Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் போராளிகள் விடுதலை!

Featured Replies

 
 
 

அரசியல் கைதிகள் இருவர் இன்று விடுவிக்கப்பட்டனர்

 

அரசியல் கைதிகள் இருவர் கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த பத்து வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளான இவர்களின் குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் இன்று விடுவிக்கப்பட்டனர்.

2009 ஆம் ஆண்டு முன்னால் அரசதலைவர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச மற்றும் இராணுவத் தளபதி சனத் பொன்சேகா ஆகியோரை சுதந்திரத் சதுக்கத்தில் வைத்து கொலை செய்ய சதி தீட்டம் திட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தின் புதல்வரான ஆதித்தியன் மற்றும் கோகுலநாத் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களின் வழக்குத் தொடர்பில் மூத்த சட்டத்தரணி கே.வி. தவராசா நீதிமன்றில் தொடர்ச்சியாக முன்னிலையாகினார்.

இந்த வழக்கு நேற்று உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத நிலையில் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

http://newuthayan.com/story/79139.html

  • கருத்துக்கள உறவுகள்

விடுவிச்சாச்சு நல்ல விடயம். செய்யாத குற்றங்களுக்கு பெற்ற தண்டனைகளுக்கு பரிகாரம் என்பது விடுதலை ஆகுதல் என்றதோடு மட்டுப்படுத்தப்பட முடியாது. 

இப்படி போலிக் குற்றச்சாட்டுகளோடு சிறையில் வாடுபவர்கள் சார்பில்.. அவர்கள் மீது போலிக் குற்றம் சுமத்தியவர்கள் தண்டிக்கப்படுவது அவசியம். விடுதலையோடு அவையும் நடைபெற்றால்.. தான்.. இந்த அநியாயங்களுக்கு குறைந்த பட்ச நீதியாவது கிடைத்தது என்றாகும். :rolleyes:

 

இனப்படுகொலையாளிகள் மஹிந்த ராஜபக்ஷ , கோத்தாபய ராஜபக்ஷ, சரத் பொன்சேகா ஆகியோரை கொலைச் செய்ய சதித் திட்டம் தீட்டி செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள்   இருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் இன்று விடுதலை செய்தது.

குறித்த இருவராலும் வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை மையப்படுத்தி தக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த வழக்கில், குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முறைப்பாட்டாளர் தரப்பான சட்ட மா அதிபர் தவறிவிட்டதாக கூறி, பிரதிவாதிகளின் சட்டத்தரணியான சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்தை ஏற்ற கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் இந்த தீர்ப்பை அளித்து பிரதிவாதிகள் இருவரையும் விடுவித்தார்.

கிரிதரன், கிரி, கண்ணன் மற்றும் தாஸ் ஆகிய பெயர்களால் அறியப்படும் கணகரத்தினம் ஆதித்தன் , இம்பன், தம்பி, கோபால் ரத்னம், தயாபரன் ஆகிய பெயர்களால் அறியப்படும் கந்தகவனம் கோகுல்நாத் ஆகியோரே இவ்வாறு கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவிக்கப்ப்ட்டுள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மேற்படி இருவருக்கும் எதிராக 2011 ஆம் ஆண்டு சட்ட மா அதிபரால் பயங்கரவாத தடை சட்ட விதிவிதாங்களுக்கு அமைவாக மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

2009 ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்கும் நவம்பர் 11 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கொழும்பில் வைத்து மஹிந்தவையும், கோத்தாபயவையும் கொலைசெய்ய சதித் திட்டம் தீட்டியதுடன் தியத்தலாவையில் வைத்து சரத் பொன்சேகாவை கொலைசெய்ய சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அது தொடர்பில் நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னரே இன்று நீதிபதி தீர்ப்பறிவித்து, குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் விடுவித்தார்.

 

https://wp.me/p7CIsm-1LR

  • தொடங்கியவர்

மஹிந்த, கோத்தா, பொன்சேகாவை கொலை செய்ய  சதித் திட்டம் : இருவருக்கு விடுதலை 

 

 
 

 

(எம்.எப்.எம்.பஸீர்)

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை கொலைச் செய்ய சதித் திட்டம் தீட்டி செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் எனக் கூறப்படும் இருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் இன்று விடுதலை செய்தது.

colombo-high-court.jpg

 குறித்த இருவராலும் வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை மையப்படுத்தி தக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த வழக்கில், குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முறைப்பாட்டாளர் தரப்பான சட்ட மா அதிபர் தவறிவிட்டதாக கூறி, பிரதிவாதிகளின் சட்டத்தரணியான  சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்தை ஏற்ற கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் இந்த தீர்ப்பை அளித்து பிரதிவாதிகள் இருவரையும் விடுவித்தார்.

கிரிதரன், கிரி, கண்ணன் மற்றும் தாஸ் ஆகிய பெயர்களால் அறியப்படும் கணகரத்தினம் ஆதித்தன் , இம்பன், தம்பி, கோபால் ரத்னம், தயாபரன் ஆகிய பெயர்களால் அறியப்படும் கந்தகவனம் கோகுல்நாத் ஆகியோரே இவ்வாறு கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவிக்கப்ப்ட்டுள்ளனர். 

கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மேற்படி இருவருக்கும் எதிராக 2011 ஆம் ஆண்டு சட்ட மா அதிபரால் பயங்கரவாத தடை சட்ட விதிவிதாங்களுக்கு அமைவாக மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

2009 ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்கும் நவம்பர் 11 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கொழும்பில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவையும் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபயவையும் கொலைசெய்ய சதித் திட்டம் தீட்டியதுடன் தியத்தலாவையில் வைத்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கொலைசெய்ய சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அது தொடர்பில் நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னரே இன்று நீதிபதி தீர்ப்பறிவித்து, குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் விடுவித்தார்.

http://www.virakesari.lk/article/31996

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.