Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசின் தலையாய கடமை எது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசின் தலையாய கடமை எது?

[27 - March - 2007]

இலங்கையில் ஒரு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்படுவது அவசியமென ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், மூத்த ஐ.நா. அதிகாரிகள் மற்றும் பல தேசிய சர்வதேச மனித உரிமை அமைப்புகள் விடுத்த வேண்டுகோள் இலங்கை அரச தரப்பினரால் ஏற்றுக் கொள்ளப்படாத நிலை காணப்படுகிறது. ஆட்கடத்தல்கள், பலவந்தமாக காணாமற் போதல்கள், கொலைகள் செய்யப்படுதல் அடங்கலான பல்வேறு மனித உரிமை மீறல்கள் நாளாந்தம் நடைபெற்றுக் கொண்டிருப்பது கண்கூடு. எவ்வாறாயினும், அவை அரசாங்கத்திற்கு அவப்பெயர் உண்டுபண்ணுவதற்கு மிகைப்படுத்தப்பட்டும் சோடிக்கப்பட்டும் வருவதாக அரசாங்க முக்கியஸ்தர்கள் வாதிட்டு வருகின்றனர்.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தின் மீது மட்டுமல்லாமல், தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் ஆயுதக் குழுக்கள் மீதும் சுமத்தப்பட்டு வரும் நிலையில், அரச தரப்பினர் சர்வதேச கண்காணிப்பு நிலையம் ஒன்றினை அமைப்பதற்கான யோசனையை நிராகரிப்பதானது புரிந்துகொள்ள முடியாததொன்றாகும். அது நாட்டின் இறைமைக்கு குந்தகமானது எனும் பழைமையான வாதமே அரசினால் முன்வைக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், "சுவீகரிப்பு மற்றும் எல்லை தாண்டிய சேவைகள் ஒப்பந்தம்" (Acquisition and Cross Servicing Agreement) என்றழைக்கப்படுவதும் அண்மையில் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மற்றும் அமெரிக்க தூதுவர் றொபேட் ஓ பிளேக் இருவருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டதுமாகிய 10 வருட ஒப்பந்தம் போன்ற நடவடிக்கைகள் நாட்டின் இறைமைக்கு மிக பாதகமானதாக அமையவில்லையா?

மனித உரிமை மீறல்கள் மீது ஐஐஎஉக எனப்படும் சர்வதேச அறிஞர்கள் குழு ஒன்றின் கண்காணிப்புடன் கூடிய விசாரணை நடத்துவதற்கு அமைக்கப்பட்டிருக்கும் விசாரணைக்குழு ஒரு கண்துடைப்பென மக்கள் கருத இடமுண்டு என முன்னர் குறிப்பிட்டிருந்தேன். விசாரணைக் குழுவின் செயலாளராகிய எஸ்.டி. பியதாச அச்சம் காரணமாக சாட்சியமளிப்பவர்கள் பின்னடிக்கும் நிலை காணப்படுவதாகவும் மதத் தலைவர்கள் மட்டத்திலிருந்து தான் 12 முறைப்பாடுகள் மட்டும் கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்கள் அடங்கலாக பல்வேறு அச்சுறுத்தல்கள் விடப்பட்டு வருவது நாடறிந்த விடயமல்லவா?

இலங்கையில் மனித உரிமை மீறல் நிலைமை மென்மேலும் மோசமடைந்து வரும் நிலையில், அதனை ஒரு சர்வதேச கண்காணிப்புக்குழுவின் விசாரணைக்கு உட்படுத்தினால் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கும் அதனூடாக அரசாங்கத்துக்கு நம்பகத்தன்மை ஏற்படுத்துவதற்கும் வழிபிறக்கும்.

அன்றேல், அரசாங்கத்தின் கரம் கறைபடிந்ததாகவே சர்வதேச சமூகம் கண்டுகொள்ளும். குறிப்பாக, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம எத்தனை பயணங்களை மேற்கொண்டு, உண்மைக்குப் புறம்பான எவ்வளவு பிரசாரத்தினை செய்து கொண்டிருந்தாலும் அது எதிர்மாறான விளைவினையே கொண்டுவரும்.

அவர் குறிப்பாக, அண்மையில் இங்கிலாந்துக்கு விஜயம் செய்து வெளிநாட்டமைச்சர் மாக்றட் பெக்கெற்றை சந்தித்த போது, இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு கிடையாது என்பதே தமது நிலைப்பாடு எனவும், "மனித உரிமை பிசக்கல்கள் சர்வதேச சமூகத்தின் பார்வையில் இலங்கைக்கு இழுக்கையே உண்டாக்கும்" என பெக்கெற் எடுத்துரைத்திருந்தார். "மனித உரிமைகள் தொடர்பாக நாம் இலங்கை அரசாங்கத்தோடு கலந்துரையாடிக் கொண்டிருக்க விரும்புகிறோம்" எனவும் பெக்கெற் மேலும் கூறிவைத்தார். இன்னும் சொன்னால், சந்தேகத்தின் பேரில் ஆட்கள் சிறைக்கூடங்களில் காலவரையறையின்றி அடைத்து வைத்திருத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக, பி.பி.சி. "ஹாட் ரோக்" (HARD TALK) நிகழ்ச்சிக்கு அமைச்சர் போகொல்லாகம வழங்கிய செவ்வியில் இலங்கையின் பொட்டுக்கேடு வெட்டவெளிச்சமாகியதைக் காணக் கூடியதாயிருந்தது.

அடுத்து, மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்று சிந்திப்பதை விடுத்து இராணுவ அணுகுமுறையிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறது. சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் (APRC) தலைவர் அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தனது அறிக்கையினை சர்வகட்சி மாநாட்டுக்குச் சமர்ப்பிப்பதற்கு இன்னும் இரண்டு மாதகால அவகாசம் கோரியுள்ளார்.

ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை தனது ஆலோசனைகளை சமர்ப்பிக்காததே இதற்கு காரணமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அவசியத்தையும் அவசரத்தையும் அக்கட்சி உணரத்தவறி வருவது எவ்வளவு பொறுப்புணர்ச்சியற்றது என்பதைக் காணலாம்.

APRC C?S ???-x-?-P? ?\?-?-u?-P?P, ???-v-?-v-??? {??U-P?-?m-i-??-u-u?-Q? {?-n? S?-?-? \???-?zu ?-???? (11/17) A?U?P Gkzu Gk?-?? {??-P-?U-P?-?m-hx. K??-??-? J? E??-?-i-??? w??? ?|?U-Qa ?\; ??s-k-??? Gs-n? A?-\?[-Pz-v-h? C?? G?-?-u?S Ax |; Eu?-?-n-??-S?. 17 ? ?P?sh S?-?? 6 ? Av-w-µ ][P? ?u]-?-??-v-P? G?? ??P-?? C?-??? Gv? A?U-?P-P-??a \???-?z-u-?-???, Az-P-?? ???-?a \?-??-vU-PU Th?-?u?-?-v? A?-\?[-P? S?-??-?-??x b-x??x.

தமிழ் மக்களுக்கு எத்துணை பேரவலம் ஏற்பட்டாலும் அதனைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் விடுதலைப்புலிகளை முதலில் இராணுவ ரீதியாகத் தோற்கடிப்பதே அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் முதலாவது அங்கமாயிருக்கிறது. அண்மையில் அலரிமாளிகையில் வைத்து தாதிமாருக்கு சான்றிதழ்கள் வழங்கிய வைபவத்தில் ஜனாதிபதி உரையாற்றுகையில், `என்மீதும் அர சாங்கத்தின் மீதும் மாறுபாடான கருத்துகள் இருப்பது பிரச்சினையில்லை. ஆனால், வீரம் செறிந்த ஆயுதப்படையினரை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" என அல்லது அவ்வாறு கருத்துப்பட எடுத்துக் கூறியிருந்தார். அதற்கு முன்னரும் ஜனாதிபதி அவ்வாறு கூறிவைத்ததை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இதில் பொதிந்திருக்கும் அர்த்தம், புரிய முடியாததொன்றல்ல. ஜனாதிபதியின் சகோதரராகிய பாதுகாப்புச் செயலாளர் விடுதலைப்புலிகளை இரண்டு அல்லது மூன்று வருடங்களில் ஒழித்துக்கட்டி விடமுடியுமென்று, ஏற்கனவே கூறிவைத்ததானது ஜனாதிபதியின் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகவே அமைகிறது எனலாம்.

ஆட்கடத்தல்கள், காணாமற் போதல்கள் போன்ற விடயங்களை மிகைப்படுத்தக்கூடாது. இலங்கை நோய்வாய்ப்பட்டிருக்கவில்லை என்றெல்லாம் ஜனாதிபதி தாதிமார் சான்றிதழ் கையளித்தல் வைபவத்தில் கூறியதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அதேவேளை, சில அமைச்சர்கள் கூட கப்பம் பெறும் ஆட்கடத்தல்களில் ஈடுபட்டிருப்பதாக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா கூறியுள்ளார். இதுபற்றி அரசாங்கம் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளுமா?

நிற்க, யுத்த விடயத்தைப் பொறுத்தவரை அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழும் மற்றும் அகதிகளாக விரட்டப்பட்டுக் குவிக்கப்பட்டிருக்கும் இலட்சக் கணக்கான தமிழர் பேரவல நிலைக்குத் தள்ளப்பட்டு "திறந்த வெளிச்சிறைச் சாலையில்" அடைக்கப்பட்டிருப்பது தொடர்பாக விடுதலைப்புலிகள் தரப்பில் அரசாங்கம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அந்த மக்களை அரசாங்கமானது சொல்லொணா வேதனைகளுக்கு ஆளாக்கியுள்ள போதும் தாம் அதிகம் பொறுமை காத்து எதிர்த்தாக்குதல்கள் நடத்துவதைத் தவிர்த்து வருவதாகவும் தமது இதய சுத்தியான சகிப்புத் தன்மையை சர்வதேச சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டுமெனவும் விடுதலைப்புலிகள் அரசியல்துறைப் பொறுப்பாளர் கூறியுள்ளார்.

தமது பொறுமையை பலவீனமாகக் கருதி முழு நாட்டுக்குமே பேராபத்தினை வரவழைக்க வேண்டாமெனவும் அவர் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் விடுதலைப்புலிகளை அழித்து விடுதவதற்கான கால எல்லையிலான வரையறுத்துக் கூறியதை அடுத்தே, விடுதலைப்புலிகள் தரப்பிலான மேற்கூறிய நிலைப்பாடு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு கெரில்லா அமைப்பினை ஒருபோதும் முற்றாக அழித்துவிடமுடியாது என குறிப்பாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தவராகிய பிரித்தானிய அமைச்சர் கலாநிதி கிம் ஹவல்ஸ் உள்ளூர் ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறிவைத்தது ஞாபகத்துக்கு வருகிறது.

மேலும், இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருப்பது போன்ற யுத்தமொன்றில் தீர்க்கமான வெற்றியென்று ஒன்று கிடையாது என சில அரசியல், இராணுவ ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள கருத்துகளையும் உள்வாங்கிக் கொள்வது தான் பொறுப்புணர்ச்சி வாய்ந்த அணுகுமுறையாகும்.

அதனை விடுத்து, பாதுகாப்புச் செயலாளர் திட்டமிடுவது போல் இன்னும் 3 வருடங்கள் யுத்தம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமாயின், உயிர், உடைமை அழிப்புகள் மற்றும் மனித பேரவலங்கள் ஒருபுறமிருக்கும், யுத்த செலவீனமாக குறைந்தபட்சம் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் தொகை தேவைப்படும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மென்மேலும் குன்றி வெளிநாட்டு முதலீடுகள் வரண்டு மிகப் பரிதாபமான நிலை தோன்றும். ஃபிச் அளவீடு (Fitch Rating) எனப்படும் முதலீட்டுத் தருவிப்புக்கான அளவுகோலின் பிரகாரம் இலங்கை வகிக்கும் இடமானது ஏற்கனவே, BB எனும் மிக கீழ்நிலையில் உள்ளது. மேலும், பரிதாபமான நிலை தோன்றுவதற்கு இடமளிப்பது நாட்டுக்கு நல்லது தானா?

எனவேதான், அரசாங்கத்துக்கு முழுநாட்டினதும் எல்லா இன மக்களினதும் நல்வாழ்விலும் சுபிட்சத்திலும் உண்மையான அக்கறை இருக்குமாயின், தற்காப்புத் தாக்குதல்கள் என்ற போர்வையில் நடத்திக் கொண்டிருக்கும் யுத்தத்தினை நிறுத்தி அர்த்தமுள்ள அரசியல் தீர்வுத் திட்டத்தினை முன்வைத்து மேலும் காலம் தாழ்த்தாது பேச்சுவார்த்தையில் இறங்க வேண்டும்.

கடந்த கால எல்லா அரசாங்கங்களும் தமிழ்பேசும் மக்களுக்கும் நாட்டுக்கும் ஏற்படுத்தியுள்ள அழிப்புகளும் அநீதிகளும் போதும்.

குறிப்பாக, தமிழர் மீது 1950 கள் முதல் எல்லா அரசாங்கங்களாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த விசமத்தனமான அநியாயங்களும் அட்டூழியங்களுமே விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்றம் பெற்றதற்கான ஒட்டுமொத்தமான காரணம் என்பதை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மறந்துவிடாது, செயற்பட வேண்டியது அதன் தலையாய கடப்பாடாகும்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.