Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாறுப்படும் அரசியல் போக்கு

Featured Replies

மாறுப்படும் அரசியல் போக்கு

 

இவ் ­வ­ரு­டத்­துக்குள் மாகா­ண­ சபைத் தேர்­தலை நடத்தி முடிப்பேன் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வாக்­கு­றுதி நல்­கி­யி­ருப்­ப­தாக ஊட­கங்கள் செய்­தி­களை வெளி­யிட்டு வரு­கின்­றன.

குறிப்­பிட்டு கூறப்­போனால் இவ் ­வ­ருட இடைக்கால பகு­தி­யி­லி­ருந்து 2020 ஆம் ஆண்டு நடுக்­கால பகு­தி­ வரை தேர்தல் நடத்­து­வ­தற்­கு­ரிய பரு­வ­ கா­ல­மாக எண்­ணப்­ப­டு­வ­த­னாலோ என்­னவோ அனைத்து கட்­சி­களும் தேர்தல் களத்­துக்கு செல்­வ­தற்­கு­ரிய வியூ­கங்­களை வகுத்து வரு­வ­தையும் திட்­டங்­களை தீட்டி கொள்­வ­திலும் வேக­மான கவ­னங்­களை செலுத்தி வரு­வதை காணு­கிறோம்.

ஏலவே சில மாகா­ண ­ச­பை­க­ளுக்­கு­ரிய ஆயுட்­காலம் முடி­வ­டைந்த நிலையில் வடமாகா­ண­ சபை உட்­பட, மூன்று மாகாண சபை­க­ளுக்­கான, ஆயுட்­காலம் எதிர்­வரும் ஒக்­டோ­ப­ருடன் முடி­வ­டை­ய­வுள்­ளது.

மாகா­ண ­சபை தேர்­தலை புதிய முறையில் நடத்­து­வதா அல்­லது பழைய விகி­தா­சார முறையில் நடத்­தப்­பட வேண்­டுமா என்ற பிரச்­சி­னைக்கு தீர்வு காண­ வேண்­டிய அவ­சியம் ஒரு புறமும், சகல மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை ஒரே நாளில் நடத்­து­வதே சாலப் ­பொ­ருத்­த­மா­னது என்ற சர்ச்சை மறு­புற விவா­த­மா­கவும் காணப்­ப­டு­கின்ற நிலையில், வட­கி­ழக்கில் தமிழ் மக்­களின் தலை­வி­தியை நிர்­ண­யிக்கும் சக்­தி­யாக விளங்கும் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பு, எதிர்­கொள்­ள­வி­ருக்கும் மாகா­ண­ சபை தேர்­த­லிலும், பொது ­தேர்­த­லிலும் எத்­த­கைய சவால்­களை வெற்­றி ­கொள்ள வேண்­டி­ வ­ரு­மென்­பது பற்றி, புத்­தி­ஜீ­விகள், இளை­ஞர்கள், சாதா­ரண பொதுமக்கள் சார்ந்த அபிப்­பி­ரா­யங்­க­ளையும் கருத்­தா­டல்­க­ளையும் பதி­வு­ செய்­வதே இக் ­கட்­டு­ரையின் நோக்­க­மாகும்.

எதிர்­மு­னைப்­போக்கு தீவி­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­றது. இவ்­வா­றான நச்சு சூழ்­நி­லையில் வடக்கு, கிழக்கில் வடக்­கிற்கான அர­சி­யல் ­போக்கு ஒரு ­வி­த­மா­கவும், கிழக்கிற்­கான போக்கு இன்­னொ­ரு­ வி­த­மா­கவும் செயற்­ப­டு­மாக இருந்தால் அது தமிழ் மக்­களின் பிற்­கால அர­சியல் நகர்­வு­க­ளுக்கு பார­தூ­ர­மான குந்­த­கங்­களை ஏற்­ப­டுத்தும் என்­ப­தை ­விட ஏற்­ப­டுத்த வைப்­பார்கள்.

அர­சாங்கம் மற்றும் தென்­னி­லங்கை சக்­தி­களின் செயற்­பா­டுகள் அனைத்­துமே கிழக்­கையும், வடக்­கையும் வேறு வேறு துருவ நிலை­களில் வைத்­தி­ருப்­ப­தையே சூட்­சு­ம­மாக செய்து வரு­கி­றது. இன்னும் குறிப்­பிட்டு கூறு­வ­தானால், கிழக்கின் தலை­மை­களை வடக்கு ஏற்­றுக்­கொள்­ளக் ­கூ­டாது. வடக்கின் அர­சியல் பண்­பு­களை கிழக்கு அங்­கீ­க­ரிக்­கக்­ கூ­டாது என்ற நாச­கார நிைல­மை­களை மிக மாற்­றீ­டாக எந்­த­வொரு கட்­சி­யையும் ஒப்­பிட முடி­யா­தது மாத்­தி­ர­மின்றி தமி­ழ­ரசு கட்­சியை தாய் வேராக கொண்ட கூட்­ட­மைப்பின் மீது மீயுயர் நம்­பிக்கை கொண்­ட­வர்­க­ளாக தமிழ் மக்கள் காணப்­பட்­டனர்.

2018, ஆம் ஆண்டு பெப்­ர­வ­ரியில் நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி தேர்­தலின் வட­கி­ழக்கு முடி­வுகள் ஆரோக்­கி­ய­மா­ன­தா­கவோ, அல்­லது முன்­னைய கால செல்­வாக்கு பதி­வு­களை கொண்­ட­தா­கவோ இருக்­க­வில்­லை­யென்­பது, புத்­தி­ஜீ­விகள் மற்றும் சாதா­ரண பொது­மக்­களின் அபிப்­பி­ரா­ய­மாகும். உள்­ளூ­ராட்சி தேர்தல் முடி­வு­களின் பெறு­மதி, நிலை, நலிவு பற்றி கூட்­ட­மைப்பை சேர்ந்த பல முக்­கிய பிர­மு­கர்கள் கௌர­வ­மாக ஏற்­றுக்­கொண்­டது மாத்­தி­ர­மன்றி பல கார­ணி­களின் பின்­ன­ணி­களை ஒப்பும் கொண்­டுள்­ளனர்.

இலங்­கை­யி­லுள்ள அனைத்து மாகாண சபை­க­ளிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ண­ ச­பை­களின் தேர்தல் முடி­வுகள், ஆட்சி அமைப்­புகள் தொடர்பில் தேசிய அள­விலும் பூகோள பார்வை அள­விலும் முக்­கியம் பெற்ற தேர்­த­லாக இது இருந்து வரு­கி­றது என்­பது பொது­வாக பேசப்­ப­டு­கிற விடயம்.

கடந்த உள்­ளூ­ராட்சி தேர்­த­லா­னது வட­கி­ழக்கில் புதிய பாடங்­களை கற்­பித்­தி­ருக்­கி­றது என்­பது அனை­வ­ராலும் ஏற்­றுக்­கொண்ட உண்மை. அவ்­வ­கையில் பார்க்­கும் ­போது, சுயேச்சை குழுக்­களின் உதிப்­புக்கள், மாற்­று ­கட்­சி­களின் வாக்கு வளர்ச்சி, தேசிய கட்­சி­களின் ஊடு­ரு­வல்கள், வட­கி­ழக்கில் ஒரு புதிய கோடு­களை கடந்த உள்­ளூ­ராட்சி தேர்­தலில் உரு­வாக்­கி­யுள்­ளன என்­பது தெளி­வாக புரி­யப்­பட்ட விட­ய­மாகும்.

சுயேச்சை குழுக்கள் என்­பது பல்­லின கொள்­கை­களின் ஒரு கலப்பு அல்­லது கூட்டு என்­ப­தற்கு அப்பால் இவற்றின் வரு­கைகள் அல்­லது வெற்­றிகள் மரபு ரீதி­யாக நீண்ட பாரம்­ப­ரி­யங்கள் கொண்ட கட்­சி­க­ளுக்கு சவால் ­விடும் தன்­மையில் தம்மை சுதா­க­ரித்து கொண்­டுள்­ளன. கடந்த உள்­ளூ­ராட்சி தேர்­த­லின் ­போது இவை சில உள்­ளூ­ராட்சி சபை­களில் உதி­ரித் த­ன­மாக வெற்­றி ­கண்­டுள்ள உண்­மையும் அறி­யப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான சூழலில் எதிர்­கொள்­ளக் ­கூ­டிய மாகா­ண­ சபை தேர்­தலில் வட­கி­ழக்கில் சுயேச்சை குழுக்கள் தம்மை முன்­னி­லைப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய தீவி­ர­மான செயற்­பா­டு­களில் ஈடு­பட்டு வரும் செய்­தி­க­ளையும் வதந்­தி­க­ளையும் சாதா­ர­ண­மாக எடை­போட்டு உதா­சீனம் செய்­து ­விட முடி­யாது.

வடக்­கிலும், கிழக்­கிலும் குறிப்­பாக, கிழக்கில் அம்­பாறை மற்றும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டங்­களில் இவை தீவி­ர­ம­டைந்து வரு­வ­தாக, செய்­திகள் கசிந்து வரு­கின்­றன. கிழக்கு மாகா­ணத்தை பொறுத்­த ­வரை அம்­பாறை, திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு ஆகிய மாவட்­டங்­களில் சுயேச்­சை கு­ழுக்­களை உரு­வாக்­கு­வ­தற்கும் மரபு வழி கட்­சி­க­ளுக்கு எதிர்ப்பு காட்டும் நிலை உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்ற எதிர்ப்­பு­ வாத கொள்­கைகள், முரண் நிலைகள் தீவி­ர­ம­டைந்து வரு­கின்­றன.

கடந்த கால அனு­ப­வங்­களின் அதி­ருப்­தி­களே இவ்­வா­றான சூழ்­நிலை உரு­வாகி கொண்­டி­ருப்­ப­தற்கு கார­ணங்­க­ளாக அமைந்­துள்­ளன என்­பது புத்­தி­ஜீ­வி­களின் குற்­றச்­சாட்­டுக்­க­ளாகும்.

கிழக்கில் உள்ள அதி­ருப்­தி­களின் வெளிப்­பா­டு­க­ளாக பின்­வரும் கார­ணங்கள் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­ன்றன. அவை­யென்ன என்­பதை ஆராய்­வோ­மானால், பலம் பொருந்­திய ஆட்சி சந்­தர்ப்­பங்கள், கடந்த காலத்தில் ஏற்­பட்­டி­ருந்­த ­போ­திலும் சில விட்­டுக்கொ­டுப்­பு­க்க­ளாலும் தந்­தி­ரோ­பாய குறை­பா­டுகள் கார­ணங்­க­ளினால் ஆட்சி சந்­தர்ப்­பங்­களை கூட்­ட­மைப்பு இழந்­து­ விட்­டது என்ற விவ­கா­ரத்தை ஜீர­ணிக்க முடி­யா­த­வர்­க­ளாக கிழக்கு மக்கள் காணப்­ப­டு­கி­றார்கள். இதன் கார­ண­மாக வேலை­வாய்ப்பு இழப்­புக்கள், அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களில் பின்­ன­டை­வுகள், நிலப்­ப­றிப்­புக்­களின் கொடு­மைகள், கலா­சார அபத்­தங்கள், பதவி உயர்­வுகள், வியா­பார நட­வ­டிக்­கைகள் ஆகி­ய­வற்றில் ஏற்­பட்டு வரும் வீழ்ச்­சிகள் என ஏரா­ள­மான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டே, சுயேச்சை குழுக்கள் உரு­வாக்­கப்­பட்­டன. உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்­கு­ரிய அடிப்­ப­டை ­த­ளங்கள் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன.

எதிர்­வரும் மாகா­ண­ சபை தேர்­தலை மையப்­ப­டுத்தி கிழக்கில் சில அமைப்­புகள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன என்­ப­தற்கு அப்பால் பல தன்­னி­யக்க குழுக்கள் இயங்க முற்­ப­டு­கின்­றன.

பாரம்­ப­ரி­ய ­கட்­சிகள், வெகு­சன தொடர்பு நிலை­யி­லி­ருந்து நீண்­ட­தூரம் விலகி நிற்­கின்­றன. மக்­களின் அன்­றாட பிரச்­சி­னைகள் அடிப்­படை பிரச்­சி­னை­களில் கவனம் செலுத்­து­வ­தில்லை, வெறும் தேர்­தலை இலக்கு வைத்தே இவை செயற்­ப­டு­கின்­றன. வேட்­பாளர் தெரி­வுகள், மக்கள் தொடர்­பா­டல்­களில் கவனம் காட்­டு­வ­தில்­லை­யென்ற ஏகப்­பட்ட குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டே, பாரம்­ப­ரிய கட்­சிகள் தொடர்ந்­தேர்ச்­சி­யாக விமர்­சிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

கிழக்கின் நிலை­மைகள் இவ்­வாறு இருக்­கின்ற நிலையில், வட­மா­காண நிலை­மைகள் மாற்­றுப்­போக்கு கொண்­ட­வை­யாக உரு­வா­கி­யுள்­ளதை அவ­தா­னிக்­கலாம். வடக்கில் இரண்டு விட­யங்கள் போட்­டித் ­தன்மை கொண்­ட­தாக உரு­வாகி வரு­கின்­றன.

அதில் முதன்­மை ­பெற்று வளர்ந்து கொண்­டி­ருப்­பது, மாற்­றுக்­கட்சி உரு­வாக்­குதல் ஒரு­பு­றமும், மாற்­று ­த­லை­மை­களை தேடும் கவ­னமும், வளர்ந்து வரு­வது ஒரு கசப்­பான உண்­மை­யாகும்.

இன்­னு­மொரு பக்­கத்தில் தேசிய கட்­சி­களின் ஊடு­ரு­வல்கள் மற்றும் நாட்­டங்­களும் சின்ன சின்ன அளவில் வளர்ந்து வரு­வது ஆரோக்­கி­ய­மான சூழ்­நி­லை­யாக அமை­ய­வில்லை. இதில் மாற்­றுக்­கட்சி உரு­வாக்கல் என்­பது பாரிய சவா­லாக அமை­யக்­ கூடும். கடந்த வாரம் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரிடம் இவ்­வா­றா­ன­தொரு வினா பத்­தி­ரி­கை­யா­ளர்­களால் தொடுக்­கப்­பட்­டுள்­ளது.

நீங்கள் புதிய அர­சியல் கட்சி ஒன்றை ஆரம்­பிப்­பது தொடர்­பான முன்­னேற்றம் இடம்­பெ­று­வ­தாக கூறப்­ப­டு­கி­றதே, என தொடுக்­கப்­பட்ட வினா­வுக்கு வடக்கு முத­ல­மைச்சர் இவ்­வாறு பதி­ல­ளித்­துள்ளார். முன்­னேற்றம் ஒன்று நடை­பெற்று கொண்­டு தான் இருக்­கி­றது. ஆனால் அது கட்சி ரீதி­யா­னது என நான் பார்க்­க­வில்லை என அவர் கூறி­யி­ருப்­ப­தோடு, அடுத்த வடக்கு மாகாண சபை தேர்­தலில் கூட்­ட­மைப்பின் வேட்­பா­ள­ராக நீங்கள் நிறுத்­தப்­ப­டு­வீர்­களா என வின­விய வினா­வுக்கு அவர் பதி­ல­ளிக்­கையில், “தற்­போது இது தொடர்­பாக உறு­தி­யாக எத­னையும் கூற­ மு­டி­யாது. எனவே தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பில் அடுத்த மாகாண சபை தேர்­தலில் போட்­டி­யி­டு­வதா? இல்­லையா? என்­பது தொடர்­பாக உரிய நேரத்தில் உரிய பதிலை கூறுவேன்” என பூட­க­மான பதிலை கூறி­யுள்ளார் வடக்கு முத­ல­மைச்சர்.

இவை­யொரு புற­மி­ருக்க புதிய தலை­மைத்­து­வ­மொன்று உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்ற கருத்து வடக்கில் அண்­மைக்­கா­ல­மாக விஷத்தூள் போல் தூவப்­பட்டு வரு­வதை கவ­ன­மாக அவ­தா­னிக்க முடியும்.

அடுத்த விவ­கா­ர­மாக பார்க்­கப்­ப­ட­வேண்­டிய விடயம் தேசிய கட்­சிகள் மற்றும் மாற்­று ­கட்­சி­களின் ஊடு­ரு­வல்கள் அண்­மைக்­கா­ல­மாக விஷக்­காற்றை போல் வேக­மாக விரவி வரு­வது அவ­தா­னிக்­கப்­பட வேண்டும்.

முதலில் ஏலவே குறிப்­பிட்ட, மாற்­று ­கட்சி உரு­வாக்கல் மாற்று தலை­மை­களை தேடல் என்ற விவ­கா­ரத்­துக்கு வரு­வோ­மாக இருந்தால், கிழக்கில் கூட்­ட­மைப்பின் சவா­லாக தேசிய கட்­சி­களும் மாற்­று ­கட்­சி­களும் காணப்­ப­டு­கின்ற நிலையில், வடக்கில் மாற்­றுகட்சி மற்றும் மாற்­று ­த­லைமை என்ற தேடல் எவற்றை உரு­வாக்­க போ­கி­றது என்ற யதார்த்­தத்தை விளங்­கி கொள்ள வேண்டும்.

ஏலவே, வட­கி­ழக்கு இணைப்பின் போக்கில் பாரிய இடை­வெ­ளியை உரு­வாக்கி வரு­கி­றது. அர­சாங்கம் அத­னுடன் இணைந்து தென்­னி­லங்கை கட்­சிகள் இது விடயம் தொடர்பில் எதிர்­ மு­னை போக்கில் தீவி­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­றன. இவ்­வா­றான நச்சு சூழ்­நி­லையில் வடக்கு, கிழக்கில் வடக்­கிற்கான அர­சியல் போக்கு ஒரு­ வி­த­மா­கவும் கிழக்­கிற்­கான போக்கு இன்­னொ­ரு­ வி­த­மா­கவும் செயற்­ப­டு­மாக இருந்தால் அது தமிழ் மக்­களின் பிற்­கால அர­சியல் நகர்­வு­க­ளுக்கு பார­தூ­ர­மான குந்­த­கங்­களை ஏற்­ப­டுத்தும் என்­பதை விட ஏற்­ப­டுத்த வைப்­பார்கள்.

அர­சாங்கம் மற்றும் தென்­னி­லங்கை சக்­தி­களின் செயற்­பா­டுகள் அனைத்­துமே கிழக்­கையும், வடக்­கையும் வேறு வேறு துருவ நிலை­களில் வைத்­தி­ருப்­ப­தையே சூட்­சு­ம­மாக செய்து வரு­கி­றது. இன்னும் குறிப்­பிட்டு கூறு­வ­தானால் கிழக்கின் தலை­மை­களை வடக்கு ஏற்­றுக்­கொள்­ளக்­ கூ­டாது, வடக்கின் அர­சியல் பண்­பு­களை கிழக்கு அங்­கீ­க­ரிக்­கக்­ கூ­டாது என்ற நாச­கார நிலை­மை­களை மிக நுட்­ப­மான முறையில் செயற்­ப­டுத்தி வரு­கின்­றார்கள் என்­பதை தமிழ் மக்கள் தெளி­வா­க­வே­யு­ணர்ந்து கொள்ள முடியும்.

எது எவ்­வாறு இருந்­த­போ­திலும் வடக்கு, கிழக்கின் அர­சியல் பண்­பு­களை தீர்­மா­னிக்கும் பலம் பொருந்­திய கட்­சி­யாக விளங்கும் தமி­ழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பு, தன்னை மறு வாசிப்­புக்கு உட்­ப­டுத்த வேண்­டு­மென்ற எதிர்­பார்ப்பு கொண்­ட­வர்­க­ளா­கவே தமிழ் மக்கள் காணப்­ப­டு­கின்­றார்கள்.

கூட்­ட­மைப்­புக்குள் குழப்பம், அர­சி­லி­ருந்து வெளி­யே­றா ­விட்டால் நாம் எதிர்­கால தேர்­தல்­களில் தோல்வி அடைவோம். இனியும் மக்கள் பொறுமை கொண்­ட­வர்­க­ளாக இருக்­க­மாட்­டார்கள். வாழ்­வி­ய­லிலும் அர­சியல் முன்­னேற்­றங்­க­ளிலும் இன்னும் தோல்வி கண்­ட­வர்­க­ளா­கவே தமிழ் மக்கள் காணப்­ப­டு­கின்­றார்கள் என்ற அபிப்­பி­ரா­யமும் அங்­க­லாய்ப்பும் தமிழ் மக்கள் மத்­தியில் விரக்­தி­யையும் வெறு­மையையும் உரு­வாக்கி கொண்­டி­ருக்­கி­றது என்ற யதார்த்தத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயத்திலிருக்கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நதி மூலங்களாக, பல கட்சிகள் ஒன்று இணைக்கப்பட்ட போதும் அவற்றுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடுகள், கருத்தியல் கோளாறுகள் காரணமாக ஆரம்ப நிலைக்கும் தற்போதைய நிலைக்குமிடையில் பாரிய இடைவெளிகள் காணப்படுகின்றன. இவ் விடயத்தில் அரசியல் தீர்வு விவகாரம் கனதியான செல்வாக்கு செலுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவே, குறிப்பிட்டு கூறுவதானால், அரசியல் தீர்வு, அதிலும் சமஷ்டி விவகாரம் மற்றும் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட இலங்கைக்கெதிரான தீர்மானம் தொடர்பில் உண்டாகிய கருத்து முரண்பாடுகள் கூட்டமைப்பின் கைகோர்ப்புக்கு ஊறு விளைத்ததாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் அப்பால் அரசியல் தீர்வு விவகாரத்தில் தமிழ் மக்களுக்கு இதுவரை சாண் அளவு நகர்வும் இடம்பெறவில்லை. முன்னைய ஏமாற்றங்களையே, மீண்டும் முடிவாக பெற போகிறோமென்ற மோசமான பிரசாரங்களை முன்வைத்து எதிர்பார்க்கப்படும் தேர்தல்களில் உருவாக முற்படும் சுயேச்சைக்குழு ஆதிக்கங்களையும் மாற்று கட்சிகளின் செல்வாக்குகளையும் தேசிய கட்சிகளின் ஊடுருவல்களையும் வெற்றி கொள்ள வேண்டுமாயின் கூட்டமைப்பு மறுவாசிப்பு செய்யப்பட வேண்டுமென்பது தான் புத்திஜீவிகள் மற்றும் மக்களின் ஆழமான கருத்து மாத்திரமன்றி மாற்று போட்டிகள் உருவாகுவதை தடுத்து தன்னை பலப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-06-09#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.