Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெடித்தது பால்டேம்பரிங்: ஆஸி.கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் ராஜினாமா

Featured Replies

  • தொடங்கியவர்

பால் டேம்பரிங்: ஸ்மித், வார்னருக்கு 12 மாதங்கள்; பேங்கிராப்டுக்கு 9 மாதங்கள் தடை

 

 
SMITH-WARNER

ஸ்மித்-வார்னருக்கு 12 மாதங்கள் தடை.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டத்தில் பந்தைச் சேதப்படுத்தி மோசடி செய்ய முன் கூட்டியே திட்டமிட்டதற்காக குற்றம்சாட்டப்பட்ட ஆஸி. கேப்டன் ஸ்மித், துணைக் கேப்டன் வார்னர் ஆகியோருக்கு 12 மாதங்கள் கிரிக்கெட் ஆடத் தடை விதித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.

பந்தைச் சேதம் செய்யும் பணியை மேற்கொண்ட தொடக்க வீரர் கேமரூன் பேங்கிராப்டுக்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில் தடையை எதிர்த்து வீரர்கள் மேல் முறையீடு செய்யலாம்.

ஆஸ்திரேலியாவுக்கு வீரர்கள் திரும்பும் முன் ஜேம்ஸ் சதர்லேண்ட் இந்த தடை உத்தரவை வீரர்களிடம் தெரிவித்தார், சிட்னியில் வந்திறங்கிய பிறகு ஸ்மித் செய்தியாளர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு ஸ்மித் தன் சகவீரர்களிடம் விஷயத்தைத் தெரிவித்ததாக ஆஸி. செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆஸ்திரேலிய உள்நாட்டு கோடைகால கிரிக்கெட் வரை ஸ்மித், வார்னர், பேங்க்ராப்ட் எந்தவிதமான கிரிக்கெட்டையும் ஆட முடியாது. ஆனால் கிரேட் கிரிக்கெட்டில் பங்கேற்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்த விரிவான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

http://tamil.thehindu.com/sports/article23371978.ece?homepage=true

  • தொடங்கியவர்

`2 ஆண்டுகளுக்கு ஸ்மித் கேப்டனாக முடியாது!’ - ஆஸி. கிரிக்கெட் வாரியத்தின் தண்டனை விவரங்கள்

 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் பந்தைச் சேதப்படுத்திய புகாரில் ஸ்மித், வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் ஆகியோர் மீது ஆஸ்திரேலியக் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

ஸ்மித்

 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தைச் சேதப்படுத்தியதன் பலனை ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித், வார்னர் அனுபவிக்க தொடங்கியுள்ளனர். ஆம், கிரிக்கெட் உலகில் விஸ்வரூபம் எடுத்துள்ள இவ்விவகாரத்தால் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் கடுமையான அதிருப்தியில் இருக்கிறது. வார்னர், ஸ்மித் மற்றும் பான்கிராஃப்ட்டுக்குத் தண்டனை விவரங்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தென்னாப்பிரிக்காவில் முகாமிட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் விசாரணை நடத்தினர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் தலைவர் டேவிட் பீவெர், நிர்வாகிகள் ஏர்ல் எட்டிங்ஸ், பாப் எவெரி, ஜான் ஹார்டன், டோனி ஹேரிசன், ஜாக்கி ஹே மற்றும் மைக்கேல் ட்ரெண்ட்னிக் ஆகியோர் கொண்ட குழு விசாரணை நடத்தியது. மேலும், முன்னாள் வீரர்களான மார்க் டெய்லர் மற்றும் மைக்கேல் காஸ்பரோவிச் ஆகியோர் கொண்ட குழு இதுதொடர்பாக இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியது. அவர்கள் நடத்திய விசாரணையில், ``பந்தைச் சேதப்படுத்தவும், அதனை பான் கிராஃப்ட்டை வைத்து செயல்படுத்தவும் வார்னர் முடிவெடுத்துள்ளார். இந்தத் திட்டம் கேப்டன் ஸ்மித்துக்குத் தெரிந்திருந்தும், அவர் அதை தடுக்கவில்லை" என்பது தெரியவந்துள்ளது. 

ஸ்மித், வார்னர்

photo credit: ICC

இந்நிலையில், ஸ்மித், வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள முழு தண்டனை விவரங்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பான்கிராஃப்ட்டுக்கு 9 மாதங்கள் தடை, வார்னர், ஸ்மித்துக்கு ஒரு வருடம் தடை உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 

தண்டனையின் முழு விவரங்கள்... 

* ஸ்மித், வார்னர் ஆகியோர் உள்ளூர் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட ஓராண்டுக்குத் தடை.

* பான்கிராஃப்ட் 9 மாதங்கள் உள்ளூர் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட தடை.

* ஓராண்டுத் தடைக்குப் பின் ஸ்மித் அணிக்குத் திரும்பினாலும், அவருக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு உடனடியாக வழங்க முடியாது. தடைக்குப் பின்னர் ஓராண்டு அவருக்குக் கேப்டன் பொறுப்பு வழங்கப்படாது. பரிசீலனைக்குப் பிறகே அவருக்கு மீண்டும் தலைமைப் பொறுப்பு வழங்கப்படும். 

* பான்கிராஃப்ட் அணிக்குத் திரும்பினாலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படும். 

* இந்த விகாரத்தில் மூளையாகச் செயல்பட்ட வார்னர் தடைக்குப் பின்னர் அணிக்குத் திரும்பினாலும், அவர் எதிர்காலத்தில் கேப்டன் உள்ளிட்ட எந்தவித தலைமைப் பொறுப்புகளுக்கும் பரிசீலனை செய்யப்படமாட்டார்.

* மூவரும் 100 மணி நேரங்கள் கிரிக்கெட் தொடர்பான பொதுநல சேவையில் ஈடுபட வேண்டும்.

* அதே சமயம் மூவரும் கிளப் போட்டிகளில் விளையாட தடையில்லை. 

இந்தத் தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஸ்மித், வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் ஆகியோருக்கு 7 நாள்கள் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 

  • தொடங்கியவர்

‘அங்கு என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?’- டேரன் லீ மேன் பதவியைக் காப்பாற்றிய வார்த்தைகள்

 

 
lehman

டேரன் லீ மேனைக் காப்பாற்றிய அந்த வார்த்தைகள்   -  படம். | கெட்டி இமேஜஸ்.

டேவிட் வார்னர் யோசனையின் படியும் ஸ்மித்தின் ஏற்பின் படியும் நடந்தேறிய பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் டேரன் லீ மேனுக்கு ஏன் இந்த விஷயம் தெரியாது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாலேயே அவர் பதவி பிழைத்தது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

ஏனெனில் களத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி கோபமடைந்த லீ மேன், 12-வது வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் மூலம் பேங்க்ராப்டுக்கு செய்தி அனுப்பியுள்ளதாக விசாரணை செய்த ஜேம்ஸ் சதர்லேண்ட் தெரிவித்துள்ளார்.

திங்களன்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா நேர்மைக்குழு தலைவர் இயன் ராய், டேரன் லீ மேனுடன் கேப்டவுன் ஹோட்டல் அறையில் பேசிய போது டேரன் லீ மேன் இவ்வாறு தெரிவித்த விஷயம் அவருடன் பகிரப்பட்டது.

“12வது வீரர் ஹேண்ட்ஸ்கம்பிடம் பயிற்சியாளர் டேரன் லீ மென், கோபாவேசமாக, ‘அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று கண்டுபிடி’ என்று கூறினார். மேலும் ஆட்ட இடைவேளையின் போது லீ மேன் வீரர்கள் அனைவரையும் தன் அறைக்கு அழைத்து என்ன நடக்கிறது என்று அனைவரையுமே கேட்டுள்ளார், இவையெல்லாம் டேரன் லீ மேனுக்கு இதில் பங்கில்லை என்பதை உறுதி செய்ததால்தான் அவரை இதில் அடக்கவில்லை’ என்றார்.

ஆனால், அணியின் ஒட்டுமொத்த நடத்தை குறித்தும் அதில் டேரன் லீ மேனின் பங்கு குறித்தும் தனியாக விசாரணை நடத்தப்படவுள்ளது என்றார் சதர்லேண்ட்.

இதற்கிடையே இனி ஸ்மித்தோ, வார்னரோ ஆஸ்திரேலிய அணியின் கேப்டன்சி பதவியை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் பல்வேறு தரப்பை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு வருகின்றன.

மேலும் சாண்ட்பேப்பர்தான் பயன்படுத்தப்பட்டது மஞ்சள் நிற டேப் அல்ல என்பதும், பேங்கிராப்டை இந்தப் பணியில் அமர்த்தியதோடு எப்படி பந்தின் ஒரு பகுதியைத் தேய்க்க வேண்டும் என்பதையும் வார்னரே பாடம் எடுத்ததாகவும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23374889.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஸ்மித், வார்னர் வெளியே... லேமன் உள்ளே... பதவியைக் காப்பாற்றிய அந்த 6 வார்த்தை! #BallTampering #Sandpapergate

 
 

``வேற ஒண்ணும் இல்லை. டுவெல்த் மேன்கிட்ட பீட்சா கொண்டு வரச் சொல்லிருப்பாரு...!’’ - இது, பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் டேரன் லேமனுக்கு எந்தத் தொடர்பும் இல்லை’ என விளக்கம் சொன்னபோது சோசியல் மீடியாவில் வெளியான பதிவுகளின் ஒரு சாம்பிள்.

லேமன்

 

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கேப் டவுன் டெஸ்ட் போட்டியின்போது, பந்தை சேதப்படுத்தியதற்காக ஆஸி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதித்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம். ஒன்பது மாதங்களுக்கு பேங்க்ராஃப்ட் சர்வதேச கிரிக்கெட் விளையாட முடியாது. `எல்லாம் சரி, பயிற்சியாளர் டேரன் லேமனுக்குத் தெரியாமல் இந்த மோசடி நடந்திருக்க வாய்ப்பில்லை. அவரையும் பதவியிலிருந்து நீக்க வேண்டும்’ என, கெவின் பீட்டர்சன் முதல் சாமானிய ரசிகன் வரை கருத்துத் தெரிவித்தனர். 

`இது leadership group எடுத்த முடிவு. இதற்கும் பயிற்சியாளருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என ஸ்டீவ் ஸ்மித் விளக்கம் சொன்னபோதும், அதை யாரும் நம்பத் தயாராக இல்லை. ஏனெனில், பேங்க்ராஃப்ட் பேன்ட் பாக்கெட்டிலிருந்து மஞ்சள் நிற உப்புப் பேப்பரை எடுப்பது டிவியில் தெரிகிறது; டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து அதைக் கவனித்துக்கொண்டிருந்த டேரன் லேமன் உடனடியாக, dug out-ல் இருந்த ட்வெல்த் மேன் ஹேண்ட்ஸ்கோம்பிடம் வாக்கி டாக்கி வழியாக ஏதோ சொல்கிறார். ஹேண்ட்ஸ்கோம்ப் உடனடியாக களத்துக்குச் சென்று பேங்க்ராஃப்ட்டிடம் விஷயத்தைச் சொல்ல, அவர் Ball Tampering செய்வதை நிறுத்தினார். அதற்குள் களத்தில் இருந்த அம்பயர்களும் ஆஸ்திரேலிய கேப்டனிடம் பேச ஆரம்பித்திருந்தனர். 

லேமன்

இந்த ஒட்டுமொத்த வீடியோவையும் கிரிக்கெட் உலகம் முழுவதும் வைரலாகி விட்டது. `லேமனுக்கு எதுவும் தெரியாதாம்...’ என்ற தொனியில் கெவின் பீட்டர்சனும், `மூன்று பேருக்கும் மட்டும்தான் தெரியுமாம்’ என மைக்கேல் வாகனும் ட்வீட் தட்டினர். ஆஸி முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூட, லேமனுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை எனப் பூதாகரமாக கருத்துத் தெரிவித்திருந்தார்.  

ஆனால், ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆலன் பார்டர் மட்டும் லேமன் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தார். ``களத்தில் என்ன நடந்தது என்பதை லேமன் அறிந்திருக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இப்போதுதான் ரிலாக்ஸாக இருக்கிறேன்’’ என்றார் ஆலன் பார்டர். அவரைப் போலவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் தங்கள் பயிற்சியாளரை நம்பியது. ஸ்மித், வார்னர், பேங்க்ராஃப்ட் மீது நடவடிக்கை எடுக்க அவசரம் காட்டியது. ஆனால், லேமன் விவகாரத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிதானமாக இருந்தது. கடைசியில், இந்தப் பிரச்னையில் லேமனுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

பால் டேம்பரிங் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததும் ஐயன் ராய் தலைமையிலான விசாரணைக் குழு தென்னாப்பிரிக்கா விரைந்தது. கேப் டவுன் நகரில் ஆஸ்திரேலியா அணியினர் தங்கியிருந்த ஹோட்டலில் வீரர்கள், பயிற்சியாளரிடம் விசாரணைக் குழு தனித்தனியாக விசாரணை நடத்தியது. விசாரணையில், களத்தில் என்ன நடக்கிறது என்பது புரியாமல்தான் லேமன், வாக்கி டாக்கியில் ஹேண்ட்ஸ்கோம்ப்பிடம் கேட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. 

லேமன்

``வீடியோவைப் பார்த்த அனைவருக்கும், இந்த விவகாரத்தின் பின்னணியில் லேமன் இருப்பது போலத் தெரியும். ஆனால், நடந்தது இதுதான். களத்தில் ஏதோ விபரீதம் நடப்பதைப் புரிந்த லேமன் உடனடியாக வாக்கி டாக்கி மூலம் ஹேண்ட்கோம்பிடம், `What the f*** is going on?’ எனக் கத்தியுள்ளார். பின் உடனே `என்ன நடக்கிறது என்பதைப் பார்’’ என உத்தரவிட்டுள்ளார். லேமன் என்ன பேசினார் என்பதை மற்றவர்களிடமும் விசாரித்தோம். அவர் இந்த வார்த்தைகளைத்தான் பிரயோகப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்ல, அடுத்த டிரிங்ஸ் பிரேக்கின்போது `என்ன நடக்கிறது’ என ஒவ்வொரு வீரரிடமும் டேரன் கேட்டுள்ளார் ’’ என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சதர்லேண்ட் தெரிவித்தார்.

 

தடை விதிக்கப்பட்ட வீரர்கள் மூவரும் ஆஸ்திரேலியா வந்துவிட்டனர். வார்னர் பகிரங்க மன்னிப்புக் கேட்டு விட்டார். ஜோகன்னஸ்பர்க்கில் நாளை நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மேக்ஸ்வெல், ரென்ஷா, ஜோ பர்ன்ஸ் மூவரும் தென்னாப்பிரிக்கா விரைந்து விட்டனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றி வளைத்து ஸ்மித்தை அழைத்துச் சென்ற விதம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முடிவு பரவலாக பாராட்டு பெற்றிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் இயல்புநிலை திரும்பிவிட்டது.

https://www.vikatan.com/news/sports/120594-its-just-six-words-that-saved-lehmann-his-job.html

  • தொடங்கியவர்

அடுத்த பெரும் பின்னடைவு: பெரிய ஸ்பான்சரை இழந்தது ஆஸி. கிரிக்கெட் வாரியம்

 

 
smithjpg

படம். | ஏ.பி.

பால் டேம்பரிங் விவகாரத்தினால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. தங்களது முக்கிய ஸ்பான்சரான மெகல்லன் நிறுவனம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடன் தங்கள் ஒப்பந்தங்களை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

ஏறக்குறைய இதே சமயத்தில் விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ASICS வார்னர், பேங்க்ராப்ட் ஆகியோருடன் தன் உறவுகளை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

மெகல்லன் நிறுவனம் ஆகஸ்ட் 2017-ல் 3 ஆண்டுகால ஸ்பான்சர் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது. ஆஸ்திரேலிய உள்நாட்டு போட்டிகளுக்கான இந்த ஒப்பந்தம் 20 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்பு கொண்டது.

இந்நிலையில் ஸ்மித், வார்னர், பேங்க்ராப்ட் ஆகியோரின் திட்டமிட்ட மோசடியினால் உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக மெகல்லன் அறிவித்துள்ளது.

மெகல்லன் நிறுவனத்தின் தலைவ ஹாமிஷ் டக்லஸ் கூறும்போது, “ஆஸ்திரேலிய ஆடவர் அணியின் தலைமை 3வது டெஸ்ட் போட்டியின் போது நியாயமற்ற முறையில் சாதகம் பெறுவதற்காக விதிமுறைகளை மீறியுள்ளார். இது நேர்மையின் மையத்தையே ஆட்டியுள்ளது.

வருத்தத்துக்குரிய முறையில் இந்தச் சம்பவம் எங்கள் மதிப்பீடுகளுக்கு முரணாக உள்ளது, எனவே கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் எங்கள் ஒப்பந்தங்களை முறித்துக் கொள்வது தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

மெகல்லன் ஆஷஸ் தொடர் ஸ்பான்சர்ஷிப் மூலம் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம் ஆனால் இப்போது கனத்த இதயத்துடன் எங்கள் ஸ்பான்சர்ஷிப்பை முறித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் மற்ற ஸ்பான்சர்களான குவாண்டாஸ் மற்றும் காமன்வெல்த் பேங்க் ஆகியவையும் பந்து சேத விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ளது, ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையையும் அறிவிக்கவில்லை.

http://tamil.thehindu.com/sports/article23388847.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.