க நான் அனு­ப­வித்­தி­ருக்­கிறேன் என்­ப­துதான் கொடுமை'' என மர­ணிப்­ப­தற்கு சில மாதங்­க­ளுக்கு முன்,உற­வினர் வீட்டில் தங்­கி­யி­ருந்­த­போது நட­ராஜன் சொன்­ன­தாக அவ­ரது நண்­ப­ரான பத்­தி­ரி­கை­யாளர் மாணா கூறி­யுள்ளார். உண்­மைதான். வில்லன் போல சித்­தி­ரிக்­கப்­பட்­ட­வ­ருக்­குள்ளும் சில நல்ல விட­யங்கள் இருக்­கவே செய்­கின்­றன.

 30 ஆண்­டு­க­ளாக இலங்­கையில் நடை­பெற்ற போர் 2009-இல் முள்­ளி­வாய்க்­காலில் முடி­வ­டைந்­தது. இத­னை­ய­டுத்து இனப்­ப­டு­கொலை செய்­யப்­பட்ட தமிழ் மக்­களின் நினை­வாக, தஞ்­சாவூர்- திருச்சி நான்­கு­வழிச் சாலை­யோ­ரத்தில் முள்­ளி­வாய்க்கால் நினைவு முற்றம் அமைக்க திட்­ட­மி­டப்­பட்­டது. இந்த நினைவு முற்றம் கட்டும் பணி 2010 நவம்பர் 15இல் தொடங்­கப்­பட்­டது. வைகோ மற்றும் நல்­லக்­கண்­ணுவால் இதற்கு அடிக்கல் நாட்­டப்­பட்­டது. முதலில் நினை­வுத்­தூ­ண் ஒன்று மட்­டுமே அமைக்கத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. ஆனால் இலங்­கையில் தமிழர் நினை­வி­டங்­க­ளுக்கு நிகழ்ந்த அவ­லங்­களால், தமி­ழர்கள் அதி­க­ளவில் அழிக்­கப்­பட்ட இலங்­கையின் உள்­நாட்டுப் போரின் நினைவுச் சின்­ன­மாக இது உரு­வாக்கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இலங்கை தமி­ழர்­க­ளுக்­காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்­த­தோடு முள்ளி­வாய்க்கால் முற்றம் அமை­வ­தற்கு தனது சொந்த ஊரான விளாரில் நடராஜன் தனது சொந்த நிலத்தை வழங்­கினார்.

சசி­கலா கணவர் என்று மட்டும் நம்மால் அறி­யப்­பட்ட இந்த நட­ராஜன் தமி­ழக அரசி­யலில் எவ்­வா­றான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தினார் என பார்ப்போம்...

மரு­தப்பா நட­ராஜன் என்­கிற நட­ராஜன், நண்­பர்­களால் 'எம்.என்.' என்று அழைக்­கப்­பட்­டவர். தஞ்சை மாவட்­டத்தில் உள்ள விளார் கிரா­மத்தைச் சேர்ந்­தவர். விவ­சாயக் குடும்பத்தில் 1942 ஒக்­டோபர் 23ஆம் திகதி பிறந்தார். பாடசாலை படிப்­பின்­போதே தமிழ் மீது பிடிப்பு ஏற்­பட்­டது. அர­சியல் மீது சிறு­வ­ய­தி­லேயே பார்­வையைப் பதித்தார் நட­ராஜன். தஞ்­சாவூர் சர­போஜி கல்­லூ­ரியில் பி.யூ.சி. படிக்கப் போன­போது அது துளிர்­விட ஆரம்­பித்­தது. அண்­ணா­மலைப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் எம்.ஏ. கற்கப் போன­போது 'ஹிந்தி எதிர்ப்பு’ போராட்­டத்தில் குதிக்கும் அள­வுக்குப் போனது.

தஞ்சை சர­போஜி கல்­லூ­ரியில் அவர் பட்­டப்­ப­டிப்பு படித்­துக்­கொண்­டி­ருந்­த­போது, திரா­விட இயக்கப் பின்­ன­ணியில் உரு­வா­கி ­யி­ருந்த மாணவர் சங்­கத்தின் சார்பில், மொழிப் போராட்டம் உத்­வே­கத்­துடன் இருந்­தது. அதில், தஞ்­சையில் முன்­வ­ரி­சையில் இருந்­தவர் நடராஜன்.

தி.மு.க.ஆட்சி அமைந்­ததும் மொழிப் போராட்­டத்தில் பங்­கேற்ற தகு­தி­யான மாண­வர்­க­ளுக்குச் செய்தித் துறையில் வேலை கிடைத்­தது. அவர்­களில் நட­ராஜனும் ஒருவர். மக்கள் தொடர்பு அதி­காரி ஆனார்.

இதனையடுத்து, திருத்­து­றைப்­பூண்­டியைச் சேர்ந்த சசி­க­லா­விற்கும் நட­ரா­ஜ­னுக்கும் 1970ஆம் ஆண்டு அன்­றைய முதல்வர் கரு­ணா­நிதி தலை­மையில் திரு­மணம் நடை­பெற்­றது. நட­ரா­ஜ­னுக்கு தொழில் அமைத்து கொடுத்­த கரு­ணா­நி­திதான் தாலியையும் எடுத்து கொடுத்தார்.

இந்நிலையில், 1980ஆம் ஆண்டு தென் ஆற்­காடு மாவட்­டத்தில் மக்கள் தொடர்பு அதி­கா­ரி­யாக நட­ராஜன் பணி­யாற்­றியபோது சந்­தி­ர­லேகா ஐ.ஏ.எஸ். மூலம் ஜெய­ல­லி­தா­வுடன் நட­ரா­ஜ­னுக்கு அறி­முகம் கிடைத்­தது.

இதேவேளை, எம்.ஜி.ஆர். முதல்வர் ஆன பின்னர் 1982இல் ஜெய­ல­லிதா கொள்கை பரப்புச் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார். ஜெய­ல­லி­தாவின் சுற்­றுப்­ப­ய­ணத்தை காணொளி பதிவு எடுத்துக் கொடுத்த 'வினோத் வீடியோ விசன்' மூலம் வேதா நிலை­யத்­திற்குள் அடியெடுத்து வைத்தார் நடராஜனின் மனைவி சசி­கலா. சாதா­ர­ண­மாக வேதா நிலை­யத்­திற்குள் போன சசி­கலா நிரந்­த­ர­மா­கவே வேதா நிலை­யத்தில் தங்­கி­விட்டார்.1984இல் சட்­ட­சபை தேர்தல் பிர­சா­ரத்தின் போது தமி­ழகம் முழு­வதும் ஜெய­ல­லிதா உடன் பிர­சா­ரத்தில் வலம் வந்தார். ஜெய­ல­லி­தா­வுக்கு பாது­காப்­பாக தனது தம்பி திவா­க­ர­னையும் உடன் அழைத்துக் கொண்டார். இவ்­வாறு நட­ராஜன், சசி­கலா உள்­ளிட்ட மன்னார்குடி உற­வுகள் ஒவ்­வொன்றும் ஜெய­ல­லி­தா­வுடன் உற­வா­கின.

இந்­நி­லையில் எம்.ஜி.ஆர். சிகிச்­சைக்­காக அமெ­ரிக்கா செல்­கிறார்; முதல்வர் நாற்­கா­லியைக் கைப்­பற்ற, இதைப்­போன்­ற­தொரு ஒரு அரிய வாய்ப்புக் கிடைக்­காது” என்று கணக்­குப்­போட்ட நட­ராஜன் அடுத்த வேலை­களில் கவனம் செலுத்­தினார்.

முத­ல­மைச்சர் நாற்­கா­லியை எம்.ஜி.ஆர். விட்­டுத்­த­ர­மாட்டார் என்­பது நட­ரா­ஜ­னுக்கும் ஜெய­ல­லி­தா­வுக்கும் தெரியும். அதனால், துணை முத­ல­மைச்சர் நாற்­கா­லியில் ஜெய­ல­லி­தாவை இப்­போ­தைக்கு அமர்த்­தலாம். முத­ல­மைச்சர் நாற்­கா­லியைப் பிறகு பார்த்துக் கொள்­ளலாம் என்று கங்­கணம் கட்டி களத்தில் இறங்­கினார் நட­ராஜன்.

அப்போது, ஆர்.எம்.வீரப்­ப­னுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே முறுகல் ஏற்படுகின்றது. ஆனால், 70 எம்.எல்.ஏ-க்­களின் ஆத­ரவு வீரப்பனுக்கு இருக்­கி­றது. எம்.ஜி. ஆரின் உடல்­நிலை மோச­மாக இருக்­கி­றது. இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர், ஆர்.எம்.வீரப்­பனை அமைச்சர் பத­வியில் இருந்து நீக்­கினார். இதில் அவ­மானம் அடைந்த வீரப்பன் எம்.ஜி.ஆருக்கு எதி­ராக நிச்­சயம் செயல்­ப­டுவார்.அவர் அமெ­ரிக்கா சென்­றதும், ஆர்.எம்.வீரப்பன் கட்­சியை உடைப்பார். ஆட்­சியைக் கைப்­பற்­றுவார்.அதைத் தடுத்து, கட்­சி­யையும் ஆட்­சி­யையும் பத்­தி­ர­மாகப் பாது­காக்க வேண்­டு­மானால், எம்.ஜி.ஆரைப் போல் செல்­வாக்கு உள்­ளவர் கையில் அதி­காரம் இருக்க வேண்டும். அதனால், ஜெய­ல­லி­தாவை துணைமுத­ல­மைச்­ச­ராக்க வேண்டும்” என்ற பிர­சா­ரத்தை நட­ராஜன் முன்­னெ­டுத்தார். நட­ரா­ஜனின் இந்த யோசனை ஜெய­ல­லி­தா­வுக்குப் பிடித்­துப்­போ­னது. அதனால், இதன் சாரத்தை எம்.ஜி.ஆரிடம் கொண்டு சென்றார். ஜெய­ல­லிதா அதை நேர­டி­யாகச் செய்­யாமல், திரு­நா­வுக்­க­ரசு மூலம் செய்ய வைத்தார்.

உண்­மை­யி­லேயே, அப்­போது ஆர்.எம்.வீரப்­ப­னுக்கு 70 எம்.எல்.ஏ-க்­களின் ஆத­ரவு இருந்­தது.

அவர் சட்­ட­ச­பைக்குள் நுழைந்தால், 70 எம்.எல்.ஏ-க்­களும் எழுந்து நின்று வணக்கம் வைப்­பார்கள். இது எம்.ஜி.ஆருக்கும் நன்­றாகத் தெரியும். அதே­ச­மயம் ஆர்.எம்.வீ-ரப்பன் தனக்கு எதி­ரா­கப்­போவார் என்று எம்.ஜி.ஆர் நம்­ப­வில்லை. அதனால், நட­ராஜன்,ஜெய­ல­லிதா பிர­சா­ரத்­துக்கு எம்.ஜி.ஆர். மசி­ய­வில்லை. “ஆர்.எம்.வீரப்பன் அப்­படிக் கலகம் செய்தால், சட்­ட­மன்­றத்தைக் கலைத்­து­விட்டுத் தேர்­தலைச் சந்­திப்பேன் என்று உறு­தி­யாகச் சொல்­லி­விட்டார்.

ஆர்.எம்.வீரப்­பனின் அதி­கா­ரத்தைப் பறித்த நட­ராஜன், ஜெய­ல­லிதா கூட்­ட­ணியால் துணை முத­ல­மைச்சர் என்ற அதி­கா­ரத்தைக் கைப்­பற்ற முடி­யாமல் போனது.

ஆனால், ஜெய­ல­லி­தாவை முதல்வர் நாற்­கா­லியில் அமர வைப்­பதே, தன் வாழ்நாள் இலட்­சியம்’ என்று சத்­தியம் செய்து கொண்டார் நட­ராஜன். அதற்­கான வழிகள் அத்­த­னை­யையும் அவரே உரு­வாக்­கினார். வழி­களில் வந்த தடை­களை எல்லாம் வெட்டி வீழ்த்­தினார். நட­ராஜன் ஒரு­போதும் சந்­தர்ப்­பங்­க­ளுக்­காகக் காத்­தி­ருக்­க­வில்லை; ஜெய­ல­லி­தா­வையும் காத்­தி­ருக்­க­வி­ட­வில்லை. காரி­யத்தில் இறங்­குவோம்… சந்­தர்ப்பம் கனிந்­து­வரும்…’ என்று முழு­மை­யாக நம்­பினார். தான் நம்­பி­ய­தையே, ஜெய­ல­லி­தா­வையும் நம்­ப­வைத்தார். நட­ரா­ஜனின் நம்­பிக்கை வீண்போக­வில்லை.

எம்.ஜி.ஆர். மறை­வுக்கு முன்பே உற­வி­னர்கள் மீது நம்­பிக்கை இழந்து, ஜெய­ல­லிதா சலிப்­புற்­றி­ருந்த நேரத்தில் அவ­ருக்கு அறி­மு­க­மான சசி­கலாவும் நட­ரா­ஜனும் அவ­ருக்குப் பலமாக மாறினர். ஜெய­ல­லி­தாவின் நன்­ம­திப்பைப் பெற்ற நடராஜன், அவ­ரது ஒவ்­வொரு அர­சியல் நகர்­விலும் உட­னி­ருந்தார்.

எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்­வ­லத்­தின்­போது ஜெய­ல­லிதா பீரங்கி வண்­டி­யி­லி­ருந்து தள்­ளி­வி­டப்­பட்டு, அவ­மானப்படுத்­தப்­பட்ட நேரத்தில் அவ­ருக்கு அனு­ச­ர­ணை­யாகத் துணை நின்­ற­வர்கள் சசி­க­லாவும் நடராஜனும். எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு ஜெய­ல­லிதா தனித்து அணி அமைத்துப் போட்­டி­யிட்­ட­போது அவ­ருக்குப் பக்­க­ப­ல­மாக நடராஜனும் சசி­க­லாவும் நின்­றார்கள். அந்­நாட்­களில் மத்­தியில் இருந்த காங்­கி­ர­ஸு­டனும் ஏனைய மாநிலக் கட்­சி­க­ளு­டனும் ஜெய­ல­லி­தா­வுக்கு நல்ல பிணைப்பு உரு­வான பின்­ன­ணி­யிலும் நடராஜனின் உழைப்பு இருந்­தது. ராஜீவ், நர­சிம்ம ராவ், குலாம் நபி ஆசாத், பிரணாப் முகர்ஜி, கன்­ஷிராம், மாயா­வதி என்று பல தலை­வர்­க­ளுடன் தொடர்பில் இருந்தார் நடராஜன்.

அ.தி.மு.க.வின் இரட்டை இலைச்­சின்னம் முடக்­கப்­பட்­ட­போது, அதை மீட்டுக் கொண்­டு­வந்­ததில் நடராஜனின் பங்கு என்ன என்­பது அ.தி.மு.க.வில் அப்­போது இருந்­தவர் களுக்குத் தெரியும். போடி தொகு­தியில் ஜெய­ல­லிதா போட்­டி­யிட்­ட­போது அங்­கேயே தங்கி அவ­ருக்குத் தேர்தல் பணி­யாற்­றினார் நடராஜன். பின் ஜெய­ல­லிதா கட்­சியைக் கைப்­பற்றி, முதல்­வ­ராக அமர்­வ­தற்கும் முக்­கியப் பங்­காற்­றினார்.

1985இல் ஜெய­ல­லிதா நேரடி அர­சி­ய­லுக்கு வருவதற்கு முக்­கிய கார­ண­மாக இருந்­தவரும் 1991ஆம் ஆண்டு முதலமைச்சராக ஜெய­ல­லிதா ஆட்­சியை பிடிக்க முக்­கிய கார­ண­மாக இருந்­த­வரும் இவரே.1991-ஆம் ஆண்டு போயஸ் கார்­ட­னி­லி­ருந்து அவர் வெளி­யே­றும்­வரை, அ.தி.மு.க.வின் மிக முக்­கி­ய­மான அங்­க­மாக அவர் இருந்தார்.மிக முக்­கி­ய­மான தரு­ணங்­களில் அ.தி.மு.க.வின் நகர்­வு­களில் அவ­ருக்கும் பங்­கி­ருக்­க­வே­ செய்­தது.

தி.மு.க.வை எதிர்த்து இயங்­கி­னாலும், தி.மு.க. தலை­வரை ‘கலைஞர்’ என்றே அழைப்பார். ஒரு­கட்­டத்தில் ஜெய­ல­லிதா அர­சி­ய­லை­விட்டே வில­கு­வ­தாக எழு­திக்­கொ­டுத்த கடிதம், தி.மு.க. அரசால் கைப்­பற்­றப்­பட்­டது இவ­ரு­டைய வீட்­டி­லி­ருந்­துதான். அவர் கைது­செய்­யப்­பட்­டதும் நடந்­தது.

இதேபோல, ஈழப் பிரச்­சி­னையில் அ.தி.மு.க.வின் நிலைப்­பாடு குறித்து அலட்­டிக்­கொள்­ளாமல், தொடர்ந்து விடு­தலைப் புலிகள் ஆத­ரவுக் கூட்­டங்கள் பல­வற்றில் பங்­கேற்றார் நடராஜன். குறிப்­பாக, ஈழப் போரின் இறுதிச் சம­யத்தில் தொடர்ந்து குரல்­கொ­டுத்­து ­வந்தார்.

ஜெய­ல­லி­தாவின் வளர்ச்­சியில் உட­னி­ருந்த நட­ரா­ஜ­னுக்கும் ஜெய­ல­லி­தா­வுக்கும் விரிசல் உரு­வாகி அவர் போயஸ் கார்­டனை விட்டு வெளியேற்­றப்­பட்டார். காரணம் ஜெய­ல­லி­தா­விற்கு அனைத்து அர­சியல் ஆலோ­ச­னை­க­ளையும் தரு­வது நான்தான் என்று நட­ராஜன் எங்கோ, எப்­போதோ சொன்­ன­தாக தகவல் எட்ட, அது­முதல் நட­ராஜன் - ஜெய­ல­லிதா இடையே பிரச்­சினை வெடித்­தது. இதற்­கி­டையே கண­வரா, தோழியா என்ற கேள்­வியில் தோழிதான் என்று முடி­வெ­டுக்­கிறார் சசி­கலா. அது­முதல் கணவன்–மனைவி உறவை விட நட்­புதான் முக்­கியம் என்­பதை நிரூ­பித்து ஜெய­ல­லி­தா­வுடன் தங்கி விட்டார் சசி­கலா. மனை­வியை பிரிந்து தனி­யாக நட­ராஜன் வாழ்ந்­தாலும் ஜெய­ல­லி­தா­வுக்கு தெரி­யாமல் அவர்கள் சந்­தித்­துக்­கொண்­ட­தா­கவும் கூறப்­ப­டு­வ­துண்டு.

‘புதிய பார்வை’ இதழில் ‘நெஞ்சம் சுமக்கும் நினை­வுகள்’ என்ற தலைப்பில் தன்­னு­டைய அர­சியல் அனு­ப­வங்­களை எழு­தினார். ஜெய­ல­லிதா மறை­வ­தற்கு முன்பே, அந்­திமக் காலத் தனி­மையை ஆழ்ந்து அனு­ப­வித்த உணர்­வுடன் ஒரு நாள் சொன்­ன­தா­கவும் “சசி­க­லாவை இப்­ப­வா­வது போயஸ் கார்­டனை விட்டு வெளியே வரச்­சொல்லி, நாங்க இரண்டு பேரும் தனியா வாழ­ணும்னு நினைக்­கிறேன்… பார்ப்போம்.” ஜெய­ல­லிதா மறைந்த அன்று ராஜாஜி ஹாலின் உள்­ள­ரங்கில் நின்று பேசிக்­கொண்­டி­ருக்­கும்­போதும் அதையே சொன்­ன­தாக அவ­ரது நண்­பரும் பத்­தி­ரி­கை­யாளருமான மாணா நினைவு கூர்ந்­துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் கூறு­கையில்,

சசி­கலா கைதாகி பெங்­க­ளூரு சிறைக்குக் கொண்­டு­செல்­லப்­பட்ட அன்று அவரைச் சந்­தித்­ததைச் சொல்லும் போது அவ­ரு­டைய கண்கள் கலங்­கி­யி­ருந்­தன. “எத்­த­னையோ முறை நான் சொல்­லி­யி­ருக்கேன்.. கேக்­கலை. இப்போ பழி யார் மேலே விழுந்­தி­ருக்கு? சசி­கலா சிறைக்குப் போகும்­போது அழு­தாங்க.. என்­னா­லயும் கண்­ணீரை அடக்க முடி­யலை. அதை நினைக் கிறப்போ என்னால் நிம்­ம­தியாகத் தூங்க முடி­ய­ற­தில்லை’’ என்­றவர், மனை­விக்கு இருக்­கிற பல­வி­த­மான உடல் உபா­தை­களைக் குரல் கமறச் சொன்னார்.

ஜெய­ல­லிதா மறைவை ஒட்டி உரு­வான சந்­தேக நிழல், தன்­னு­டைய குடும்­பத்­தினர் மீது படி­கிற சூழல் உரு­வா­னதைச் சொல்லி அடிக்­கடி வருத்­தப்­பட்­டி­ருக்­கிறார். “அந்­தம்­மாவை சசி­கலா மாதிரி யாரும் கவ­னிச்­சி­ருக்க முடி­யாது. அந்­தம்­மா­வுக்குச் சர்க்­கரை கூடி­யி­ருக்கு.. பல தொந்­த­ர­வுகள்.. தன்­னோட உடல் நலனில் அந்­தம்­மா­வுக்கே அக்­கறை இல்­லாமப் போச்­சுங்­கி­ற­துதான் உண்மை. பிடி­வா­தமா டாக்டர் சொன்­னதை மீறிச் சாப்­பி­டு­வாங்க. யாரும் தடுக்க முடி­யாது. சுகர் லெவல் அத­னால தான் 600-க்கு மேலே போச்சு. என்ன வைத்­தியம் பண்­ணலை அவங்­க­ளுக்கு? எய்ம்ஸ் ஆஸ்­பத்­தி­ரியில் இருந்து வந்த டாக்­டர்­க­ளுக்குத் தெரியும். அவங்க மூலமா பிர­தமர் மோடிக்குத் தெரியும். இங்கே இருந்த அமைச்சர்கள் எல்­லோ­ருக்கும் தெரியும். ஆனா, இப்போ பழி மட்டும் எங்க குடும்­பத்து மேலன்னா என்­னங்க நியாயம்?” என்றார்,

தன் குடும்­பத்­தினர் மீது அடுத்­த­டுத்து வழக்­குகள் பாய்ந்­த­போது நடராஜன் டில்லி சென்­றி­ருந்தார். அங்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த சிலரைச் சந்­தித்­தி­ருக்­கிறார். “எங்க குடும்­பத்து மேல அடுத்­த­டுத்து வழக்குப் போடு­றீங்க.. நாங்க பொறுத்­துக்­கிட்டே இருக்கோம். திருப்பி தமிழ்­நாட்டில் நீங்க யாருக்கு, என்­னென்ன வாங்­கி­னீங்­கன்னு, எதில் எதில் தலை­யிட்­டீங்­கங்­கிற விஷ­யத்தை நாங்க சொன்னா என்ன ஆகும்?” என்றார். டில்­லி­யி­லி­ருந்து திரும்­பிய பின் அவரே சொன்­ன­துதான் இது. கூடவே, “திரா­வி­டத்தை ஒழிச்­சு­ரு­வோம்னு பேசு­றாங்­களே.. திரா­விட இயக்­கங்கள் நமக்­குள்ளே ஒற்­றுமை இல்­லாமப் பிரிஞ்சு கிடக்­கி­ற­த­னா­ல­தானே இப்­படிப் பேசு­றாங்க.. நாம எல்லாம் ஒற்­று­மையா செயல்­பட்டா என்­ன­வாகும்? ஸ்டாலின்­கிட்டே பேச­ணும்னா நானே பேசுவேன்.. என்றார்.

இதேவேளை, தஞ்­சையில் அவர் உரு­வாக்­கிய முள்­ளி­வாய்க்கால் முற்றம் தமிழ் மீதும் தமி­ழர்கள் மீதும் அவர் கொண்­டி­ருந்த பற்­றுக்கு ஒரு சான்று என்று சொல்­லலாம். மொழிப் போராட்டம் பற்­றியும், முள்­ளி­வாய்க்கால் இன அழிப்பைப் பற்­றியும் இரண்டு தொகுப்பு நூல்­களைக் கொண்­டு­வந்தார். சில ஆவ­ணப்­ப­டங்­களைத் தயா­ரித்து, உலகின் கவ­னத்­துக்குத் தமிழர் துய­ரத்தைக் கொண்­டு­போனார்.

உறுப்பு மாற்றுச் சிகிச்­சைக்குப் பிறகு உடல்­நலம் தேறி­யவர், சமீ­பத்தில் சட்­டென்று மஞ்­சள்­கா­மாளை பாதிப்­புக்கு ஆளாகி, மருத்­து­வ­ம­னையில் சேர்க்­கப்­பட்­ட­போதும் நம்­பிக்கை குலை­யாமல் இருந்தார். இரவு நேரத் தூக்கம் குலைந்­து­போ­யி­ருந்­தது. மனை­வியைப் பற்­றிய வருத்தம் மன அழுத்­தத்தைக் கூட்­டி­யி­ருந்­தது. அவரை நேரில் பார்க்கும் பிர­யா­சை­யுடன் இருந்தார். அரை மயக்­கத்­திலும் மனைவி பெயரை அவர் உச்­ச­ரிப்­ப­தாகச் சொன்­னார்கள் உட­னி­ருந்து கவ­னித்துக் கொண்ட மருத்­துவப் பணி­யா­ளர்கள். தனிமை ஒரு கரும் நிழலைப் போல அவருக்கு அருகில் இருந்தது.

தமிழக அரசியலில் எத்தனையோ கேள்விகளுக்கு முழுமையான விடை தெரியாமல் போயிருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ‘உடன்பிறவாச் சகோதரி’யாக விளங்கிய சசிகலாவுக்கும் அவரது கணவர் ம.நடராஜனுக்கும் இடையி லான சுமுக உறவு குறித்த கேள்விகளும் அப்படித்தான். ஆளுங்கட்சியாக அ.தி.மு.க. வரும்போதெல்லாம், அதிகார வட்டத்தில் நடராஜனின் தலையீடுகள் குறித்து உறுதிப் படுத்தப்படாத தகவல்கள் சலசலக்கும். நடராஜனுக்கு எதிராக ஜெயலலிதாவின் நடவடிக்கைகளும் பரபரக்கும். ஆனாலும், ஒரு பத்திரிகையாளராக, இலக்கியவாதியாக, ஈழத் தமிழ் ஆதரவாளராகத் தன்னை ‘செய்தி வெளிச்சத்தில் நிறுத்திக்கொள்வதில் ம.நட ராஜன் என்றுமே சளைத்ததில்லை. நடராஜன் மீது ஆயிரம் எதிர்மறை கருத்துக்கள் முன் வைக்கப்பட்டாலும் இலங்கையில் வாழும் தமிழர் என்ற வகையில் நமக்கு இழைக்கப்பட்ட அநீதியை துயரத்தை தடுத்து நிறுத்தாத உலகம் அதனை என்றும் நினைத்து வெட்கித் தலைகுனியும் வகையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்து நிலத்துக்கு சொந்தக்காரர் என்ற வகையிலும் ஈழ தமிழர் களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்ததோடு ஈழத்தமிழர் மீது கொண்ட பற்றால் இறந்த பின் எரிக்கும் தன் குல வழக்கத்தை மாற்றி திராவிட மரபோடு அந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தின் அருகேயே தன்னை புதைக்குமாறு கூறியிருந்தார். அதற்கிணங்க இலங்கை தமிழர்களுக்காக கடைசி வரை குரல் கொடுத்த பல ஆவணப்படங்களையும் தயாரித்து முள்ளிவாய்க்கால் முற்றத்தின் அருகே இன்று உறங்கிக் கொண்டிருக்கும் நடராஜனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-03-24#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.