Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இன்று கர்நாடகம்... நாளை தமிழகம்...' பா.ஜ.கவின் கோஷம் வெற்றிபெறுமா?

Featured Replies

'இன்று கர்நாடகம்... நாளை தமிழகம்...' பா.ஜ.கவின் கோஷம் வெற்றிபெறுமா?

05-2c49c53f55de816a7bd90333d5a3d26e120b6f75.jpg

 

நல்லதம்பி நெடுஞ்செழியன்

“இன்று கர்­நா­டகா…. நாளை தமி­ழகம்” என்ற கோஷத்­துடன், தமி­ழக பா.ஜ.க.(பார­திய ஜன­தா கட்சி)வினர் கர்­நா­டக மாநிலத் தேர்தல் வெற்­றியைக் கொண்­டா­டு­கின்­றனர். கர்­நா­டகா சட்­டப் ­பே­ரவைத் தேர்­தலில் 104 தொகு­தி­களில் மட்டும் வெற்றி பெற்­றுள்ள பா.ஜ.க.விடம் ஆட்­சியை ஒப்­ப­டைத்­துள்­ள­துடன், அதன் மாநிலத் தலைவர் எடி­யூ­ரப்­பாவை முத­ல­மைச்­ச­ரா­கவும் நிய­மித்து, சத்­தியப் பிர­மாணம் செய்து வைத்­தி­ருக்­கின்றார் மாநில ஆளுநர் வாஜுபாய் வாலா.

கர்­நா­டகா மாநில ஆளு­நரின் இந்த நட­வ­டிக்கை பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது. அதிக தொகு­தி­களில் வெற்­றி­பெற்ற கட்­சிகள் ஆட்­சி­ய­மைக்க உரிமை கோரிய நிலையில், அதற்கு அனு­மதிய­ளிக்­காமல், குறைந்த தொகு­தி­களில் வெற்­றி­பெற்ற கட்­சியை ஆட்­சி­ய­மைக்க அனு­மதி வழங்­கி­ய­மையே இதற்குக் கார­ண­மாகும். கர்­நா­டகா, சட்டப் பேரவைத் தேர்­தலில், மொத்­த­மாக உள்ள 222 சட்­டப்­பே­ரவைத் தொகு­தி­களில் 104 தொகு­தி­களில் மட்­டுமே பா.ஜ.க வெற்றி­பெற்­றது. அதே­வேளை காங்­கிரஸ் கட்சி 78 தொகு­தி­க­ளிலும், மற்­றொரு கட்­சி­யான மத­வா­த­மற்ற ஜனதா தளம் 38 தொகு­தி­க­ளிலும் வெற்­றி­பெற்ற அதே­வேளை, இரண்டு தொகு­தி­களில் சுயேச்­சை­களும் வெற்­றி­பெற்­றி­ருந்­தன.

காங்­கி­ரஸும், மதவாதமற்ற ஜனதா தளம் கட்­சியும் இணைந்து ஆட்­சி­ய­மைக்கும் முயற்­சியில் இறங்­கின. இந்த இரண்டு கட்­சி­க­ளி­னதும் மொத்த சட்டப் பேரவை உறுப்­பினர் எண்­ணிக்கை 117 ஆக இருந்த நிலை­யில் தமக்கு பெரும்­பான்மை பலம் இருப்­ப­தாக தெரி­வித்து ஆட்­சி­ய­மைக்க அனு­மதி வழங்­கு­மாறு அந்தக் கட்­சி­களின் தலை­வர்­கள் கடந்த 16 ஆம் திகதி மனு கைய­ளித்­தி­ருந்­தனர்.

ஆனால், இறு­தி­வரை அவர்­களை ஆட்­சி­ய­மைக்க அழைக்­காமல், அவர்­க­ளை­விட குறைந்த தொகு­தி­களில் வெற்­றி­பெற்ற பா.ஜ.க.வின­ருக்கு ஆட்­சி­ய­மைக்க அனு­மதி வழங்­கி­ய­துடன், அந்தக் கட்­சியின் தலைவர் எடி­யூ­ரப்­பா­வுக்கு முத­ல­மைச்­ச­ராக சத்­தியப் பிர­மா­ணமும் செய்து வைத்­தி­ருக்­கிறார் ஆளுநர். காங்­கிரஸ் மற்றும் ம.ஜ.த. ஆகிய இரண்டு கட்­சி­களும் இணைந்து ஆட்­சி­ய­மைக்கப் போவ­தாக அன்­றைய தினமே ஆளு­ந­ருக்கு அறி­வித்­த­துடன் அதற்­கான கடி­தத்­தையும் கொடுத்­துள்­ளன. இரண்டு கட்­சி­களும் இணைந்து 117 ஆச­னங்­களைப் பெற்­றுள்ள நிலையில், தமக்கே ஆட்­சி­ய­மைக்க ஆளுநர் வாய்ப்­ப­ளிப்பார் என்றும், ம.ஜ.த. கட்­சித்­ த­லைவர் குமா­ர­சா­மியே முத­ல­மைச்­ச­ராகப் பத­வி­யேற்பார் என்றும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால், ஆளுநர் அதனைச் செய்­ய­வில்லை. மாறாக 104 தொகு­தி­களில் மட்டும் வெற்றி பெற்ற பா.ஜ.க.வை ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு அழைப்பு விடுத்தார். எனினும் உட­ன­டி­யாக இது­பற்றி உச்­ச­நீ­தி­மன்­றத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. இந்த வாழ்க்கை அப்­போதே விசா­ர­ணைக்கு எடுத்துக் கொண்ட உச்­ச­நீ­தி­மன்றம் எடி­யூ­ரப்பா முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்­பதை தடை செய்ய முடி­யா­தென்று கை விரித்­து­விட்­டது. இத­னை­ய­டுத்து மறு­தினம் எடி­யூ­ரப்­பா­வுக்கு முதல்வர் பத­வியை வழங்கி சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து வைத்தார் ஆளுநர். இது ஒரு ஜன­நா­யகப் படு­கொலை என்று காங்­கிரஸ் தலைவர் ராகுல்­காந்தி முதற்­கொண்டு சகல கட்­சி­களும் கண்­டனம் தெரி­வித்­தன. இதற்கு ஆளுநர் ‘தனிப்­பெரும் கட்சி’ என்ற அடிப்­ப­டை­யி­லேயே 104 தொகு­தி­களில் வெற்­றி­பெற்ற பா.ஜ.க.வுக்கு ஆட்­சி­ய­மைக்க அனு­மதி வழங்­கப்­பட்­ட­தாகக் கூறினார்.

ஆனால், ஆளு­நரின் இந்த நட­வ­டிக்கை அர­சியல் சாசன ரீதி­யாக பெரும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. கர்­நா­ட­காவில் ‘தனிப்­பெரும் கட்சி’ என்ற அடிப்­ப­டையில் பா.ஜ.க.வுக்கு ஆட்­சி­ய­மைக்க அனு­மதி வழங்­கப்­ப­டு­மானால், கோவாவில் காங்­கிரஸ் கட்­சிக்கும், பீஹாரின் ஆர்.ஜே.டி. கட்சிக்கும் ‘தனிப்­பெரும் கட்சி’ என்ற அடிப்­ப­டையில் ஏன் ஆட்­சி­ய­மைக்க அனு­மதி வழங்­க­வில்லை என்ற கேள்வி எழுப்­பப்­பட்­டுள்­ள­துடன், அம்­மா­நில கட்­சி­களும் இது தொடர்பில் போர்க் கொடி­களைத் தூக்­கி­யுள்­ளன. கோவா மாநி­லத்தில் கடந்த வருடம் சட்­டப் பேரவைக்­கான தேர்தல் நடை­பெற்­றது. அங்கு காங்­கிரஸ் கட்சி 17 தொகு­தி­க­ளிலும், பா.ஜ.க.13 தொகு­தி­க­ளிலும் வெற்­றி­பெற்­றன. அதிக தொகு­தி­களில் வெற்றி பெற்ற காங்­கிரஸ் கட்­சியை ஆட்­சி­ய­மைக்க அம்­மா­நில ஆளுநர் அழைப்பு விடுக்­க­வில்லை.

மாறாக 13 தொகு­தி­களில் பெற்றி­பெற்ற பா.ஜ.க.வும் அத­னுடன் ஏனைய சிறு கட்­சி­களும் இணைந்து கூட்­ட­ணி­யாக ஆட்­சி­ய­மைக்க உரிமை கோரிய­போது, அதற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது. இது­போன்றே பீஹார் மாநி­லத்­திலும் இடம்பெற்­றுள்­ளது. எனவே, பா.ஜ.க.வுக்கு ஒரு சட்டம், ஏனைய கட்­சி­க­ளுக்கு ஒரு சட்­டமா? என்ற கேள்வி எழுந்­துள்ள நிலையில் கோவா­விலும், பீஹா­ரிலும் தங்­களை ஆட்­சி­ய­மைக்க அனு­மதி வழங்­க­வேண்டும் என்று குறித்த கட்­சிகள் சட்ட நட­வ­டிக்­கை­யிலும் ஈடு­படத் தீர்­மா­னித்­துள்­ளன.

கர்­நா­டக மாநி­லத்தில் ஆட்­சி­ய­மைத்­ததன் மூலம் இந்­தி­யாவில் மொத்­த­மாக 23 மாநி­லங்­களில் பா.ஜ.க. ஆட்­சியின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன. இந்­தி­யாவில் தமக்கு எதிர்க்­கட்­சி­களே இருக்­கக்­கூ­டாது. மத்­தியில் மட்­டு­மன்றி மாநி­லங்கள் அனைத்­திலும் பா.ஜ.க ஆட்­சியே ஏற்­பட வேண்­டு­மென்று பா.ஜ.க. தலை­மைகள் திட்­ட­மிட்டு செயற்­ப­டு­கின்­றன.

இதே­வேளை, கர்­நாடக மாநி­லத்தில் பா.ஜ.க.வின் சார்பில் முத­ல­மைச்­ச­ராகப் பத­வி­யேற்­றுள்ள எடி­யூ­ரப்­பா­வுக்கு பெரும்­பான்மை பலத்தை நிரூ­பிப்­ப­தற்­காக 15 நாள் அவ­கா­சத்தை ஆளுநர் வழங்­கி­யுள்ளார். ஆனால் 7 நாள் அவ­கா­சமே வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்ற நிலையில் 15 நாட்கள் அவ­காசம் வழங்­கி­யது குறித்து கேள்வி எழுப்­பப்­பட்­டுள்­ளது. தமது பெரும்­பான்மை பலத்தை நிரூ­பிப்­ப­தற்­காக போதிய காலஅவ­கா­சத்தை வழங்கும் நோக்­கத்­து­ட­னேயே ஆளுநர் இவ்­வாறு நடந்து கொள்­வ­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

எம்.எல்.ஏ.க்களுக்கு கோடி கோடி­யாக பணத்தை வாரி வழங்கி அவர்­களை தமது பக்கம் இழுக்கும் முயற்­சியில் பா.ஜ.க ஈடு­பட்­டுள்­ள­தாக ம.ஜ.த.கட்சித் தலை­வ­ரான குமா­ர­சாமி தெரி­வித்­துள்ளார். இத­னி­டையே ம.ஜ.த.கட்­சியும், காங்­கிரஸ் தமது எம்.எல்.ஏக்­களை பா.ஜ.க.விடம் சிக்­க­வி­டாமல், வெளி­யி­டங்­க­ளுக்கு கொண்டு சென்று மறைத்து வைத்­துள்­ளன. இது கடந்த வருடம் சசி­கலா , தின­கரன் தரப்­பினர் தமது எம்.எல்.ஏ.க்களை சென்னை, கூவத்தூர் ஹோட்­டலில் மறைத்து வைத்­துள்­ளன. இது கடந்த வருடம் தமி­ழ­கத்தில் நடை­பெற்­றதை நினை­வு­கூ­று­வ­தாக இருக்­கின்­றது. கர்­நா­ட­காவின் சட்­டப்­பே­ரவை கூடும் தினத்­தன்று குறித்த ம.ஜ.த. மற்றும் காங்­கிரஸ் எம்.எல்.ஏக்கள் சபைக்கு அழைத்து வரப்­ப­ட­வுள்­ளனர். எனவே, சட்­டப்­பே­ர­வையில் பெரும்­பான்மை பலத்தை உறு­திப்­ப­டுத்த முடி­யாத­தொரு நிலைமை பா.ஜ.க.வுக்கு ஏற்­ப­டு­மென ம.ஜ.த.வும், காங்­கி­ரஸும் எதிர்­பார்க்­கின்­றன.

இதே­வேளை பெரும்­பான்மை பல­மில்­லாத பா.ஜ.க.வின் தலை­வரை முத­ல­மைச்­ச­ராக நிய­மித்­த­தற்கும், ஆட்­சி­ய­மைக்க அனு­மதி வழங்­கி­ய­தற்கும் எதி­ராக வழக்குத் தொட­ரப்­பட்­டுள்­ளது.

கர்­நா­ட­கத்தில் பா.ஜ.க ஆட்­சியே ஏற்­பட்­டுள்­ள­தாக தமி­ழ­கத்­தி­லுள்ள பா.ஜ.க.வினர் கொண்­டாடி வரு­கின்­றனர். இது­வரை வட­மா­நி­லங்­களில் குறிப்­பாக ஹிந்தி பேசப்­படும் மாநிலங்­க­ளி­லேயே பா.ஜ.க. வெற்­றி­ப்பெற்று வந்­துள்­ளது. தென்­னிந்­திய மாநி­லங்­க­ளான தெலுங்­கானா, ஆந்­திரா, தமிழ்­நாடு, கேரளா போன்ற மாநி­லங்­களில், இன்னும் அந்­தந்த மாநிலக் கட்­சி­களே ஆட்­சி­யி­லுள்­ளன. பா.ஜ.க.வுக்கு இந்த மாநி­லங்­களில் இட­மில்லை. தற்­போது கர்­நா­டக பா.ஜ.க.வசம் போயுள்­ளது. அடுத்த படிப்­ப­டி­யாக ஏனைய தென் மாநி­லங்­க­ளையும் கைப்­பற்­று­வதே பா.ஜ.க.வின் இலக்­காக இருக்­கி­றது.

குறிப்­பாக, அடுத்­த­தாக தமி­ழ­கத்தைக் கைப்­பற்­று­வதே பா.ஜ.க.வின் பிர­தான நோக்கம். என­வேதான், இன்று கர்­நா­டகா நாளை தமி­ழகம் என்று தமி­ழக பா.ஜ.க.வினர் கொண்­டாடி வரு­கின்­றனர். தமி­ழ­கத்தில் திரா­விடக் கட்­சி­களின் ஆட்­சியை அசைக்க முடி­யாத நிலைமை தொடர்­கி­றது. தற்­போது திரா­விடக் கட்­சி­களின் ஆட்­சியை இல்லா­தொ­ழிப்­ப­தற்கு பா.ஜ.க. அனைத்து முயற்­சி­க­ளிலும் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது.

அதன் ஒரு கட்­ட­மாக ஜெய­ல­லிதா மறைந்­த ­பின்னர் பெரும் குழப்­பத்­தி­லி­ருந்த அ.தி.மு.க. தன்­பக்கம் இழுத்து, அத­னூ­டாக தமி­ழ­கத்தில் காலூன்ற பா.ஜ.க. முயற்சி செய்து வரு­கி­றது. அத­ன­டிப்­ப­டை­யி­லேயே தமி­ழ­கத்தில் சிறு­பான்மை அர­சாங்­க­மாக இருக்கும் அ.தி.மு.க. ஆட்­சியை தொடர்ந்தும் ஆட்­சியில் இருக்க அனு­ம­தித்­தி­ருக்­கின்­றது.

தமி­ழ­கத்தில் கடந்த சட்­ட­ப்பே­ரவைத் தேர்­தலில் சகல தொகு­தி­க­ளிலும் போட்­டி­யிட்ட போதும் பா.ஜ.க ஒரு இடத்­தி­லா­வது வெற்­றி­பெ­ற­வில்லை. அதே­போன்று பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் போட்­டி­யிட்­டது. எனினும் கன்­னி­யா­கு­மரி தொகு­தியில் மாத்­தி­ரமே வெற்­றி­பெற்­றது.

அந்தத் தொகு­தி­யி­லி­ருந்து வெற்­றி­பெற்ற மத்­திய இணை அமைச்சர் பொன். இரா­தா­கி­ருஷ்­ணனின் தனிப்­பட்ட செல்­வாக்கே இந்த வெற்­றிக்கு காரணம் என்று தெரி­விக்­கப்­பட்­டது. தமிழ் நாட்டில் தமக்கு இருக்கும் மக்கள் ஆத­ரவு எத்­த­கை­யதென்­பதை பா.ஜ.க. நன்கு தெரிந்து வைத்­துள்­ளது

 தமி­ழக மக்­க­ளுக்கு நன்­மைகள் செய்­ததை விட, ஒதுக்­கி­வைத்ததே அதிகம் எனலாம். நீண்ட போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளின் பிரச்சினை தீர்க்கப்படாமை, நீட் தேர்வு முறை கொண்டு வரப்பட்டமை, தஞ்சாவூர் பிரதேசத்தின் விவசாய நிலங்களில் மீத்தேன் அகழ்வு, ஜல்லிக்கட்டு தடை போன்றவை மட்டுமன்றி தற்போது தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக மாநிலத்துக்கு சார்பாக நடந்து கொள்கின்றமை அனைத்தும் மக்களிடையே பா.ஜ.க மீது பெரும் அதிருப்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

இதற்கேற்றாற்போல், தமிழகத்திலுள்ள பா.ஜ.க.தலைவர்களான எச். ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர் போன்றவர்களின் பேச்சு,செயற்பாடு என்பவையும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.  தமிழகத்தில் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ள இந்துத்துவா ஆதிக்க செயற்பாடுகள், ஜாதி மேலாதிக்க நடவடிக்கைகள், சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் அனைத்தும் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. எனவே, அவர்கள் இதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, பா.ஜ.க.வுக்கு ஆதரவு வழங்குவார்களா என்பதற்கு காலந்தான் பதில் சொல்ல வேண்டும்.  

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-05-20#page-2

  • கருத்துக்கள உறவுகள்

உடைக்கப்பட்ட மோடி அமித் ஷா பலூன்.

 

 

modi-shah-pti1-1024x597.jpg?resize=1024%

கர்நாடக முதலமைச்சாராக இரண்டு நாட்கள் மட்டுமே நீடித்த, அனேகமாக அவரது கடைசி இன்னிங்ஸான முதல்வர் பதவியை தொடர்ந்து,  பாஜகவின் “மார்க்தர்ஷக் மண்டல்“ எனப்படும் முதியோர் இல்லத்தை நோக்கி செல்கிறார்.

எந்தெவொரு ஸ்கிரிப்டோ அல்லது ஆதரவோ இல்லாமல் ஒரு கதாபாத்திரமாக நடிக்க நாடக மேடையில் தள்ளப்பட்ட  எடியூரப்பா, உண்மையில், தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் கட்டுப்படுத்தப்படும் நரேந்திர மோடி – அமித் ஷா இரட்டையரின் பகடைக்காய். அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக தலைவர்கள் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏக்களை லஞ்சம் கொடுத்தும், மிரட்டியும் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்தது ஆடியோ பதிவுகளாக வெளியாகி  ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பகிரங்கமாக தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

மோடி மற்றும் ஷாவின் முகங்களில் பூசப்பட்ட கரியை துடைக்க, காவிகளின் ஊதுகுழலாக உள்ள முக்கிய பத்திரிக்கையாளர்களால்  விரிவான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சட்டப்பேரவையில் எடியூரப்பாவின் வெளிப்படையான தியாகச் செயலைக் கண்டு யாரும் ஏமாந்து விடக்கூடாது.

போதுமான எண்ணிக்கை இல்லாதபோதும் சட்டப்பேரவையில் பலத்தை நிரூபிக்கும் சோதனைக்கு அமித் ஷா-தான வற்புறுத்தினார் என “த ஒயர்“ இணைய தளத்துக்கு ஆதாரப்புர்வமான தகவல்கள் தெரிவித்தன. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மூலமாக ஆர்.எஸ்.எஸ் தலையிட்ட பின்னரே, நிச்சயமான தோல்வி என்ற தர்மசங்கடத்திலிருந்து எடியூரப்பா காப்பாற்றப்பட்டார்.

கடந்த சில நாட்களாக ஷாவின் முழு அளவிலான கோபத்தை எடியூரப்பா தாங்க வேண்டியிருந்ததாக பாஜக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சராக தன்னுடைய இன்னிங்ஸ் தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தன்னுடைய பிரியாவிடை(farewell speech) உரையில் மோடி மற்றும் அமித் ஷாவை அடிக்கடி குறிப்பிட்டதன் மூலம் இந்த தோல்விக்கு உண்மையிலேயே யார் காரணம் என்பதை பாஜக தொண்டர்களுக்கு நினைவுபடுத்தியது போல் இருந்தது.

” மோடியும், அமித் ஷாவும் மக்களை அவமானப் படுத்துகின்றனர். அவர்களிடம்  எடியூரப்பா வேறு எதை எதிர்பார்த்தார் ?,“ என்கிறார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு மூத்த பாஜக தலைவர். இவர் தற்போது நாம் முன்னர் குறிப்பிட்ட மார்கதர்ஷக் மண்டலில் இருக்கிறார்.

தேர்தல் ஆண்டில் இதன் தாக்கம்


தற்போதைய அரசியல் சூழலில், கர்நாடகாவில் நடைபெற்ற சம்பவங்கள் எதை உணர்த்துகிறது ?

போரில் Take No Prisoners என்று ஒரு பதம் உண்டு.  அதாவது போரில் எதிரி நாடு தோல்வியுற்றால், சரணடைபவர்களை போர்க் கைதிகளாக கைது செய்வதற்கு பதிலாக, அனைவரையும் சுட்டுக் கொல்வது.   இதே அணுகுமுறையைத்தான் பாஜக கடைபிடிக்கிறது.  பாஜகவின் இந்த அணுகுமுறையை, தற்போது ஒன்றுபடவில்லை என்றால் அழியவேண்டியதுதான் என்பதை எதிர்க்கட்சிகள் புரிந்துகொண்டன. இந்த புரிதல்தான் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் என்ற புதிய கூட்டணிக்கு அடிப்படை. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் தேர்தலுக்கு முன்னரே கூட்டணி வைத்திருந்தால் இந்த கூட்டணி பாஜகவை வீழ்த்தி, மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலும் வென்றிருக்கும் என்பதை காங்கிரஸ் நிர்வாகிகள் அறிவர்.

தனது மந்தையை (எம்.எல்.ஏக்களை) பாதுகாக்கவும், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளை ஒன்றுபடுத்தவும் ராகுல் காந்தி மேற்கொண்ட கடுமையான போராட்டம் ஒரு த்ரில்லர் படம்போல் விரிந்தது – உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை நள்ளிரவில் தட்டியதுடன் நிறைவடைந்தது.

குஜராத் அரசியல்வாதிகளில் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்றபின்னர் தனது ராஜ்கோட் தொகுதியை அவருக்கு விட்டுக்கொடுத்து ஒதுங்கியவருமான கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா பாஜகவுக்கு தனது பெரும்பான்மையை நிரூபிக்க, காட்ட வியக்கத்தக்க வகையில் 15 நாள் கால அவகாசம் கொடுத்தார். இதை எதிர்த்த காங்கிரஸின் சட்டப் போராட்டம் மிக முக்கியமானது.   ஏனெனில், எம்.எல்.ஏக்களை விலை கொடுத்து வாங்குவதற்கு ஷா மற்றும் சுரங்க பிரபுக்களுக்கு போதுமான அவகாசம் இல்லாமல் போகும்படி பெரும்பான்மையை இரண்டு நாட்களில் நிரூபிக்க பாஜகவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட காங்கிரஸின் சட்டப் போராட்டம் காரணமாக இருந்த்து.

தேர்தலில் கர்நாடகாவைத் தக்கவைக்கத் தவறிய பின்னடைவுக்குப் பின்னர், ராகுல் காந்தி தனது அரசியல் சாதுர்யங்களை விரைவாக மீட்டார். ஒரு தீவிரமான போரில், காங்கிரஸ் மந்தையை (எம்.எல்.ஏக்களை) ஒன்றாக பாதுகாக்க நம்பகமான மூத்த தலைவர்கள் அசோக் கெலாட் மற்றும் குலாம் நபி ஆஸாத் ஆகியோரை அனுப்பினார். அதே சமயம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைப்பாளரான சோனியா காந்தி மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் எச்.டி.தேவெ கௌடாவை தொடர்பு கொண்டு பேசினார். காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல் ராஜ்ய சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது இதேபோன்ற ஷா மற்றும் மோடி –யின் ஆள்பிடிக்கும் முயற்சியை எதிர்த்து முறியடித்த காங்கிரஸின் ட்ரம்ப் கார்டான டி.கே.சிவக்குமாரை இதில் இணைத்தது மற்றொரு சாதுர்யமான நடவடிக்கை.

எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றபோதும், காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏக்கள் எதிரணிக்கு தாவவில்லை என்ற உண்மை அமித் ஷா மற்றும் மோடிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கும்.  இது குறித்து பேசிய ஒரு பாஜக தலைவர், “இதர கட்சிகளுக்கு நாங்கள் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் கட்சி போல ஆகி விட்டோம்.   மற்ற கட்சிகள் எங்களை கண்டு விலகி ஓடுகின்றனர்.    அமித் ஷா, வரம்பற்ற வகையில் தன் அனைத்து சக்திகளையும் பிரயோகித்தார்.   மத்திய புலனாய்வு அமைப்புகள், எம்எல்ஏக்களை மிரட்டவும் பயன்படுத்தப்பட்டன.  இத்தனைக்கு பின்னரும், ஒரு சிறிய பிராந்திய கட்சி இந்த மிரட்டல்களுக்கு பயப்படவில்லை” என்கிறார்.

 

பலவீனமான மிரட்டல் உத்தி

2019ம் ஆண்டின் பெரிய போருக்கு, தேர்தல் காலத்துக்கு இன்னும் சுமார் 12 மாதங்களே உள்ள நிலையில் கர்நாடக பின்னடைவு மிகவும் முக்கியமானது. தோழமைக் கட்சிகள் இல்லாததால் பாஜகவுக்கு அனைத்து வகையான சிக்கல்களும் ஏற்படும். கர்நாடகாவுக்கான அவர்களது அவசர முயற்சியில், மோடியும், ஷாவும் தெரியாத்தனமாக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையையும் உறுதி செய்துள்ளனர்.

எச்.டி.குமாரசாமியின் பதிவியேற்புஎதிர்க்கட்சிகளின் வருகைதான் புதிய கூட்டணி அரசியலின் வெளிப்பாடுகளில் ஒன்றாக இருக்கும் என்கிறார் கர்நாடக பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ஒரு காங்கிரஸ் தலைவர்.  மாயாவதி, அகிலேஷ் யாதவ், சரத் பவார், சீத்தாராம் யெச்சூரி, ராகுல் காந்தி மமதா பானர்ஜி மற்றும் தேஜாஸ்வி யாதவ ஆகிய அனைவரும் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் அதிகாரத்தை கைப்பற்ற மோடி-ஷா ஆகியோரின் அருவருக்கத்தக்க முயற்சிகள், இதற்கு முன் எதிர்க்கட்சிகளிடையே இருந்த  முந்தைய வேறுபாடுகளை களைந்துள்ளது.

மோடியும் அமித் ஷாவும் மனம் திருந்தாத நிலையில், இது 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலில் என்னவாகும் என மூத்த பாஜக தலைவர்களும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளும் இப்போது கவலையடைந்துள்ளனர்.  ஊடகங்களில் பாஜக குறித்து நல்ல செய்திகளை வர வைப்பதன் மூலம் இந்த சிக்கலில் இருந்து பாஜகவை காப்பாற்ற முடியும் என்று அவர்கள் நம்புவதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயினும், அமித் ஷா இப்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் சிக்கலில் உள்ளார். அமித் ஷாவுக்கு பதிலாக ராஜ்நாத் சிங்தான் பாஜக தலைவராக வேண்டும் என அக்கட்சியில் பெரும்பாலோர் விரும்பிய நிலையில், கர்நாடகா எப்படி விரிவடைகிறது என்பதை பார்ப்போம் என மூன்று கூட்டங்களில் அமித் ஷாவிடம் ஆர்.எஸ்.எஸ் தெரிவித்திருந்தது. ஷா வெற்றிப் பயணத்தில் இருந்த போது, அவருக்கெதிரான குரல்கள் அமைதியாயின. ஆனால் இப்போது, சனிக்கிழமை தோல்விக்குப் பிறகு, சில கிளர்ச்சிக் குரல்கள் வலுக்கும்.

கர்நாடகவில் 31 பொதுக்கூட்டங்களில் பேசி சாதனை புரிந்த மோடியால், பாஜகவை தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கச் செய்த பெருமை இருந்தாலும், அங்கு “மோடி அலை“யை உருவாக்க முடியவில்லை. ஊழல் தொடர்பாக  அக்கட்சி செய்து கொண்ட சமரசம், கறைபடிந்த பல்லாரி சுரங்க பிரபுக்களின் ஆதரவு ஆகியவை ஊழலுக்கு எதிரான கட்சி என்ற அதன் பிம்பத்தை உடைக்கும். இது ஆர்.எஸ்.எஸ் சுட்டிக்காட்டிய ஒன்று. அமித் ஷாவுக்கு பிடித்த பொதுச் செயலாளர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் வழிமொழியப்பட்ட முரளிதர் ராவின் லஞ்ச பேர ஆடியோ பதிவு   ஆர்.எஸ்.எஸ்-ல் பேசும் பொருளாகும்.

வளைந்து கொடுக்கும் ஊடகத்தால் பாராட்டப்பட்ட ஷா மற்றும் மோடியின் “சாணக்ய நிதி“ மற்றும் “மாஸ்டர் ஸ்ட்ரோக்ஸ்“, ஆகிய தந்திரங்களே, அனைத்து கட்சிகளும் பாஜகவை அவநம்பிக்கையோடு பார்ப்பதை உறுதி செய்தன.

மோடியின் பிம்பம் அடித்து நொறுக்கப்படுகையில், அதன் ஒரு விளைவாக ராகுல் காந்தியின் செல்வாக்கு உயர்வது தவிர்க்க முடியாதது.  எடியூரப்பாவின் ராஜினாமாவுக்குப் பின்னர் பத்திரிகைகளுக்கு தெரிவித்த அவரது கருத்துகளில் பிரதமர் மோடி மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை சுமத்தினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விதான் சௌதாவுக்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது அவர்களுடன் ராகுல் காந்தி பேசினார் என்ற உண்மையை காங்கிரஸ் மேலாளர்கள் பெருமையாகப் பேசுகின்றனர். ”இறுதியாக அவர் (ராகுல் காந்தி” யதார்த்த நிலைமையை புரிந்து கொண்டே ஆக வேண்டும் என்பதை கர்நாடக தேர்தல் உறுதி செய்துள்ளது,” என்கிறார் ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர்.

தன்னுடைய கட்சி சார்பில் கர்நாடகாவில் ஒரே ஒரு எம்.எல்.ஏவைக் கொண்டுள்ள மாயாவதி தனக்கு நம்பகமான உதவியாரை அனுப்பிவைத்து அந்த ஒரு எம்.எல்.ஏவும் வேட்டையாடப்படவில்லை என்பதை உறுதி செய்ததோடு, அஹமத் படேலுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். தேவெ கௌடா தன்னுடைய மனதை மாற்றிவிடக் கூடாது என்பதை உறுதி செய்ய அவருடனும் தொடர்பு கொண்டு பேசினார்.

எதிர்த் தரப்பு அதன் ஒற்றுமை குறியீட்டைப் பெறுகிறது என்பதையே  கர்நாடகாவில் நடக்கும் சம்பவங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.   உண்மையில் எதிர்க்கட்சிகளுக்கு வேறு வழியே இல்லை. மோடி மற்றும் ஷா ஆகியோர் வெல்ல முடியாதவர்கள் அல்ல என்றும், 2019ம் ஆண்டின் பொதுத் தேர்தல்  மோடியும் அமித் ஷாவும் காட்டியிருந்தபடி அவ்வளவு சுலபமான வெற்றியாக இருக்காது என்றும் கர்நாடகா நிரூபித்துள்ளது.

ஸ்வாதி சதுர்வேதி

நன்றி தி வயர் இணையதளம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.