Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளை திறக்கப்படுகிறது மட்டக்களப்பு விமான நிலையம்

Featured Replies

நாளை திறக்கப்படுகிறது மட்டக்களப்பு விமான நிலையம்

 

batticaloa-airport -terminalமட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமானப் போக்குவரத்துக்காக நாளை திறந்து விடப்படவுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு விமான நிலையத்தை, 2016ஆம் ஆண்டு மே 31ஆம் நாள் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை பொறுப்பேற்றது.

அதன்பின்னர், சிவில் விமானப் போக்குவரத்துக்கான செயற்பாட்டு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக 1400 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

46 மீற்றர் அகலமும், 1066 மீற்றர் நீளமும் கொண்டதாக இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கப்பட்டுள்ளது.

batticaloa-airport -terminal

 புதிதாக அமைக்கப்பட்ட பயணிகள் முனையம்

நாளை பயணிகளின் போக்குவரத்துக்காக திறந்து விடப்படவுள்ள மட்டக்களப்பு விமான நிலையத்தில் இருந்து இரத்மலானை விமான நிலையத்துக்கு, உள்ளூர் விமான சேவைகளை ஆரம்பிக்க பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் விருப்பம் வெளியிட்டுள்ளன.

http://www.puthinappalakai.net/2018/03/24/news/29998

  • தொடங்கியவர்

25 வருடங்களின் பின், சிவில் விமான சேவைகள் அதி­கார சபை­யிடம் மட்டக்களப்பு விமான நிலையம் ….

batticaloa_airport.jpg?resize=690%2C481

மட்­டக்­க­ளப்பு விமான நிலையம் மீண்டும்  சிவில் விமான சேவைகள் அதி­கார சபை­யிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளது. இதனையடுத்து  விமான சேவைகள் மற்றும் சேவை நட­வ­டிக்­கை­களை இன்று 25 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை முதல் ஆரம்­பிக்க விமான நிலை­யங்கள் மற்றும் விமான சேவைகள் நிறு­வனம் நட­வ­டிக்கை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மட்­டக்­க­ளப்பு விமான நிலையம் 1958 நவம்பர் 17 ஆம் திகதி சிவில் விமான சேவைகள் திணைக்­க­ளத்தால் ஆரம்­பிக்­கப்­பட்­டது. யுத்தம் கார­ண­மாக கடந்த 25 வருட கால­மாக இந்த விமான நிலையம் இரா­ணுவ மற்றும் விமா­னப்­ப­டை­யி­னரின் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக மாத்­திரம் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

நாட்டில் தற்­போது சுமுக நிலை ஏற்­பட்­டுள்­ளதை அடுத்து சுற்­று­லாத்­து­றையை அபி­வி­ருத்தி செய்யும் நோக்கில் உள்­நாட்டு வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணி­களின் வசதியை முன்­னிட்டு மட்­டக்­க­ளப்­புக்கு விமான சேவைகளை நடத்த தனியார் விமான சேவைகள் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

 

 

http://globaltamilnews.net/2018/72269/

 

 

 

 

  • மட்டக்களப்பு வானூர்தி நிலையம் மக்கள் போக்குவரத்துக்காக திறப்பு!!
 
 

மட்டக்களப்பு வானூர்தி நிலையம் மக்கள் போக்குவரத்துக்காக திறப்பு!!

 

மட்டக்களப்பு வானுர்தி நிலையம், சிவில் வானூர்திப் போக்குவரத்துக்காக இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளாக இலங்கை வானூர்திப் படையின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு வானூர்தி நிலையத்தை, 2016 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி சிவில் வானூர்திப் போக்குவரத்து அதிகாரசபை பொறுப்பேற்றது.

அதன் பின்னர் சிவில் வானூர்திப் போக்குவரத்துக்கான செயற்பாட்டு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக ஆயிரத்து 400 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

46 மீற்றர் அகலமும், 1066 மீற்றர் நீளமும் கொண்டதாக இந்த வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கப்பட்டுள்ளது.

இன்று பயணிகளின் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் மட்டக்களப்பில் இருந்து தினமும் கொழும்பு நோக்கி தனியார் வானூர்தி பயண சேவைகள் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா,  இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் , பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க,  நாடாளுமன்ற உறுப்பினர்களான அலி சாஹிர் மௌலானா, மற்றும் ஸ்ரீநேசன் ஆகியோருடன் ஏறாவூர் நகர சபைக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களான நழீம் ஹாஜி மற்றும் ரியாழ், ஜெமீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

7D6AA756-284C-4E33-9AAC-BF622E7A1C2D-300

http://newuthayan.com/story/78530.html

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்.....!  tw_blush:

  • தொடங்கியவர்

மட்டக்களப்பு விமான நிலையம் திறப்பு – பெரும்பகுதி நிலம் சிறிலங்கா விமானப்படையிடம்

 

batticaloa airportமட்டக்களப்பு விமான நிலையம் இன்று சிவில் விமானப் போக்குவரத்துக்காக இன்று திறந்து வைக்கப்பட்ட போதிலும், அதன் பெரும் பகுதி நிலம், சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று பத்தாண்டுகளாக சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு விமான நிலையம், இன்று சிவில் விமானப் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டது.

சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த விமான நிலையத்தை திறந்து வைத்தார்.

2016ஆம் ஆண்டு, ஜூலை மாதம் சிறிலங்கா அதிபரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட, புனரமைப்புப் பணிகள் முடிவடைந்து, இன்று இந்த விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

batticaloa airport

இப்போது, அனைத்துலக சிவில் விமான சேவைக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

46 மீற்றர் அகலமும், 1066 மீற்றர் நீளமும் கொண்டதாக, ஓடுபாதை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. புதிய ஓடுபாதை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகள் முனையத்துக்கான புதிய கட்டடமும் அமைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு விமான நிலையத்துக்கு சேவையை நடத்த விரும்பும், உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களுக்கு, விமானங்கள் தரையிறங்குவது மற்றும் தரித்து நிற்பதற்கான கட்டணங்கள் மூன்று மாதங்களுக்கு அறவிடப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 145.2  ஹெக்ரெயர் பரப்பளவில் அமைந்த மட்டக்களப்பு விமான நிலையத்தின், 75.9 ஹெக்ரெயர் காணி இன்னமும்,சிறிலங்கா விமானப்படை வசமே உள்ளது.

எனினும். கடுமையான சோதனைகளைச் சந்திக்காமல் பயணிகள், விமான நிலையத்துக்கு செல்லும் வகையில், தனியான நுழைவாயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/03/25/news/30015

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.