Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Featured Replies

இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதி

 

 
 

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த  14 வீரர்கள்  வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, வீரர்கள் திடீரென மயக்கமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் , குறித்த பயிற்சி வீரர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என வவுனியா வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர்  தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/32723

 

 

சுவாச பிரச்சனை காரணமாக இராணுவத்தினர் வைத்திய சாலையில்…

vavunia-hospitol.jpg?resize=640%2C427

 

சுவாசப் பிரச்சினை காரணமாக, வவுனியா – பம்பைமடு இராணுவ முகாமிலிருந்த 14 இராணுவ வீரர்கள், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம், இன்று (22) நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பம்பைமடு இராணுவ முகாமில் இன்று (22) காலை இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், இராணுவத்தினருக்குத் திடீரென சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 14 இராணுவ வீரர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டனர். அத்துடன் மேலும் பல இராணுவத்தினருக்கு, பம்பைமடு இராணுவ முகாமில் முதலுதவிச் சிகிச்சையளிக்கப்பட்டதெனத் தெரிவிக்கப்படுகின்றது.

http://globaltamilnews.net/2018/75997/

  • தொடங்கியவர்

பயிற்சி முகாமில் மயங்கிய 19 சிறிலங்கா படையினரில் இருவரின் நிலை கவலைக்கிடம்

 

Sri-Lanka-army-sniper-300x200.jpgவவுனியா- பம்பைமடு சிறிலங்கா இராணுவப் பயிற்சி முகாமில் நேற்று நண்பகல் திடீர் சுகவீனமடைந்த 19 படையினர் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடும் வெயிலுக்கு மத்தியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட நீரிழப்பினாலேயே அவர்கள் பாதிக்கப்பட்டதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பம்பைமடுவில் உள்ள 61-1 பிரிகேட்டின் கீழ் உள்ள பற்றாலியன் பயிற்சி பாடசாலையில் இந்தச் சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றது.

25 ஆவது இலகு காலாட்படையைச் சேர்ந்த 50 இற்கு மேற்பட்ட படையினருக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, அடுத்தடுத்து படையினர் மயங்கி விழுந்தனர்.

முதலுதவிச் சிகிச்சைகளுக்குப் பின்னர் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 19 படையினரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஏனையோரின் உடல் நிலை தேறியுள்ளதாகவும் வவுனியா மருத்துவமனை தகவல்கள் கூறுகின்றன.

எனினும் அனைத்துப் படையினரும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பயிற்சிப் பாடசாலை 10 ஆண்டுகளாக செயற்படுவதாகவும், இத்தகைய சம்பவம் இடம்பெற்றிருப்பது இதுவே முதல்முறை என்றும் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வவுனியா மருத்துவமனையில் சிறிலங்கா படையினர் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவமனை வளாகத்துக்குள் ஊடகவியலாளர்கள் நுழைவதற்கு நிர்வாகமும் இராணுவமும் தடை போட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.net/2018/04/23/news/30528

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.