Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலும் இனவாதமும்

Featured Replies

முள்ளிவாய்க்காலும் இனவாதமும்

 

 வட­மா­காண சபை உரு­வாக்­கப்­பட்ட காலத்­தி­லி­ருந்தே அர­சாங்­கமும் தென்­னி­லங்­கை­யரும் அதை­யொரு குரு­ஷேத்­தி­ர­மாகப் பார்க்கும் நிலை இன்னும் அற்­றுப்­போ­க­வில்லை என்­ப­தற்கு உதா­ரணம் கடந்த 18 ஆம் திகதி முள்ளி வாய்க்­காலில் அனுஷ்­டிக்­கப்­பட்ட நினை­வேந்தல் நிகழ்வு. அதில் பங்­கெ­டுத்­துக்­கொண்ட வட மாகாண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் மீது தென்­னி­லங்­கை­யி­னரின் பாய்ச்சல் தீவிர இன­வா­தத்தை கொட்­டு­வ­தா­க­வி­ருக்­கி­றது.

    வட­மா­கா­ண­ச­பைக்கு தேர்தல் நடத்­தப்­பட்டு சி.வி. விக்கினேஸ்­வரன் முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்ற நாளி­லி­ருந்து தென்­னி­லங்கை சமூ­கமும் ஆட்­சி­யா­ளர்­களும் பேரின தலை­வர்­களும் பௌத்த பேரி­ன­வா­தி­களும் காட்­டி­வரும் கடு­க­டுப்பும் கோபமும் ஓய்ந்தபாடில்­லை­யென்று கூறு­ம­ள­வுக்கு நாளுக்கு நாள் நிலை­மைகள் மோச­மா­கி­வ­ரு­வ­தையே காண­மு­டி­கி­றது.

 மே 18 ஆம் திகதி முள்­ளி­வாய்க்­காலில் அனுஷ்­டிக்­கப்­பட்ட நினை­வேந்­தலை ஏற்­றுக்­கொள்ள முடி­யாத தென்­னி­லங்­கை­யரும் கூட்டு எதி­ர­ணி­யி­னரும் மற்றும் ஆட்­சியின் பங்­காளர் சிலரும் கக்கிக் கொண்­டி­ருக்­கின்ற இன­வா­த­மா­னது மீண்டும் இந்த நாட்டை ஒரு குழப்­ப­ நி­லைக்கு கொண்­டு­செல்லும் சூழ்­நி­லை­யையே உரு­வாக்­கிக்­கொ­ண­்டி­ருக்­கி­றது. என்ன நடந்து விட்­ட­து­ என்று இவர்கள் கூச்­சல்­போ­டு­கி­றார்கள் என்று தெரிந்து கொள்ள முடி­யாத அள­வுக்கு இன­வா­த­நெ­ருப்பை அள்ளி வீசிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள்.

  வட­மா­காண சபையை கலை­யுங்கள், முத­ல­மைச்­சரை கைது செய்­யுங்கள், வடக்கில் தமிழ் பிரி­வி­னை­வா­தமும் கிழக்கில் முஸ்லிம் பிரி­வி­னை­வா­தமும் தலை தூக்­கிக்­கொண்­டி­ருக்­கின்றன. வடக்கு கிழக்கில் தனி­ராஜ்­ஜியம் உரு­வாகப் போகி­ன்றது என இல்­லாத பொல்­லாத பிர­சா­ரங்­களை அள்­ளி­வீ­சு­வ­துடன் கடந்த காலத்தில் இல்­லாத அள­வுக்கு இன­வாத கருத்­துக்­களை விதைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்கள்.

   2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்டு முள்­ளி­வாய்க்கால் இறுதி யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­போதும் இந்த யுத்­தத்தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள், பொது­மக்கள் என கவனம் கொள்­ளப்­ப­டாமல் வகை தொகை­யின்றி கொன்று குவிக்­கப்­பட்­டனர் என அரச படைகள் மீது குற்றம் சாட்­டப்­பட்­டது மாத்­தி­ரமன்றி இது தொடர்பில் ஐ. நா. சபை மனித உரிமை ஆணைக்­கு­ழு­விடம் பல ஆதா­ரங்­க­ளுடன் முறை­யீடு செய்­யப்­பட்­டது . 2012 ஆம் ஆண்டு அமெ­ரிக்கா மற்றும் பிரித்­தா­னியா போன்ற நாடு­களால் இலங்­கைக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்ட மனி­த­வு­ரிமை மீறல் போர்க்­குற்றம் தொடர்பில் உலகம் அறியும்.

  விடு­த­லைப்­பு­லி­களை அழித்து உல­கப்­ப­யங்­க­ர­வா­தத்தை இல்­லாது ஒழிக்­கின்­றோ­மென்ற வீராப்­புடன் இந்­தியா, பாகிஸ்தா,ன் சீனா, ரஷ்யா ஆகிய இரு­ப­துக்கு மேற்­பட்ட நாடு­களின் ஆசிர்­வா­தத்­துடன் ஆயு­த­ப­லத்­துடன் இறுதி யுத்­தத்தை நடத்­தி­யது மாத்­தி­ர­மன்றி லட்­சக்­க­ணக்­கான பொது­மக்கள் கொல்­லப்­பட்­ட­துடன் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் படு­கா­யங்­க­ளுக்கு ஆளாக்­கப்­பட்டு இன்னும் எண்­ணிக்­கை­யற்­ற­வர்கள் அங்­க­வீனம் ஆக்­கப்­பட்ட பிர­ளய யுத்­தமே முள்ளி வாய்க்கால் யுத்­த­மாகும்.

    இவ்­வாறு ஈவி­ரக்­க­மின்றி கொல்­லப்­பட்ட உற­வு­களை நினை­வு­கொள்ளும் நாளாக முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நாள் மே 18 வரு­டந்­தோறும் உற­வு­களால் அனுஷ்­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது. இந்த நினைவு நாளை யுத்தம் நடந்து முடிந்த காலத்­தி­லி­ருந்தே அவர்தம் உற­வுகள் மறை­மு­க­மா­கவோ நேர­டி­யா­கவோ அனுஷ்­டித்து வரு­கி­றார்கள். இது மாவீரர் தின­மா­கவோ அல்­லது விடு­த­லைப்­பு­லிகள் அழிப்பு தின­மா­கவோ பார்க்­கப்­ப­டு­வ­தில்லை இறந்த ஆத்­மாக்­களை நினைவு கொள்ளும் நாளாக பிதிர்க் கடன் தீர்க்கும் தின­மாக அனுஷ்­டிக்­கப்­பட்­டு­வ­ரு­கி­ன்றது. இறந்த ஆத்­மாக்­களின் சாந்­திக்­காக பிரார்த்­திக்­கப்­படும் ஒரு பிதிர் நாளா­கவே இது மக்­களால் பார்க்­கப்­ப­டு­கி­றது.

   கடந்த காலத்தில் இந்த தினத்தை அனுஷ்­டிக்­கவோ பிரார்த்­திக்­கவோ முடி­யாத நிலையில் தடுப்­புக்­களும் அச்­சு­றுத்­தல்­களும் எச்­ச­ரிப்­புக்­களும் இருந்து வந்த நிலை­யில்தான் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்­தைத்­தொ­டர்ந்து இரும்­புத்­திரை விலக்­கப்­பட்டு 2015 ஆம் ஆண்டு முதல் வட­மா­காண சபையின் ஏற்­பாட்டின் பேரில் அடக்­க­மான முறை­யிலும் அமை­தி­யான முறை­யிலும் நினை­வேந்­தப்­பட்டு வரு­கி­ன்றது. வழ­மை­­போ­லவே இந்த வரு­டமும் வடக்கு மாகா­ண­ச­பையும் யாழ். பல்­க­லைக்­க­ழகம் மற்றும் சிவில் அமைப்­புக்­களும் இணைந்து மேற்­படி அனுஷ்­டிப்பும் பிரார்த்­த­னையும் உணர்­வு­பூர்­வ­மாக மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

    இந்த நினை­வுநாள் அர­சியல் மயப்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டாது அர­சியல் சாயம் பூசப்­ப­டக்­கூ­டாது என்ற கவ­னத்­துடன் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த கார­ணத்­தி­னா­லேயே அர­சியல் பிர­மு­கர்கள் நிகழ்வில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ஆனா­லுங்­கூட இந்­நி­கழ்வை இன­வா­தக்­கண்­ணு­டனும் பயங்­க­ர­வா­தப்­பார்­வை­யு­டனும் பார்த்­துக்­கொண்ட தென்­னி­லங்கை சக்­தி­களும் தலை­வர்­களும் மிகக் கடு­மை­யாக சாடிக்­கொண்­டி­ருக்­கி­ன்றார்கள்.

 பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு நினை­வேந்தல் நடத்­து­கின்ற ஒரே நாடு இலங்கை. உலகில் எந்­த­வொரு நாட்­டிலும் பயங்­க­ர­வா­திகள் நினைவு கொள்­ளப்­ப­டு­வ­து­மில்லை, போற்­றப்­ப­டு­வ­து­மில்லை. வடக்கு, கிழக்கில் தனி ராஜ்­ஜியம் உரு­வாக்­கப்­ப­டு­வது இந்த நிகழ்வின் இலக்கு. இரா­ணுவ வீரர்­க­ளுக்கு எதி­ராக சர்­வ­தேச தலை­யீ­டு­களை கொண்­டு­வ­ரு­வ­தற்கும் வட­கி­ழக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை வெளியேற்­று­வ­தற்கும் இந்த நாள் நினைவு கொள்­ளப்­ப­டு­கி­றது. எனவே வடக்கு மாகா­ண­சபை கலைக்­கப்­ப­ட­வேண்டும். முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் கைது செய்­யப்­ப­ட­வேண்­டு­மென்ற கோஷத்தை தென்­னி­லங்கை தலை­வர்கள் எழுப்­பிக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள்.அர­சாங்­கத்­தி­லுள்ள சில முக்­கிய அமைச்­சர்­களும் அர­சுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கின்­றார்கள்.

  இதே­வேளை வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் நினை­வேந்தல் நிகழ்வில் ஆற்­றிய உரை தென்­னி­லங்­கையில் குழப்­பத்தை உண்டு பண்­ணி­யுள்­ளது மீண்டும் இருண்ட யுகம் இலங்­கையில் ஏற்­ப­டு­மென அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக் ஷ எச்­ச­ரித்­துள்ளார். முத­ல­மைச்சர் உரை­யா­னது தென்­னி­லங்கை இன­வா­தி­க­ளுக்கு கடுப்பை ஏற்­ப­டுத்தும் அள­வுக்கு அதில் என்ன கார சாரம் உள்­ளது என்று விளங்­க­வில்லை.

 இன­ அ­ழிப்­புக்­கான சர்­வ­தேச விசா­ரணைப் பொறி­மு­றை­யொன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்ட சர்­வ­தேச சமூகம் கால தாம­த­மின்றி தலை­யி­ட­வேண்டும். அத்­துடன் உரிய தீர்­வொன்றை பெற்­றுத்­த­ரவும் முன்­வ­ர­வேண்­டு­மென முத­ல­மைச்சர் தனது உரையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

 இந்­த­வுரை தொடர்பில் கடு­மை­யான கண்­ட­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளமை உண்­மை­யா­யினும் அவரின் உரை­யி­லுள்ள ஆதங்கம் நீண்ட காலப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வொன்று இந்த அர­சாங்­கத்­திலும் காணப்­ப­ட­வில்­லை­யாயின் அது எட்­ட­மு­டி­யாத பொரு­ளா­கவே ஆகி­விடும் என்ற தமிழ் மக்­களின் ஆதங்­கத்­தையே வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

   சர்­வ­தேச நீதிப்­பொ­றி­மு­றை­யென்­பது ஏலவே பல­த­ரப்­பி­ன­ராலும் முன்­மொ­ழி­யப்­பட்­ட­வி­டயம் என்­ப­தை­விட அர­சாங்­கத்­தாலும் ஜனா­தி­ப­தி­யாலும் மனித உரி­மைப்­பே­ர­வையில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட விட­முய­மாகும். விக்­கியின் நட­வ­டிக்­கை­யா­னது படை­யினர் மத்­தி­யிலும் சிங்­கள மக்கள் மத்­தி­யிலும் தவ­றான எண்­ணப்­பா­டு­களை விதைத்­தி­ருக்­கி­ற­ன்தென அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக் ஷ கண்­டனம் தெரி­வித்­துள்­ள­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ இது­பற்றி காட்­ட­மாக கூறி­யி­ருப்­பது தென்­னி­லங்கை வாதி­க­ளுக்கு தீனி­போடும் விவ­கா­ர­மா­கி­யுள்­ளது. மகத்­தான மனி­தா­பி­மான நட­வ­டிக்­கையில் ஈடு­பட்ட இரா­ணுவ வீரர்­களை இனப்­ப­டு­கொ­லையில் ஈடு­பட்­ட­வர்­க­ளென்று பயங்­க­ர­வா­தத்தை ஆத­ரிப்­ப­வர்கள் கூறு­வது வேடிக்­கை­யா­னது என கூறி­யுள்ளார். மொத்­தத்தில் நினை­வேந்தல் நிகழ்ச்சி தென்­னி­லங்கை மக்கள் மத்­தியில் தவ­றான பதி­வு­களை உண்­டு­பண்ணும் நிகழ்­வா­கவே இன வாதி­களால் சித்­தி­ரித்து காட்­டப்­ப­டு­கி­ன்றது.

வழ­மை­யாக தமிழ் மக்­களின் போராட்­டங்கள், கோரிக்­கைகள் எவ்­வாறு திரிபு படுத்­தப்­பட்டு இன­வாத முலாம் பூசப்­ப­டு­கி­ன்றதோ அதே கைங்­க­ரி­யந்தான் நடந்து முடிந்த நிவைவேந்தல் நிகழ்­சிக்கும் பூசப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றது. வடக்கு மாகாண சபை கலைக்­கப்­ப­ட­வேண்­டு­மென்­ற­ கோஷம் நேற்று இன்று ஆரம்­பித்த ஒரு­வி­ட­ய­மல்ல எப்­பொ­ழுது வட­கி­ழக்கு பிரிக்­கப்­பட்டு வட­மா­காண சபை தேர்தல் நடத்­தப்­பட்­டதோ அன்­றைய நாளி­லி­ருந்து இந்த கோஷம் தென்­னி­லங்கை இன­வா­தி­க­ளாலும் தலை­வர்­க­ளாலும் முன்­வைக்­கப்­பட்டு வரு­வது சாதா­ரண செய்தி. வட­மா­க­ாண­ச­பையின் ஆயுட்­காலம் எதிர்­வரும் ஒக்­டோபர் 25 ஆம் திக­தி­யுடன் முடி­வ­டை­கின்ற நிலையில் அச்­ச­பையின் இறுதி அமர்வு 24 ஆம் திகதி நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருக்­கி­ன்றது. இருந்­த­போ­திலும் அதை உடன் கலைக்­க­வேண்­டு­மென்று கோஷம் எழுப்­பப்­ப­டு­வ­தற்கு கார­ணங்­கள் ­பல.

 2014 ஆம் ஆண்டு திவி­நெ­கும சட்ட மூலத்தை வட­மா­கா­ண­சபை நிரா­க­ரித்­த­வேளை தென்­னி­லங்கை இன­வா­தி­களும் அரச முக்­கி­யஸ்­தர்­களும் வட­மா­காண சபை கலைக்­கப்­ப­ட­வேண்டும் என்று கடும் கோஷங்­களை எழுப்­பி­னார்கள். அதேபோலவே 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தலைத் தொடர்ந்து 2015 பெப்­ர­வரி 10 ஆம் திகதி வட­மா­காண சபையில் ஒரு தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. முள்­ளி­வாய்க்­காலில் நடந்­தது இனப்­ப­டு­கொ­லைதான் என்னும் தீர்­மா­னத்தை நிறை­வேற்றி அத்­தீர்­மா­னத்தை மனி­த­வு­ரிமை ஆணை­ய­கத்­துக்கும் அனுப்­பி­ய­தைக் கண்டு சிங்­கள தலை­மைகள் கடும்­கோபம் கொண்­டமை மாத்­திர­மல்ல இவ்­வாறு தீர்­மானம் நிறை­வேற்­றிய வட­மா­காண சபையை உடன் கலைக்­க­வேண்­டு­மென எச்­ச­ரிக்கை விடுத்­தார்கள். இவ்­வாறு முள்ளிவாய்க்கால் நினை­வுகள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்ற ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் இவ்­வாறு கோஷ­மி­டப்­ப­டு­வது சாதா­ரண விட­ய­மாக இருந்­தாலும் தீவிர இன­வாதம் வளர்த்­தெ­டுக்­கப்­படும் சந்­தர்ப்­பங்­க­ளா­கவே அவை இருந்து வந்­துள்­ளன.

  இவற்­றுக்கு அப்பால் 2014 ஆம் ஆண்­ட­ளவில் வட­மா­காண பிர­த­ம­ செ­ய­லா­ள­ராக இருந்­த­வ­ருக்கும் அன்­றைய ஆளு­ந­ராக கட­மை­யாற்­றிக்­கொண்­டி­ருந்­த­வ­ருக்கும் முத­ல­மைச்­ச­ருக்­கு­மி­டையே ஏற்­பட்ட பனிப்போர் கார­ண­மாக வட­மா­காண சபையை கலைக்­க­வேண்டும் என்ற கெடு­பி­டிகள் தலை­தூக்­கி­யி­ருந்த காலங்­க­ளு­முண்டு. இவ்­வாறு வட­மா­காண சபையைப் பொறுத்­த­வரை அச்­ச­பையை புதிய கோணத்­திலும் இனக்­கு­ரோ­தங்­க­ளு­டனும் பார்க்கும் நிலையே தொடர்ந்து இருந்து வரு­கின்­றது.

மாகா­ண­ச­பையை கலைக்­க­வேண்­டு­மென கோஷங்கள் அடிக்­கடி எழுப்­பப்­பட்­டாலும் 13 ஆவது திருத்­தத்தின் பிர­காரம் அதனை உட­ன­டி­யாக செய்ய முடி­யாது என்­பது யாவரும் அறிந்த விடயம். வடக்கு மாகாண சபைக்கும் மத்­திய அர­சுக்­கு­மி­டையில் ஒரு நேர்த்தியான உறவு எக்­கா­லப்­ப­கு­தி­யிலும் ஏற்­பட சந்­தர்ப்­பங்கள் உரு­வா­க­வில்­லை­யென்­பதும் முத­ல­மைச்சர் மத்­திய அர­சுடன் உடன்­பட்டுப் போகின்­றா­ரில்­லை­யென்­பதும் அர­சாங்­கத்தின் குற்­றச்­சாட்­டா­கும் அதே­வேளை , கொழும்பு வட­மா­கா­ணத்தை ஒரு மாற்­றான் தாய் மனப்­பாங்­கு­ட­னேயே நடத்­தி­வ­ரு­கி­ற­தென ஒரு­வ­ருக்­கொ­ருவர் குற்­றஞ்­சாட்­டி­வ­ரு­வது கடந்­த­கா­லங்­களில் இடம்­பெற்று வரும் பனிப்­போ­ராகும். இந்த புரிதல் இல்­லாத கார­ணத்­தி­னால்தான் வட­மா­காண அபி­வி­ருத்தி மற்றும் உற­வு­களில் பார­பட்சம் காட்­டப்­பட்டு வரு­கி­ன்றது என்ற குற்­றச்­சாட்­டுக்கள் ஒரு­பு­றமும் வட­மா­கா­ணத்தை திட்­ட­மிட்ட முறையில் ஒதுக்க அரசு முயன்று வரு­கி­ன்ற­தென்ற விமர்­ச­னங்கள் மறு­பு­றமும் இருந்­து­கொண்­டே­யி­ருக்­கி­றது.

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வட­ கிழக்கு மாகா­ணங்களில் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை நோக்­க­மா­கக்­கொண்டு விஷேட நிதி­ய­மொன்றை ஆரம்­பிக்­கப்­போ­வ­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த 2016 ஆம் ஆண்டு அறி­வித்­தி­ருந்தார். அதுக்கு என்ன நடந்­த­து­வென்று இது­வரை தெரி­ய­வில்லை. அதே­போ­லத்தான் முத­ல­மைச்சர் நிதி­ய­மொன்று ஆரம்­பிக்­க­வேண்­டு­மென்ற பிர­யத்­த­னங்­க­ளுக்கு ஏற்­பட்ட தடைகள் பற்றி குறிப்­பிட்டுக் கூற­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. இவ்­வாறு ஒவ்­வொரு விட­யத்­திலும் வட­மா­காணம் வஞ்­சிக்­கப்­பட்­டு­ வ­ரு­கின்­ற­தென்ற எண்­ணப்­பா­டுகள் தலை தூக்கி வளர்ந்­து­வரும் நிலை­யி­லேயே முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் மாவீரர் தினம் என அனுஷ்­டிப்­புக்கள் வட­ கி­ழக்கில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற சந்­தர்ப்­பங்­க­ளி­லெல்லாம் வட­மா­காண சபை­மீது கடும்­போக்கு வாதிகள் விசனம் கொண்டு நடந்­து­கொள்­வது வழ­மை­யான நிகழ்ச்சி நிர­லாகும்.

 வட­மா­காண சபையைப் பொறுத்­த­வரை அது பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு நேர­டி­யா­கவே முகங்­கொ­டுக்கும் சபை­யாக இருந்­து­வ­ரு­கின்­ற­தென்­பது சாதா­ரண பிர­ஜையும் உணர்ந்து கொள்­கின்ற விடயம். காணிப்­பிரச்­சினை, காணாமல் ஆக்­கப்­பட்டோர் பிரச்­சினை வேலை­யில்­லாப்­ பி­ரச்­சினை வாழ்­வா­தா­ரப்­பி­ரச்­சினை அர­சியல் கைதிகள் விவ­காரம், முன்னாள் போரா­ளி­களின் மறு­வாழ்வு, வித­வைகள் புனர்­வாழ்வு என ஏகப்­பட்ட நெருக்­க­டி­களை எதிர்­கொள்ளும் மாகா­ண­மாக வட­மா­காணம் இருக்­கின்ற நிலையில் அதற்­கு­ரிய பரி­கா­ரங்­களை காண்­பதில் அர­சாங்கம் ஓர­வஞ்­ச­கத்­தனம் காட்­டு­கி­ற­தென்­பது வட­மா­காண சபையின் ஏகோ­பித்த கருத்­தாகும்.

    அர­சியல் தீர்­வொன்றின் மூலம் அனைத்து பிரச்­ச­ினை­க­ளுக்­கும் தீர்வு காணப்­ப­டு­மென கடந்த மூன்று வரு­டங்­க­ளாக கூறப்­பட்டு வரு­கி­ன்ற­போதும் உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் ஊறுகாய் போடப்­ப­டு­கி­ன்றது. வழிப்­ப­டுத்தல் குழு இன்னும் குறைப்­பி­ர­சவம் கொண்­ட­தா­கவே காணப்­ப­டு­கி­ன்றது. அர­சியல் தீர்­ வொன்­றைக் கொண்­டு­வ­ரு­வதில் ஜனா­தி­ப­தியோ பிர­த­மரோ அதிக அக்­கறை காட்­டு­ப­வர்­க­ளாக தெரி­ய­வில்லை. காலத்தை கடத்­து­வ­திலும் அர­சியல் போக்கை திசை திருப்­பு­கின்­ற­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றார்­களே தவிர, இத­ய­சுத்­தி­யுடன் யாரும் செயல்­ப­ட­வில்­லை­யென்­பது தமிழ் மக்­களின் அண்­மைக்­கால அபிப்­பி­ரா­யங்­க­ளாக காணப்­ப­டு­கி­ன்றது.

 ஆரம்­பத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வை வழங்­கு­வ­தி­லி­ருந்த ஆர்வம் இப்­பொ­ழுது கடை ­நி­லைக்­குப்போய் இன­வா­தி­களின் வலையில் விழுந்­து­விட்டார் என்ற அபிப்­பி­ராயம் தமிழ் மக்கள் மனங்­களில் விழு­து­விட்டு வளர்ந்­து­கொண்­டி­ருக்­கின்ற நிலை­யில்தான் அண்­மையில் ஜனா­தி­பதி ஆற்­றிய உரை தமிழ் மக்­களை அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யி­ருக்­கி­ன்றது.

இரா­ணு­வத்­தி­னர் போர்க்­குற்­றத்தில் ஈடு­ப­ட­வில்லை. ஐ. நா மனி­த­வு­ரிமைப் பேர­வையின் பிரே­ர­ணையில் அத்­த­கைய குற்­றச்­சாட்­டுக்கள் சுட்­டிக்­காட்­டப்­ப­ட­வில்லை புலம்­பெயர் நாடு­க­ளி­லுள்ள விடு­த­லைப்­பு­லி­களின் ஆத­ர­வா­ளர்­களே பொய்க்­குற்­றச்­சாட்டு சுமத்தி பொய்ப்­பி­ர­சா­ரங்­களை மேற்­கொண்­டு­வ­ரு­வ­தாக ஜனா­தி­பதி குற்றம் சாட்­டி­யி­ருப்­ப­துடன் எந்­த­வொரு இரா­ணுவ வீர­ரையும் நீதி விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த நான் அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை என அடித்­துக்­கூ­றி­யுள்ளார். அது­மட்­டு­மன்றி ஈழ­மென்ற கன­வுக்கு இங்கு இட­மில்­லை­யென கர்ஜ்­ஜித்தும் இருக்­கிறார்.

 ஜனா­தி­ப­தியின் அண்­மைக்­காலப் போக்கு மற்றும் உரை தொடர்பில் தமிழ் மக்கள் மத்­தியில் அதி­ருப்­தியும் விரக்­தி­யுமே தலை தூக்­கிக்­கொண்­டி­ருக்­கின்­றது. அவர் தமது படை­யி­ன­ரையும் தென்­னி­லங்­கை­ய­ரையும் சமா­தா­னப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் தனது இருப்பை தக்க வைப்­ப­தற்­கா­கவும் இவ்­வாறு உரை­யாற்­று­வதும் நடந்­து­கொள்­வதும் யுக்­தி­யாக பயன்­ப­டுத்­தி­னாலும் எதிரே நீண்டகாலப்பிரச்சினையாக நீறுபூத்து காணப்படும் தேசியப்பிரச்சினைக்கு தமிழ் மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அரசியல் தீர்வு தொடர்பில் காத்திரமான கருத்துக்களை முன்வைப்பதாக தெரியவில்லை.

  சில சமயங்களில் வட,கிழக்குக்கு விஜயம் செய்து உரையாற்றுகின்றபோது தமிழ் மக்களை அல்லது சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் வகையில் ஏதாவது கூறினாலும் அந்த கருத்தை தென்னிலங்கைக்கு கொண்டுபோவதாக தெரியவில்லை. அதுவுமன்றி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் நானே நிற்கப்போகின்றேன் என வெளிப்படையாக அறிவித்ததன் பின் அவரது அரசியல் பயணிப்புக்கள் முன்னைய தலைவர்களைப்போலவே காணப்படுகின்றது. இது சாதாரண குடிமகனால் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள்கூட.

 இத்தகைய அரசியல் அகப்புற சூழ்நிலையில் முள்ளிவாய்க்கால் பிரச்சினை முன்வைத்து வடமாகாண சபையை கலையுங்கள் விக்கினேஸ்வரனையும் சிவாஜிலிங்கத்தையும் கைது செய்யுங்கள் என கூட்டு எதிர்க்கட்சியினரும் அவருடன் உடன்படும் சிங்கள தலைமைகளும் கோஷம் எழுப்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

  முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் என்பது இறந்த ஆத்மாக்களுக்கு செலுத்தப்படும் ஆத்மீக சடங்கு. இதை இறந்த ஆத்மாக்களின் உறவுகள் அனுஷ்டிப்பதற்கு தார்மீக உரிமை உண்டு என்பதை உலகம் ஏற்றுக்கொண்டிருப்பது மாத்திரமல்ல தென்னிலங்கை மிதவாத தலைவர்களும் பௌத்த அமைப்புக்களும் கூட ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது மனச்சாட்சியுள்ள எந்த தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை. இது இன்று மட்டுமல்ல எதிர்காலத்திலும் அனுஷ்டிக்கப்படும் ஒரு உணர்வு மயமான நிகழ்வாகவே இருந்து கொள்ளப்போகின்றது. இதை தடுக்க நினைப்பதோ அல்லது இல்லாமல் ஆக்க முயற்சிப்பதோ இன்னும் முரண்பாடுகளையும் முறுகல்களையும் உண்டாக்குமே தவிர, நல்லிணக்கத்துக்கு வழிவிட்டுக்கொடுக்காது. ஜனநாயக பண்புகளின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டு நெகிழ்வுடன் நடந்து கொள்வதுதான் நல்லிணக்கத்தை கொண்டு செல்ல வழிவகுக்கும். அதைவிடுத்து மாகாண சபையை கலைக்க வேண்டும். குறித்த தலைமைகளை கைது செய்யவேண்டும், ஈழம் உருவாகுவதை தடுக்கவேண்டுமென கூறுவதெல்லாம் அர்த்தமற்ற கோஷிப்புக்களாகவேயிருக்கும்.   

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-05-26#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.