Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனோ கணேசனும் வடகிழக்கு இணைப்பும் விவாதங்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MANO GANESAN AND NORTH EAST MERGER.
மனோ கணேசனும் வடகிழக்கு இணைப்பும் விவாதங்கள்.
.
வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டுமென 21.05.2018 அன்று மட்டக்ககளப்பில் நடந்த ஊடக சந்திப்பில் மனோ கணேசன் தெரிவித்தார். இது கிழக்கு தமிழர் மத்தியில் பேராதரவையும் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பையும் உருவாக்கி உள்ளது. முஸ்லிம்கள் வடகிழக்கு இணைப்பை ஆதரிக்கக்கூடாது என்றும் மனோகணேசன் கிழக்குமாகான மக்கள் பிரச்சினையில் தலையிடக்கூடாது அவர் மலையக மக்கள் பிரச்சினையை மட்டும் பார்கட்டும் என்றும் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார். தமிழ் முஸ்லிம் உறவு தொடர்பான விடயங்களில் ஆய்வு செய்கிறவன் என்கிற வகையில் என் கணிப்புக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.
.
வடகிழக்கு இணைப்பு பற்றி மனோ கணேசன் குறிப்பிட்டமைக்கு இரண்டு வலுவான காரணங்கள் இருக்கலாம். ஒன்று வடக்கில் ஒரு லட்ச்சத்துக்கும் அதிகமான மலையக தமிழர்களும் கிழக்கில் சில ஆயிரம் மலையகதமிழர்களும் வாழ்கிறார்கள் என்பது. இரண்டு சர்வதேச அரங்கில் இடம்பெறும் வடகிழக்கு மீழ் இணைப்பு பற்றிய நகர்வுகள் பற்றிய அவரது அறிதல். 1975ம் ஆண்டு மலையக பஞ்சம் நிலப்பறிப்பு மற்றும் 1983ம் ஆண்டு கலவரங்கள் சார்ந்த புலபெயர்வுகளால் ஈழத் தமிழர் என்கிற பதம் ஈழத் தமிழரும் வடகிழக்கிற்க்கு புலம்பெயர்ந்த மலையக வம்சாவழி ஈழத் தமிழரும் என விரிவடைந்துள்ளது. இதனைப் புரிந்துகொள்ளாமல் மனோகணசனின் அரசியலை மட்டுமல்ல ஓரழவுக்கேனும் ஒத்த சர்வதேச நலன்களைக் கொண்ட எதிர்கால தமிழர் மலையகத் தமிழர் அரசியலையும் புரிந்துகொள்ள முடியாது. 
.
இலங்கையல்ல சர்வதேச சக்திகள்தான் 1987லும் வடகிழக்கை இணைத்தன. மீண்டும் அத்தகைய சூழல்கள் வலுப்பெற்று வருகிறது. எனினும் ரணிலின் காலத்தில் வடகிழக்கு இணைப்புபற்றிய சர்வதேச நகர்வுகள் துரிதபடாது எனவே தோன்றுகிறது.
.
வடகிழக்கு இணைப்பு பற்றிய சர்வதேச சமூகத்தின் பொதுவான அறிவை பின்வருமாறு வரையறுக்கலாம். ஒன்று வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்களும் மலையக தமிழர்களும் இணைப்பை விரும்புகிறார்கள்.கிழக்கு முஸ்லிம்கள் இணைப்பை தெளிவாக எதிர்க்கிறார்கள். வடக்கு முஸ்லிம்களின் நிலைபாடு இன்னும் தெளிவாக வெளிவரவில்லை.எனினும் வடக்கு முஸ்லிம்கள் இணைப்பை ஆதரிக்கவில்லை இதுவே பொதுவான கருத்தாகும். 
.
வடகிழக்கு இணைப்பை வேண்டாம் எனும் முஸ்லிம்களின் நிலைபாட்டை எதிர்க்க தமிழருக்கோ இணைப்பு வேண்டுமென்னும் வடகிழக்குவாழ் தமிழர் மலையக தமிழர் நிலைபாட்டை எதிர்க்க முஸ்லிம்களுக்கோ தர்மீக உரிமையில்லை. இதனால் முஸ்லிம் அலகுகள் நீங்கலான வடகிழக்கு இணைப்பை அல்லது முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப்பரவலுடனான இணைப்பையே என்போன்றோர் வலியுறுத்த முடியும். இதனை முஸ்லிம்கள் உணர வேண்டும். இணைப்பு வந்தால் என்ன நிலைபாட்டை எடுப்பது என்கிற மாற்றுத் திட்டமெதுவும் முஸ்லிம்களிடை இன்னும் உருவாகவில்லை. இது துரதிஸ்ட்டவசமானதாகும்.
. 
வடகிழக்கு இணைக்கபட்டால் முஸ்லிம்களின் நிலைபாடு என்ன என்பது தொடர்பான இயக்கம் எதுவும் தீவிரமாக இல்லை. வடகிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்வதானால் அவர்களது அரசியல் நிபந்தனைகள் என்ன என்பதுபற்றிய தெளிவும் உருவாகவில்லை. முஸ்லிம்கள் வடகிழக்கு இணைப்பை நிராகரித்தால் அவர்களது மாற்று தனி முஸ்லிம் அலகா? அப்படியாயின் தனி முஸ்லிம் அலகை அரசிடமிருந்து போராடிப் பெறுவதற்கான ஆய்வுகள் கோரிக்கைகள் இயக்கம் போராட்டம் எதுவுமே இதுவரை ஏன் முஸ்லிம்கள் மத்தியில் உருவாகவில்லை? இவற்றை விடுத்து சும்மா பொத்தாம் பொதுவாக இணைப்புக்கு எதிர்ப்பு என்பதோடு செயலற்றுப் பேசாமல் இருப்பது தவறு என்றே எனக்குப் படுகிறது. இது வட கிழக்கு தமிழ் முஸ்லிம் அலகுகள் முஸ்லீம்களின் அனுசரணையின்றி இணைக்கபட்ட 1987 சூழலுக்கு கிட்டிய நிலைபாடாகவே தோன்றுகிறது. 
.
முஸ்லிம் பகுதிகள் தனி முஸ்லிம் அலகுகாகும் வலுவடைந்த கோரிக்கையும் போராட்டங்களும் இல்லாத சூழலில் வட கிழக்கு முஸ்லிம் பகுதிகள் பிரிக்கப்பட்டால் அவை சிங்கள பகுதிகளுடன் சேர்க்கப்பட்டு தென்னிலங்கை முஸ்லிம் அலகுகளின் நிலைக்குத் தள்ளப்படும் ஆபத்து உள்ளது. 1987ல்போலவே எதிர்காலத்திலும் இணைப்பை தடுப்பது முஸ்லிகளுக்கு சாத்தியமாகாமல் போகலாம். மீண்டும் வட கிழக்கு இணைப்பு சூழல் ஏற்பட்டால் அதை முஸ்லிம்கள் நிராகரிப்பதானால் இப்பவே முஸ்லிம்கள் தமக்கு என்ன வேண்டும் என்கிற வலுவான கோரிக்கைகளை முன்வைத்து அதற்கான அரச அங்கீகாரத்தை பெறும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். நிபந்தனைகளோடு இணைப்பை ஏற்க்கும் சாத்தியங்கள் இருந்தால் அதுபற்றி அறியத்தரவேண்டும். ஆனால் எதுவும் நடை பெறவில்லை.இது தொலைநோக்குள்ள அணுகுமுறையாகத் தெரியவில்லை. 
முஸ்லிம்கள் வடகிழக்கு இணைப்பை நிபந்தனையுடன் ஆதரிக்கும் வாய்ப்புகள் உண்டா நிபந்தனைகள் என்ன என்பதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தி அறிந்து செயல்பட இதுவரை தமிழர் தலைமைகள் முன்வராதமை கவலை தருகிறது.
.
அழுத பிள்ளை பால்குடிக்கும். அழாத பிள்ளையும் பால்குடிக்குமென நீங்கள் யாராவது விவாதித்தால் என்னிடம் அதற்க்கான பதில் இல்லை.

2

முஸ்லிம்களைப்போலவே தமிழர்களும் பிரிக்கமுடியாத தேசிய இனமாக வடகிழக்கில் ஒரு தனிக்குடும்பமாக இணைந்திருக்கிறார்கள். இது ஆறு தசாப்தங்கள் தொடரும் இணைந்த போராட்டங்களில் சிந்திய நெருப்பால் எழுதபட்டுள்ளது..வடகிழக்கு தமிழர்களின் தனிபெரும் தலைவர் கிழக்கைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் மலையகத் தமிழர் என தேசிய இனங்கங்களை பிரித்து ஆழலாம் ஆனால் உறுதியான ஒரு தேசிய இனத்தை குறிப்பிடத்தக்க வகையில் இரண்டாகப் பிரித்து ஆழமுடியாது. இதுதான் தேசிய இனத்தன்மையின் பலம். இதுவெல்லாம் அரசியல் சிந்தனையின் அடிப்படைகளாகும். 
. . 
புதிய நண்பர்களான அமரிக்க சக இந்திய அணிக்கும் அதன் எதிர்நிலையில் உள்ள சீன அணிக்கும் இடையில் மீழமுடியாமல் அகப்பட்டுள்ள இலங்கையின் தேசிய இனங்களின் அரசியல் தம் தம்மை தக்கவைக்கும் சமரசங்களோடு இன்று சர்வதேசமயப்பட்டுவிட்டது. மலையக தமிழர் அரசியல் இன்னும் உரிய பலம்பெறாவிட்டாலும் பிறவியிலேயே சர்வதேச தன்மை பெற்ற அரசியலாகும். தமிழர் மற்றும் முஸ்லிம்களின் தேசிய இன அரசியலும் வெவ்வேறு மட்டங்களில் சர்வதேச தன்மை பெற்றுவருகிறது. சிங்கள அரசியல் அமரிக்கா சக இந்தியா மற்றும் சீனாவுக்கிடையில் அணிசேரும் அணிகளை மாற்றும் சதுரங்கத்தால் சர்வதேச தன்மை பெற்றுள்ளது. 
. 
இந்த அணிசேரும் சதுரங்கத்தில் அரசு சார்ந்த அணி மட்டுமே பலமானது என்கிற சிந்தனையே சிங்கள அறிவு ஜீவிகள் பலரின் சிந்தனைத் தடங்கலாக உள்ளது. இந்த தடங்கலை முஸ்லிம் சிந்தனையாளர்கள் வரித்துக்கொள்ளக்கூடாது என்பது என் அக்கறையுள்ள கோரிக்கை. அரசு அணியே பலமான அணி என்கிற காலம் 1987ன் பின் அடிபட்டுப் போய்விட்டது. 1987ல் அமரிக்காவும் இந்தியாவும் ஒரு அணியாக இருக்கவில்லை. ஜே.ஆர் அமரிக்காவின் ஆதரவை பெற்றிருந்தார். இருந்தபோதும் ஜேஆர் ராஜீவ் ஒப்பந்தத்தில் பிரபாகரன் இந்திய சார்பு நிலைபாட்டை எடுத்திருந்தால் நிலமை என்னாயிருக்கும் என சிந்திக்கிறபோது மாறிவரும் அரசியல் சூழல் தெளிவாகும் வாய்ப்புள்ளது. அன்று அமரிக்காவும் இந்தியாவும் ஒரு அணியாக இருந்திருப்பின் அதுதான் நிகழ்ந்திருக்கும், இன்று தமிழர் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் அரசியல் வாதிகள் பிரபாகரன் செய்தவற்றில் இருந்து படித்ததைவிட செய்யத் தவறியவற்றில் இருந்து அதிகம் படித்திருக்கிரார்கள். 
, 
போருக்குபிந்திய தமிழர் முஸ்லிம்கள் மலையகதமிழர்கள் மற்றும் சிங்களவர்களுக்கிடையிலான வலு அரசியல் உறவுகளை நிர்ணயிப்பதில் மாறிவரும் தேசியங்களுக்கிடையிலான உறவுகளும் சர்வதேச சூழலும் பெரும் செல்வாக்கை செலுத்தபோகிறது. இனங்களுக்கிடையிலான சதுரங்கத்தில் முஸ்லிம்களும் தமிழர்களும் மலையக தமிழர்களும் பகடைக்காயாக மட்டும் இருந்த நிலை மறைந்து ஆட்டக் காரர்களாகவும் மாறுகிற புதிய ஆட்டம் தோற்றம் பெற்றுள்ளது. நாடகமே இலங்கை அரசியல் நாளைய நண்பன் யார் எதிரியார் என்பதை யாரறிவாரோ என்கிற பதட்டம் ஆரம்பித்திருக்கிறது. இதுதான் நாளைய அரசியல். ரணில் போன்ற அமரிக்க இந்திய சார்பு அணியினர் இரகசியமாக கைகோர்பதும் மகிந்த போன்ற சீன சார்பினர் இரகசியாமாக கைகோர்பதும் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. இதுபற்றி கவலைப் படவேண்டியதில்லை நாங்கள் வளமையாக முட்டையிட்ட கூடைகளுக்குள் முட்டையிட்டால் போதுமென நீங்கள் சொன்னால் நான் வாயை மூடிக்கொள்கிறேன். 
. இப்ப நான் விவாதிக்கிற நீங்கள் நிராகரிக்கிற விடயங்களின் தாற்பரியம் ரணில் அணி பதவி இழக்கும்போதுதான் இலகுவாக புரியும். வெள்ளம் வந்தபின் அணைகட்டமுடியும் என்கிற உங்கள் விவாத விழையாட்டுக்கு நான் வரவில்லை. உங்கள் உங்கள் கருத்து சுதந்திரத்தை நான் மதிக்கிறேன். எனினும் நான் சொல்லவேண்டியதை எப்பவும் சொல்ல தவறுவதில்லை. இனி காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.